ஈராக்கில் ரகசியமாக நுழைந்த அமெரிக்க துருப்புக்கள் !
பாக்தாத்:சிரியா மற்றும் வட ஈராக்கில் நடந்துவரும் போராட்டங்களை கணக்கில் கொண்டு 3000_க்கும் மேற்பட்ட அமெரிக்க ராணுவ வீரர்கள் குவைத் வழியாக ஈராக்கினுள் நுழைந்துள்ளதாக பிரஸ் டிவி செய்தி ஒன்று தெரிவிக்கிறது. ரகசியாமாக நுழைந்த அமெரிக்க ராணுவ வீரர்கள் சலாஹுத்தீன் பிராந்தியத்தின் ஃபலத் ராணுவ மையத்திலும் அல்-ஆசாத் விமான தளத்திலும் முகாமிட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் ராணுவ உயரதிகாரிகள் உட்பட இன்னும் 17,000 அமெரிக்க ராணுவத்தினர் ஈராக்கினுள் ரகசியமாக நுழைய திட்டமிட்டுள்ளதாக செய்திகள் குறிப்பிடுகின்றன. ஒன்பது வருட ஆக்கிரமிப்பிற்குப் பிறகு ஈராக் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்குள்ளான ஒப்பந்தத்தினைத் தொடர்ந்து கடந்த 2011_ஆம் ஆண்டு ஈராக்கை விட்டு அமெரிக்கா தனது படையை வாபஸ் பெற்று ஈராக்கின் அண்டை நாடான குவைத்தில் வைத்திருந்தது.
கடந்த 2003_ஆம் ஆண்டு ஈராக்கில் பேரழிவு ஆயுதம் இருப்பதாகக்கூறி அமெரிக்காவும் அதன் கூட்டணி நேட்டோ படைகளும் ஈராக்கை ஆக்கிரமித்தன. ஆனால் ஈராக்கில் இதுவரை அவ்வாறு எந்த பேரழிவு ஆயுதங்களும் அமெரிக்காவால் காட்ட இயலவில்லை. மேலும் அமெரிக்காவின் ஆதிக்க வெறிக்கு 1 மில்லியன் ஈராக்கிகள் இதுவரை பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக