பிப்ரவரி 22, 2011


செயற்கை புரட்சியும் மேற்கும் ஒரு கருத்தாடல் 

                                              M.ஷாமில் முஹம்மட்
OurUmmah: பஹ்ரைன் நாட்டில் கடந்த சில வாரங்களாக நடைபெற்று வந்த ஆர்பாட்டங்கள் சூடு பிடித்துள்ளன துனீசியா மக்கள் புரட்சி அதை தொடர்ந்த உலகை உலுக்கி நிற்கும் எகிப்திய புரட்சி என்று தொடரான மக்கள் புரட்சி  ஆர்பாட்டங்கள் அரபு முஸ்லிம் நாடுகளின் மேற்குலக சார்பு  சர்வாதிகார ஆட்சியாளர்களுக்கு எதிராக  நடை பெறுகின்றது ஒன்றின் வீழ்ச்சி அதன் வழியில் அதன் அருகில் அதன் மாதிரிகளை கொண்டு விளங்கும் மேற்குலக  சார்பு  சர்வாதிகாரம் மீது  சுழல் சூறாவளியாய் 
வீசுகின்றது
இந்த புரட்சி சுறாவளி அரபு முஸ்லிம் பிராந்தியம் எங்கும்   பலத்த வேகத்துடன்  வீசுகின்றது  துனீசியாவையும்  எகிப்தையும் தொடர்ந்து யெமன்,  ஜோர்டான் அல்ஜீரியா, பலஸ்தீன், லிபியா, பஹ்ரைன் என்று தொடராக வீசுகின்றது புரட்சி நோக்கிய   தாகம்  இயல்பாக மக்களிடம்  ஊற்று எடுக்கின்றது  ,தமது நாடுகளின் அரசியல் தலைவர்கள் அமெரிக்கா , பிரிட்டன் , இஸ்ரேல் சதிகாரர்களுடன்  கைகோர்த்து  இஸ்லாத்தினதும் , முஸ்லிம்களினதும் நிலையை கவலைக்கிடமாக்குவதும், பலஸ்தீன் மக்களுக்கும்  அதன் இஸ்லாமிய இலச்சினைகளுக்கும் எதிராக  ஆட்சியாளர்கள் செயல்படுவதும்  மக்களிடம் ஆட்சியாளர்கள் மீது  பாரிய   வெருப்பு  உணர்ச்சியை   ஏற்படுத்துகின்றது  இந்த நிலை  மக்கள் உள்ளத்தை  எரிகின்றது,   தமது அரச தலைவர்களினதும் அரசியல் வாதிகளினதும்  ஊழல் நிர்வாக சீர்கேடுகள் அதனால் ஏற்படும் வறுமை என்பன  மக்களின் வயிற்றை எரிகின்றது    இந்த எரிப்புகள்  மக்களின் ஒவ்வொருவரின் வீட்டு கதவையும் தட்டி புரட்சி செய்ய அழைக்கின்றது இது இயற்கையாக இயல்பாக மக்களின் உள்ளங்களில் புரட்சி நெருப்பாக  வடிவம் பெறுகின்றது.
இது இயற்கையான புரட்சி நெருப்பு ,ஆனால் ஈரானில் இஸ்லாத்தை நேசிக்கக்கூடிய ,இஸ்லாத்தினதும் , முஸ்லிம்களினதும் எதிரிகளை எதிரியாக பார்க்கக்  கூடிய மேற்கின் அழுத்தங்களுக்கு தலை வணங்காத பொருளாதார அபிவிருத்திகளை மேற்கின் தடைகளையும் உடைத்து மேற்கொண்டு முன்னேறிவரும்    ஈரான் அரசாங்கத்துக்கு எதிராக மேற்கு நாடுகள் இயற்கைக்கு மாற்றமான மக்கள் புரட்சி ஒன்றை செயற்கையாக திணிக்க துடிக்கின்றது ஈரானுக்கு எதிராக மக்கள்  புரட்சி ஏற்படுவதற்கான எந்த அக, புற சூழ்நிலைகளும்  தோன்றாத நிலையில் மேற்கின் தயாரிப்பான புரட்சி என்பது அப்பட்டமான மேற்கின் பயங்கரவாதமாக மட்டுமே பார்க்கப்பட முடியும்.
இது ஒருபுறமிருக்க அரபு முஸ்லிம் நாடுகளில்  மேற்குலக சார்பு சர்வாதிகாரத்துக்கு எதிராக  ஏற்பட்டு வரும் மக்கள் புரட்சிகளுக்கு ஆதரவாளர்களாக காட்டிகொள்ள அமெரிக்காவும் மேற்கு நாடுகளும் பல நாடகங்களை அரங்கேற்றி வருகின்றது இதன் மூலம்  புரட்சிக்கு பின்னர் ஏற்படும் நிர்வாகங்களிலும் தாக்கம் உள்ள பாத்திரத்தை  தொடர்ந்தும் தக்கவைக்க தேவையானவற்றை தொடர்ந்தும் செய்துவருகின்றது மேற்கின் மேலாதிக்க முனைப்புகள் இயல்பானவை அல்ல செயற்கையானவை அவை இயற்கையான இறை உணர்வுடன் மோதி விரைவில் அழித்துவிடும் என்றுதான் இறை விசுவாசிகள் நம்புகின்றனர்
நன்றி our ummah.org

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக