இன்று முகநூலில் முகம் கொடுக்க நேரிட்ட கசப்பான எச்சரிக்கையூட்டும் அனுபவம் குறித்து எழுதப்பட்ட அவசரமான பதிவு.இது உங்களின் பிரசுரத்திற்காக அனுப்பி வைக்கப் படுகின்றது. இதனை ஏனைய சகோதர ஊடகங்களுடன் பகிந்து கொள்வதில் எவ்வித ஆட்சேபனையும் இல்லை. அன்புடன் -சுவைர் மீரான். (யாழ்ப்பாணம்)
உங்களை வலையில் வீழ்த்தி, அழ அகலம், நீதி
நியாயம் தெரியாமல் நீங்கள் பதியும்
மடத்தனமான வார்த்தைகளை வைத்தே மொத்த
முஸ்லிம் சமூகத்தினதும் இரத்தைத்தை
ஓட்ட சதி நடக்கின்றது. நடப்பது என்ன என்றே
புரியாமல் மந்தைக் கூட்டம் போல
எல்லாவற்றுக்கும் தலையாட்டி ப் பழகி விட்ட முஸ்லிம்களைக் கொண்டே அவர்களின் குழிகளை வெட்டும் நாசகார வேலை
எதிராக தூண்டிவிட முஸ்லிம்களின் பெயரால் புதிய சதிமுயற்சிகள்
நடைபெறுகின்றதோ என சந்தேகப் படும் படியான ஒரு நிகழ்வுக்கு முகநூலில்முகம்
கொடுக்க நேரிட்டதன் விளைவே இந்த விழிப்பூட்டல்
கட்டுரை.
பாகிஸ்தானின் பிரபல கிரிகட் வீரர் சஹீட் அப்ரிடியின் பெயரில் ஒரு எழுத்தை
கட்டுரை.
பாகிஸ்தானின் பிரபல கிரிகட் வீரர் சஹீட் அப்ரிடியின் பெயரில் ஒரு எழுத்தை
மாற்றி திறக்கப் பட்டுள்ள கணக்கொன்றின் மூலம் மேற்படி சதி அரங்கேறுவதனை காணக்கூடியதாக உள்ளது. Shahid Afridi என்ற பெயரை சற்று மாற்றி Sahaid Afridi (http://www.facebook.com/ sahaid.afridi#!/sahaid.afridi) என்று போட்டுள்ளார்கள்.
மேலோட்டமாக பார்க்கும் பொழுது வித்தியாசத்தை உணர்ந்துகொள்வது சற்றுக்
மேலோட்டமாக பார்க்கும் பொழுது வித்தியாசத்தை உணர்ந்துகொள்வது சற்றுக்
கடினம். இதனை எழுதும் நேரம் வரை 99 நண்பர்களுடன் இரு க்கும் இம்முகநூல்
கணக்கு புதி தாக ஆரம்பிக்கப் பட்ட ஒன்றாக இருக்க வேண்டும். போடப்பட்டுள் ள
Profile Picture உம் முஸ்லிம்கள் பற்றிய தப்பபிப் பிராயத்தை ஏற்படுத்தவென
வேண்டுமென்றே போடப்பட்ட ஒன்றாக இருக்கலாம் என்றே தோன்றுகின்றது.
தேடிப் பார்க்க முடிந்த அளவில், ஆரம்பத்தில் கஃபாவின் புகைப் படம், மற்றும்
தேடிப் பார்க்க முடிந்த அளவில்,
இன்னொரு பதிவை பதிந்து தன்னை முஸ்லிம் என்று நம்ப வைத்த பின்னர்,
Sahaid Afridi என்ற கணக்கின் மூலம் சதி முயற்சி ஆரம்பமாகியு ள்ளது. இந்தக்
கணக்கில், 'வஞ்சகப் புகழ்ச்சி' எனக் கூறுவார்களே, அதே போன்ற ஒரு வஞ்சக
முறை கைக்கொள்ளப் பட் டுள்ளது.
பெளத்த மதத் துறவி போன்று தோற்றமளிக்கும் ஒருவர், காவி உடை அணிந்த
பெளத்த மதத் துறவி போன்று தோற்றமளிக்கும் ஒருவர், காவி உடை அணிந்த
(பெண் துறவி போன்ற தோற்றம் அளிக்கும்)இளம் பெண் ஒருவரை கைகளால்
நெருக்கமாக பிடித்துக் கொண்டிருக்கும் புகைப்படம் ஒன்று உட்பட, பெளத்த
துறவிகளை இழிவு படுத்த கூடிய புகைப்படங்கள் சில பகிரப் பட்டுள்ளன.
நண்பர்கள் மட்டுமல்லாது, அனைவரும்
பார்க்கக் கூடிய விதமாகவும், நண்பர்களின் நபர்கள் கூட குறிப்புப் பதியும்
பார்க்கக் கூடிய விதமாகவும், நண்பர்களின் நபர்கள் கூட குறிப்புப் பதியும்
விதமாகவும் பரந்த வசதிகள் கூட ஏற்படுத்தப் பட்டுள்ளமை, மற்றும் முகநூல் புகைப்படமொன்றி ல் ஒட்டு (Tag) செய்ய முடியுமான உச்ச எண்ணிக்கை யான
50 பேரை ஒட்டு செய்துள்ளமை என்பன மேற்படி புகைப்படங்கள்
முடியுமா னவரை அதிகமானவர்களை சென்றடைய வேண்டும் என்ற
நோக்கத்திலாக இருக்க வேண்டும் என்பதனை ஊகிக்க முடிகி ன்றது.
மேற்படி புகைப்படங்களில் முஸ்லிம் பெயர்களில் நிறைய கருத்துக்கள்
மேற்படி புகைப்படங்களில் முஸ்லிம் பெயர்களில் நிறைய கருத்துக்கள்
(Comments) பதியப் பட்டுள்ளன. அவற்றில் அதிகமானவை, பெளத்த
மதத்தை/ பெளத்த துறவிகளை தூற்றுவனவாக, கிண்டல் செய்பவையாக
பதியப் பட்டுள்ளன. சில சிங்களவர்களும் கருத்து பதிந்துள்ளனர். அவர்களில்
ஒருவர் நிதானமான போக்கைக் கடைப் பிடித்திருக்கின்றார். எனினும்
முஸ்லிம் பெயர்களில் பதியப் பட்டுள்ள அதிகமான கருத்துக்கள் பெளத்த
மக்களை சீண்டுபவையாக, கோபமூட்டுபவையா கவே உள்ளன.
குறித்த கணக்கை இயக்குபவர்களின் எதிர்பார்ப்பும் அதுவாகவே இருக்க
வேண்டும். எனினும் சில சகோதரர்கள் இதனை கண்டித்தும் கருத்துப்
பதிந்துள்ளனர். அனினும், இவர்களில் யாருமே இதன் பாரதூரத்தை
உணர்ந்ததாக தெரியவில்லை.
மேற்படி கணக்கை இயக்குபவர் ஒரு சிங்கள பெளத்த இனவாதியா,
அல்லது
முஸ்லிம் சிங்கள கலவரம் ஏற்படுவதை காண ஆவலுடன் காத்திருக்கும்
புலி ஆதரவு சக்திகளா அல்லது கிறிஸ்தவ மிசனரிகளா என்று தெரியவில்லை.
புலி ஆதரவு சக்திகளா அல்லது கிறிஸ்தவ மிசனரிகளா என்று தெரியவில்லை.
மேற்படி கணக்கின் மூலம்
முஸ்லிம்கள் சதி வலையில் வீழ்த்தப் படுகின்றனர். அவர்கள் பதியும்
குறிப்புக்களை வைத்து, முஸ்லிம்கள் பற்றி நல்லபிப்ராயத்துடன் உள்ள
சிங்கள மக்களையும் முஸ்லிம்களுக்கு எதிராக திருப்பிவிடும் சதி காண
கச்சிதமாக மேற்கொள்ளப் படுகின்றது.
மேலே குறிப்பிட்ட முகநூல் கணக்கு மட்டும்தான் இவாறு செயல்படுகின்றது
என்பதல்ல, இன்னும் பல இருக்கவேண்டும். அவை முகநூல் கணக்குகளாக
மட்டுமல்ல, blogs எனப்படுகின் ற வலைப்பதிவுகளாகவும் இருக்கலா ம். இவை
முஸ்லிம்கள் சதி வலையில் வீழ்த்தப் படுகின்றனர். அவர்கள் பதியும்
குறிப்புக்களை வைத்து, முஸ்லிம்கள் பற்றி நல்லபிப்ராயத்துடன் உள்ள
சிங்கள மக்களையும் முஸ்லிம்களுக்கு எதிராக திருப்பிவிடும் சதி காண
கச்சிதமாக மேற்கொள்ளப் படுகின்றது.
மேலே குறிப்பிட்ட முகநூல் கணக்கு மட்டும்தான் இவாறு செயல்படுகின்றது
என்பதல்ல, இன்னும் பல இருக்கவேண்டும். அவை முகநூல் கணக்குகளாக
மட்டுமல்ல, blogs எனப்படுகின்
குறித்து நாம் தான் எச்சரிக்கையாகவும், விழிப் புடனும் இருக்க வேண்டும்.
சேலை முட்களின் மீது விழுந்தாலும், முட்கள் சேலையின் மீது விழுந்தாலும்,
பாதிப்பு சேலைக்குத்தான்.
முஸ்லிம்கள், தாம் பதியும் சிறு வார்த்தைகளும், கருத்துக்களும் கூட தாம்
முஸ்லிம்கள், தாம் பதியும் சிறு வார்த்தைகளும், கருத்துக்களும் கூட தாம்
சார்ந்த மொத்த சமூகத்தின் இருப்பையே கேள்விக் குறியாக்குகின்றது என்ற
உண்மையை புரியாமல், மனோ இச்சைக்கு அடிமைப் பட்டு, முஸ்லிம்களினதும்,
நாட்டினதும் எதிரிக்கு உதவிக் கொண்டு இருக் கின்றார்கள்.
சகோதரர்களே, அடுத்த மதத்தவர்களி ன், மதம் சார்ந்த தவறுகளை கே வலமாக
விமர்சிப்பது நமது வேலை அல்ல. மேற்படி விடயங்களில் இருந்து தவிர்ந்து
கொள்வதுடன், மேற்சொன்ன கணக்கிலும், மேலும் இதுபோன்ற கணக்குகளிலும்
சகோதரர்களே, அடுத்த மதத்தவர்களி
விமர்சிப்பது நமது வேலை அல்ல. மேற்படி விடயங்களில்
கொள்வதுடன், மேற்சொன்ன கணக்கிலும், மேலும் இதுபோன்ற கணக்குகளிலும்
நண்பர்களாக உள்ளவர்கள், அவற்றை தமது நண்பர் வட்டத்திலிருந்து நீக்குவதுடன்,
அடுத்தவர் மனம் புண்படும் படியான கருத்துக்களைப் பதிந்து, சமூகத்திற்கு வேட்டு வைப்பதனை தவிர்ந்து கொள்ள வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக