பிப்ரவரி 22, 2011


செயற்கை புரட்சியும் மேற்கும் ஒரு கருத்தாடல் 

                                              M.ஷாமில் முஹம்மட்
OurUmmah: பஹ்ரைன் நாட்டில் கடந்த சில வாரங்களாக நடைபெற்று வந்த ஆர்பாட்டங்கள் சூடு பிடித்துள்ளன துனீசியா மக்கள் புரட்சி அதை தொடர்ந்த உலகை உலுக்கி நிற்கும் எகிப்திய புரட்சி என்று தொடரான மக்கள் புரட்சி  ஆர்பாட்டங்கள் அரபு முஸ்லிம் நாடுகளின் மேற்குலக சார்பு  சர்வாதிகார ஆட்சியாளர்களுக்கு எதிராக  நடை பெறுகின்றது ஒன்றின் வீழ்ச்சி அதன் வழியில் அதன் அருகில் அதன் மாதிரிகளை கொண்டு விளங்கும் மேற்குலக  சார்பு  சர்வாதிகாரம் மீது  சுழல் சூறாவளியாய் 

பிப்ரவரி 18, 2011

Libiya

ஆர்பாட்டங்கள் கடாபியை பிடுங்கும் புரட்சியாக மாறுமா ?

M.ரிஸ்னி முஹம்மட்

   லிபியா வட ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு நாடு ஆகும். இதன் வட எல்லையாக மத்திய தரைக் கடலையும்  கிழக்கின்  எல்லையில் எகிப்தையும் , தென்கிழக்கு எல்லையில்   சூடானையும் , தெற்கில் சாட், நைஜர் ஆகியனவும், மேற்கில் அல்ஜீரியா, துனீசியா ஆகியனவும் எல்லைகளாக அமைந்துள்ளன துனீசியாவினதும் எகிப்தினதும் தாக்கம் அதிகமாக லிபியாவை தாக்கிவருகின்றது துனீசியா மக்கள் புரட்சி அதை தொடர்ந்த உலகை உலுக்கி நிற்கும் எகிப்திய புரட்சி என்று தொடரான மக்கள் புரட்சி ஆர்பாட்டங்கள் அரபு முஸ்லிம் நாடுகளின் மேற்குலக சார்பு சர்வாதிகார ஆட்சியாளர்களுக்கு எதிராக நடை பெறுகின்றது .

பிப்ரவரி 17, 2011



கிலாபத் அழிக்கப்பட்டு இன்றுடன் 86 வருடங்கள் கிலாபத் அழிப்பு ஒரு வரலாற்று பார்வை




                              M.ஷாமில் முஹம்மட் 


இன்று 3.3.2010 இதே திகதியில் 3.3.1924 ஆம் ஆண்டு திங்கள் கிழமை காலை வேளையில் கிலாபத் உலகை விட்டும் அழிக்கபட்டது மனித குலத்துக்கு விடுதலையாய் இருந்த முஸ்லிம்களின் சாம்ராஜ்யம் வீழ்த்தப்பட்டது மேற்கு கண்ட கனவு நிஜமானது முதல் சிலுவை யுத்தத்தில் முஸ்லிம்களிடம் தேற்றவர்கள் இரண்டாம் சிலுவை யுத்தத்தின் மூலம் இஸ்லாமிய சாம்ராஜியத்தை வெற்றி கொண்டனர் இஸ்லாமிய ஆட்சி உலகில் அல்லாஹ்வின் தூதரினால் நிலை நிறுத்தப்பட்டு 7ஆம் நூற்றாண்டு தொடக்கம் 19 ஆம் நூற்றாண்டு வரை 1300 ஆண்டுகள் மனித இனத்திற்கு அருளாய் இருந்த சாம்ராஜ்யம் தேசியவாதம் என்ற மேற்கின் விஷம் ஊட்டப்பட்டு  கோமா நிலையில் போடப்பட்டது, இன்று குற்றுயிரும் குறைஉயிருமாக துடித்துக்கொண்டு இருக்கிறது. இந்த வேளையில் முஸ்லிம் உம்மாஹ் கிலாபத்தை இழந்து இன்றுடன் 86 ஆண்டில் கால் பதிக்கின்றது.