ஜூன் 17, 2012


ஏகாதிபத்தியமும் ஹௌலாப் படுகொலைகளும்

Alex Lantier
சிரியாவில் ஹௌலாவில் மே 25ம் திகதி நடைபெற்ற படுகொலைகள் பற்றிய விசாரணைகள் வாஷிங்டனும் அதன் நட்பு நாடுகளும் சிரியாவில் இராணுவத் தலையீட்டிற்கு அவர்கள் விரிவாக்கம் செய்வதற்கு நியாயப்படுத்தும் பொய்களை அம்பலப்படுத்தியுள்ளன.
ஹௌலாவில் 108 பேர் படுகொலை செய்யப்பட்டதற்கான பொறுப்பு சிரிய இராணுவத்துடன் இல்லை, ஆனால் சிரிய எழுச்சிப்” படைகள் என்று சிரிய ஜனாதிபதி பஷர் அல்-அசாத்திற்கு எதிராக அமெரிக்கா ஆயுதம் கொடுத்து வரும் படைகளுடன்தான் உள்ளன என்று Frankfurter Allgemeine Zeitung என்னும் முக்கிய ஜேர்மனிய நாளேடு கூறுகிறது. இச்செய்தித்தாள் சிரிய கெரில்லாத் துருப்புக்கள் சுன்னி குறுங்குழுவாத கொலைப் பிரிவுகளாகச் செயல்பட்டு ஹௌலாவின் ஷியைட் முஸ்லிம் சிறுபான்மையினர் பலரை அழித்து விடுவதற்குப் பொறுப்புக் கொண்டுள்ளன. இதன் மூலங்கள் ஒன்றும் அசாத் ஆட்சியில் இருந்து வரப்படுபவை அல்ல; சிரிய எதிர்ப்பில் இருந்தே வருகின்றன, மற்றும் சிரியாவில் உள்ள பிரெஞ்சு மதக் குழுக்களிடம் இருந்தும் வருகின்றன.

இத்தகவல் வெளிவந்துள்ளதின் உட்குறிப்புக்கள் ஹௌலக் கொடூரத்திற்கும் அப்பால் செல்கின்றன. இவை சிரியாவுடனான அமெரிக்கத் தலைமையில் நடைபெறும் போரின் அழுகிய தன்மை நிறைந்த அஸ்திவாரங்களை குறைமதிப்பிற்கு உட்படுத்துகின்றன. செய்தி ஊடகங்கள் திறனாயாத வகையில் எதிர்த்தரப்பின் கொலைகள் பற்றிய குறிப்புக்களை வெளியிடுகின்றன; மேற்கு நாடுகள் அசாத்தை கண்டிப்பதும், எதிர்த்தரப்பிற்கு ஆயுதங்களை அளிப்பதை ஆதரிப்பதும், ஒருவேளை சிரியா மீது அமெரிக்கப் படையெடுப்பு நடக்கலாம் எனக் கூறுவதும், மனிதாபிமானப் பேரழிவை நிறுத்துவதற்கு மனச்சாட்சிச் செயல்கள் தேவை என்பதும் இத்தகைய தவறான கருத்துக்களின் அடிப்படையில்தான்.
இத்தகைய அறிக்கைகளை வெளியிடும் செய்தி ஊடகங்களின் செயற்பாடுகள்,அமெரிக்கத் தலையீட்டிற்கான பிரச்சார அமைப்புக்களின் செயல்கள் என்பதைத்தவிர வேறு ஒன்றும் இல்லை. அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் ரஷ்யாவையும் சீனாவையும் அவை அமெரிக்கத் தலைமையிலான தலையீட்டை எதிர்ப்பதை கைவிட மிரட்டும் நோக்கத்தைக் கொண்டுள்ளன; அதன்பின் அசாத்தை அகற்றி அவருக்குப் பதிலாக அமெரிக்க சார்புடைய ஒரு பொம்மை ஆட்சியை அங்கு நிறுவ முயல்கின்றன.
ஹௌலாப் படுகொலை இப்பிரச்சாரத்தின் ஒருங்கிணைந்த பகுதியாகும். பத்து நாட்களுக்கு முன்புதான் அமெரிக்கா சிரிய எதிர்த்தரப்புச் சக்திகளுக்கு ஆயுதங்கள் விநியோகிப்பதை அதிகரிப்பதற்கு ஒருங்கிணைப்பு நடத்துகிறது என்று அறிவிக்கப்பட்டது; இதற்கு சௌதியும் கட்டாரி முடியாட்சிகளும் பணம் கொடுக்கின்றன. படுகொலை குறித்த ஆரம்ப அறிக்கைகளுக்குப் பின், மேலைச் சக்திகள் சிரியாவுடன் உறவைத் துண்டித்துவிட்டன. படுகொலைகளுக்கு எதிர்ப்புக் காட்டும் வகையில் அமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன், ஜேர்மனி, இத்தாலி, ஸ்பெயின், ஆஸ்திரேலியா, மற்றும் கனடா ஆகியவை சிரியத் தூதர்களை நாட்டை விட்டு வெளியேற்றிவிட்டன. உண்மையில் படுகொலைகள் இவற்றின் பினாமிகளால் செய்யப்பட்டவை.
இந்நிகழ்வுகள் அசாத் ஆட்சிக்கு ஆயுதம் கொடுப்பதற்கு ரஷ்யா மீது குறைகூறும் அமெரிக்கத் தூதர்களின் பாசாங்குத்தன்மையை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன; அதே நேரத்தில் வாஷிங்டனின் செல்வம் மிகுந்த அரபு நட்புநாடுகள் எழுச்சி” கெரில்லாக்களுக்கு ஆயுதங்களை ஏராளமாக வழங்குகின்றன.
இந்நிகழ்வுகள் எதுவுமே கடந்த ஆண்டு மத்திய கிழக்கில் ஏற்பட்ட புரட்சிகர எழுச்சியினால் தூண்டிவிடப்பட்ட அரசியல் நெருக்கடியின் தன்மைக்கு அப்பால் அறிந்து கொள்ள முடியாதவை. தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் நடத்திய வெகுஜன எதிர்ப்புக்கள் அமெரிக்க சார்புடைய சர்வாதிகாரிகளை எகிப்து, துனிசியா ஆகியவற்றில் இருந்து வெளியேற்றிவிட்டன. ஆனால் தொழிலாள வர்க்கத்தின் அரசியலளவில் சுயாதீன இயக்கம் இல்லாத நிலை அதிகாரத்திற்கான போரையும் சோசலிசத்திற்கான போராட்டத்தையும் முன்னேற்றுவிக்க முடியாமல், அமெரிக்காவிற்கும் அதன் நட்பு நாடுகளுக்கும் தங்களை மறு கட்டமைத்துக் கொள்ளக் கால அவகாசம் கொடுத்து ஒரு எதிர்ப்புரட்சி மூலோபாயத்தை விரிவாக்கச் செய்துள்ளது.
ஏகாதிபத்திய சக்திகளின் நோக்கம் முழு மத்திய கிழக்கையும் காலனித்துவ வகையில் மறுபடி தங்கள் அதிகாரத்தின்கீழ் கொண்டுவருவது என உள்ளது. அமெரிக்க சார்புடைய ஆட்சிகளுக்கு எதிரான எதிர்ப்புக்கள் நசுக்கப்பட்டன. வாஷிங்டனுடன் நெருக்கமான பிணைப்பு இல்லாத லிபியா, சிரியா போன்ற நாடுகளில் எதிர்ப்புக்கள் வந்தால், அவை வலதுசாரிச் சக்திகளின் கீழ் கொண்டுவரப்பட்டு,  இனக்குழு அல்லது குறுங்குழுவாத வழியே திருப்பிவிடப்பட்டது. இவை பின்னர் அமெரிக்கத் தலைமையிலான உள்நாட்டுப் போர்களில் பினாமிகளாக செயல்படும். வாஷிங்டன் அரபு வசந்தத்திற்கு” நட்பு எனக் காட்டிக் கொண்டது போல்; ஏனெனில் அது மத்திய கிழக்கு ஆட்சிகளை அகற்ற முயன்று வந்தது.
சௌதி முடியாட்சி பஹ்ரைனில் எதிர்ப்புக்களைப் பெரும் குருதிக்களரி செய்து நசுக்கியதற்குப் பின், அமெரிக்க ஆதரவு பெற்றிருந்த இஸ்லாமிய மற்றும் பழங்குடிக் கூறுபாடுகளை லிபிய கேர்னல் முயம்மர் கடாபிக்கு எதிராக ஒரு குருதி கொட்டிய போரில் ஈடுபடுத்த ஆதரவு கொடுத்தது; கடாபியின் ஆட்சி நேட்டோவால் கவிழ்க்கப்பட்டது, போரில் 50,000 பேர் உயிரிழந்தனர். சிரியாவில் அமெரிக்கா பெருப்பாலும் சுன்னிக் கூறுபாடுகளான இஸ்லாமிய முஸ்லிம் பிரதர்ஹுட் போன்றவற்றைப் பெரிதும் நம்பியது; இதற்கு ஷியைட் எதிர்ப்பு சௌதி முடியரசு நிதியுதவி கொடுத்தது. ஹௌலாப் படுகொலை இத்தகைய பிற்போக்குத்தனச் சக்திகளுக்கு வாஷிங்டன் கொடுத்த ஆதரவின் எதிர்பார்க்கப்பட்ட விளைவுதான்.
ஏகாதிபத்திய மூலோபாயம்அதுவும் சோவியத் ஒன்றியத்தின் சரிவிற்குப் பின்மத்திய கிழக்கு முதலாளித்துவத் தேசிய ஆட்சிகள் மற்றும் அவற்றின் வலதுசாரி வளர்ச்சியின் திவால்தன்மையை நம்பியது. ஒரு பெரிய சக்தியின் ஆதரவை இழந்து, அவற்றின் தடையற்றச் சந்தைச் சீர்திருத்தங்களால் பெரும் செல்வாக்கிழந்த நிலையில், இவை ஆழ்ந்த இனவழி, குறுகியபற்றுப் பிளவுகளாலும் பாதிக்கப்பட்டு, அமெரிக்கத் தலையீடு என்னும் ஆபத்தை எதிர்நோக்கின. அசாத் ஆட்சி, பல தாராளமாயக்” கொள்கைகளைச் செயல்படுத்தி, அதன் ஆளும் நபர்களை அலவைட் மத சிறுபான்மையில் இருந்து பற்றிக்கொள்ளும் நிலையில், குறிப்பிடத்தக்க வகையில் ஆபத்தை எதிர் நோக்கியது.
யூகோஸ்லாவியாவிலும் ஈராக்கிலும் சோவியத் சகாப்தத்திற்கு பிந்தைய போர்களை ஏதோ விளையாட்டு முறையில் கையாள்வது போல் செயல்படுத்திய அமெரிக்காகுறுங்குழுவாத மற்றும் பழங்குடிப் போட்டிகளைத் தூண்டி, போர் ஏற்பட்டதைப் பயன்படுத்தி தலையீட்டிற்கு அதைப் போலிக் காரணமாகப் பயன்படுத்தி, பெரிய அளவில் இலக்கு வைக்கப்பட்ட ஆட்சிமீது தயாரிக்கப்பட்ட கொடூரங்கள், மிகைப்படுத்தப்பட்ட செயல்களுக்காகக் குற்றம் சாட்டியது.
எல்லாவற்றிற்கும் மேலாக, வாஷிங்டன் அமெரிக்க, ஐரோப்பிய செய்தி ஊடகங்களின் அடிபணிந்து நிற்கும் நிலையைப் பெரிதும் நம்பியிருந்தது. அதேபோல் முதலாளித்துவ இடதுகள் என்னும் நேர்மையற்ற கட்சிகளையும் நம்பியது. முதலில் ஹௌலாப் படுகொலை குறித்து சிரிய எழுச்சி சக்திகளின்” கருத்துக்களை இழிந்த முறையில் கிளிப்பிள்ளை போல் கூறிய செய்தி ஊடகம், இப்பொழுது Frankfurter Allgemeine Zeitung அறிக்கையைப் புறக்கணிக்கிறது.
ஹௌலாப் படுகொலைக்கு சற்றுப்பின், நியூ யோர்க் டைம்ஸ் அசாத், கசாப்புக் கடைக்காரர்என்னும் தலைப்பில் தலையங்கத்தை வெளியிட்டு அசாத்தைக் கண்டித்தது. இச்செய்தித்தாள் இழிந்த முறையில் மாஸ்கோ, பெய்ஜிங் ஆகியவற்றையும் அமெரிக்கத் தலைமையிலான இராணுவத் தலையீட்டிற்கு ஆதரவு கொடுக்க மறுப்பதால் தங்கள் கைகளில் இரத்தக்கறைகள் கொண்டுள்ளன என்றும் குற்றம் சாட்டியது.
சிரிய எழுச்சி” சக்திகளுக்கு ஆதரவு கொடுத்த குட்டி முதலாளித்துவக் கட்சிகளான பிரான்ஸின் புதிய முதலாளித்துவ எதிர்ப்புக கட்சி அல்லது அமெரிக்கன் இன்டர்நேஷனல் சோசலிஸ்ட் அமைப்பு போன்றவற்றைப் பொறுத்தவரை, அவை மனிதாபிமானம் என்னும் மறைப்பில் செயல்படுத்தப்படும் ஏகாதிபத்திய கொலைகளுக்கு ஆதரவு கொடுக்கின்றன என அம்பலமாகிவிட்டது.
மத்திய கிழக்கில் ஒரே முன்னேற்றப்பாதைமுதலாளித்துவ ஆட்சிகளுக்கு எதிராகவும், சோசலிசத்தற்கு ஆதரவாகவும் போராட, தொழிலாள வர்க்கத்தின் புதுப்பிக்கப்பட்ட போராட்டம்தான். ஏகாதிபத்தியம் அதன் மத்திய கிழக்கில் உள்ள முகவர்கள் அனைவருக்கும் சமரசத்திற்கு இடமில்லாத எதிர்ப்பை அது புறப்பாட்டுப் புள்ளியாக கொள்ள வேண்டும். மத்திய கிழக்கில் தொழிலாள வர்க்கத்தின் இப்போராட்டத்திற்கு முக்கிய கூட்டாளிகள் ஏகாதிபத்திய நாடுகளில் இருக்கும் தொழிலாள வர்க்கம்தான்; அவைதான் பொருளாதார நெருக்கடிகளால் தலைசுற்றி நிற்பதுடன், அமெரிக்கா, ஐரோப்பா ஆகியவற்றின் புதுப்பிக்கப்படும் போர் உந்துதலுக்கு விரோதப் போக்கைக் கொண்டுள்ளவை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக