Islam லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Islam லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஏப்ரல் 27, 2012


அல்குர்ஆன் பொருளாதார சீர்நிலை குறித்து   மிகவும்  வலியுறுத்தி விளக்குகிறது. ஸுரா மாஊன் மறுமை நாளை நிராகரித்தலின் ஒரு வகையாக வறுமை ஒழிப்பில் ஈடுபடாமையைக் குறிக்கிறது. ஸுரா ஹாக்காவில் நரகில் தள்ளப்படுகின்றமைக்கு  இறை நிராகரிப்பிற்கு அடுத்த காரணமாக இதனைக் குறிக்கிறது.  அல்குர்ஆன் 28 இடங்களில் தொழுகையையும் ஸகாத்தையும் இணைத்துக் கூறுகிறது. ஸஹாபாக்கள் ஸகாத்தை தரமாட்டோம் என வாதிட்டவர்களுக்கு எதிராக யுத்தமொன்றையே கொண்டு சென்றார்கள். இந்த வகையில்தான் ஸகாத்தை இஸ்லாமிய வாழ்வைத் தாங்கி நிற்கும் தூண்களில் ஒன்றாக இறைத்தூதர் (ஸல்) அவர்கள் விளக்கினார்கள். 
  இவ்வாறு வறுமையை ஒழிக்க ஸகாத் சட்டஒழுங்கை இஸ்லாம் ஏற்படுத்தியதோடு பராமரித்தல், வாரிசுரிமை, சமூகக் கூட்டுப் பொறுப்பு போன்ற சட்டங்களையும் இஸ்லாம் இயற்றியுள்ளது. ஆன்மீக உயர்வுக்கு வழிகாண முனைபவர்கள் குறிப்பாக பொருளாதார சூழ்நிலை குறித்துக் கவனம் செலுத்தல் மிகவும் அவசியமானது. இக்கருத்தை ஷெய்க் முஹம்மத்  அல் - கஸ்ஸாலி தமக்கே உரிய பாணியில் கீழ் வருமாறு மிகவும் அழகாக விளக்குகிறார். 

  இஸ்லாம் கி.பி. 610 இல் அன்று வாழ்ந்த நாகரீகங்களுக்குரிய மக்களின் தலை நகரங்களுக்குத் தூரத்தில் அறியாமைமிக்க கோத்திரங்களுக்கு மத்தியில் தோன்றியது. இறைத்தூதர் (ஸல்) கி.பி 632 இல் இறையடி சேர்ந்தார்கள். ஆனால் அதிலிருந்து 100 ஆண்டுகள் செல்லுகையில், அதாவது சரியாக கி.பி 732 இல் இஸ்லாமியப் படைகள் பாரிஸின் கோட்டைகளுக்கு அருகாமையில் பூதிரீஸா யுத்தகளத்தில் நின்றன! வாழ்வு எவ்வாறு வீரியம் கொண்டு புயலாக எழுந்தோடியுள்ளது என்பதை இதிலிருந்து புரியலாம். இந்த நூறு ஆண்டு கால இப்பெரும் பாய்ச்சலினுள்ளே என்ன நிகழ்ந்தது எனப் பார்ப்போம். 

ஏப்ரல் 24, 2012


இலங்கை தம்புள்ள பள்ளிவாசல் இடிப்பு: அரபு நாடுகள் கடும் விசனம் தெரிவிப்பு


458647704330தம்புள்ள பள்ளிவாசல் மீதான தாக்குதலுக்கு அரபுநாடுகள் பலத்த கண்டனத்தையும்கடும்விசனத்தையும் வெளிப்படுத்தியுள்ளனஅத்துடன்,குறித்த அரபு நாடுகள் இலங்கையிலுள்ள தமது நாட்டுத்தூதுவர்களிடம் பள்ளி வாசல் தாக்குதல் தொடர்பிலானமுழு விவரங்களையும் திரட்டி அறிக்கைசமர்ப்பிக்குமாறு பணித்துள்ளன.
இதன்படி இலங்கையிலுள்ள அரபு நாடுகளின்தூதுவர்கள்முஸ்லிம் அமைச்சர்கள் மற்றும் முக்கியமுஸ்லிம் அரசியல் பிரமுகர்களிடம் தொடர்பு கொண்டுவிவரங்களைச் சேகரிக்கத் தொடங்கியுள்ளன.