FEMEN - அதிரடியாய் பதிலடி கொடுக்கும் முஸ்லிம் பெண்கள்...
நம் அனைவர் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...
பெfமன் (FEMEN), 2008-ஆம் ஆண்டு உக்ரைனில் தொடங்கப்பட்ட பெண்ணுரிமை(?) அமைப்பு. கடந்த ஐந்து ஆண்டுகளில் பல்வேறு ஐரோப்பிய நாடுகளில் தன்னுடைய கிளைகளை பரப்பியுள்ளது. இவர்கள் பரவலாக அறியப்பட காரணம் இவர்களின் போராட்ட வழிமுறை தான். மேலாடை இல்லாமல் அரைநிர்வாணமாக போராடுவதையே தங்களின் பணித்திட்டமாக கொண்டுள்ளனர்.
சமீப காலமாக சமூக வலைத்தளங்கள் தொடங்கி ஊடகங்கள் வரை பெfமன் குறித்த செய்திகளால் பரபரக்கின்றன. இதற்கு காரணம், இந்த அமைப்பின் சமீபத்திய நடவடிக்கைகளுக்கு எதிராக முஸ்லிம் பெண்கள் களமிறங்கியது தான்.
முஸ்லிம் பெண்களின் இந்த கவுன்ட்டர் அட்டாக்கின் பின்னணி என்ன?
சில நாட்களுக்கு முன்பாக துனிசியாவை சேந்த பெfமன் உறுப்பினர் ஒருவர், முகப்பக்கத்தில் தன்னுடைய அரைநிர்வாண படங்கள் இரண்டை பகிர்ந்திருந்தார். அவருடைய உடலில் ஆங்கிலத்திலும், அரபியிலும் எழுதப்பட்டிருந்த அந்த








