பிரிட்டிஷ் சென்சஸ் - நாத்திகத்தால் வெல்ல முடியா இஸ்லாம்
நம் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமீன்.
இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் பகுதிகளுக்கான புதிய மக்கட்தொகை கணக்கெடுப்பை (2001 - 2011), பிரிட்டன் அரசாங்கம் சில நாட்களுக்கு முன்பாக வெளியிட்டுள்ளது. வெளியிடப்பட்ட நாளில் இருந்து இதுக்குறித்த செய்திகளால் மேற்கத்திய ஊடகங்கள் அல்லோலப்படுகின்றன.
ஏன் என்ற கேள்விக்கு, பல ஆச்சர்யமூட்டும் செய்திகள் இதில் அடங்கியிருக்கின்றன என்பதே பதில்.
வரலாறு முழுவதுமே நாத்திகத்திற்கு பெரும் சவாலாக இருந்துள்ளது இஸ்லாம். அல்லது, வேறு வார்த்தைகளை போட்டு சொல்ல வேண்டுமென்றால் நாத்திகத்தால் இஸ்லாமிற்கு எந்த காலத்திலும் பாதிப்பு வந்ததில்லை. இந்த உண்மையை சமீபத்திய பிரிட்டிஷ் சென்சசும் நிரூபித்துள்ளது.
கடந்த பத்து ஆண்டுகளில் (2001 - 2011) நாத்திகத்தை