மார்ச் 03, 2011
Libya
லிபியாவில் மேற்கின் இராணுவ ஆக்கிரமிப்பு ஏற்படும் ஆபத்து !!
M.ரிஸ்னி முஹம்மட்
போர்க்குற்ற விசாரணையை எதிர்நோக்கும் நெருக்கடியான நிலையில் இலங்கை ரொபேர்ட் பிளேக் கூறுகிறார் 03.03.2010 யுத்தத்தின் இறுதி மாதங்களின்போது ஏற்பட்ட பொதுமக்கள் இழப்புகள் தொடர்பாக போர்க்குற்ற நீதிமன்றத்தின் விசாரணையை எதிர்நோக்கும் நெருக்கடி இலங்கைக்கு இருப்பதாக தெற்கு,மத்திய ஆசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான அமெரிக்காவின் உதவி வெளிவிவகார அமைச்சர் ரொபேர்ட் பிளேக் கூறியுள்ளார். |
China
கிழக்கில் முத்து மாலை. மேற்கில் வைரமாலை : இதயச்சந்திரன்
இந்தியாவைச் சுற்றி, முத்துமாலை[ STRING OF PEARLS ] ஒன்றினை சீனா கோர்த்துக் கொண்டிருப்பதாக பல ஆய்வாளர்கள் கூறுகின்றார்கள்.பாகிஸ்தான்,இலங்கை,பங்களாதேஷ்,மியன்மார் போன்ற, இந்தியாவைச் சுற்றியுள்ள நாடுகளில், துறைமுக அபிவிருத்தி என்கிற போர்வையில் சீனா கால் பதிக்கிறது என்பதிலிருந்து இந்த முத்து மாலை விவகாரம் எழுகிறது.
சீனாவின் முதலீட்டில் உருவாகும் இந்த துறைமுகங்கள், நாளை சீனாவின் கடற்படைத் தளமாக மாறி விடலாம் என்று இந்தியாவும்,அமெரிக்காவும் அச்சமடைவதில் நியாயம் உண்டு.
இதைவிட, வேறு ஒரு தந்திர நகர்வில் , சீனா ஈடுபடுவதை, பலர் அவதானிக்க மறந்து விட்டார்கள்.
மார்ச் 01, 2011
Walk
ஆரோக்கியமான வாழ்வுக்கு நடைப்பயிற்சி அவசியமா?
பொதுவாக நடைப்பயிற்சியை மேற்கொள்வதால் ஏற்படுகின்ற விளைவுகள் தொடர்பான சில கேள்விகளும் பதில்களும் கீழே தரப்பட்டுள்ளன. 1. நடப்பதற்கு முன் ஏதாவது சாப்பிடலாமா?
நிச்சயம் சாப்பிடலாம் கீழே கொடுத்துள்ளபடி முறையாகச் சாப்பிட்டு விட்டு நடக்கலாம் :
முழுதானிய (ஓட்ஸ், அவல்) சிற்றுண்டி
முழு கோதுமை பிரட்
வாழைப்பழம்
சாப்பிடுவது வயிற்றை நிரப்புவதாக இல்லாமல் குறைந்த அளவாக இருக்க
Oman
ஓமனில் போராட்டம் தொடர்வதால் பீதி!
செவ்வாய், 01 மார்ச் 2011 12:05
வளைகுடா நாடுகளில் ஒன்றான ஓமனில், அரசுக்கு எதிரான போராட்டம் நேற்று மூன்றாவது நாளாகத் தொடர்ந்தது. நேற்று முன்தினம் நடந்த போராட்டத்தில் ஆறு பேர் பலியாயினர். இதனால், அரபு நாடுகள் பீதியில் ஆழ்ந்துள்ளன. டுனீசியா, எகிப்து, ஏமன், லிபியா, பக்ரைன், ஜோர்டான், சிரியா, மொராக்கோ, அல்ஜீரியா என அரசுக்கு எதிரான போராட்டங்கள் தொடரும் நாடுகளின் வரிசையில் தற்போது, எண்ணெய் வளம் மிக்க நாடான ஓமனும் சேர்ந்துள்ளது.
அந்நாட்டை கடந்த 40 ஆண்டுகளாக கபூஸ் பின் சயீத் ஆண்டு வருகிறார். ஓமனில் அரசியல் கட்சிகள் தடை செய்யப்பட்டுள்ளன.
கடந்த 26ம் தேதி, அந்நாட்டின் தொழில் நகரமான சோகாரில்
Army
இலங்கை இராணுவத்தின் இப்போதைய கனவு என்ன? – சுபத்ரா
14.02 .2011
விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் முடிவுக்கு வந்து இன்னும் மூன்று மாதங்களில் இரண்டு ஆண்டுகள் நிறைவடையப் போகின்றன. முப்படைகளையும் கொண்ட ஒரு மரபுவழிப்படையாக வளர்ச்சி பெற்றிருந்த உலகில் பலம் வாய்ந்ததும், யாராலும் தோற்கடிக்க முடியாததுமாகக் கருதப்பட்டதுமான புலிகள் இயக்கத்தைத் தோற்கடித்த பெருமை இலங்கை இராணுவத்துக்கு உள்ளது.
புலிகள் இயக்கத்தையும், இரண்டு முறை ஜே.வி.பி.யின் ஆயுதக் கிளர்ச்சிகளையும் தோற்கடித்துள்ள போதும் இலங்கை இராணுவத்துக்கு சர்வதேச அங்கீகாரம் பெரியளவில் கிடைத்து விட்டதாகக் கருத முடியாது. போர் முடிவுக்கு வந்த போது, இலங்கை இராணுவத்துக்கு மிகப்பெரிய தொழில்சார் அங்கீகாரம் கிடைக்கும் என்று அரசாங்கம் எதிர்பார்த்தது. ஆனால்,
Navy
பிறவுண் நீர் கடற்படை உருவாக்குவதே இலங்கை அரசாங்கத்தின் அடுத்த இலக்கு – சுபத்திரா
28.02 .2011
2007 – 08 ஆம் ஆண்டு காலப்பகுதியில் நீலநீர் கடற்படை ((blue-water navy ) என்ற தகுதியை அடைந்து விட்டதாக இலங்கைக் கடற்படை கூறியிருந்தது நினைவிருக்கலாம். விடுதலைப் புலிகளின் ஆயுதக் கப்பல்களை இலங்கைக் கடற்படை அடுத்தடுத்து மூழ்கடித்திருந்த நேரம் அது. அதுவும் இலங்கையின் கரையில் இருந்து 1000 கி.மீ தொடக்கம் 2000 கி.மீ தொலைவில் அந்தத் தாக்குதல்கள் நிகழ்ந்திருந்தன.
அப்போதைய கடற்படைத் தளபதி மற்றும்
பிப்ரவரி 24, 2011
பிப்ரவரி 22, 2011
செயற்கை புரட்சியும் மேற்கும் ஒரு கருத்தாடல்
M.ஷாமில் முஹம்மட்
OurUmmah: பஹ்ரைன் நாட்டில் கடந்த சில வாரங்களாக நடைபெற்று வந்த ஆர்பாட்டங்கள் சூடு பிடித்துள்ளன துனீசியா மக்கள் புரட்சி அதை தொடர்ந்த உலகை உலுக்கி நிற்கும் எகிப்திய புரட்சி என்று தொடரான மக்கள் புரட்சி ஆர்பாட்டங்கள் அரபு முஸ்லிம் நாடுகளின் மேற்குலக சார்பு சர்வாதிகார ஆட்சியாளர்களுக்கு எதிராக நடை பெறுகின்றது ஒன்றின் வீழ்ச்சி அதன் வழியில் அதன் அருகில் அதன் மாதிரிகளை கொண்டு விளங்கும் மேற்குலக சார்பு சர்வாதிகாரம் மீது சுழல் சூறாவளியாய்
பிப்ரவரி 18, 2011
Libiya
ஆர்பாட்டங்கள் கடாபியை பிடுங்கும் புரட்சியாக மாறுமா ?
M.ரிஸ்னி முஹம்மட்
லிபியா வட ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு நாடு ஆகும். இதன் வட எல்லையாக மத்திய தரைக் கடலையும் கிழக்கின் எல்லையில் எகிப்தையும் , தென்கிழக்கு எல்லையில் சூடானையும் , தெற்கில் சாட், நைஜர் ஆகியனவும், மேற்கில் அல்ஜீரியா, துனீசியா ஆகியனவும் எல்லைகளாக அமைந்துள்ளன துனீசியாவினதும் எகிப்தினதும் தாக்கம் அதிகமாக லிபியாவை தாக்கிவருகின்றது துனீசியா மக்கள் புரட்சி அதை தொடர்ந்த உலகை உலுக்கி நிற்கும் எகிப்திய புரட்சி என்று தொடரான மக்கள் புரட்சி ஆர்பாட்டங்கள் அரபு முஸ்லிம் நாடுகளின் மேற்குலக சார்பு சர்வாதிகார ஆட்சியாளர்களுக்கு எதிராக நடை பெறுகின்றது .
பிப்ரவரி 17, 2011
கிலாபத் அழிக்கப்பட்டு இன்றுடன் 86 வருடங்கள் கிலாபத் அழிப்பு ஒரு வரலாற்று பார்வை
M.ஷாமில் முஹம்மட்
இன்று 3.3.2010 இதே திகதியில் 3.3.1924 ஆம் ஆண்டு திங்கள் கிழமை காலை வேளையில் கிலாபத் உலகை விட்டும் அழிக்கபட்டது மனித குலத்துக்கு விடுதலையாய் இருந்த முஸ்லிம்களின் சாம்ராஜ்யம் வீழ்த்தப்பட்டது மேற்கு கண்ட கனவு நிஜமானது முதல் சிலுவை யுத்தத்தில் முஸ்லிம்களிடம் தேற்றவர்கள் இரண்டாம் சிலுவை யுத்தத்தின் மூலம் இஸ்லாமிய சாம்ராஜியத்தை வெற்றி கொண்டனர் இஸ்லாமிய ஆட்சி உலகில் அல்லாஹ்வின் தூதரினால் நிலை நிறுத்தப்பட்டு 7ஆம் நூற்றாண்டு தொடக்கம் 19 ஆம் நூற்றாண்டு வரை 1300 ஆண்டுகள் மனித இனத்திற்கு அருளாய் இருந்த சாம்ராஜ்யம் தேசியவாதம் என்ற மேற்கின் விஷம் ஊட்டப்பட்டு கோமா நிலையில் போடப்பட்டது, இன்று குற்றுயிரும் குறைஉயிருமாக துடித்துக்கொண்டு இருக்கிறது. இந்த வேளையில் முஸ்லிம் உம்மாஹ் கிலாபத்தை இழந்து இன்றுடன் 86 ஆண்டில் கால் பதிக்கின்றது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
