உமர் மிடா - திருக்குர்ஆன் ஜப்பானிய மொழிபெயர்ப்பாளர்.
Haji Umar Mita |
ஜப்பானிய இஸ்லாமிய வரலாற்றுப் பதிவேடுகளில் காணப்படும் மிகச்சிறந்த பெயர்தான் உமர் மிடா.ஜப்பானிய முஸ்லிம்களின் பெருமை என அழைக்க எல்லாவிதத்திலும் தகுதியுடையவரே இவர்.
இஸ்லாம் ஆரம்ப நூற்றாண்டுகளிலே சீனாவில் பல இடங்களில் பரவிவிட்டது.அதன் பின்பு இந்தியாவிலும் இந்தோனேசியாவிலும் இஸ்லாம் அறிமுகமானது.ஆனால் இஸ்லாத்தின் வடக்கு நோக்கிய பயணம் 15 நூற்றாண்டில் பிலிப்பைன்சை ஆக்கிரமித்திருந்த ஸ்பானிய குடியேற்றத்தால் தடுக்கப்பட்டது.பிலிப்பைன்சுக்கு அடுத்ததாக ஜப்பான் ஒரு பௌத்த நாடாக
இருந்தது.
பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஆரம்ப காலப்பகுதியில் ஒரு சில முஸ்லிம்கள் ஜப்பானில் வாழ்ந்தாலும் முஸ்லிம்களின் குறிப்பிட்டுக் கூறக்கூடிய குடியேற்றம் பத்தொம்பதாம் நூற்றாண்டின் இறுதியில் பகுதியிலேயே இடம்பெற்றது.பிரித்தானிய மற்றும் டச்சு போர்க்கப்பல்களில் பணி புரிந்த மலே இன மக்களே ஜப்பானின் முதல் முஸ்லிம் குடியேற்றவாசிகள்.மலே இனத்தவர்களின் முதல் குடியேற்றம் இடம்பெற முன் 1890 இல் உஸ்மானிய கிலாபத்தின் போர்க் கப்பல் ஒன்று ஜப்பானுடன் இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்தும் நோக்கில் வந்தது."எர்துக்ருள்" என்று அழைக்கப்படும் இக்கப்பல் தனது பயணத்தின் நோக்கத்தை வெற்றிகரமாக பூர்த்தி செய்து கொண்டு தனது தாய் நாட்டுக்கு 609 பேருடன் திரும்பிக் கொண்டிருந்த வேளையில் 1890 செப்டெம்பர் மாதம் 540 பேருடன் கடலில் மூழ்கியது.
கொடாறு யமாகோ என்பவரே ஜப்பானிலிருந்து முதன் முதலாக ஹஜ்ஜை நிறைவேற்ற சென்றவர்.1909 மும்பையில் வைத்து ரஷ்ய எழுத்தாளரான அப்துர் ராஷித் இப்ராஹீம் எம்பவர் மூலம் இஸ்லாத்தை அறிந்து கொண்ட கொடாறு யமாகோ இஸ்லாத்தை தழுவினார்.பின்னர் அவர் தனது பெயரை உமர் யமாகோ என்று மாற்றிக்கொண்டார்.உஸ்மானிய கிலாபத்தின் இறுதி கலிபாவான அப்துல் ஹமீது II இடம் டோக்கியோ நகரில் பள்ளிவாசல் ஒன்று கட்ட அனுமதி கேட்ட உமர் யமாகோ, அதற்கு கலிபாவின் அனுமதி கிடைக்க 1938 இல் பள்ளிவாசலை கட்டிமுடித்தார்.

முதலாம் உலக மகா யுத்தத்தின் போது ரஷ்யாவில் இடம்பெற்ற போல்ஷெவிக் புரட்சியின் போது அகதிகளாக்கப்பட்ட மத்திய கிழக்காசிய முஸ்லிம்கள் ஜப்பானில் குடியேறினர்.ஜப்பானில் தஞ்சம் புகுந்த மத்திய கிழக்காசிய முஸ்லிம்கள் ஜப்பானின் மிக முக்கிய நகரங்களில் குடியேறினார்கள்.இப்படி குடியேறிய முஸ்லிம்களிடமிருந்து இஸ்லாத்தை அறிந்து கொண்ட உள்ளூர்வாசிகள் சிலர் இஸ்லாத்துக்கு வந்தனர்.
ஜப்பானில் முஸ்லிம்களின் சனத்தொகை பெருகப் பெருக பள்ளிவாசல்களின் எண்ணிக்கையும் கணிசமான அளவு அதிகரித்தது.இதில் 1935 ஆம் ஆண்டு கட்டப்பட்ட கோபே நகர பள்ளிவாசல் மிக முக்கியமானது.(இந்தப் பள்ளிவாசல் 1995 ஜனவரி 17 ஆம் திகதி நடந்த GREAT HANSHIN EARTHQUAKE இல் எந்தவிதமான பாதிப்பும் அடையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் 1945 இல் இரண்டாம் உலகப் போரின் போது ஜப்பானின் மீது வீசப்பட்ட அணுகுண்டு தாக்குதலின் போதும் இந்த பள்ளிவாசல் எந்தவிதமான பாரிய சேதத்துக்கும் உள்ளாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.)இன்றைய திகதிக்கு ஜப்பானில் 35 - 40 வரையான பள்ளிவாசல்களும் 100 அதிகமான பாரிய சிறிய தொழுகை அறைகளும் காணப்படுகிறது.
ஜப்பான் முதலாம் உலக மகா யுத்தத்தின் போது சீனா மற்றும் தென்கிழக்காசிய நாடுகளை ஆக்கிரமித்தது.அதன்போது இஸ்லாத்தின் மீது ஈடுபாடு கொண்டு இஸ்லாத்தில் கணிசமான ஜப்பானிய சிப்பாய்கள் இணைந்தனர்.ஜப்பானுக்கு திரும்பிய அவ்வீரர்கள் ஜப்பானின் 1953 முதலாவது முஸ்லிம் அமைப்பு ஒன்றை சாதிக் இமைசுமியின் தலைமையில் உருவாக்கினார்கள்.இந்த அமைப்பின் இரண்டாவது தலைவரே உமர் மிடா.
அரபு உரைகளைக் கொண்ட திருக்குரானின் அங்கீகரிக்கப்பட்ட ஜப்பானிய மொழித்தொகுப்பு உமர் மிடா அவர்களால் 1972 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.
1892 ஆம் ஆண்டு டிசெம்பர் 19 ரியொச்சி மிடாவாக ஒரு சாமுராய் குடும்பத்தில் பிறந்தார் உமர் மிடா அவர்கள்.தனது 24 ஆம் வயதில் யமகுசி வர்த்தக கல்லூரியில் பட்டம் பெற்றார் உமர் மிடா அவர்கள்.சீன மொழியை கற்பத்துக்கு சீனா சென்றிருந்தபோதே அவருக்கு இஸ்லாத்தின் அறிமுகம் கிடைத்தது.சீன முஸ்லிம்களின் வாழ்க்கை முறை அவருக்கு புதுவித அனுபவத்தைக் கொடுத்தது.ஏனெனில் அவர் ஜப்பானில் இப்படியானதொரு சூழலை கண்டிருக்கவில்லை.1920 இல் அதாவது அவரின் 28 அவது வயதில் “Toa Keizai Kenkyu” (Far-East Economic Research Journal) என்ற இதழுக்கு "சீனாவில் இஸ்லாம் " என்ற ஒரு கட்டுரையை அவர் எழுதினார்.
1909 இல் ஜப்பானின் முதல் ஹாஜியான உமர் யமாகொவை சந்திக்கும் வாய்ப்பைப் பெற்றார் உமர் மிடா அவர்கள்.தனது மக்கா பயணத்தை முடித்து கொண்டு ஜப்பான் வந்த உமர் யமாகோ அவர்கள் ஜப்பான் முழுவதும் இஸ்லாத்தின் தூதை கொண்டு சென்றார்.1912 இலிருந்து இஸ்லாத்தை பற்றியும் தனது மக்கா பயணம் பற்றியும் பல நூற்களை எழுதினார்.1921 உமர் மிடா அவர்கள் உமர் யமாகொவை மீண்டும் சந்தித்தார்.
இஸ்லாத்தை பற்றி பல விடயங்களை தெரிந்து கொண்ட உமர் மிடா அவர்கள் 1941 இல் தனது 49 வயதில் இஸ்லாத்தை தனது பூரண வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டார்.
உமர் மிடா அவர்கள் தனது 60 ஆவது வயதில் அரபி மொழியை கற்றுக்கொள்ள ஆரம்பித்தார்.1957 இல் பாகிஸ்தானிலிருந்து கிடைத்த அழைப்பின் பேரில் அங்கு சென்ற மிடா அவர்கள் பல இடங்களுக்குச் சென்று தாவா பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.1958 ஹஜ்ஜை நிறைவு செய்த உமர் மிடா அவர்கள் 1960 இல் Japan Muslim Association இன் இரண்டாவதி தலைவராக நியமனம் பெற்றார்.இதன் தலைவராக இருந்த போது "Understanding islam " மற்றும் "Indroduction to islam " என்ற இரு நூற்களை எழுதினார்.மேலும் மௌலானா முஹம்மத் ஷகறியா அவர்களின் "ஹயாத்துஸ் சஹாபா" வை ஜப்பான் மொழிக்கு மொழி மாற்றம் செய்தார்.
உமர் மிடா அவர்களின் மொழிபெயர்ப்புக்கு முன் ஜப்பானிய மொழியில் ஏற்கனவே மூன்று மொழிபெயர்ப்புக்கள் வெளிவந்துள்ளன.ஆனால் இவை அனைத்தும் முஸ்லிம் அல்லாத ஜப்பானிய அறிஞ்சர்களால் மொழிபெயர்க்கப்பட்டவையாகும்.1968 இல் மொழிபெயர்ப்புப் பணியை நிறைவு செய்த உமர் மிடா அவர்கள் 1970 இல் மக்காவிலுள்ள Muslim World League ற்கு சமர்ப்பித்தார்.Muslim World League இனால் கிட்டத்தட்ட ஆறு மாத காலம் முழுமையாக சோதனைக்கு உள்ளான அவரின் மொழிபெயர்ப்பு பின்பு அங்கீகரிக்கப்பட்டு Takumi Kobo Printing Company of Hiroshima என்ற அச்சகத்துக்கு பதிப்புரிமை வழங்கப்பட்டது.
உமர் மிடா அவர்களின் 12 வருட உழைப்பின் பலன் 1972 ஆம் ஆண்டு வெளியானது.அவர் அந்த மிகப் பெரிய சந்தோசத்தை தந்து 80 ஆவது வயதில் பெற்றுக் கொண்டார்.ஜப்பானிய முஸ்லிம்களுக்கும் இஸ்லாத்துக்கும் பாரிய ஒரு சேவையாற்றிய உமர் மிடா அவர்கள் 1976 இல் தனது 84 ஆவது வயதில் இறையடி சேர்ந்தார்.அல்லாஹ் அவரின் சேவையை ஏற்றுக்கொள்வானாக.ஆமீன் !
கோபே நகர பள்ளிவாசல் அணுகுண்டுத் தாக்குதலுக்குப் பிறகு. |

First Japanese Edition |
உமர் மிடா அவர்களின் 12 வருட உழைப்பின் பலன் 1972 ஆம் ஆண்டு வெளியானது.அவர் அந்த மிகப் பெரிய சந்தோசத்தை தந்து 80 ஆவது வயதில் பெற்றுக் கொண்டார்.ஜப்பானிய முஸ்லிம்களுக்கும் இஸ்லாத்துக்கும் பாரிய ஒரு சேவையாற்றிய உமர் மிடா அவர்கள் 1976 இல் தனது 84 ஆவது வயதில் இறையடி சேர்ந்தார்.அல்லாஹ் அவரின் சேவையை ஏற்றுக்கொள்வானாக.ஆமீன் !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக