மே 05, 2011


யூத ரப்பிகளின் சர்வதேசக் 


கொள்கை.


சமீப காலமாக உலக மக்கள் அனைவரும் இஸ்லாத்தின்பால் ஈர்க்கப் படுவதை தவிர்க்க இஸ்லாத்தின் மீதும் முஸ்லீம்கள் மீதும் பல அநியாயங்களை கட்டவிழ்த்துவிட்டு, பின்னர் அந்த அநியாயங்களை பாதிக்கப்பட்ட முஸ்லீம்கள் தட்டிக்கேட்டால் அவர்களை காட்டுமிராண்டிகள் என்றும் நாகரீகமற்றவர்கள் என்றும் அனைத்து ஊடங்களிலும் பரப்பும் இன வெறி பிடித்த யூத கிறித்தவர்களின் யோக்கிதை தற்பொழுது வெளியாகியுள்ளது.
தாங்கள் செய்யும் அக்கிரமங்களை பற்றி யாராவது கேள்வி எழுப்பினால், என்றோ ஹிட்லரால் நடத்தப்பட்ட யூதர்களின் படுகொலையை சொல்லி இதனை நீ மறுக்கிறாயா என்று எதிர் கேள்வி எழுப்புவார்கள் இந்த சியோனிஸவாதிகள். ஹிட்லர் யூதர்களை கொன்றதற்கும் தற்பொழுது இந்த சியோனிஸவாதிகள் அப்பாவி முஸ்லீம்களை கொல்வதற்கும் என்ன தொடர்பு இருக்கின்றது என்று நமக்கு தெரியவில்லை.
தற்பொழுது நமக்கு கிடைத்துள்ள செய்தியாவது, "யூத ரப்பி ஒருவன் தான் எழுதிய புத்தகத்தில், யூதர்கள் அல்லாத மற்றவர்கள் யூதர்களுக்கோ அல்லது இஸ்ரேலுக்கோ அச்சுறுத்தலாக தோன்றினால் அவர்கள் குழந்தைகளாகவும் சிறுவர்களாகவும் இருந்தாலும் கூட அவர்களை கொல்வது தான் சரி" என்று எழுதியுள்ளான்.
யூதர்கள் அல்லாதவர்களை, நல்லவர்களை, அவர்கள் யூதர்களுக்கு அச்சுறுத்தலாக இல்லாத பொழுதும் அவர்களை கொல்ல யூதர்களுக்கு அவர்களின் வேதம் அனுமதியளிக்கிறது என்று Yitzhak Shapira என்ற ரப்பி தன்னுடைய The King's Torah என்ற புத்தகத்தில் எழுதியுள்ளான். அவன் கூறுகையில், "கோயெம் களை (இது யூதர்கள் அல்லாதவரை சிறுமைப்படுத்துவதற்காக கூறும் அடைமொழி) அவர்கள் இஸ்ரேலை அச்சுறுத்தினால் அவர்களை கொலை செய்யலாம்" என்று கூறுகின்றான்.
"பாவம் செய்த அல்லது யூதர்களின் 7 கட்டளைகளை ஏதாவது ஒன்றை மீறிய யூதர்கள் அல்லாதவர்களை கொலை செய்வது குற்றமில்லை. ஏனென்றால் யூதர்களுக்கு இறைவன் கொடுத்த அந்த 7 கட்டளைகள் தான் மிக முக்கியம். அதனால் கொலை செய்வது தப்பில்லை" என்று கூறுகின்றான்.
யூதர்களின் பள்ளி ஒன்றின் தலைமை பதவி வகிக்கும் ஷபிரா, அவனது இந்த கூற்றினை யூதர்களின் வேதமான தவ்ராத்தும் அங்கீகரிக்கின்றது என்று கூறுகின்றான்.
இவனின் இந்த கூற்று, இரண்டு அப்பாவி பாலஸ்தீனிய ஆடு மேய்ப்பவர்கள் இருவரை கொன்றதற்காக யூதன் ஒருவனை இஸ்ரேலிய காவல் துறையினர் கைது செய்ததன் விளைவாக வெளிவந்துள்ளது.
இந்த சியோனிச தீவிரவாதி அமெரிக்காவில் பிறந்து இஸ்ரேலில் குடியேறிய யாகொவ் டேயிடேல் என்பவனாவான். இவன் நடுநிலை வகிக்கும் யூதர்களையும் கொலை செய்ய திட்டமிட்டிருந்தான் என்பதும் இவனது வாக்குமூலத்தின் வழியே தெரிய வந்துள்ளது.
இதேபோல் கிட்டத்தட்ட 16 வருடங்களுக்கு முன்பாக இகால் அமீர் என்பவன் முன்னாள் இஸ்ரேலிய பிரதமரான Premier Yitzhak Rabin என்பவரை கொலை செய்தான்.
மேலும் பல்லாயிரக்கணக்கான அப்பாவி பாலஸ்தீனியர்கள் அவ்வப்போது இனவெறி பிடித்த யூதர்களால் கொல்லப்பட்டுள்ளனர்.
1994 ல் Baruch Goldstein என்ற யூத வெறியன் ஒருவன் மேற்குக் கரையில் உள்ள அல் இப்ராஹிமி பள்ளிவாசலில் தொழுகை நடத்திக்கொண்டிருந்த முஸ்லீம்கள் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தினான். அதில் 29 முஸ்லீம்கள் கொல்லப்பட்டனர்.
ஷபிராவின் இந்த புத்தகத்தை அவனைப்போல பல ரப்பிகளும் ஆதரிக்கின்றனர். இவனது இந்த் புத்தகத்தை வெளிப்படையாக ஆதரித்த ரப்பிகள் Yitzhak Ginsburg மற்றும் Ya’akov Yosef ஆகியோராவர்.
இதில் Ginsburg கொலைகாரன் Goldstien ஐ தெய்வீகமானவர் என்று வர்ணித்துள்ளான்.
ஷபிராவின் பாலஸ்தீனியர்கள் மற்றும் யூதரல்லாதவர் மீதான இந்த கருத்து, பெரும்பாலான யூத சமுதாயத்தின் மனநிலையை பிரதிபலிப்பதாகவே இருக்கின்றது.
கடந்த ஜனவரியில் இஸ்ரேலின் காசாமீதான தாக்குதலின் போது யூத ரப்பிகளில் மிகவும் பிரசித்திப் பெற்ற ரப்பியான Mordecahi Elyahu என்பவன் இஸ்ரேலிய படைகளிடம், "உங்கள் வீரர்களின் உயிரை காப்பாற்ற வேண்டும் என்றால் எதிரியின் குழந்தைகளை கொல்வதற்கு கூட தயங்காதீர்கள்" என்று கூறியுள்ளான்.
இவன் இஸ்ரேலிய அரசாங்கத்திடம் பாலஸ்தீனின் மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகள் மீது Carpet Bombing (இது குறிப்பிட்ட இலக்கு என்றில்லாமல் ஒரு பகுதியை மொத்தமாக அழிப்பதற்காக பயன்படுத்தக் கூடியது.) நடத்துவதற்கு விண்ணப்பம் கொடுத்துள்ளான்.
அவன் மேலும் கூறியதாவது, " நாம் அவர்களில் 100 பேரை கொன்றதும் அவர்கள் தங்களின் எதிர்ப்பை நிறுத்திக் கொள்ளவில்லை என்றால் அவர்களில் 1000 பேரை நாம் கொல்ல வேண்டும். 1000 பேரை கொன்றும் அவர்கள் நிறுத்தவில்லை என்றால் அவர்களில் 10000 பேரை கொல்ல வேண்டும், அவர்களில் 10000 பேரை கொன்றும் அவர்கள் நிறுத்திக் கொள்ளவில்லை என்றால் 100000 பேரை கொல்ல வேண்டும். இன்னும் அவர்களை தடுக்க என்ன வேண்டுமானாலும் செய்யலாம்" என்று கூறியுள்ளான்.
Jewish History, Jewish Religion: the Weight of Three Thousand years என்ற புத்தகத்தை எழுதிய இஸ்ரேல் ஷஹக் என்பவனின் கூற்றுப்படி, "மனிதன் என்ற சொல்லாக்கம் யூதர்களை மட்டுமே குறிக்கும்" என்று கூறியுள்ளான்.
மேலும் இஸ்ரேலில் உள்ள பல ரப்பிகள் சர்வதேச சட்டங்கள் மற்றும் அப்பாவிகளை கொல்லக்கூடாது என்பதெல்லாம் கிறித்தவர்களின் சட்டமென்றும் அது யூதர்களுக்கு பொருந்தாது என்றும் கூறுகிறார்கள்.
2006 இல் நடந்த யூத குடியிருப்புகளில் உள்ள ரப்பிகளின் கூட்டமைப்பு, கிறித்தவர்களின் சட்டங்களை புறக்கணித்து லெபனான் மற்றும் காசாவில் உள்ள எதிரிகளை முற்றிலுமாக அழிக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். 
இது போன்ற இன வெறியை தூண்டும் கருத்துக்கள் சர்வதேச அளவிலும் சரி, இஸ்ரேலின் உள்ளும் சரி யாரிடமும் இது அடிப்படைவாத கொள்கையாகவோ, மனித நெறிகளுக்கு முரணாகவோ தோன்றவில்லை. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக