ஒபாமாவின் “நெறிப்படுத்தலும்” ஆசியாவில் அணுவாயுதப்போர் அச்சுறுத்தலும்
Peter Symonds
கடந்த ஒரு மாதமாக ஒபாமா நிர்வாகம், வடகொரியாவிற்கு எதிராக பொறுப்பற்றஆத்திரமூட்டும் செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளது. இது வடகிழக்கு ஆசியாவில்அழுத்தங்களுக்கு தீயூட்டி போர் அபாயங்களை அதிகரித்துள்ளது.இப்பிரச்சாரத்துடன் இணைந்த வகையில் வட கொரியா ஆட்சியைஅரக்கத்தனமாக சித்தரிப்பதுடன் மற்றும் அமெரிக்க இராணுவத்தை கட்டியெழுப்புவது முற்றிலும் “தற்பாதுகாப்பிற்கு” என்று கூறப்படுகின்றது.
ஆனால், வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் மற்றும் CNN இரண்டும் நேற்று பென்டகன் பலமாதங்கள் முன்னரே இயற்றப்பட்டு ஒபாமா நிர்வாகத்தால் இந்த ஆண்டுமுன்னதாக ஒப்புதல் கொடுக்கப்பட்ட “நெறிப்படுத்தல்” (“the playbook”)எனக்கூறப்படுவதை பின்பற்றுகிறது என்றும் கூறுகின்றன. தென் கொரியாவிற்குஅணுவாயுதத்திறன் கொண்ட B52 விமானங்களை மார்ச் 8, 26 திகதிகளில்கொண்டு சென்றதும், மார்ச் 28ல் B2 விமானங்களை அனுப்பியதும், மார்ச் 31ல் F22 Raptor போர்விமானங்களை முன்கூட்டியே அனுப்பியதும் இத் திட்டத்தின் ஒரு பாகமாகும்.
B52, B-2 அணுவாயுதத் திறன் உடைய முக்கியமான குண்டுத்தாக்குதல்விமானங்களில் “தற்பாதுகாப்பு” அம்சம்