இஸ்லாமோஃபோபியா - ஒரு பார்வை
(பகுதி 4)
யூத பாரம்பரியத்தினால் உரமிடப்பட்டு, உலக மக்கள் மனதில் பசுமையாக வளர்த்து விடப்பட்ட இஸ்லாத்தின் மீதான இத்தகைய அதீத அச்சத்தை, இன்று அறிவிக்கப்படாத போக்கிரியாக, உலக நாடுகளின் பெரியண்ணனாக எண்ணிவலம் வரும் அமெரிக்க நிர்வாகம் மிகவும் நேர்த்தியுடன் கட்டுக் குலையாமல் கட்டியெழுப்பி சர்வதேச அளவில் மக்கள் மனங்களில் மிக உறுதி வாய்ந்த கட்டிடம் போன்று உயர்ந்து நிற்க வைத்திருக்கின்றது. மதப்பாரம்பரிய நம்பிக்கைகளின் அடிப்படையில் யூதர்களும் அமெரிக்கர்களும் எலியும் பூனையும் என்றாலும், இஸ்லாத்தினை எதிர்க்கும் விஷயத்தில் இவர்கள் இருவரும் ஒருங்கிணைந்து செயல்படுவது பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தலாம்.
நவீன உலகின் சட்டாம்பிள்ளையாக நிரந்தரமாக வலம் வரவேண்டும் என்ற அதிகார வெறி, தன்னை எதிர்ப்பவர்களையும் எதிர்காலத்தில் தனக்கு மிகப்பெரிய சவாலாக வர நேரிடலாம் என கணிக்கப்படுபவர்களையும் நிர்மூலமாக்குவதில் அதீத சிரத்தை எடுத்துக் கொண்டு செயல்பட வைக்கின்றது. அமெரிக்க நிர்வாகத்தின் இந்த அதிகார வெறியே, பாரம்பரியமாக அவர்களின் நம்பிக்கைக்கும், கொள்கைக்கும் நேர் எதிர் கொள்கையுடைய யூதர்களோடு தற்காலிகமாய்