நவம்பர் 07, 2012


பர்மா: மக்கள் குடியிருப்புகளின் அழிவைக் காட்டும் சாட்டலைட் படங்கள்...

மேற்கு 
பர்மாவில் 
கரையோர மாவட்டமொன்றில் 
இன 
வன்முறைகளால் முழுமையாக 
எரித்து தரைமட்டமா
க்கப்பட்டுள்ள குடியிருப்புகளின் சாட்டலைட் படங்களை மனித உரிமைகள் 
அமைப்பொன்று வெளியிட்டுள்ளது.முஸ்லிம் 
அல்லாதவர்களின் தாக்குதலுக்குள்ளான முஸ்லிம்களே 
இந்த வன்முறைகளில் பெருவாரியாக பாதிக்கப்பட்டுள்ளதாக 
அந்த அமைப்பு கூறியுள்ளது.பர்மாவில் மேற்கே உள்ள 
ராக்கைன் மாநிலத்தில், ரோஹிஞ்சா முஸ்லிம்கள் பெருவாரியாக
 வாழும் சாப்ச்யூ நகரில் கிட்டத்தட்ட 800க்கும் அதிகமான 
கட்டடங்களும் குடியிருப்புகளும் எரிக்கப்பட்டுள்ளதை 
அந்தப் படங்கள் காட்டியுள்ளதாக ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் 
அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
அண்மைக்காலத்தில் நடந்த இன வன்முறைகளில் 64 
பொதுமக்கள் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் கூறுகின்றனர். 
ஆனால் இந்த எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கலாம் 
என்று ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் எச்சரிக்கிறது.இந்த அக்டோபர் 
மாதத்தின் 9ம் திகதியிலும் அதன்பின்னர் 25-ம் திகதியிலும் 
எடுக்கப்பட்ட சாட்டலைட் படங்களை ஒப்பிட்டுக் காட்டி 
ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் தனது வாதத்தை முன்வைத்துள்ளது.
அக்டோபர் 9-ம் திகதி எடுக்கப்பட்ட படங்களில் மக்கள் 
குடியிருப்புகள் செறிந்துகாணப்படுவது மிகத் தெளிவாகத் தெரிகிறது.ஆனால் நேற்று முன்தினம் வியாழக்கிழமை 
எடுக்கப்பட்ட படங்களில், கிட்டத்தட்ட 35- ஏக்கர் பிரதேசம் 
முழுமையாக அழிக்கப்பட்டுள்ளன.இந்த வன்முறைகளில் 
எத்தனைப் பேர் கொல்லப்பட்டிருப்பார்கள் என்பது பற்றிய 
தகவல்களை அமெரிக்காவில் இருந்து இயங்கும் ஹியூமன் 
ரைட்ஸ் வாட்ச் அமைப்பு வெளியிடவில்லை. ஆனால் 
பெரும்பாலான மக்கள் படகுகள் மூலம் கடல் மார்க்கமாக 
தப்பிச் சென்றிருக்கலாம் என்று அந்த அமைப்பு 
சுட்டிக்காட்டியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக