ஊடக தர்மம்
இன்று தகவல் துறை மிக வேகமாகவும் காத்திரமாகவும் வளர்ந்து வருகின்ற ஒரு துறையாக காணப்படுகின்றது. இதில் முக்கியமாக ஊடகத்துறை காணப்படுகின்றது. தகவல் தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சி காரணமாக உலகமே ஒரு கிராமமாக மாறிவிட்டது எனக் கூறுகின்றனர்.
ஊடகத்துறையில் பார்க்கும் போது உண்மையாகவே காணப்படுகின்றது. உலகில் ஏதோ ஒரு இடத்தில நடைபெறும் ஒரு நிகழ்வு ஒரு சில நிமிடத்தில் மற்றொரு பகுதில் அறியப்படுகின்றது.
தற்போது உலகில் உள்ள அனைவரும் தகவல்களை பெற்று கொள்ளும் உரிமை பெற்றுள்ளனர். அந்த வகையில் தகவல்களை வழங்குவதில் ஊடகவியலரின் பங்கு மிக முக்கியமானதாகும். மட்டுமல்ல மிகப் பொறுப்புடன் செய்ய வேண்டிய ஒரு பணியுமாகும். கிடைக்கின்ற தகவல்களை அலசி உண்மைத்தன்மையினை அறிந்து நாகரிகமான முறையில் அவற்றை வழங்க வேண்டும். பக்க சார்பாகவோ உண்மைக்கு புறம்பாகவோ வழங்கக் கூடாது.
இதில் பக்க சார்பின்மை, உண்மை தன்மை என்பது ஊடக தர்மமாக பார்க்கப் படுகின்றது. அதே நேரம் வழங்குகின்ற செய்திகள் மக்கள் மத்தியில் வேறு ஒரு கருத்தில் புரியப்படாமல் இருப்பதை உறுதிப்படுத்துவதும் ஒரு ஊடகவியலாளனின் கடமையாகும்.
எனவே ஊடகம் என்பது ஒரு சமுக நகர்வுக்கான ஒரு பாதை என்பதை புரிந்து அதை சரியாக உரிய நேரத்தில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
அக்டோபர் 25, 2010
அக்டோபர் 11, 2010
சமூகசேவை என்பது எல்லோராலும் விரும்பப்படுவதும் குறிப்பிட்ட சிலரால் மட்டுமே முடிமான ஒரு செயட்படாகும். இது அந்த குறிப்பிட்ட சிலருக்கு இறைவனால் கொடுக்கப்படும் ஒரு அருளாகும், இதனை சரியாக பயன்படுத்திக்கொண்டால் ஈருலகிலும் நன்மையடைய முடியும். மாறாக பெயருக்காகவும் புகழுக்காகவும் செய்யும்போது அதன் உண்மையான நோக்கம் நிறைவேறாமல் போய்விடும். உண்மையான சமுக சேவையில் எத்தனை பேர் ஈடுபடுகிறார்கள் என்று பார்த்தால் ஒரு சிலர் மாத்திரமே இவ்வாறு ஈடுபடுகின்றனர், ஆனால் அவர்களும் தங்களை சமூகத்திடம் இனம்காட்டிக்கொள்ளதவர்களாகவே காணப்படுகின்றனர்.
செப்டம்பர் 26, 2010
இது ஒரு புதிய நகர்வுக்கான ஒரு புதிய முயற்சி, இதில் நான் படித்த பார்த்த பல விடயங்களை உங்களுடன் பகிர்ந்துகொள்ள இருக்கின்றேன்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)