ஜூன் 30, 2011


பூமியின் வளிமண்டலங்களைப் பற்றி திருக் குர்ஆன் கூறும் உண்மைகள்


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

பூமியின் வளிமண்டலங்களைப் பற்றி திருக் குர்ஆன் கூறும் உண்மைகள்:

அல் குர்ஆனில் அல்லாஹ்(SWT) கூறுகின்றான்:
(திரும்பத் திரும்பப்) பொழியும் மழையை உடைய வானத்தின் மீது சத்தியமாக, (அல்-குர்ஆன்: 86-11).

அ(ந்த இறை)வனே உங்களுக்காக பூமியை விரிப்பாகவும், வானத்தை விதானமாகவும் அமைத்து, வானத்தினின்றும் மழை பொழியச்செய்து, அதனின்று உங்கள் உணவிற்காகக் கனி வர்க்கங்களை வெளிவரச் செய்கிறான்; (இந்த உண்மைகளையெல்லாம்) நீங்கள் அறிந்து கொண்டே இருக்கும் நிலையில் அல்லாஹ்வுக்கு இணைகளை ஏற்படுத்தாதீர்கள். (அல்-குர்ஆன் 2-22).

இறைவன்  தனது முதல் வசனத்தில் 'திரும்ப திரும்ப பொழியும் வானத்தின் சத்தியமாக' என்று தனக்கே உரிய சிறப்பான நடையில் கூறுகின்றான்.  இஸ்லாமிய கொள்கைகளின் படி,  இத்தகைய உயர்ந்த நடையில் சுத்தமான கருத்து தனது படைபாளனாகிய இறைவனிடம் இருந்து மட்டும் தான் கூறமுடியும் என்று ஒவ்வொரு இறை நம்பிக்கையாளனும் விசுவாசம் கொள்வான்.

இரண்டாம் வசனத்தில் 'பூமியை விரிப்பாகவும் (தங்குமிடமாகவும்) வானத்தை விதானமாகவும்(கூரையாகவும்) என்று அல்லாஹ் கூறுகின்றான். 

இன்றைய அறிவியல் நமக்கு வளிமண்டலங்களைப் பற்றியும், அதன் பண்புகளைப் பற்றியும் எவ்வாறு கற்று தருகின்றன என்பதனை காண்போம்.

வளிமண்டலம் என்பது இந்த பூமியைச் சுற்றியிருக்கும் காற்றி மண்டலங்களாகும்.  அவைகள் பூமியின் மேல்பரப்பிலிருந்து விண்வெளியின் தொடக்கம் வரை பல அடுக்குகளால் அமையப்பெற்றுள்ளன.  இந்த ஒவ்வொரு அடுக்குகளும் தங்களுக்கே உரிய தனித் தனிப் பண்புகளைப் பெற்றுள்ளன.


படம் 1 . பூமியின் வளிமண்டலங்களின் சராசரி வெப்பத்தின் அளவினை படத்தில் காணலாம். தெர்மொஷ்பேர் எனும் வெப்ப மண்டலத்தின் வெப்பநிலை சுமார் 500 முதல் 1500 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும்.  

வளிமண்டலத்தில் உள்ள மேகங்களிலிருந்து மழை, பனி பூமிக்கு நீரியச் சுழச்சி (hydrologic cycle) மூலம் புவிக்கு திரும்ப வருகின்றது.  இந்த நீரியச் சுழச்சியை என்ச்யச்லோபீடியா பிரிட்டானிகா இவ்வாறு கூறுகின்றது:

"பூமியின் மேல்பரப்பில் உள்ள நீர் நிலைகளிளிருந்து நீரானது சூரிய வெப்பத்தினால் ஆவியாகி வளிமண்டலத்திற்கு செல்கின்றன.  நீர் ஆவியாதிலின் வீதமும் மழை பொழிவதும் சூரிய வெப்பத்தினை பொறுத்தே மாறுபடுகின்றன.  கடலின் ஆவியாதல் என்பது மழை பொழிவதைக் காட்டிலும் அதிகமாக இருக்கும்.  மேலும் இப்படி ஆவியாகும் நீரானது காற்றின் மூலம் மேகத்திற்கு எடுத்து செல்லப் படுகின்றது. பின்னர் அவை மழையாகவும் பனியாகவும் பூமிக்கு திரும்ப பொழியப்படுகின்றன.

வளிமண்டலங்கள் மழையை திரும்ப பொழிவதொடு மட்டுமல்லாமல் அவை இப்பூமியைப் பாதுகாக்கும் ஒரு கூரையாகவும் இருக்கின்றன.  சூரியனிடமிருந்து வரும் வெப்பக்கதிர்களிடமிருந்தும், புறஊதாக்கதிர்களிடமிருந்தும் அனைத்து உயிரினங்களையும் பாதுகாக்கும் ஒரு கேடயமாகவும் இருக்கின்றன.  இவ்வெப்பக்கதிர்கள் உயிரனங்களை கொடிய வகையில் தாக்கவல்லது.  1990 -ல் நாசா, ESA, ISAS மற்றும்  ISTP ஒருங்கிணைந்து துருவப் பகுதிகளையும், காற்று மற்றும் காந்தபுலன்களைப் பற்றியும் பல கண்டுபிடிப்புகளை நிகழ்த்தின.  அந்த ஆய்வின் மூலம் வளிமண்டலம் எவ்வாறு சூரியக் கதிர்களை விண்ணுக்கு திரும்ப அனுப்புகின்றன என்பதனையும்,  வளிமண்டலங்கள் எவ்வாறு பூமியை காஸ்மிக் கதிர்களிடமிருந்தும், விண்கற்களிடமிருந்தும் மற்றும் புற ஊதாகதிர்களிடமிருந்தும் நம்மை பாதுகாக்கின்றன என்பதனை விளங்கி கொள்ளமுடியும்.

பெனிசுலவேனிய மாகாண பொது ஒளிபரப்பு நிறுவனம் இவ்வாறு கூறுகின்றது:

' நமது கண்களினால் காணக்கூடிய சூரிய ஒளியானது ஒரு குறிப்பிட்ட அலை நீளத்தை பெற்றிருக்கும்.  மேலும் நமது கண்களினால் காண இயலாத சூரியனிடமிருந்து வரும் X- கதிர் மற்றும் UV கதிர்கள் வளிமண்டலங்களினால் உறிஞ்சப்படுகின்றன.  பெரும்பாலான  உயிரனங்களுக்கு தீங்கு விளைவிக்கும் கதிரானது  ஓசோன் வாயு மண்டலத்தினால் உறிஞ்சப்படுகின்றன.  இதனால் வளிமண்டலங்கள் ஒரு பாதுகாப்பு கவசம் போன்று செயல்படுகின்றன.  மேலும் விண்கற்களின் மோதலின் போது ஏற்படும் வெப்பங்களிடமிருந்தும் , அதிக வேகத்தில் விண்வெளி தூசுகளிடமிருந்தும் புவியை பாதுகாக்கின்றன.'

படம் 2 . Stratosphere எனும் இரண்டாம் நிலை அடுக்கு வானம்.


சூரியனிடமிருந்து வரும் புறஊதாக்கதிர்கள் இரண்டாம் நிலை அடுக்கான ஸ்ட்ராடோஸ்பேர் மூலம் தடுக்கப்படுகின்றன.  இவற்றினை என்சைக்ளோபீடியா கீழ்க்கண்டவாறு விவரிக்கின்றது.

'ஸ்ட்ராடோஸ்பேர் அடுக்கின் மூலம் புறஊதாக்கதிர்கள் உறிஞ்சப்படுகின்றன. சூரியக் கதிர்கள் இவ் அடிக்கில் உள்ள ஆக்சிஜன் அணுக்களை உடைக்கின்றன.  பின்னர் வளிமண்டல ஆக்சிஜன் (O 2 ) உடன் வினைபுரிந்து O 3 எனும் ஓசோன் படலத்தை ஏற்படுத்துகின்றன.  மக்கள் தொகை அதிகம் வசிக்கும் பகுதிகளில் வளிமண்டலத்தில் உள்ள வெப்பத்தின் காரணமாகவும் அவைகள் வெளியிடும் நச்சு கழிவின் மூலமும் ஓசோன் படலம் பாதிப்படைகின்றது.  அவை பாதிப்படைந்த போதிலும் பெரும்பாலான UV- கதிர்களை தடுக்கின்றன.   புறஊதாக்கதிர்கள் தோல் புற்று நோயை  உண்டாக வல்லது.'

மேசொஸ்பியர் எனும் அடுக்கானது, விண்கற்கள் அவைகள் பூமிக்குள் நுழையும் போது அவற்றை எரித்துவிடுகின்றன.  ஒவ்வொரு விண் கற்களும் சுமார் 30,000 மைல் வேகத்தில் வரக் கூடியதாகும்.  எப்பொழுது விண் கற்கள் பூமியின்  மேசொஸ்பியர் எனும் அடுக்கினை அடையும்பொழுது 3000 deg F வெப்பத்துடன் எரிக்கப்படுகின்றன. எதனால் அக்கற்களின் எடை குறைந்து துகள்களாகவும் சாம்பலாகவும் கீழே விழுகின்றது.  

  
 படம் 3 . புவியின் வளிமண்டலதினை படத்தில் காணலாம்.  நீல நிறத்தில் அடர்த்தியாக காணப்படுவது மேசொஸ்பியர் எனும் புவி ஓடாகும்.

மேக்னடோஸ்பேர் எனும் அடுக்கானது சோலார் ஸ்டோர்ம் என்ற சூரிய புயலினால் ஏற்படும் பாதிப்புகளிடமிருந்து  புவியை பாதுகாக்கின்றன.  நாசா மற்றும் ஐரோப்பிய விண்வெளி ஆய்வு நிறுவனங்களின் க்லஸ்டர்  செயற்கைகோளின் மூலம் தகவலின் படி, இந்த மேக்னடோஸ்பேர் எனும் காந்த அடுக்கானது சிலமணிநேரங்கள் செயலிழக்கின்றன.  இருந்த போதிலும் புவியின் வாயு மண்டலங்கள் புவியை பாதுகாக்கின்றன.  

சுமார் 14  நூற்றாண்டுகளுக்கு முன் ஒரு சாதாரண மனிதரால் எப்படி இன்றைய அறிவியலின் கண்டுபிடிப்பின் உண்மையை உறுதிபடுத்த இயலும்?  அவ்வாறு இயலும் எனில் அதற்கு ஒரே ஒரு வழிதான் உண்டு, அது வானத்தையும் , பூமியையும் படைத்த படைப்பாளனிடமிருந்து அவருக்கு இறக்கி அருளப்பெற்றிருக்க வேண்டும்.  ஆகவே திருக் குர்ஆன் இறைவனிடமிருந்து இறக்கப்பட்ட இறைவேதம் ஆகும் என்பதனை விளங்கிக்கொள்ள  இயலும்.

Article source:  The Earth Atmosphere
Images source: islamreligion.com
  
நன்றி:  
சகோ.பார்த்தசாரதி.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக