ஜூன் 17, 2011


த டாவின்ஸி கோட் - நொருங்கியக் 

கனவுகள் (இரகசிய சமுதாயம் -5)



  கடந்த 2003 ஆம் ஆண்டு அமெரிக்க எழுத்தாளர் டான் பிரவ்ன் என்பவரால் எழுதப்பட்ட ஒரு நாவல்தான் த டாவின்சி கோட். 44 மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட இந்த புத்தகம் 80 மில்லின் பிரதிகள் விற்று சாதனை படைத்தது. அந்த நாவலை கருப்பொருளாகக் கொண்டு இயேசு கிருஸ்துவுக்கும் மகதலேனா மரியாள் என்ற மேரி மெக்டலினுக்கும் திருமணமாகி ஒரு குழந்தையும் உண்டும் என்று புனைந்து, கடந்த 2006ஆம் ஆண்டு இந்த நாவலின் பெயராலேயே திரைப்படம் தயாரித்து வெளியிட்டனர்.  கிருஸ்தவக் கோட்பாட்டை தரைமட்டமாக்கும் இந்த ஹாலிவுட் திரைப்படத்திற்கு உலகெங்கிலும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. முஸ்லிம்கள் உயிராக மதிக்கும் சங்கைக்குரிய இறைதூதர் நபி ஈஸா (அலை) அவர்களை த டாவின்சி கோட் திரைப்படம் அவமரியாதை செய்திருப்பதை அறிந்து உலக முஸ்லிம்கள் தங்களின் கண்டனக்குரலை ஆழமாக பதிவுசெய்தனர். 

பல எதிர்ப்புகளுக்கு மத்தியில் வழக்கம்போல இத்திரைப்படம் வரலாற்றில் பதிவுசெய்யப்பட்டுவிட்ட நிலையில் உலகமக்களும் தங்கள் சொந்த வேலைப்பளுவில் டாவின்சி கோடை தற்போது மறந்துவிட்டனர். 

இப்படத்தின் தாயாரிப்பாளர்கள், இயக்குளர்கள் என்று (Ron Howard – Director, Brian Grazer – Producer, John Calley – Producer, Dan Brown - Executive Producer, Book Author, Todd Hallowell - Executive Producer, Second) அனைவரும் இல்லுமனாட்டிகளின் கைப்பாவையாக செயல்பட்டு அவர்களது திட்டத்தை கனகச்சிதமாக நிறைவேற்றினர். நமது இக்கட்டுரையின் நோக்கம் டாவின்சி கோட் படத்திற்கு பின்னால் ஒளிந்து கொண்டுள்ள இலுமனாட்டி ஷைத்தானியக் கூட்டத்தின் திட்டங்களை வெளிக்கொண்டு வருவதே! ஹாலிவுட் திரைப்படம் உள்ளிட்ட மீடியாக்கள் மூலம் இந்த இல்லுமனாட்டி கும்பல்கள் எப்படியெல்லாம் தங்கள் சூழ்ச்சிகளை நிரைவேற்றுகின்றனர் என்பதை இவ்வாக்கத்தை இறுதிவரை படித்தால் புரியும்.

இந்த டாவின்சி கோட் ஹாலிவுட் திரைப்படத்தின் மூலம் 3 முக்கிய விஷயங்கள் பதிவு செய்யப்பட்டன. அவைகள் பின்வருமாறு

1.இயேசுவிற்கும் மகதலேனா மரியாள் என்ற மேரி மெக்டலினுக்கும் திருமணமானது. அந்த திருமணத்தின் மூலம் இயேசுவிற்கு குழந்தையும் பிறந்தது. உலகப்புகழ்பெற்ற ஓவியர் லியொ நார்டோ டாவின்ஸி, தான் வரைந்த இயேசுவின் இறுதி இராப்போசனம் என்ற ஓவியத்தின் மூலம் இச்சம்பவத்தை வெளிப்படுத்தியுள்ளார். எனவே இயேசுவும் மேரிமெக்டலினும் கணவர் மனைவியர்தான்.
 
2.மிரோவிஞ்ஜியன் என்பது இயேசுவின் இரத்தபந்தம். மேரிமெக்டலின் மூலம் தொடர்ந்த அந்த இரத்தபந்தத்தில் பிறந்த இறுதி நபர் ஃபிரான்ச் நாட்டில் உள்ளார். எனவே இயேசுவின் சந்ததி என்னும் சங்கிலித்தொடரும், இது சம்பந்தமான உண்மைகளும் கடந்த 2000 வருடங்களாகவே பாதுகாக்கப்பட்டு வருகிறது.

3.இத்திரைக்கதையின் மூலம் இவ்வுலகில் தோன்றிய மதங்கள் அனைத்தும் மனிதனால் கண்டுபிடிக்கப்பட்டவையே என்று சொல்லாமல் சொன்ன அதே வேளையில் ஷைத்தானை வணங்குபோன்ற காட்சிகள், எகிப்த்திய பரமிடுகளிலுள்ள ஷைத்தானிய சித்திரங்கள் மற்றும் இல்லுமனாட்டிகள் தங்கள் லூசிஃபர் கடவுளை சித்தரிப்பதற்காக வரைந்து தள்ளியுள்ள ஓவியங்கள் என்று அனைத்தையும் இப்படத்தில் பதிவுசெய்தனர்.
... அவர்கள் அல்லாஹ்வையும், ஈமான் இறை நம்பிக்கை கொண்டோரையும் ஏமாற்ற நினைக்கின்றார்கள். ஆனால் அவர்கள் உண்மையில் தம்மைத்தாமே ஏமாற்றிக் கொள்கிறார்களே தவிர வேறில்லை. எனினும் அவர்கள் இதை உணர்ந்து கொள்ளவில்லை. (2:9)

யார் இவ்வேத உண்மைகளை நிராகரிக்கிறார்களோ, இன்னும் நிராகரிக்கும் காஃபிர்களாகவே மரித்தும் விடுகிறார்களோ, நிச்சயமாக அவர்கள் மீது, அல்லாஹ்வுடையவும், மலக்குகளுடையவும், மனிதர்கள் அனைவருடையவும் சாபம் உண்டாகும். (2:161)

இதில் முதல் விஷயத்திற்கு வருவோம். இயேசுவிற்கு திருமணம் முடிந்தது என்ற விபரத்தை இயேசு சொன்னாரா? அல்லது மேரி மெக்டலினாவது சொன்னாராஇத்தகவலைக் கூறும் இயேசுவின் உண்மையான சுவிசேஷம் எங்கேஅல்லது இயேசுவிற்குப் பிறகு இயற்றப்பட்ட பைபிளிலாவது இச்சம்பவம் பற்றி குறிப்பேதும் உண்டா? என்றெல்லாம் பலர் கேட்டு முடித்துவிட்டனர். இதில் நாம் சொல்வது என்ன வென்றால், அணுவின் திரணை உலகிற்குச் சொன்ன ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் போன்ற விஞ்ஞானிகளையே இந்த இலுமனாட்டிகள் தங்கள் வலையில் வீழ்த்தி அவர்களின் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்த போது, இந்த லியொ நார்டோ டாவின்ஸி என்ற ஓவியர் எம்மாத்திரம்?ஒருவேளை இயேசுவின் இறுதி இராப்போசனப் படத்தில் மேரிமெக்டலின் உருவத்தை மறைமுகமாக வரைந்துவிடு இல்லாவிட்டால் உன் கையை வெட்டிவிடுவோம் என்று அவரை இக்கொலைகார இல்லுமனாட்டிகள் மிரட்டியிருப்பார்கள். அல்லது லியொ நார்டோ டாவின்ஸியே இந்த ஷைத்தானை வணங்கும் லூசிஃபர் கூட்டத்தைச் சார்ந்தவராக இருந்திருக்கலாம். டாவின்சி கோட் மூலம் இந்த உண்மையை சொல்லாமல் சொல்லியிருக்கிறார்கள் அவ்வளவுதான்.

இயேசுவும் மேரிமெக்டலினும் கணவர் மனைவியர் என்ற பொய்யை இவர்கள் எத்தனை ஹாலிவுட் படங்களை வெளியிட்டுக் காட்டினாலும் உலகமக்கள் நம்பத் தயாரில்லை என்பதை இவர்களே விளங்கிக் கொண்டார்கள். இயேசுவைக் கடவுளாகக் கருதும் கிருஸ்தவர்களே இக்கூற்றை நிராகரித்துவிட்டபடியால் டாவின்ஸி கோட் திரைப்படம் மூலம் இவர்கள் பரப்பப நினைத்த இவர்களின் முதற்கனவு தவிடுபொடியானது.
 
நபியே! இன்னும், சத்தியம் வந்தது. அசத்தியம் அழிந்தது. நிச்சயமாக அசத்தியமானது அழிந்து போவதேயாகும் என்று கூறுவீராக. (17:81)

இரண்டாவதாக மிரோவிஞ்ஜியன் இரத்தபந்தம் என்பது இயேசுவின் இரத்தபந்தம் என்று இத்திரைப்படம் மூலம் சொல்லப்பட்டுள்ளது. நாம் ஆய்வு செய்த வரையில் மிரோவிஞ்ஜியன் வம்சவழி இயேசுவிற்கு முந்திய காலத்தில் வாழ்ந்த யூதர்களின் வம்சவழியாகவோ அல்லது இரண்டாம் ரம்ஈஸஸ் என்று அழைக்கப்பட்ட கொடுங்கோலன் ஃபிர்அவ்னின் சந்ததியாகவோ இருக்கலாம் என்றே எண்ணத்தோன்றுகிறது. ஏனெனில் மிரோவிஞ்ஜியன் இரத்த பந்தம் என்பது ஏசுவின் வம்சவழியினர் என்றால் மிரோவிஞ்ஜியன் இனம் சம்பந்தப்பட்ட ஆவனங்களில் இயேசுவுடைய கொள்கை கோட்பாடுகள், அவர் சம்பந்தப்பட்ட வரலாறுகள் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். குறைந்தபட்சம் கிருஸ்தவர்கள் நம்புவது போல இயேசு சிலுவையில் அறையப்பட்டார் என்றாவது சித்திரங்கள் இருக்கவேண்டும். ஆனால் மிரோவிஞ்சியன் வம்சவழி ஆவனங்களில் பிரமிடுகளும், ஃபிர்ஆவ்ன் காலத்தில் கடவுளாக வணங்கப்பட்ட சிலைகளும், அன்றைய இஸ்ரவேலர்களின் பழக்கத்தில் இருந்த நாணயங்களுமே காட்டப்படுகின்றன.

எது எப்படி இருந்தாலும் பாதுகாக்கப்பட்ட உண்மை இறைவேதமாம் திருமறை குர்ஆனின் போதனைபடி சங்கைக்குரிய இறைத்தூதர் இயேசு என்ற நபி ஈஸா (அலை) அவர்கள் இறைவனின் கட்டளைபடி தந்தை இல்லாமல் பிறந்தார்களே தவிர எந்த ஆணுடைய இரத்தக்கலப்பினாலும் அவர்கள் உருவாகவில்லை. மேலும் அவர்கள் மேரி மெக்டலினைத் திருமணம் செய்தார்கள் என்ற தகவலை திருமறை குர்ஆனோ, அல்லாஹ்வின் இறதித்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களோ கூறவில்லை என்பதால் முஸ்லிம்களாகிய நாம் இவ்விஷயத்தில் அலட்டிக்கொள்ளத் தேவையில்லை. இந்த மிரோவிஞ்ஜியன் இரத்தபந்தம் பற்றி இஸ்லாமிய வரலாற்று அறிஞர்கள் ஆய்வு செய்தால் இதில் பொதிந்துள்ள பல மர்மங்கள் மேலும் வெளிச்சத்திற்கு வரலாம். 

ஒரு விவாதத்திற்காக நாம் த டாவின்சி கோட் திரைப்படம் சொல்வது போன்றே மிரோவிஞ்ஜியன் என்பது இயேசுவின் இரத்தபந்தம் என்றே வைத்துக்கொள்வோம், நாம் கேட்பது என்னவென்றால் 2000ஆண்டுகளாக இயேசுவின் இரத்தபந்தத்தையே பாதுகாக்கத் தெரிந்த மிரோவிஞ்ஜியன் குடும்பத்தினருக்கு, இயேசுவிற்கு கடவுள் வழங்கிய உண்மை சுவிசேஷத்தை பாதுகாக்கத் தெரியாமல் போய்விட்டதா? இயேசுவிற்கு பின்னர் தோன்றிய பவுலும் அவரது வகையறாக்களும் எழுதித்தள்ளிய விஷயங்களை புனித வேதமாக உலக கிருஸ்தவர்கள் நம்பிக்கொண்டிருக்கும் இவ்வேளையில், இயேசுவிற்கு கர்த்தர் நேரடியாக வழங்கிய சுவிசேஷமான இன்ஜீல் வேதத்தை பாதுகாத்து அதை இவ்வுலகிற்கு வழங்கியிருந்தால் எவ்வளவு பிரயோஜனமாக இருந்திருக்கும்? இயேசுபிரானின் நேரடிக்கட்டளைகளை பின்பற்றுவது நன்மையைத்தருமா? அல்லது இயேசுவிற்கு பின்னால் வந்தவர்களால் எழுதப்பட்டதை பின்பற்றுவது நன்மையைத் தருமா? இயேசுபிரானின் நேரடிக்கட்டளைகளை பின்பற்றுவது இயேசுவின் அன்பைப் பெற்றுத்தருமா?, அல்லது இரத்தபந்தம் புண்ணாக்குபந்தம் என்று கதையளந்து இயேசுவின் கட்டளைகளை குழிதோண்டி புதைத்துவிட்டு அவர் எச்சரித்த லூசிஃபர் சாத்தானையே கடவுளாக வணங்குவது இயேசுவின் அன்பைப் பெற்றுத்தருமா? என்பதை இந்த இல்லுமனாட்டி போலி மிரோவிஞ்ஜியன்கள் சற்று சிந்திப்பார்களாக. இவர்கள் எங்கே இயேசுவின் சுவிசேஷத்தை பாதுகாத்திருப்பார்கள், இயேசுவிற்கு வழங்கப்பட்ட சுவிசேஷத்தில் கலப்படம் செய்து அதை ஒழித்துக்கட்டும் வேளையில் வேண்டுமென்றால் இவர்களின் முன்னோர்கள் இறங்கியிருப்பார்கள் என்று எண்ணுகிறீர்களா? அதுவும் சரிதான்.

மக்களே! இயேசு, இரத்தபந்தம், மிரோவிஞ்ஜியன் வம்சம் என்பதெல்லாம் இவர்களின் குறிக்கோளில்லை என்பது உள்ளங்கை நெல்லிக்கனிபோல விளங்கும். இல்லுமனாட்டிகளைப் பொருத்தவரையில் லூசிஃபர்தான் மம்மி மற்றவைகள் அனைத்தும் டம்மிகளே!. ஆம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் இந்த இல்லுமனாட்டிகளின் அடிவருடிகள் கோடைகால ஆன்மீகச் சடங்கு என்ற பெயரால் லூசிஃபர் ஷைத்தானை வெளிப்படையாகவே வணங்கியதையும், ஷைத்தானுடைய பெயரால் மந்திரங்கள் புரிவதற்கு குழந்தைகளுக்கு பயிற்சி கொடுப்பதுபோல திரைப்படங்களில் காட்டப்படுவதையும் கீழுள்ள வீடியோக்கள் மூலம் பார்த்துக் கொள்ளுங்கள். 

இன்னும் சொல்லப்போனால் இயேசுவின் இரத்தபந்தத்தைப் பாதுகாப்பதிலாவது இவர்கள் உண்மையாளர்களாக இருந்தார்களா என்றால் அதுவுமில்லை. ஃபிரான்ஸ் நாட்டின் ஸ்பென்சர் ராஜபரம்பரையில் பிறந்த இளவரசி டயானாவை இயேசுவின் இரத்த பந்தத்தில் இறுதியாக தோன்றியவள், மிரோவிஞ்ஜியன் இனத்தில் இயோசுவின் புனித இரத்தத்தை பாதுகாக்கும் புனிதக்கிண்ணம் என்றுதானே டயானாவை இளவரசர் சார்லஸூக்கு மணமுடித்து வைத்தனர். பிறகு ஏன் இவர்களாகவே டயானாவின் கதையை முடித்தார்கள்? (பார்க்க). இயேசுவின் இரத்தபந்தம் உலகமுடிவு நாள்வரை பாதுகாக்கப்படவேண்டும் என்றல்லவா இவர்கள் எண்ணியிருக்க வேண்டும். அதற்கான முயற்சிகளில் அல்லவா இவர்கள் இறங்கியிருக்க வேண்டும். மிரோவிஞ்ஜியன் வம்சம் பல்கிப் பொருக வேண்டுமெனில் இளவரசி டயானா பல குழந்தைகளைப் பெற்று அவளின் வம்சம் இவ்வுலமுழுவதும் பரவவேண்டும் என்று நினைப்பார்களா அல்லது அவளையே கொலை செய்வார்களா? சற்று யோசித்துப்பாருங்கள். எனவே இளவரசி டயானாவை படுகொலை செய்ததற்குப் பின்னர் இவர்களின் சுயரூபம் மேற்கத்திய சமூகத்திற்கே தெரிந்துவிட்டது. இந்நிலையில 2000வருடங்களாக இயேசுவின் இரத்த வழியை பாதுகாத்து வருகிறோம் என்ற இவர்களின் பொய்யையும் எத்தனை ஹாலிவுட் திரைப்படம் எடுத்து வெளியிட்டாலும் உலகம் நம்புவதற்குத் தயாரில்லை என்பதை உலகமக்கள் இத்திரைப்படத்திற்கெதிரான தங்கள் எதிர்ப்புகளை பிரதிபலித்ததின் மூலம் டாவின்ஸி கோட் திரைப்படத்தால் இவர்கள் நிறைவேற்ற நினைத்த இரண்டாவது திட்டமும் நொருங்கிப்போனது.

நாம் சத்தியத்தை கொண்டு, அசத்தியத்தின் மீது வீசுகிறோம் அதனால், சத்தியம் அசத்தியத்தின் சிரசைச் சிதறடித்துவிடுகிறது. பின்னர் அசத்தியம் அழிந்ததே போய்விடுகிறது. ஆகவே, நீங்கள் கற்பனையாக இட்டுக்கட்டி வர்ணிப்பதெல்லாம் உங்களுக்கு கேடுதான். (21:18)

இவர்களின் மூன்றாவது திட்டமான மீடியாக்களில் தங்கள் லூசிஃபர் கடவுளை அறிமுகப்படுத்தி, ஷைத்தானிய, ஃபிர்அவ்னிய சித்திரங்களை பிரபலப்படுத்துவதாகும்.


மேற்காணும் இத்தகைய படங்களை நாம் அன்றாடம் பயன்படுத்தும் வணிகப் பொருட்கள், அழகு சாதனங்கள், ஆடைகள் போன்றவற்றில் பார்வையிடலாம். குறிப்பாக குழந்தைகளின் ஆடைகள் மற்றும் அவர்களின் விளையாட்டு சாதனங்களிலும், கார்ட்டூன்கள் மற்றும் வீடியோகேம்களில் வரும் கதாபாத்திரங்களிலும் இப்படங்களைக் காணலாம். மேலும் பிரமிடுகளைப் பிரதிபலிப்பது போன்று அடுக்கமாடி கட்டிடங்கள் பல கட்டப்படுவதையும், பல கட்டிடங்களின் உள்ளரங்கு அலங்காரங்களில் இத்தகைய படங்கள் பொறிக்கப்பட்டிருப்பதையும் பரவலாகக் காணலாம். 

மேற்காணும் மூன்றாவது திட்டத்தில் இலுமனாட்டிகள் தற்போதைக்கு வெற்றி பெற்றிருப்பது போல தோன்றினாலும் உலக மக்கள் விரைவில்விழிப்படைந்து இதிலும் பெரும் தோல்வியைத்தான் தழுவ இருக்கிறார்கள் - இன்ஷா அல்லாஹ். இதை எப்படி சொல்கிறோமென்றால் இந்த இல்லுமனாட்டி ஷைத்தானியக் கூட்டத்தின் சதித்திட்டங்களை தோலுரிக்கும் கட்டுரைகளை நமது இணையதளத்தின் மூலம் வெளியிட்டுக் கொண்டிருக்கிறோம் - அல்ஹம்துலில்லாஹ்

இவர்களின் மூன்றாவது திட்டத்தின் மற்றொரு பகுதியான மதங்கள் அனைத்தும் மனிதனால்  இயற்றப்பட்டவையே என்ற கற்பனையை நிலை நாட்டுவதிலும் பெரும் தோல்வியைத்தான் தழுவியுள்ளார்கள்.இத்திரைப்படம் வெளியிடப்பட்டு 4 வருடங்கள் உருண்டோடிய நிலையிலும், இஸ்லாத்திற் கெதிரான இந்த இலுமனாட்டி ஷைத்தான்களின் பொய்ப் பிரச்சாரங்களையும் வெற்றிகொண்டு இவ்வுலகில் இன்றும் வேகமாகப் பரவும் மார்க்கம் இஸ்லாம் என்ற உண்மை மேற்கண்ட இவர்களின் கனவுகளை தவிடுபொடியாக்குகிறது. இவர்களின் ஆதிக்கம் முழுஅளவில் இருக்கும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பா நாடுகளில் கூட நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக இஸ்லாம் அசுர வேகத்தில் பரவிவருவதை வைத்து இஸ்லாம் உண்மையான இறைமார்க்கம்தான் என்பதை இவர்களும் நம்பித்தான் ஆகவேண்டிய என்ற கட்டாய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள்.
நிச்சயமாக தீனுல் இஸ்லாம் தான் அல்லாஹ்விடத்தில் ஒப்புக்கொள்ளப்பட்ட மார்க்கமாகும். வேதம் கொடுக்கப்பட்டவர்கள் இதுதான் உண்மையான மார்க்கம் என்னும் அறிவு அவர்களுக்குக் கிடைத்த பின்னரும் தம்மிடையேயுள்ள பொறாமையின் காரணமாக இதற்கு மாறுபட்டனர்;. எவர் அல்லாஹ்வின் வசனங்களை நிராகரித்தார்களோ, நிச்சயமாக அல்லாஹ் அவர்களுடைய கணக்கைத் துரிதமாக முடிப்பான். (3:19)

இன்னும் இஸ்லாம் அல்லாத வேறு மார்க்கத்தை எவரேனும் விரும்பினால் அது ஒருபோதும் அவரிடமிருந்து ஒப்புக் கொள்ளப்பட மாட்டாது. மேலும் அத்தகையவர் மறுமை நாளில் நஷ்டமடைந்தோரில் தான் இருப்பார். (3:85)

நிச்சயமாக, உம்முடைய இறைவனின் பிடி மிகவும் கடினமானது. நிச்சயமாக, அவனே ஆதியில் உற்பத்தி செய்தான், மேலும் மரணத்தற்குப் பின்னும் மீள வைக்கிறான். அன்றியும், அவன் மிகவும் மன்னிப்பவன் மிக்க அன்புடையவன். அவனே அர்ஷுக்குடையவன் பெருந்தன்மை மிக்கவன். தான் விரும்பியவற்றைச் செய்கிறவன். (85 :12-16)

தொடரும் .........

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக