ஆகஸ்ட் 30, 2012


Printers பாவனையில் மாற்றத்தை ஏற்படுத்தப்போகும் High-Tech Printers and 3D Printers.

21 ஆம் நூற்றாண்டில் இருக்கும் நாங்கள் இன்னமும் ஒரே வகையான Printers ஐ தான் பயன்படுத்தி வருகின்றோம். ( Ink-jet Printer , Dot matrix printer and laser printer )

Phones , Computers , Laptops , Tablets போன்றவற்றில் பல மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்ட போதும் Printers வகையில் அவ்வளவாக மாற்றங்கள் ஏற்படவில்லை.

Future இல் ஒவ்வொரு சாதனங்களும் அடையபோகும் மாற்றங்களையும் புதிதாக கண்டுபிடிக்கபடபோகும் சாதனங்களையும் Concept Designs எனும் பெயரில் பற்பல நிறுவனங்கள் வெளியிட்டு வருகின்றன. இவையே எதிர்காலத்தில் அந்நிறுவனங்களின் நிலைத்திருப்பிற்கு காரணமாக அமையபோகின்றமை வேறு விடயம். அந்த வகையில் எதிர்காலத்தில் வர இருக்கும் Printers இன் Concept Designs ஐ இப்பதிவில் பார்ப்போம் வாருங்கள்.

இன்று முகநூலில் முகம் கொடுக்க நேரிட்ட கசப்பான எச்சரிக்கையூட்டும் அனுபவம் குறித்து எழுதப்பட்ட அவசரமான பதிவு.இது உங்களின் பிரசுரத்திற்காக அனுப்பி வைக்கப் படுகின்றது. இதனை ஏனைய சகோதர ஊடகங்களுடன் பகிந்து கொள்வதில் எவ்வித ஆட்சேபனையும் இல்லை. அன்புடன் -சுவைர் மீரான். (யாழ்ப்பாணம்)


முஸ்லிம்களே எச்சரிக்கையாக இருங்கள், 
உங்களை வலையில் வீழ்த்தி, அழ அகலம், நீதி
 நியாயம் தெரியாமல் நீங்கள் பதியும் 
மடத்தனமான வார்த்தைகளை வைத்தே மொத்த 
முஸ்லிம் சமூகத்தினதும் இரத்தைத்தை  
ஓட்ட சதி நடக்கின்றது. நடப்பது என்ன என்றே 
புரியாமல் மந்தைக் கூட்டம் போல 
எல்லாவற்றுக்கும் தலையாட்டிப் பழகி விட்ட முஸ்லிம்களைக் கொண்டே அவர்களின் குழிகளை வெட்டும் நாசகார வேலை
காண கச்சிதமாக மேற்கொள்ளபடுகின்றது.

பெளத்த சிங்கள மக்களை முஸ்லிம்களுக்கு
 எதிராக தூண்டிவிட முஸ்லிம்களின் பெயரால் புதிய சதிமுயற்சிகள் 
நடைபெறுகின்றதோ என சந்தேகப் படும் படியான ஒரு நிகழ்வுக்கு முகநூலில்முகம் 
கொடுக்க நேரிட்டதன் விளைவே இந்த விழிப்பூட்டல்
கட்டுரை.

ஆகஸ்ட் 24, 2012


பார்வையற்றவர்களுக்கான பிறைலி(Braille) முறை 



உலகில்  உள்ள   கண்பார்வை அற்றவர்களின்  எண்ணிக்கை 40  மில்லியன் எமது சூழலிலும் நீங்கள் இவர்களை  அவதானித்திருப்பீர்கள் இவர்களது வெள்ளை பிரம்பும் கறுப்பு கண்ணாடியும் இவர்களை அடையாளப்படுத்தும் குறியீடுகளாக மாறிவிட்டது  .இவர்களுக்கே உரித்தான தனித்துவமான எழுத்து மொழிதான் braille .நாம் பயன்படுத்தும் பல  அன்றாட சாதனங்களில் சில அடையாளங்கள் பொறிக்கப்பட்டிருப்பதை அவதானித்திருக்கிறீர்களா ?

ஆகஸ்ட் 23, 2012


அமெரிக்கா –அவலத்தின்  தேசம். 




அமெரிக்கா- நம்மில் பலர் வாழ்க்கையில் ஒருதடவையாவது போய் பார்த்துவிட ஆசைப்படும் நாடு. ஐக்கிய அமெரிக்க நாடுகள் – United States of America – கட்டுப்பாடுகள் இல்லை,வதைக்கும் சட்டங்கள் இல்லை, குடிமக்களை தலைவர்களாக நடத்தும் அரசு, ஜனாதிபதியையே பெயர்சொல்லி அழைக்கக்கூடிய சுதந்திரம், சாப்பாடு, ஏஞ்சலினா ஜோலி, பிஸ்ஸா, ஹோலிவூட் படங்கள், சிலபல பலான விஷயங்கள்... ஒவ்வொருவருக்கும் கனவுகான காரணம் வேறு. கனவு ஒன்றுதான் – அமெரிக்கா!

ஆகஸ்ட் 09, 2012


இன்று ஆகஸ்ட் 9  இரண்டாவது அணுகுண்டு நாகசாகியில்

ஓகஸ்ட் 6 காலை 8.15 இற்கு ஹீரோசிமா மீது லிட்டில் போய் என்ற அணுகுண்டு போடப்பட்ட நீண்டகால அளவில் அண்ணளவாக 2 லட்சம் வரையான மக்கள் இறந்தார்கள்.அணுகுண்டு போடப்பட்ட நாள் இன்று ....நேரம் காலை 8.15 ஆனால் இந்தத்தாக்குதலுக்கு ஜப்பான் உடனே வளைந்துகொடுக்கவில்லை.
Fat man 

நாகசாகி பெரிய துறைமுகங்கள்,இராணுவத்தளபாடங்கள்,தொழிற்சாலைகள் என மிக இயந்திரமயமாக இயங்கிக்கொண்டிருந்தது.நாகசாக்கி மீது அணுகுண்டு போடப்படுவதற்கு முன்னதாகவே அதிக அழிவைத்தரக்கூடிய குண்டுகள் போடப்பட்டன.வைத்தியசாலை மீதும்,பாடசாலை மீதும் அதிக அழிவைத்தரக்கூடிய 6 குண்டுகள் இடப்பட்டன.ஆனால் அதிஸ்ரவசமாக இழப்புக்கள் பெரிதாக ஏற்படவில்லை.உண்மையில் நாகசாகிகூட அணுகுண்டு போடப்படுவதற்கு இலக்காக தெரிவுசெய்யப்படவில்லை.அணுகுண்டை  ஓகஸ்ட் 11 இல் கொகுரா நகரின்மீது போடுவதாக இருந்தார்கள்.ஒரு தாக்குதலுக்கும் அடுத்த தாக்குதலுக்குமிடையே 5 நாட்கள் இடைவெளி இருந்தால் அவ்வளவு நல்லா இருக்காது என்ற காரணத்தினாலும் காலனிலை நிலைமைகளாலும் ஓகஸ்ட் 9 இலேயே அணுகுண்டுத்தாக்குதலை நடாத்துவதற்குத்தீர்மானிக்கப்பட்டது.ஓகஸ்ட் 9 காலையில் அமெரிக்க Bockscar என்ற பெயரைக்கொண்ட B-29 விமானம் ஃபட்  மான் என்ற அணுகுண்டைத்தாங்கி சென்றது.முதலாவது இலக்காக கொக்குறாவும் அடுத்த இலக்காக நாகசாகியும் தெரிவுசெய்யப்பட்டிருந்தன.1 மணித்தியாலத்திற்கு முன்பாகவே இரண்டு B-29 விமானங்கள் தாக்குமிடங்களின் வானிலையை பரிசோதிப்பதற்காக அனுப்பிவைக்கப்பட்டிருந்தன.பொக்ஸ்கார் குண்டை தயாராக வைத்திருந்த வேளை அனைவரும் சந்திப்பதாக குறிப்பிடப்பட்ட இடத்திற்கு ஒரு விமானம் வருவதற்குத்தாமதம் ஏற்பட்டது.பிக் ஸ்ரீங்க் என்ற போட்டோக்களை எடுப்பதற்குக்கட்டளையிடப்பட்ட அந்த விமானமே பிந்தியது.இதனால் பொக்ஸ்கார் 40 நிமிடங்கள் சும்மா சுற்றிக்கொண்டிருக்கவேண்டியேற்பட்டது.

ஆகஸ்ட் 07, 2012


ஆகஸ்ட் 6 அணுகுண்டு 

போடப்பட்ட நாள் ....நேரம் காலை

 8.15

உருகிய உலோகப்பெட்டி கருகிய உணவு
இன்று வரலாற்றின் கறுப்புதினம்.இன்றுதான் ஜப்பானின் ஹீரோசிமாவில் அந்த கொடூரமான நிகழ்வு அரங்கேறியது.காலை 8.00 மணி வேலைக்கு புறப்படுபவர்கள் சுறுசுறுப்பாக ஆயத்தமாகிக்கொண்டிருந்தார்கள்.நகரம் முன்பாகவே விழித்திருந்தது.சாலைகள் மீண்டும் நிரம்பி வழிந்துகொண்டிருந்தன பாடசாலைக்கு புறப்படும் தமது குழந்தைகளுக்கு உணவை பார்சல் செய்து தாய்மார்கள் பஸ்ஸில் ஏற்றிக்கொண்டிருந்தார்கள் காலை 8.15 பலத்த சத்தத்துடன் குண்டு வெடித்தது. சூரியனை  பூமியில் பார்ப்பது போன்றவெளிச்சம் சில நொடிகள் இரும்புத்தூண்கள் குழம்புகள் ஆகின கொங்கிரீட் கட்டிடங்கள் காற்றில் பறந்தன.உருகிய உலோகத்தால் ஆன பெட்டியினுள் தாயார் கொடுத்த உணவு கருகியிருந்தது அதற்கு உரிமையான சிறுவன் சாம்பலாக காற்றோடு கலந்திருந்தான்.

ஆகஸ்ட் 06, 2012


பெங்களூர் - ஒலிம்பிக்ஸ் 2012 - இஸ்லாமை நோக்கி மக்கள்



நம் அனைவர் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமீன்...

பெங்களூர் மாநகரம். 

1. தன் கார் பழுதடைந்ததால் ஆட்டோவுக்காக காத்திருக்கின்றார் அந்த ஹிந்து சந்நியாசி. ஆட்டோ வருகின்றது. உட்காரும்போதே அவரை ஆச்சர்யம் தொற்றிக்கொள்கின்றது. தன் கண்ணெதிரே இருந்த இஸ்லாம் குறித்த துண்டுப்பிரசுரங்களை ஆர்வமாக எடுத்து படிக்க ஆரம்பிக்கின்றார். வியப்புடன் அந்த வார்த்தைகள் அவரிடம் இருந்து வெளிப்படுகின்றன "நீங்கள் எப்படியெல்லாம் இஸ்லாமை பரப்புகின்றீர்கள் என்பதை ஆச்சர்யத்துடன் பார்க்கின்றேன்". 

இஸ்லாம் குறித்து மேலும் அறிந்துக்கொள்ளும் ஆர்வம் அவருக்கு மிகுந்துவிட, அந்த ஆட்டோ ஓட்டுனரான  ஹபிஸ் முஹம்மத் சாதிக்கிடம் "குர்ஆன் அர்த்தங்களின் கன்னட மொழிப்பெயர்ப்பை" அனுப்புமாறு கேட்டுக்கொள்கின்றார். 

2. இதே போன்றே மற்றொரு நிகழ்வை விவரிக்கின்றார் மற்றொரு ஆட்டோ ஓட்டுனரான பாஷா. அன்று ஹெப்பலில் (Hebbal) இருந்து ஒரு வாடிக்கையாளரை ஏற்றிக்கொண்டு ஒரு தொலைத்தூர பயணத்திற்கு ஆயத்தமாகின்றார் பாஷா. பயணத்தின் போது அந்த ஆட்டோவில் இருந்த இஸ்லாம் குறித்த அனைத்து பிரசுரங்களையும் படித்த அந்த கஸ்டமர், தன் வீட்டு முகவரியை கொடுத்து குர்ஆன் அனுப்ப முடியுமா என்று கேட்டுக்கொள்ள பாஷாவிற்கு மகிழ்ச்சி தாளவில்லை.

அடுத்த நாளே குர்ஆன் அடங்கிய பரிசுப்பெட்டகத்தை அந்த கஸ்டமரின் வீட்டிற்கு சென்று கொடுக்கின்றார் பாஷா. புத்தகங்களுக்கு விலையாக ஆயிரம் ருபாய் நோட்டை எடுத்து அந்த வாடிக்கையாளர் நீட்ட நெகிழ்ச்சியுடன் கூறினார் பாஷா, "இல்லை சார். எனக்கு வேண்டாம். மறுமை நாளில் இதற்குரிய வெகுமதி எனக்கு கிடைத்தால் போதும்". 

பாஷாவின் பதில் ஒரு கணம் அந்த வாடிக்கையாளரை திகைக்க வைக்க தன் ஆசையை வெளிப்படுத்தினார் பாஷா, "என்னுடைய ஒரே ஒரு வேண்டுகோள், குர்ஆனை நீங்கள் படித்து புரிந்துக்கொண்டு உங்கள் குடும்பத்தினருக்கும் இந்த செய்தியை ஏற்றிவைக்க வேண்டும் என்பதுதான். உங்கள் நண்பர்களுக்கும் குர்ஆனை அறிமுகப்படுத்தி அவர்களுக்கும் நான் இத்தகைய பரிசுப்பெட்டகத்தை கொடுக்கும் நிலை ஏற்பட்டால் நான் மிகுந்த மகிழ்ச்சியடைவேன்".

3. வெள்ளரா சந்திப்பில் நிசார் அஹமது அவர்களுக்கு ஏற்பட்ட அனுபவம் சற்றே கிலியூட்டக்கூடியது. அவருடைய ஆட்டோவை பின்தொடர்ந்து வந்த போலிஸ் ரோந்து வாகனம் அவரை மடக்கியது அந்த சந்திப்பில் தான். 

முகத்தில் கலவரத்துடன் என்னவோ ஏதோ என்று பயந்து விசாரிக்க சென்ற அஹமதுவிடம் அந்த ரோந்து வாகனத்தில் இருந்த போலீஸ்காரர், "எனக்கு 'இஸ்லாம் குறித்த தவறான புரிதல்கள்' என்ற புத்தகத்தை கொடுக்க முடியுமா? பாதுகாப்பு பணியில் ஒருமுறை ஈடுபட்டிருந்த போது அதனை பார்த்திருக்கின்றேன். அன்றிலிருந்து அந்த புத்தகத்தை தேடிக்கொண்டிருக்கின்றேன். இன்று உங்கள் ஆட்டோவில் அந்த புத்தகத்தை கண்டவுடன் உங்களை பின்தொடர ஆரம்பித்துவிட்டேன்" என்று காரணத்தை கூறினார். 

மகிழ்ச்சியுடன் அந்த புத்தகத்தை அதிகாரிக்கு பரிசளித்துவிட்டு நடையை கட்டினார் நிசார் அஹமது. 

இந்த நிகழ்வுகள் உங்களில் பலருக்கு வியப்பையும், இவையெல்லாம் என்ன என்று அறியும் ஆர்வத்தையும் கொடுத்திருக்கலாம். நமக்கே இப்படியென்றால்,

ஆகஸ்ட் 03, 2012


அமெரிக்காவின் இரட்டை கோபுர தாக்குதல் முன்
கூட்டியே திட்டமிடப்பட்டதா ? 

9-11-2001 ஐ யாராலும் மறக்க முடியாது.அமெரிக்காவில்   நியூயோர்க்கில் உலக வர்த்தகமையக்கட்டிடங்கள் விமானங்களால் மோதி தகர்க்கப்பட்டமை இந்த திகதியில்தான்...ஆனால் இச்சம்பவம் இடம்பெறமுன்னதாகவே இதை பற்றிய குறிப்புக்கள் பல இடங்களில் தெரிவிக்கப்பட்டிருந்தன என்றால் நம்பமுடிகிறதா? 

ஆகஸ்ட் 02, 2012


அமெரிக்க அதிபர் தேர்தலுக்காக ‘பலி கொடுக்கப்படும்’ ஈரான்: இஸ்ரேல் போர் தொடுக்கும் அபாயம்


வாஷிங்டன்:
 அமெரிக்க  அதிபர் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அமெரிக்காவில் தீர்மானிக்கும் சக்திகளாக இருக்கும் யூதர்களின் வாக்குகளை அறுவடை செய்வதற்காகவே அனேகமாக ஈரான் மீது இஸ்ரேல் போர் தொடுக்கக் கூடிய நிலை உருவாகியிருக்கிறது.
அமெரிக்காவில் நவம்பர் 6-ந் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பில் ஒபாமாவும் குடியரசுக் கட்சி சார்பில் மிட்ரோம்னியும் போட்டியிடுகின்றனர். இருவரும் வாக்கு அறுவடைக்காக அனைத்துவிதமான யுக்திகளையும் பயன்படுத்தி வருகின்றனர்.
இதில் குறிப்பிடத்தக்க

ஜெனிவா பொறியில் இருந்து மீள்கிறதா இலங்கை? 

கே. சஞ்சயன்


நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கான செயற்திட்டத்தை அரசாங்கம் தயாரித்து வெளியிட்டுள்ளது.  என்னதான், அரசாங்கம் மேற்குலக நாடுகளையும், ஐ.நா போன்ற சர்வதேச அமைப்புகளையும்  காட்டமாக விமர்சித்து வந்தாலும், அவற்றின்  அழுத்தங்களைத் தட்டிக்கழிக்க முடியவில்லை என்பதை இந்த செயற்திட்டம் உறுதிசெய்கிறது.
மேற்குலக மற்றும் ஐ.நா போன்ற சர்வதேச அமைப்புகளின் விருப்பங்களை நிறைவேற்ற வேண்டிய கட்டாயத்துக்கு