அக்டோபர் 01, 2011

ஸ்ரீ லங்கா முஸ்லிம்களை நோக்கிய பேரினவாதத்தின் எழுச்சி


செரந்திப் முஸ்லிம்கள். பின்பு சிலோன் முஸ்லிம்கள். இன்று ஸ்ரீலங்கா முஸ்லிம்கள். ”நாளை”?. இந்த கேள்வியின் உஷ்ணம் இப்போது மெல்ல ஒவ்வொரு முஸ்லிமின் தேகக்கூட்டிற்குள்ளும் புகைய ஆரம்பித்துள்ளது.
இலங்கை தமிழர்களின் போராட்டம் பாசிஸ தேர்வுகளை தங்களது அடைவுகளின் இலக்காக தேர்ந்து கொண்டதனால் தனது அழிவின் விதியை முள்ளிவாய்காலில் எழுதி முடித்தது. ஈழத்தை விழுங்கி ஏப்பம் விட்ட பௌத்த பேரினவாத பூதம் இப்போது முஸ்லிம்களை நோக்கி தனது இனவாத கரங்களை நீண்ட முற்பட்டுள்ளது.
சிங்கள துவேஷம் இன்று சிங்கள இனவாதமாக மாறி நிற்கிறது. இப்படித்தான் இலங்கை முஸ்லிம்கள் அடிப்படை மட்டத்தில் பிரச்சனைகளை உணரத் தலைப்பட்டுள்ளனர். உண்மையை சொல்லப்போனால் ”சிங்கள இனவாதம் ” என்பது முஸ்லிம்களை இலக்கு வைத்து மாற்றப்பட்டுள்ளது. சிங்கள ஊடகங்களால், அரசியல் கட்சிகளால், வர்த்தக அமைப்புக்களால், பௌத்த துறவிகள் (இவர்கள் துறந்தது உண்மையில் சகிப்புத்தன்மையை) போன்ற பல சக்திகளின் முயற்ச்சியினால் இது கை கூடியுள்ளது.
உலகலாவிய ரீதியில் முஸ்லிம் உம்மாவின் இஸ்லாமிய எழுச்சியின் ஒரு பகுதியான தமது மார்க்க விழுமியங்கள் சார் நடைமுறை ஒழுங்குகளால் அந்நியர்கள் அச்சமடைந்துள்ளனர். அவர்களால் அதை சகித்துக்கொள்ள முடியவில்லை. நெதர்லாந்து, பிரான்ஸ், அவுஸ்திரேலியா என இதன் வீச்செல்லலை நீண்டு செல்கிறது. அதற்கு இஸ்லாமிய விரோத சக்திகள் “இஸ்லாமோபோபியா” பெரிட்டு ஊடக உணவு கொடுத்து வளர்த்து வருகின்றன.
இலங்கை வாழ் முஸ்லிம்களிடையே புதிதாக எழுந்துள்ள மார்க்கப் பற்றும், உடை மற்றும் பழக்கவழக்கங்கள் இவர்களை அச்சமடையவைத்துள்ளன. இவர்கள் அச்சமடையாவிட்டாலும் இவர்களின் தலைவர்களின் உள்ளங்களில் சைத்தான் அச்சத்தை விதைத்தே தீருவான். “தியாகமில்லாத இஸ்லாமிய இபாதா” நடைமுறையை நாம் ஒரு போதும் எதிர்பார்க்க முடியாது. ஹஜ் செய்து, வருடா வருடம் உம்ரா செய்து, சஹன்களில் விருந்து வைத்து, இப்தார் கொடுத்து, நிகாபும் தோப்பும் போட்டு சொர்க்கம் செல்ல ஆசைப்படுகிறது இலங்கை முஸ்லிம் சமூகம்.
இலங்கை அனைத்து வளங்களும் நிறைந்த நாடு. அல்லாஹ்வின் அருள் மழையில் நனையும் நாடு. மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இயற்கையின் அழிவுகள் குறைந்த நாடு. அது போலத்தான் இந்நாட்டு முஸ்லிம்களும். அல்ஹம்துலில்லாஹ் தங்கள் மார்க்க நடைமுறைகளை பின்பற்றி ஒழுக, தஃவாவை நினைத்தவாறு முன்னெடுத்துச் செல்ல, மதரஸாக்கள் கட்ட என எந்தவித பிரச்சனைகளும் இல்லாமல் பழகிய சமூகம். இப்போது பிரச்சனை. அதுவும் ஆளும் அரசு தரப்பில் இருந்து உருவாகும் நிலை. மியன்மாரையும் கொஸாவாவையும் நினைத்து மிரண்டு போகும் நிலை இலங்கை முஸ்லிம்களிற்கு.
  • சிங்கள மக்களின் இஸ்லாத்தினை தழுவும் விகிதம் சடுதியாக அதிகரித்துள்ளது. 
  • குடிசன மதிப்பீட்டடிற்கு வீடு வீடாக ஸ்டிக்கர் ஒட்டுதல் என்ற பெயரில் இரகசியமாக அரசால் மேற்கொள்ளப்பட்ட நிழல் சனத்தொகையெடுப்பு அவர்களை மலைக்க வைத்துள்ளது. 8% என ஏமாற்றி வந்த பேரினவாதம் இப்போது ஏமாந்து போயுள்ளது. 18%  - 20% அவர்களது இனப்பரம்பல் காணப்படுவது அரசை மாற்றி யோசிக்க வைத்துள்ளது.
  • அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் இலங்கை முஸ்லிம்கள் தொடர்பான எச்சரிக்கை மற்றும் தென்பசுபிக் பிராந்திய கட்டளை மையத்தின் எச்சரிக்கை அரசால் கவனத்தில் எடுக்கப்பட்டுள்ளது.
  • ரோவின் இலங்கை முஸ்லிம்களின் லஷ்கர் ஈ தய்பா தொடர்பான அறிக்கை இவர்களை யோசிக்க வைத்துள்ளது. இலங்கை முஸ்லிம்களிடம் ஜிஹாத் இல்லை என உத்தியோகபூர்வமாக கூறிய அரசே அது இருக்கிறதா எனவும் துல்லியமாக ஆராய்ந்து வருகிறது.
  • பேரினவாத அரசியல்வாதிகளின் தேசிய பொருளாதார முன்னேற்றம்  தொடர்பான தோல்வியை மறைக்க தங்கள் அரசியல் இருப்பை தக்க வைக்க இனவாத ஆயுதம் எப்போதும் அவர்களிற்கு தேவைப்படுகிறது.
  • பௌத்த மத பீடத்தின் தலைவர்களிற்கும் தங்களின் பொய் முகங்களை  மறைக்க சிங்கள மக்களை “முஸ்லிம் பூச்சாண்டி” காட்டுவதன் மூலம் ஒரு டென்ஷனில் மெய்டெய்ன் பண்ணும் யுக்தி தொடர்கிறது.
  • அரசிலும், நிர்வாகத்திலும், பாதுகாப்பு துறையிலும் விரவி பரவியுள்ள இனவாத கும்பல்கள் முஸ்லிம்களை நாட்டின் சட்டம் ஒழுங்கின் எதிரிகளாக காட்ட முனைகின்றன.
  • விக்கிலீக்ஸ் அண்மையில் வெளியிட்ட தகவலில் கூட இலங்கை பொலிஸார் முஸ்லிம்களை இந்த நாட்டின் போதை வர்த்தகத்துடன் தொடர்புடையவர்களாக வெளிக்காட்டுவதில் அலாதியான அக்கறையுடன் செயற்படுகின்றமை வெளிகொணரப்பட்டுள்ளது.
  • அடிப்படையிலேயே போட்டி, பொறாமை போன்ற சமூக நோயின் தாக்கத்தால் கால காலமாக பழகிய சிங்கள சமூகத் தனது சமூகத்தில் காணப்படும் பசி, பஞ்சம், வேலைவாய்ப்பின்மை, சொகுசு நோக்கிய வாழ்க்கையை அடைய முடியாமை போன்ற இயலாமைகளின் தீர்வாக முஸ்லிம் எதிர்ப்புணர்வை களமாக கொள்கிறது.
  • இஸ்ரேல். இந்த நாச தேசத்தின் இலங்கையுடனான உறவு மற்றும் அதன் இலங்கை மண்ணில் யூரேனிய கனிமங்களின் தேடல் போன்றவை நிச்சயிக்கப்பட்ட முஸ்லிம் எதிர்ப்புணர்வை திட்டமிட்ட ரீதியில் இலங்கையில் நடைமுறைப்படுத்த உதவியாகிறது.
  • இதையெல்லாம் தாண்டிய எமது குர்ஆன் சுன்னாவின் வழியிலிருந்து விலகிய அனைத்து துறைசார் நடவடிக்கைகளும் எம்மை இந்த நிலைக்கு தள்ளியுள்ளது.
இதுவரை காலமும் திட்டமிடாத ஒரு சமூகமாக, இலக்கில்லாத ஒரு சமுதாயமாக வாழ்ந்து விட்டோம். வாழப்பழகியும் விட்டோம். இனிவரும் காலங்களில் இவ்வாறு வாழ முடியாது. வாழவும் கூடாது. முழு இலங்கைக்குமான முஸ்லிம் சமூகத்தின் வழிகாட்டல் மையத்தின் உருவாக்கம் தவிர்க்க முடியாத ஒன்று. இதற்கான பொறி முறைக் கட்டமைப்பின் மாதிரிகள் தொடர்பில் ஆய்வுகளும் விவாதங்களும் நடாத்தப்பட்டு ஆக்கபூர்வமான, நடைமுறைக்கு ஒத்து வரக்கூடிய
அமைப்பின் உருவாக்கம் காலத்தின் அவசியமாகும்.
இலங்கையில் தப்லீக் ஜமாத்தும், அகில இலங்கை ஜம்மியதுல் உலமாவுமே பருத்தித்துறை முதல் கிருந்தை வரை தனது ஊழியர்களின் வலைப்பின்னலை கொண்ட கட்டமைப்பை தொடராகவும் வெற்றிகரமாகவும் பல்லாண்டுகளாக செயற்படுத்தி வருகின்றன. இவ்வாறான ஒரு விரிந்த முழு நாட்டு முஸ்லிம்களையும் ஒன்றினைக்கும் கட்டமைப்பின் உருவாக்கம் பற்றி ஆராயப்படல் வேண்டும்.
இலங்கையின் நீதியமைச்சர் ரவுப் ஹக்கீம் இப்போது இதையொத்த சில கருத்துக்களை வெளியிட்டு வருகின்றார். ஆனால் இதன் பின்னால் பதுங்கியுள்ள விபரீதம் மிகப் பயங்கரமானது. முழு முஸ்லிம்களையும் கட்டு்ப்படுத்தும் அல்லது வழிகாட்டும் அமைப்பை வைத்துக்கொண்டு அரசுடன் பேரம் பேசும் உக்தியாகவும் இது மாறலாம். அதே போல் ரவுப் ஹகீம் மூலம் முழு இலங்கை வாழ் முஸ்லிம்களையும் அடிமையாக்கவும் பேரினவாத அரசு முயலலாம். இந்த விடயத்தில் மிகவும் அவதானமான செயற்பாடுகளும் திட்டமிடல்களும் மிக மிக அவசியம்.
'மாற்று மத சகோதரர்கள்", 'சகோதர மதத்தினர்" எனும் போலி வார்த்தை ஜாலங்களை இன்று அகில இலங்கை ஜம்மியதுல் உலமாவும், ஜமாஅதே இஸ்லாமியும், ஏன் தவ்ஹீத் குழுக்களும் கூட பரவலாக பாவிக்கின்றன.
மதங்கள் இரண்டு தான். ஒன்று சத்திய இஸ்லாம். மற்றையது இஸ்லாத்தி்ற்கு எதிரானது. காபிர் ஒரு போதும் முஸ்லிமிற்கு சகோதரனல்ல. பிறகென்ன மாற்று மத சகேதரன்?. ஏன் இநத அரசியல் செப்படி வித்தை. ஏமாற்று வார்த்தைகள்.

முஸ்லிம்கள் தொடர்பாக அநாகாரிக தர்மபாலாவில் ஆரம்பித்து நேற்று எழுதிய சிங்கள புளொக் வரை இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களிற்கும் எதிரான காழ்ப்புணற்ச்சியை கக்கும் கருத்துக்கள் வெளியிடப்படுகின்றன. இது தொடர்பாக முஸ்லிம்களின் உண்மையான நிலையை சிங்கள சமூகத்திடம் முன்வைக்கும் ஊடக வேலைத்திட்டத்தில் நாம் பின்தங்கி நிற்கிறோம். முஸ்லிம்கள் பற்றி தவறாக திட்டமிடப்பட்டு பரப்பப்டும் கருத்துக்களிற்கான மாற்று கருத்துகளின் களம் மிகவும் பலவீனப்பட்டு நிற்கிறது. சர்வதேச ஊடகங்களிற்கும் மனித உரிமை அமைப்புகளிற்கும் முஸ்லிம்களின் உண்மை நிலையை வெளிப்டுத்தும் பலமிக்க வலையமைப்பு முஸ்லிம்களிடம் உருவாதல் அவசரமாக உணர வேண்டியதாகும்.

இலங்கையின் சட்ட எல்லைகளிற்குள் நின்று எவ்வாறு அதே இலங்கையின் பேரினவாத பேயை முகம் கொடுப்பது என்பதில் தான் எமது சமூகத்தின் வெற்றியும் இருப்பும் காத்திருக்கிறது.
Abu Maslama

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக