ஏப்ரல் 27, 2012


அல்குர்ஆன் பொருளாதார சீர்நிலை குறித்து   மிகவும்  வலியுறுத்தி விளக்குகிறது. ஸுரா மாஊன் மறுமை நாளை நிராகரித்தலின் ஒரு வகையாக வறுமை ஒழிப்பில் ஈடுபடாமையைக் குறிக்கிறது. ஸுரா ஹாக்காவில் நரகில் தள்ளப்படுகின்றமைக்கு  இறை நிராகரிப்பிற்கு அடுத்த காரணமாக இதனைக் குறிக்கிறது.  அல்குர்ஆன் 28 இடங்களில் தொழுகையையும் ஸகாத்தையும் இணைத்துக் கூறுகிறது. ஸஹாபாக்கள் ஸகாத்தை தரமாட்டோம் என வாதிட்டவர்களுக்கு எதிராக யுத்தமொன்றையே கொண்டு சென்றார்கள். இந்த வகையில்தான் ஸகாத்தை இஸ்லாமிய வாழ்வைத் தாங்கி நிற்கும் தூண்களில் ஒன்றாக இறைத்தூதர் (ஸல்) அவர்கள் விளக்கினார்கள். 
  இவ்வாறு வறுமையை ஒழிக்க ஸகாத் சட்டஒழுங்கை இஸ்லாம் ஏற்படுத்தியதோடு பராமரித்தல், வாரிசுரிமை, சமூகக் கூட்டுப் பொறுப்பு போன்ற சட்டங்களையும் இஸ்லாம் இயற்றியுள்ளது. ஆன்மீக உயர்வுக்கு வழிகாண முனைபவர்கள் குறிப்பாக பொருளாதார சூழ்நிலை குறித்துக் கவனம் செலுத்தல் மிகவும் அவசியமானது. இக்கருத்தை ஷெய்க் முஹம்மத்  அல் - கஸ்ஸாலி தமக்கே உரிய பாணியில் கீழ் வருமாறு மிகவும் அழகாக விளக்குகிறார். 

  இஸ்லாம் கி.பி. 610 இல் அன்று வாழ்ந்த நாகரீகங்களுக்குரிய மக்களின் தலை நகரங்களுக்குத் தூரத்தில் அறியாமைமிக்க கோத்திரங்களுக்கு மத்தியில் தோன்றியது. இறைத்தூதர் (ஸல்) கி.பி 632 இல் இறையடி சேர்ந்தார்கள். ஆனால் அதிலிருந்து 100 ஆண்டுகள் செல்லுகையில், அதாவது சரியாக கி.பி 732 இல் இஸ்லாமியப் படைகள் பாரிஸின் கோட்டைகளுக்கு அருகாமையில் பூதிரீஸா யுத்தகளத்தில் நின்றன! வாழ்வு எவ்வாறு வீரியம் கொண்டு புயலாக எழுந்தோடியுள்ளது என்பதை இதிலிருந்து புரியலாம். இந்த நூறு ஆண்டு கால இப்பெரும் பாய்ச்சலினுள்ளே என்ன நிகழ்ந்தது எனப் பார்ப்போம். 

ஏப்ரல் 25, 2012


ஆப்கான் ஆக்கிரமிப்பு: மாயத்தோற்றம் அம்பலம் .


2001ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானுக்குள் அமெரிக்காவினதும் நேச நாடுகளினதும் படைகள் பிரவேசித்த பிறகு பல மாதங்களாக தலைநகர் காபூலில் தலிபான்களின் தாக்குதல்கள் இடம்பெறவில்லை.
ஆனால், இப்பொழுது அடிக்கடி தலிபான்கள் தலைநகருக்குள் தாக்குதல்களை மேற்கொள்கிறார்கள். கடந்த வார இறுதியில் துப்பாக்கிகள், ரொக்கட்டுகள் மற்றும் தற்கொலைப் படையினரைப் பயன்படுத்தி அவர்கள் மேற்கொண்ட தாக்குதல்கள் படுமோசமானதாக இருந்தது. படையெடுப்புக்குப் பிறகு பத்து வருடங்களுக்கும் கூடுதலான காலம் கடந்த நிலையில் போரின் ‘முன்னேற்றத்திற்கு’  இது ஒரு எடுத்துக்காட்டு.
மேலும் பல எடுத்துக்காட்டுகள் இருக்கின்றன.

ஏப்ரல் 24, 2012


துருக்கி: நீதிக்கும் அபிவிருத்திக்குமான கட்சி புதிய தலைமைகளை நோக்கி...


Erdogan
கலாநிதி முஹம்மத் அப்பாஸி

தமிழில்: அஷ்கர் தஸ்லீம்
துருக்கியின் தற்போதைய ஜனாதிபதி அப்துல்லாஹ் குல்லின்8 வருட பதவிக் காலம் எதிர்வரும் 2014 ஆம் ஆண்டுடன் முடிவடைய இருக்கின்ற நிலையில் ஆளும் நீதிக்கும் அபிவிருத்திக்குமான கட்சி புதிய தலைமைகளைத் தேடத் தொடங்கியுள்ளது.
அப்துல்லாஹ் குல் பாராளுமன்றத்தினாலேயே ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டார். தற்போது பாராளுமன்றத்தால் ஜனாதிபதி தெரிவுசெய்யப்படும் முறைமை ரத்து செய்யப்பட்டு நேரடியாக மக்களாலேயே ஜனாதிபதி தெரிவுசெய்யப்படும் வகையில் சட்டம் மாற்றப்பட்டுள்ளது.

இலங்கை தம்புள்ள பள்ளிவாசல் இடிப்பு: அரபு நாடுகள் கடும் விசனம் தெரிவிப்பு


458647704330தம்புள்ள பள்ளிவாசல் மீதான தாக்குதலுக்கு அரபுநாடுகள் பலத்த கண்டனத்தையும்கடும்விசனத்தையும் வெளிப்படுத்தியுள்ளனஅத்துடன்,குறித்த அரபு நாடுகள் இலங்கையிலுள்ள தமது நாட்டுத்தூதுவர்களிடம் பள்ளி வாசல் தாக்குதல் தொடர்பிலானமுழு விவரங்களையும் திரட்டி அறிக்கைசமர்ப்பிக்குமாறு பணித்துள்ளன.
இதன்படி இலங்கையிலுள்ள அரபு நாடுகளின்தூதுவர்கள்முஸ்லிம் அமைச்சர்கள் மற்றும் முக்கியமுஸ்லிம் அரசியல் பிரமுகர்களிடம் தொடர்பு கொண்டுவிவரங்களைச் சேகரிக்கத் தொடங்கியுள்ளன.

ஏப்ரல் 19, 2012


உலகம் எப்படி அழியும்? – நோபல் 

பரிசை வென்ற புதிய தியரி!

 

லகம் இறுதியில் எப்படி அழியும்? இந்தக் கேள்விக்கு பலரும் கூறும் பொதுவான பதில் இயற்கைப் பிரளயத்தில் சிக்கி அழியும், தீயில் அழியும் என்பதுதான். பலர் 2012-ல் உலகம் அழியும் என்று கூறி வருகிறார்கள்.
ஆனால் சால் பெர்ல்மட்டர், பிரையன் ஸ்மிட் மற்றும் ஆடம் ரீஸ் ஆகியோர் கூறும் பதில்: ‘உலகம் அப்படியே பனிப் பிரதேசமாக உறைந்து போய் விடும். அதுதான் இந்த உலகின் கடைசி நாள்!’ என்பதே.

திடுக் என்று வெளியானது, உளவுத்துறை மறைத்து வைத்த ரகசியம்!

  
உளவுத்துறையில் பணிபுரிந்த ஒருவருக்கு எதிராக நடாத்தப்பட்ட வழக்கு ரகசியமாக நடத்தப்பட்டதன் காரணங்கள், தற்போது அம்பலமாகியுள்ளன. முதல் காரணம், வழக்கில் சம்மந்தப்பட்ட ஆவணம் ஒன்று, உளவுத்துறையின் அதி ரகசியமானது. இரண்டாவது காரணம், அந்த ‘அதி ரகசியம்’ வெளியானால், அமெரிக்க-இஸ்ரேலிய ராஜதந்திர உறவு சிக்கலுக்கு உள்ளாகும்.
தற்போது வழக்கு ஒரு திருப்பத்தைச் சந்தித்துள்ளது. ‘அதி ரகசியம்’ போட்டு உடைக்கப்பட்டு விட்டது!
இந்த வழக்கு கடந்த வருடம் நீதிமன்றத்துக்கு வந்தது.  அமெரிக்க உளவுத்துறை எஃப்.பி.ஐ.யின் பணிபுரிந்த ஷாமை லெய்போவிட்வோஸ், முக்கிய ஆவணம் ஒன்றை ஊடகம் ஒன்றுக்கு லீக் செய்தார் என்பதே வழக்கு.

சுவிஸ் வங்கி ரகசியங்கள்

கருப்புப் பணம் எப்படி உருவாகிறது ?


கருப்புப் பணத்தின் அடிப்படை ஊழல், லஞ்சம், வரி ஏய்ப்பு, அடித்துப் பிடுங்கல், ஏமாற்றுதல், சூழ்ச்சியால் திசை திருப்பல். ஊழலும், ஏய்ப்பும்தான் கருப்புப் பணத்தின் விதை.
சம்பளம் வாங்குபவர்களுக்கு சம்பளத்திலேயே பிடித்தமெல்லாம் போக மிச்சம்தான் கைக்கு வரும். ஆனால் அரசியல்வாதிகள், முதலாளிகள், பெரும் பணக்காரர்கள், சினிமா போன்றவற்றில் இது கிடையாது. அவர்கள் கொடுக்கும் கணக்கிலிருந்துதான் வரி விதிக்கப்படும். இங்கிருந்துதான் ஆரம்பிக்கிறது ஏய்ப்பும் ஊழலும். எப்படியெல்லாம் ஏய்க்கிறார்கள். ஊழல் எங்கிருந்தெல்லாம் செய்யப்படலாம். எவ்வாறெல்லாம் பணத்தினை லஞ்சமாய்,

ஏப்ரல் 17, 2012


வானத்தில் தோன்றும் அடையாளத்தை வைத்து சுனாமி கணிப்பு


ஜப்பானைத் தாக்கிய மிகப்பெரிய பூகம்பம் அதன் விளைவான பயங்கர சுனாமிப் பேரலை ஆகியவற்றிற்கு முன் வானில் சில அடையாளங்கள் ஏற்பட்டதாக இல்லினாய்ஸ் பல்கலைக் கழக ஆய்வாளர்கள் கண்டு பிடித்துள்ளனர்.

பூமியிலிருந்து 250 கிமீ உயரத்தில் இந்த அடையாளம் ஏற்பட்டுள்ளது என்று இந்த ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் இந்த அடையாளத்தை வைத்து சுனாமி தாக்கும் சரியான நேரத்தைக் கணிக்க முடியும் என்று அவர்கள் கருதுகின்றனர்.

ஏப்ரல் 16, 2012


மீன்கள் கொடுக்கும் 'எலக்ட்ரிக் ஷொக்'!

த்திய தரைக் கடலிலும்வேறு சில கடல் பகுதிகளிலும் வாழும் 'ஸ்கேட்ஸ்என்ற மீன் வகைஉள்ளது. இவற்றை 'டார்பிடோ ரேஸ்என்றும் அழைப்பார்கள். இந்த மீன்களின் பழக்கவழக்கங்களைபண்டைய ரோமானியர்கள் ஓரளவு அறிந்து வைத்திருந்தார்கள். இம்மீன்கள் நீந்தும் போதுஅமைதியாகவும் மெதுவாகவும் நீந்தும். இவற்றின் அருகே வேறு சிறு மீன்களோநண்டுளோபிறகடல்வாழ் உயிரிகளோ வந்துவிட்டால் 'சுரீர்என்று மின்சார அதிர்ச்சி கொடுக்கும். அதில் 

Kashmiri Heart Touching Video-Reality in Kashmir




யெமனில் அல்-காய்தா - அச்சத்தில் அப்துல்லாஹ்!

Abu Maslama:     
ல்-காய்தா. இன்று உலக 
ஊடகங்கள் உச்சரிக்க
 மறுக்கும் சொல். ஏன் வெறுக்கும்
 சொல் என்று கூட சொல்லலாம். 
ஈரான் மீதான அமெரிக்காவின் 
தாக்குதல், இஸ்ரேலின் ஈரான் 
மீதான தாக்குதல், வோல் ஸ்ட்ரீட்
 ஆர்ப்பாட்டம், சிரிய நண்பர்
களிற்கான ஆதரவு, கர்ளாவியின்
 சிரிய எதிர்ப்புரைகள் என 
அமெரிக்க ஊடகங்கள் காட்டிய