இஸ்ரேல் பற்றிய ஊடகங்களின் பத்து பெரிய பொய்கள்
இஸ்ரேல் ரப்பிகள். |
மைக்கல் கோலன் (Michel Collen) ஒரு பெல்ஜிய எழுத்தாளர் அதுபோல் அவர் ஒரு ஊடகவியலாளரும் கூட.அவர் இஸ்ரேல் பற்றி எழுதிய புத்தகமான " Isrel - Let's Talk About It " என்ற புத்தகத்தில் இஸ்ரேல் பற்றி பொய்யான தகவல்கள் பரப்பி இஸ்ரேலுக்கு அனுதாபம் தேடிக்கொடுத்துக் கொண்டிருக்கிற அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஊடகங்களை கடுமையாக சாடியுள்ளார்.அவர் இதை தனது புத்தகத்தில் "பத்து பெரிய பொய்கள்" என்ற தலைப்பின் கீழ் மிகத் துல்லியமாக விவரித்துள்ளார். இவை இஸ்ரேலின் இருப்பையும் அதன் கொடூர செயற்பாடுகளையும் நியாயப்படுத்த மேற்கத்தைய ஊடகங்களால் பயன்படுத்தப்பட்டு வருபவை என்பது குறிப்பிடத்தக்கது.
1.இஸ்ரேல் என்ற நாடு ஐரோப்பாவில்
யூதர்கள் படுகொலை செய்யப்பட்டமையால் உருவாக்கப்பட்டது.இந்த கருத்து
முற்றிலும் தவறானது அதுபோல் சுத்தப் பொய்யானது.ஏனெனில் தேசியவாத யூதர்கள்
பலஸ்தீன பூமியை ஆக்கிரமிக்க திட்டமிட்டு முடிவு எடுக்கப்பட்டது 1897 ஆம்
ஆண்டாகும்,1897 ஆம் ஆண்டு சுவிசர்லாந்து பேசல் நகரில் இடம்பெற்ற முதலாவது
சியோனிச காங்கிரஸ் மாநாட்டில் இதற்கான அங்கீகாரம்
வழங்கப்பட்டது.இதிலிருந்து விளங்கிக் கொள்ள வேண்டிய விடயம் என்னவென்றால்
யூதர்கள் படுகொலை செய்யப்பட்டமை இஸ்ரேல் என்ற நாடு உருவாக்க
மேட்கோள்ளப்பட்ட திட்டங்களின் ஒரு படியேயாகும்.
முதலாவது சியோனிச மாநாடு - 1897 சுவிஸ். |
2.இஸ்ரேல் என்ற நாட்டின்
உருவாக்கத்தை நியாயப்படுத்த முன்வைக்கப்படும் அடுத்த பொய்
என்னவென்றால்,இஸ்ரேல் என்பது யூதர்களின் முன்னோர்களின் பூமி.யூதர்களை
கி.பி.70 இல் ரோம தளபதியான டைடஸ் யூதர்களின் சொந்த பூமியிலிருந்து
வெளியேற்றியதாக ஒரு வரலாறு பரவலாக கூறப்பட்டுவருகிறது.நிச்சயமாக இது ஒரு
கதை மட்டுமேயாகும்.நான் யூத வரலாற்றாசிரியர்களில் மிகவும் பிரசித்தி பெற்ற
ஒருவரான ஷலோமோ சாண்ட் என்பவரோடு உரையாடியுள்ளேன்.அவரின் கருத்துப்படி
பலஸ்தீன பூமியிலிருந்து எந்தவித வெளியேற்றங்களும் வரலாற்றில்
இடம்பெறவில்லை,ஆகவே தாய் பூமிக்கு திரும்பி வரல் என்ற விடயம் அர்த்தமற்றது
என்றார்.
தற்காலத்தில் பலஸ்தீனில் வாழும் மக்களே ஆதி யூதர்களின் உண்மையான பரம்பரை,1947 இல் ஐரோப்பாவிலிருந்து வந்தவர்கள் அல்ல.இந்த பூமியில் வாழ்த்த மக்கள் இந்த பூமியை விட்டு எங்கும் செல்லவில்லை என்று மேலும் சொல்லுகிறார் ஷலோமோ சாண்ட் அவர்கள் மேலும் அவர் கூறியதாவது யூத தேசம் என்ற ஒரு தேசம் வரலாற்றில் எங்கும் இருக்கவில்லை,ஏன்
யூதர்களுக்கு அவர்களுக்கே சொந்தமான மொழி,கலாச்சாரம் மற்றும் வரலாறு கூட இருக்கவில்லை.அவர்களுக்கு இருந்தது அவர்களிம் மதம் மதம் மட்டுமேயாகும்,ஒரு நாளுமொரு மதம் ஒரு நாட்டை உருவாக்குவதில்லை என்றார்.
The sack of Jerusalem, from the inside wall of the Arch of Titus, Rome |
3.பலஸ்தீனை யூத குடியேற்ற
ஆக்கிரமிப்பாளர்கள் ஆக்கிரமித்த போது பாலஸ்தீன் மனித சஞ்சாரமற்ற
விவசாயத்துக்கு பொருந்தாத ஒரு பூமியாகவே இருந்தது.இது மேற்கத்தைய
மீடியாக்கள் முன்வைக்கும் மூன்றாவதும் அர்த்தமற்றதுமான
பொய்யாகும்.ஏனென்றால் பத்தொம்பதாம் நூற்றாண்டுகளில் உலகின் பல்வேறு
பகுதிகளுக்கு பிரான்ஸ் உட்பட பலஸ்தீனத்தின் விவசாயப்பொருட்கள் ஏற்றுமதி
செய்யப்பட்டதற்கான எழுத்துமூலமான் ஆதாரங்கள் நிறையவே உள்ளன.
Jaffa Between 1898 - 1914 |
4.நான்காவது பொய் என்னவெனில்
சிலர் கூறுகின்றனர் எப்படியெனில் பாலஸ்தீனியர்கள் தமது சொந்த பூமியை
அவர்களின் விருப்பத்தின் பேரிலே விட்டுச்சென்றனர் என்று.இதை பலர்
நம்புகின்றனர் ஏன் நான் கூட நம்பியிருந்தேன்.இது மாபெரும்போயாகும்.இதை
இஸ்ரேலிய வரலாற்றாசிரியர்கள் கூட மறுத்திரிகின்றனர்.பென்னி மொரிஸ் மற்றும்
இலான் பெப்பே ஆகிய இஸ்ரேலிய வரலாற்றாசிரியர்களின் கருத்துப்படி ஆயுதனகள்
மற்றும் பயங்கரவாதம் என்பவற்றை பயன்படுத்தியே பலஸ்தீன மக்களை யூதர்கள்
வெளியேற்றினர்,அவர்கள் தாமாக வெளியேறவில்லை.
Palestine refugees. |
5.மத்தியகிழக்கில் காணப்படும்
ஒரே ஒரு ஜனநாயக நாடு இஸ்ரேல் ஆகும்.அதை நாம் பாதுகாக்கவேண்டும்.இது அடுத்த
பொய்யாகும்.எந்தவொரு ஜனநாயக நாட்டுக்கும் ஒரு சட்டம் உண்டு அதுபோல்
வரையறுக்கப்பட்ட எல்லைகளும் உண்டு.உலகில் உள்ள அனைத்து ஜனநாயக நாடுகளிலும்
இது காணப்படுகிறது,அனால் இஸ்ரேலைத் தவிர.இஸ்ரேல் எல்லையில்லா
நீடிப்புத்திட்டம் கொண்ட ஒரு இதுவரை வரையறுக்கப்படாத நாடு.மேலும் இஸ்ரேலின்
சாதனைகள் பாரிய இனவாதக் கருதுகொள்களைக் கொண்ட ஒரு சட்ட முறையாகும்.
No Legal Boundaries Yet.This Their Dream. |
6.அமெரிக்க இஸ்ரேலை
பாதுகாப்பதினூடாக மத்திய கிழக்கில் ஜனநாயகத்தை பாதுகாக்கிறது.இது ஒரு மாயை
கலந்த பொய்யாகும்.இஸ்ரேலுக்கான அமெரிக்காவின் வருடாந்த செலவு மூன்று
பில்லியன் டொலர்களாகும்.ஜனநாயக அமெரிக்காவின் இந்த பணம் அவ்வருடம் முழுக்க
அப்பாவி பலஸ்தீன மக்களை அடிமைப்படுத்தவே பயன்படுகிறது.ஆனால் மத்திய
கிழக்கில் அமெரிக்காவின் முக்கிய நோக்கம் ஜனநாயகம் அல்ல,அங்குள்ள எண்ணெய்
வளங்களே.
American Democracy. |
7.அமெரிக்க பாலஸ்தீனுக்கும்
இஸ்ரேலுக்கும் இடையே ஒரு நிரந்தர உடன்பாட்டை மேற்கொள்ள போராடிவருகிறது.இது
முற்றிலும் உண்மைக்கு புறம்பான விடயமாகும்.ஐரோப்பிய ஒன்றியத்தின்
முன்னைநாள் வெளிநாட்டு கொள்கைவகுப்பாலராக கடமையாற்றிய ஜாவியர் சொலோனா
குறிப்பிடுகையில் "இஸ்ரேல் என்பது ஐரோப்பிய ஒன்றியத்தின் 21 ஆவது
நாடாகும்"என்றார்.ஐரோப்பிய ஆயுத உற்பத்தியாளர்களுக்கும் இஸ்ரேலிய
இராணுவத்துக்கும் இடையே பல உடன்பாடுகள் காணபடுகின்றன.
8.Antisemitism
இது மேற்கத்தைய ஊடகங்களில் பாவிக்கப்படும் இன்னொரு இஸ்ரேலிய அனுதாப
ஆயுதம்.நீங்கள் பலஸ்தீன வரலாற்றை நன்கு ஆராய்ந்து இஸ்ரேல் பற்றிய உண்மைகளை
உலகுக்கு சொன்னாலோ அல்லது பலஸ்தீன - இஸ்ரேல் பிரச்சனையில் இஸ்ரேலிய
நலனைமட்டும் நோக்காகக் கொண்டு செயற்படும் அமெரிக்க மற்றும் அதன்
கூட்டாளிகளின் முகத்திரியை கிழித்தாலோ உங்களுக்கு கிடைக்கும் பட்டமே Anti-Semite ஆகும்.இந்த ஆயுதம் கொண்டு உங்கள் வாய்களை மூட நினைக்கின்றனர்.
ஆனால் நாம் இஸ்ரேலை கண்டிப்பதன் நோக்கம் இனத்துவேசமோ அல்லது Antisemitism அல்ல.நாம்
கண்டிப்பது மூன்று இன மக்களிடமும் சம அளவில் நடந்துகொள்ளதா அப்பாவி மக்களை
அடிமைப்படித்தி வைத்திருக்கும் அரசாங்கத்தேயாகும்.இப்படிப்பட்ட பொறுப்பு
அற்ற அரசாங்கங்களின் நடவடிக்கை காரணமாக மூன்று இன மக்களிடையே ஒரு பிரச்சனை
இருந்தவண்ணமே உள்ளன.
To Keep You Silent |
9.வன்முறை மற்றும் பயங்கரவாதம் தொடர்பில் மேற்கத்தைய ஊடங்கள் பெரும்பாலும் பலஸ்தீனையே குற்றம் சாட்டுகின்றனர்.முழு உலகுக்கும் தெரியும் யார் அப்பாவி மக்கள் மீது பயங்கரவாதத்தையும் வன்முறையையும் பாவிக்கிறார்கள் என்று.
Israeli girls write messages on shells |
10.பலஸ்தீன - இஸ்ரேல் பிரச்சனைக்கு தீர்க்க வழியில்லை இது தற்போது அடிக்கடி எழுப்பபபட்டுவரும் ஒரு கருத்தாகும்.இது சுத்தப் பொய்.தீர்வில்லாதது பலஸ்தீன - இஸ்ரேல் பிரச்னைக்கு அல்ல தீர்வில்லாதது இஸ்ரேளாலும் அதன் கூட்டாளிகளாலும் உருவாக்கப்பட்டு நடைமுறைபடுத்தப்பட்டு வரும் வெறுப்புக்கும் காழ்ப்புணர்ச்சிக்குமேயாகும்.பலஸ்தீன - இஸ்ரேல் பிரச்சனைக்கு தீர்வுக்கான முதலில் இஸ்ரேல் பற்றியும் அதன் கொலைகார கூட்டாளிகள் பற்றியும் இவர்களின் உண்மையான முகங்கள் பற்றியும் உண்மைகள் ஊடகங்களில் வெளிவரவேண்டும்.இந்த கூட்டணிகளால் அப்பாவி பலஸ்தீன மக்கள் படும் துயரங்கள் வெளிக்கொனரப்பட வேண்டும்.இந்த நிலை வந்தாலே அந்நாட்டு மக்களால் அந்த அரசாங்கங்களுக்கு ஒரு அழுத்தத்தை பிரயோகிக்க முடியும்.
Award Winning Political Cartoon.By - Latuff. |
Thanks To - Press Tv Article About Michel Collon's Book.
Pictures From - Wikipedia (first 6 photos)
Cartoons From - Latuff.(Link)
எல்லா கட்டுரைகளும் விமர்சனத்துக்கு உட்பட்டவையே.தவறுகள்
இருந்தால் சுட்டிக்காட்டவும்.
உங்கள் நண்பன் - எம்.ஹிமாஸ் நிலார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக