வரலாற்று பின்னணியில் ஹிஜ்ரா காலண்டர்
ஒவ்வொரு சமுதாயத்திற்கும் அடையாளமாக நாட்காட்டிகள் உள்ளன. அச்சமுதாயங்கள் பெருமைப் படக்கூடிய பல அர்த்தங்கள் அந்த நாட்காட்டிகளில் அடங்கியுள்ளன. மூஸா (அலை) அவர்களின் காலத்தை மதித்து அவர்களின் நபித்துவக் காலத்தில் இருந்து தமது நிகழ்வுகளுக்கு தேதியிட யூதர்கள் ஆரம்பித்ததும், ஈஸா (அலை) அவர்களின் பிறப்பைக் கண்ணியப்படுத்தி அதிலிருந்து தேதியிட கிருத்தவர்கள் ஆரம்பித்ததும் இதனால்தான். இவ்வாறு ஒவ்வொரு சமூகமும் தனது கொள்கை கோட்பாடுகளுடனும் நாகரீகத்துடனும் தொடர்புபடக் கூடிய அம்சங்களை கொண்டு, தமது நாட்காட்டிகளை நிர்ணயித்தனர்.ஒரு சமூகம் பிற சமூகத்தினால் ஆக்கிரமிக்கப்பட்டு அதன் தாக்கத்தில் உள்ளாகும் போது ஆக்கிரமித்த சமூகங்களின் நாட்காட்டிகளை பின்பற்றியது வரலாறு கூறும் உண்மை. நாட்காட்டிகளின் இவ்வாறான முக்கியத்துவத்தை உணர்ந்து முஸ்லிம்கள் ஹிஜ்ரீ காலண்டரைப் பின்பற்றுவது அவசியமாகின்றது. ஹிஜ்ரி நாட்காட்டியை பின்பற்றுவது இஸ்லாமிய ஆளுமையின் சிறப்பு அடையாளமாகும்.
இந்த விஷயத்தின் முக்கியத்துவத்தைப் புரிந்து கொண்ட இஸ்லாத்தின் எதிரிகள் ஹிஜ்ரா நாட்காட்டியை விட்டும் முஸ்லிம்களை திசை திருப்பி கிருத்துவ நாட்காட்டியைப் திணிப்பதற்கு முயற்சி செய்தனர். அவர்களின் தொடர் முயற்சியால் பெரும்பாலான இஸ்லாமிய நாடுகளில் இதில் வெற்றி கண்டனர். மேற்குலகின் மீதுள்ள கண்மூடித்தனமான மோகத்தால் சவூதி அரேபியா தவிர அனைத்து இஸ்லாமிய நாடுகளும் தங்களின் ஹிஜ்ரா காலண்டர் நடைமுறையை இழந்தன. கிருத்துவக் காலண்டரையே தங்கள் அரசின் அதிகாரப்பூர்வ நாட்காட்டியாக அறிவித்தன.
சவூதி அரேபியா மட்டும் ஹிஜ்ரீ நாட்காட்டியை பயன்படுத்திக் கொண்டிருப்பதுடன், அவ்வாறு செயல்படவேண்டும் என்பதை அந்நாட்டின் அரசியல் சாசனச் சட்டத்தின் இரண்டாவது பகுதியில் சட்டமியற்றியுள்ளது.
ஹிஜ்ரா காலண்டர் என்பது பெரும்பாலான முஸ்லிம்களிடம் அன்னியமாகி விட்டது. ஹிஜ்ரா காலண்டரை பின்பற்றுமாறும் கிருத்துவக் காலண்டரை புறக்கணிக்குமாறும் முஸ்லிம்களுக் கிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவது முஸ்லிம் அறிஞர்களின் கடமையாகும். மார்க்க அறிஞர்களும் முஸ்லிம் சமுதாயத் தலைவர்களும் ஹிஜ்ரா காலண்டர் தொடர்பாக பொடுபோக்காக இருப்பது வேதனைக்குரிய விஷயம்தான்.
ஹிஜ்ரா காலண்டரின் துவக்கம்
அரபிகள் இஸ்லாத்திற்கு முன்னர் சந்திரனின் அடிப்படையிலான தேதியையே பயன்படுத்தி வந்தனர். அவர்களின் காலத்தில் நிகழ்ந்த முக்கியமான நிகழ்வுகளை வைத்து ஆண்டுகளை அடையாளம் கண்டனர். நபி (ஸல்) அவர்களின் காலத்திலும் அபூபக்ர் (ரலி) அவர்களின் காலத்திலும் நிலைமை இவ்வாறே நீடித்தது.
வணக்கங்களிலும் ஏனைய விஷயங்களிலும் பிறையை வைத்து தீர்மானிக்குமாறு அல்லாஹ் முஃமின்களுக்குக் கட்டளையிட்டான்.
வானங்களையும் பூமியையும் படைத்த நாள் முதல் அல்லாஹ்வின் பதிவேட்டில் மாதங்களின் எண்ணிக்கை அல்லாஹ்விடம் 12 ஆகும். அதில் (துல்கஃதா, துல்ஹஜ், முஹர்ரம், ரஜப் ஆகிய) நான்கு மாதங்கள் புனிதமானவையாகும். (அல்குர்ஆன் 9 : 36)
ஆண்டுகளின் எண்ணிக்கைகளையும் (காலக்) கணக்கையும் நீங்கள் அறிந்து கொள்வதற்காக அவனே சூரியனை வெளிச்சமாகவும் சந்திரனை ஒளியாகவும் அமைத்தான்.
(அல்குர்ஆன் 10 : 5)
உமர் (ரலி) அவர்களின் ஆட்சியின் போது அபூ மூஸா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் உமர் (ரலி) அவர்களுக்கு ஒரு கடிதம் அனுப்பினார்கள். அதில் தனக்கு அனுப்பும் கடிதங்களில் தேதிகள் இடப்படுவதில்லை என முறையிட்டிருந்தார். அதைப் பார்த்த கலீஃபா உமர் (ரலி) அவர்கள் நபித் தோழர்களை அழைத்து ஆலோசனை செய்தார்கள். பல கருத்துப் பரிமாற்றங்களுக்குப் பிறகு முஸ்லிம் களின் நாட்காட்டியின் துவக்கம் நபி (ஸல்) அவர்களின் ஹிஜ்ரத்தை அடிப்படையாக வைத்து அமையவேண்டும் என முடிவெடுக்கப்பட்டது. இஸ்லாமிய வரலாற்றில் அது மிக முக்கியமான நிகழ்வாகவும் சத்தியத்தையும் அசத்தியத்தையும் பிரித்துக் காட்டக் கூடியதாக அமைந்ததையும் இஸ்லாமிய ஆட்சி அதிகாரம் ஹிஜ்ரத்திற்கு பின்னரே துவங்கியது என்பதையும் அதற்கான காரணம் எனலாம்.
இறையச்சத்தின் அடிப்படையில் முதல் நாளன்று அடிததளடிடப்பட்ட பளிளவாசல்தான் நீர் (அல்லாஹ்வ வணங்க) நிற்பதற்கு தகுதியானதாகும்.
ஆயத் பொருள் : 108
ஹிஜ்ரத்தை அடிப்படையாக கொண்டு இஸ்லாமிய நாட்காட்டி முறை ஆரம்பிக்கப்பட வேண்டும் என்பது இந்த வசனத்தில் சுட்டிக் காட்டப்படுவதாக சில அறிஞர்கள் கூறுகின்றனர். ‘முதலாவது நாளில் இருந்து’ என்ற சொற்றொடர் முஸ்லிம்களின் நாட்காட்டியின் முதலாவது நாளாக அது இருக்க வேண்டும் என்பதே அதற்குக் காரணம்.
ஹிஜ்ரா காலண்டரை விட கிருத்துவக் காலண்டர் நுணுக்கமானதா?
கிருத்துவக் காலண்டர் சூரிய ஓட்டத்தை அடிப்படையாகக் கொண்டும் ஹிஜ்ரா காலண்டர் சந்திரனை அடிப்படையாகக் கொண்டும் அமைந்துள்ளது. ஆகவே குளிர் காலம், கோடைகாலம், வசந்தகாலம், இலை உதிர்காலம் போன்ற பருவங்கள் கிருத்துவக் காலண்டரைப் பொறுத்தவரை நிலையான தாகவும் சந்திர காலண்டரைப் பொறுத்தவரை மாறக் கூடியதாகவும் இருக்கின்றன.
இஸ்லாமிய வணக்கங்கள் சந்திர காலண்டரோடு தொடர்பு படுத்தப்பட்டிருப் பதினால் சில பகுதிகளில் வாழ்பவர்களுக்கு காலமெல்லாம் நீண்ட பகலிலும் சிலருக்கு சுறுக்கமான பகலிலும் நோன்பு நோற்கும் நிலை ஏற்படுகிறது.
(நபியே!) பிறைகளைப் பற்றி உம்மிடம் கேட்கின்றனர். அவை மக்களுக்கும் (குறிப்பாக) ஹஜ்ஜிற்கும் காலம் காட்டி என நீர் கூறுவீராக! (அல்குர்ஆன் 2 : 189) என அல்லாஹ் கூறுகிறான்.
இதன் அடிப்படையில் சந்திர நாட்காட்டி என்பது முஸ்லிம்களுக்கு மட்டுமுள்ள மார்க்கம் சார்ந்த நாட்காட்டி அல்ல, மாறாக அது உலக மக்கள் அனைவருக்கும் அல்லாஹ் வழங்கிய நாட்காட்டியாகும். எனவே நாம் அதைக் கொண்டே தங்களது தேதிகளை நிர்ணயிப்பது அவசியமாகும்.
ஆனால் கிருத்துவக் காலண்டர் என்பது சூரிய ஓட்டத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருந்தாலும் அது கிருத்துவ மதக் காலண்டராகவும் கிருத்துவ மன்னர்களின் கையாடளுக்கு ஆளாகி, மாசுபடுத்தப்பட்ட நாட்காட்டியாகவும் இருந்து வருகிறது என்பதை அறிந்து கொள்வது மிக அவசியமாகும்.
பரிதாபத்திற்குரிய பிப்ரவரி!
மாதங்கள் பனிரெண்டாக இருந்தாலும் அவற்றில் ஒற்றைப்படையாக உள்ள மாதம் 31 நாட்களைக் கொண்டும் இரட்டைப் படையாக உள்ள மாதம் 30 நாட்களைக் கொண்டும் அமைந்துள்ளது.
இதற்கிடையே பிப்ரவரி மாதத்தின் குழப்பம் தனி. பிப்ரவரி என்பது ரோமாபுரியின் ஒரு கடவுளின் பெயராக இருந்தது. பண்டைய கால கட்டங்களில் சூரிய மாதங்கள் ஆண்டிற்கு 10 மாதங்களை கொண்டதாகவே இருந்ததாகவும் சந்திர காலண்டருக்கு நிகராக சூரியக் காலண்டரை உருவாக்க வேண்டும் என்பதற்காக கி.மு 700 காலகட்டங்களில் நோமா போமிலியோஸ் என்ற அரசன் ஜனவரி, பிப்ரவரி ஆகிய இரண்டு மாதங்களையும் புதிதாக இணைத்தார் என்பதும் வரலாறு. அந்த கால கட்டத்தில் பிப்ரவரி 29 நாட்களை கொண்டதாக இருந்தது.
ரோமாபுரி மன்னர் சீசர் ஜூலியோஸின் வெற்றிகளுக்குப் பின் அவர் பனிரெண்டு மாதங் களில் ஒன்றுக்கு தனது பெயர் சூட்டப்படுவதை விரும்பினார். ஏழாவது மாதத்திற்கு ஜூலை என்று தனது பெயரைச் சூட்டினார்.
அவருக்கு பிறகு ரோமாபுரியின் மன்னராக பதவி ஏற்ற ஜூலியோவின் சகலை சீசர் ஆகஸ்ட் என்பவர் தன்னுடைய பெயரும் ஒரு மாதமாக இடம் பெற வேண்டும் என ஆசைப்பட்டார். எட்டாவது மாதத்திற்கு ஆகஸ்ட் என்ற தனது பெயரைச் சூட்டினார்.
தனது சகலை ஜூலையின் மாதம் 31 நாட்களைக் கொண்டதாகவும் தனது பெயரில் உள்ள ஆகஸ்ட் மாதம் 30 நாட்களை கொண்ட நாட்களாகவும் இருப்பது தனக்கு இழுக்கை ஏற்படுத்தும் என்று எண்ணிய ஆகஸ்ட் பிப்ரவரி மாதத்திலிருந்து ஒரு நாளை எடுத்து தனது மாதத்தில் இணைத்துக் கொண்டார்.
பிப்ரவரி 28 நாட்களாக மாறியதற்கும் ஜூலை மற்றும் ஆகஸ்ட் ஆகிய தொடர்ந்து வரும் இரு மாதங்கள் 31 நாட்களை பெற்றிருப்பதற்கும் கிருத்துவ அரச குடும்பத்தின் இந்த குடுமிச் சண்டைதான் காரணம். உலகை ஆண்டு கொண்டிருக்கும் கிருத்துவ நாட்காட்டியின் இலட்சணத்தையும் வேடிக்கைகளையும் கண்டீர்களா?! சூரிய ஓட்டத்தின் கணக்கீட்டின்படி அமைக்கப் பட்டுள்ளதாக நம்பப்படும் கிருத்துவக் காலண்டர் அந்த கணக்கீட்டிலாவது துள்ளியமாக கணிக்கப்பட் டுள்ளதா என்றால் அங்கேயும் பிரச்சனைதான்!
வருட நாட்கள் 365 நாட்களாக காலண்டர் உள்ளது. ஆனால் ஒரு வருட சூரிய ஓட்டத்திற்கு 365.25 நாட்கள் தேவைப்படுகிறது. இதன் அடிப்படையில் ஒரு வருடத்திற்கு சுமார் கால் பகுதி நாள் (அதாவது 6 மணி நேரம்) வித்தியாசத்தில் இந்த காலண்டர் தாமதமாக உள்ளது.
இவ்வாறு தொடர்ந்து நான்கு வருடங்கள் ஆகும் போது முழுமையாக ஒரு நாள் வித்தியாசம் ஏற்பட்டுவிடுகிறது. இந்த வித்தியாசத்தை நீக்குவதற் காகவே நான்கு வருடத்திற்கு ஒரு முறை லீஃப் வருடம் என்று ஒன்றை ஏற்படுத்தி, அந்த வருடத்தை 366 நாட்களைக் கொண்டதாக ஆக்கி விடுகின்றனர். அதிகமான ஒரு நாளை இணைப்பதற்காக அவர்கள் தேர்வு செய்த மாதமும் பிப்ரவரிதான்! 28 நாட்களைக் கொண்ட பிப்ரவரி லீஃப் வருடத்தில் மட்டும் 29ஆக மாறிவிடும். பாவம்! பிப்ரவரி! என்ன பாவம் செய்ததோ? எல்லோரும் அதிலேயே கைவைக்கின்றார்கள்.
இத்துடனாவது இவர்களின் பிரச்சனை முடிந்ததா என்றால் இல்லை. லீஃப் வருடத்தில் ஒரு நாளை அதிகரித்த பிறகும் கூட சில மில்லி செகண்ட்கள் மீதமிருக்கவே அவை சிறிது சிறிதாக இதுதான்! 28 நாட்களைக் கொண்ட பிப்ரவரி மாதம் 2000ம் ஆண்டு லீஃப் வருடமாகி 29 நாட்களாக மாறியிருந்தது. அதனை 30 நாட்களாக மாற்றி மில்லி செகண்ட் பிரச்சனையை தீர்க்க நினைத்தார்கள்.
செயற்கைகோல் கணிணி போன்றவைகளில் ஏற்கனவே ஏற்படுத்தப்பட்ட புரோம்கிராம்களில் பாதிப்பு வந்துவிடும் என்று உலகளாவிய ரீதியில் எதிர்ப்பு வந்ததினால் 2000ம் ஆண்டு பிப்ரவரி 30ஆக மாறாமல் தப்பித்தது.
இதன் காரணமாக நாம் இருக்கும் இன்றைய தினமும் இழுபறியாகத்தான் ஓடிக்கொண்டிருக் கின்றன என்பதே எதார்த்தம். இவ்வாறு மனித கரங்களால் மாசுபடுத்தப்பட்ட, பலவிதமான பிரச்சனைகளுக்கும் ஆளாகிக் கொண்டிருக்கும் கிருத்துவக் காலண்டர், கிருத்துவர்களின் ஆளுமை ஆதிக்கத்தால் உலக காலண்டராக திணிக்கப்பட்டுள்ளது.
அல்லாஹ் வழங்கியது சந்திரக் காலண்டர்தான்!
எண்ணிடலங்கா பிரச்சனைகளுக்கு மத்தியில் உள்ள கிருத்துவக் காலண்டரை மனித இனம் முழுமையும் ஏற்கத் தக்க வகையில் கிருத்துவ உலகம் திணித்துக் கொண்டிருக்கும் போது, மிகவும் துள்ளியமாக, நாட்களை காட்டவே அல்லாஹ்வால் படைக்கப்பட்டுள்ள சந்திரக் காலண்டரில் முஸ்லிம் உலகம் அக்கரை செலுத்தாமல் இருப்பதுதான் மிகவும் வேதனைக்குரிய விஷயமாகும்.
மாத நாட்கள் 29ஆகவும் 30 ஆகவும் கொண்ட சந்திரக் காலண்டர் வருட நாட்களாக 354 – 355 நாட்களைக் கொண்டதாக மிகத் துள்ளியமாக அமைந்துள்ளது. இந்த காலண்டர் மனித திருத்தங்களுக்கு அப்பாற்பட்டது.
முதற்பிறை என்பது மாதத்தின் துவக்கத்தையும் கடந்த மாத முடிவையும் அறியக் கூடிய தெளிவான அடையாளமாகும். சந்திரனின் வளர்பிறையையும் தேய்பிறையையும் முறையாக தொடர்ந்து பார்க்கக் கூடிய ஒருவரால் அதன் தோற்றத்தை வைத்தே தேதியை கூறிவிட முடியும் எனும் அளவிற்கு எளிதான நாட்காட்டி அது. படகோட்டிகளும் விவசாயிகளும் இன்றும் இதற்கு சான்று பகர்ந்து கொண்டிருக்கின்றார்கள்.
இப்படிப்பட்ட எளிதான சந்திரக் காலண்டர் இன்று முஸ்லிம்களிடம் அந்நியமாகி வருவது பெரும் வேதனைக்குரியதும் ஆபத்தானதுமாகும்.
இஸ்லாத்தின் அடிப்படைக் கடமைகளில் ஹிஜிரா காலண்டர்
இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் நோன்பு, ஜகாத், ஹஜ், ஆஷுரா மற்றும் இத்தா போன்ற சட்டங்களும் வணக்கங்களும் ஹிஜ்ரா நாட்காட்டியின் அடிப்படையிலேயே அமைந்துள்ளன. எனவே சந்திரக் காலண்டரின்படி செயல்படுவது அல்லாஹ்வின் கட்டளையாகும்.
அல்குர்ஆன் ரமளான் மாதத்தில்தான் அருளப்பட்டது… அம்மாதத்தை அடைபவர் அதில் நோன்பு நோற்கட்டும்! (அல்குர்ஆன் 2 : 185)
ஹஜ்(ஜுக்குரிய காலம்) அறியப்பட்ட மாதங்களாகும். அதில் ஹஜ்ஜை தம் மீது விதியாக்கிக் கொண்டவர் ஹஜ்ஜின் போது உடலுறவு கொள்வதோ, பாவம் செய்வதோ, வீண் தர்கம் புரிவதோ கூடாது. (அல்குர்ஆன் 2 : 197)
ஒருவர் பொருளை பெற்று, ஒரு வருடம் பூர்த்தியானால் அதன் மீது ஜகாத் கடமையாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர் : அபூதாவுத், திர்மிதி)
ரமளான் நோன்பிற்கு அடுத்த சிறந்த நோன்பு அல்லாஹ்வுடைய மாதமாகிய முஹர்ரம் மாத (ஆஷுரா) நோன்பாகும். (அறிவிப்பவர் : அபூஹுரைரா -ரலி, நூல் : முஸ்லிம் 1982)
நபி (ஸல்) அவர்கள் ரமளானில் மட்டும்தான் மாதம் முழுவதும் நோன்பு நோற்பார்கள். ஷஃபானில் அதிகமாக நோன்பு நோற்பது போன்று வேறு எந்த மாதத்திலும் நோன்பு நோற்க நான் கண்டதில்லை. (அறிவிப்பவர் : ஆயிஷா -ரலி, நூல் : முஸ்லிம் 1956)
ரமளானில் நோன்பு நோற்று பிறகு அதனைத் தொடர்ந்து ஷவ்வால் மாதத்தில் ஆறு நாட்கள் நோன்பு நோற்பவர் வருடம் முழுவதும் நோன்பு நோற்றவரைப் போன்றவராவார். (அறிவிப்பவர் : அபூ அய்யூப் -ரலி, நூல் : முஸ்லிம் 1984)
பிழையான தமிழக பிறை காலண்டர்!
பெருநாட்களிலும் வணக்க வழிபாட்டு துவக்கத்திலும் முஸ்லிம்கள் பிளவுற்றிருப்பதற்கு ஹிஜ்ரா காலண்டர் மிக முக்கிய காரணமாக இருக்கிறது என்பதை எவரும் மறுக்க முடியாது.
பௌர்ணமி அன்று பிறை 13ஆகவும் அமாவாஸை அன்று பிறை 27ஆகவும் இருக்கும் நூதனங்களை யெல்லாம் நம்முடைய சிவகாசி காலண்டாரில்தான் காண முடியும். மதரஸாக்கள் மற்றும் இஸ்லாமிய நிறுவனங்கள் சார்பாக அச்சிடப்படக் கூடிய காலண்டர்களின் நிலையும் இதுதான்.
2010 ஆகஸ்ட் ‘சமுதாய ஒற்றுமை’ இதழில் தமிழக தலைமை காஜி டாக்டர் சலாஹுத்தீன் அவர்கள் உட்பட பல அறிஞர்களையும் முஃப்திகளையும் தலைவர்களையும் சந்தித்து எடுக்கப்பட்ட பேட்டியைப் பார்த்த போது, தமிழக பிறைக் காலண்டர் தவறாக இருப்பதை அவர்களில் பெரும்பாலானோர் ஏற்றுக் கொண்டுள்ளனர். ஆனால் அதனை திருத்துவது யார்? என்ற கேள்விக்கும் மட்டும் நம்மால் அவர்களிடம் விடைகாண முடியவில்லை.
சமுதாய ஒற்றுமையை கருத்தில் கொண்டு பெருநாட்களை ஒரே நாளில் கொண்டாடுவதால் காலண்டரை முறைப்படுத்த வேண்டிய கடமை முடிந்து விடாது. ரமளானில் நோன்பு நோற்பதற்காகவும் பெருநாள் கொண்டாடுவதற்காகவும் தத்தமது பகுதியில் பிறை பார்ப்பதா? உலகில் எங்கு தென்பட்டாலும் அதன் அடிப்படையில் செயல்படுவதா? அல்லது முறையான ஹிஜ்ரா காலண்டாரின் அடிப்படையில் செயல்படுவதா? என்ற கருத்துவேறுபாடுகள் மார்க்க ஆதாரங்களை புரிந்து கொள்ளும் விதத்தில் ஏற்பட்டவைகளாகும்.
இந்தக் கருத்து வேறுபாடுகளில் கவனம் செலுத்தும் அறிஞர்களில் அதற்கு மிக முக்கியக் காரணங்களில் ஒன்றான காலண்டாரில் கவனம் செலுத்த முன்வர வேண்டும்.
முஸ்லிம் சமுதாய வீழ்ச்சியில் காலண்டாரின் பங்கு!
பெருநாள் தொடர்பாக 1924ம் ஆண்டு மார்ச் மாதம் 3ம் தேதி முஸ்தபா கமால் அதாதுர்க் என்பவன் இஸ்லாமிய கிலாபத் ஆட்சியை ஒழித்தான். கிலாபத் இஸ்லாமிய ஆட்சி முறையை மீண்டும் கொண்டுவர நினைப்பவரை கொலை செய்யுமாறு கட்டளையிட்டான். மார்க்க கல்வி கற்பதற்கு தடைவிதித்தான். ஷாரீஆ நீதி மன்றங்களை இழுத்து மூடினான். அரபி மொழியை மாற்றி துர்க்கி மொழியை மட்டுமே நாட்டின் மொழியாக பிரகடனப்படுத்தினான். இஸ்லாமிய திருமண முறையை மாற்றினான்.
ஆட்சியாளர்கள் மட்டுமே திருமணம் செய்துவைக்க முடியும் என்று சட்டமியற்றினான். ஸலாம் கூற தடைவிதித்தான். ஹிஜாபிற்கும் தடைவிதித்தான். பலதார மணத்தை தடுத்தான். ஆண், பெண் இருபாலரும் கலந்து பயிலும்படி கல்விக் கூடங்களை மாற்றினான். முஸ்லிம் சமுதாயத்தை மார்க்க வரையறையிலிருந்தும் அதன் கலாச்சாரத்திலிருந்தும் வெளியேற்ற செய்த கொடுமைகள் ஏராளம்.
ஹிஜ்ரா காலண்டாரின் நடைமுறையை நிறுத்தி, கிருத்துவ காலண்டாரின்படி செயல்பட கட்டளையிட்டதும் வார விடுமுறை நாள் ஞாயிற்றுக் கிழமை என்று அந்த கொடியவன் அறிவித்ததும் மிகவும் கவனிக்க வேண்டிய அம்சமாகும்.
முஸ்லிம்களின் கட்டமைப்பை காப்பாற்றுவதில் ஹிஜ்ரா காலண்டருக்கு பெரும்பங்கிருப்பதை இந்த சோக வரலாற்றின் பின்னனியிலாவது முஸ்லிம் தலைவர்களும் பொறுப்பாளர்களும் அறிஞர்களும் புரிந்து கொள்ளவேண்டாமா?
திருமணச் சட்டத்திற்கும், தலாக் போன்றவைகளுக்கும் ஒன்று சேரும் முஸ்லிம் தலைமை ஹிஜ்ரா காலண்டரை முறைப்படுத்த ஏன் ஒன்று சேரக் கூடாது?! தடி எடுத்தவனெல்லாம் தண்டல்காரண் என்ற கூற்றுக்கு இணங்க, தமிழகத்தில் மார்க்கப் போர்வை போர்த்திக் கொண்டு, அல்குர்ஆனுக்கும் நபி (ஸல்) அவர்களுக்கும் அவர்களின் சுன்னாவிற்கும் நபித்தோழர்களும் இமாம்களுக்கும் முஸ்லிம் சமுதாயத்திற்கும் துரோகம் செய்து திரியும் சிலர் தனிப் பெருநாள் கொண்டாடி, தங்களை ‘காஜி’ என தம்பட்டம் அடிக்கின்றார்களே?! முஸ்லிம் சமுதாயம் தனது காலண்டாரில் கவனம் செலுத்த வேண்டும் என இந்த நிகழ்வு கூட முஸ்லிம்களை தூண்ட வேண்டாமா?
உலகளாவிய அறிஞர்களின் முயற்சி
ஹிஜ்ரி 1300 முதல் 1429 வரை 130 வருடங்களுகான காலண்டரை சவுதி அரசாங்கம் முன்னரே பிரிண்ட் செய்து அதன் அடிப்படையில் செயல்பட்டு வந்தது. அதன்பிறகு உம்முல் குரா காலண்டாரின்படி செயல்பட்டு வருகின்றது. எதிர் வரும் பல நூறு வருடங்களுக்கான சந்திர ஓட்டங்களை மிகத் துல்லியமாக அறிந்து கொள்ள முடியுமான விஞ்ஞான உலகில் வாழ்கிறோம்.
உலகம் முழுவதும் ஒரே இஸ்லாமிய காலண்டரை கொண்டுவரஉலகின்பலபாகங்களிலும்அறிஞர்களும் சிந்தனையாளர்களும் உழைத்துக் கொண்டிருக் கின்றார்கள். இந்நிலையில் இந்தியாவில் வாழும் மார்க்க அறிஞர்களும் சமுதாயத் தலைவர்களும் சிந்தனையாளர்களும் விண்ணியல் அறிஞர்களும் சமுதாயச் சிந்தனையோடும் கவலையோடும் அமர்ந்து முறையான ஹிஜ்ரா காலண்டரை முஸ்லிம் சமுதாயத்திற்கு தரவேண்டும் என்பதே நம்முடைய எதிர்ப்பார்ப்பு! நன்மையான காரியத்தை துவக்கி முன்னெடுத்துச் செல்வோருக்கும் இணைந்து உழைப்போருக்கும் அல்லாஹ் அருள்புரிவானாக!
ஹிஜ்ரா (சந்திர) மாதங்கள்
- முஹர்ரம்
- ஸஃபர்
- ரபீவுல் அவ்வால்
- ரபீவுஸ் ஸானீ
- ஜுமாதில் ஊலா
- ஜுமாதிஸ் ஸானீ
- ரஜப்
- ஷாஃபான்
- ரமளான்
- ஷவ்வால்
- துல்கஃதா
- துல்ஹஜ்
கி.பி. 1582ம் ஆண்டு இத்தாலி நாட்டுக் காலண்டாரில் அக்டோபர் மாத 4ம் தேதிக்குப் பிறகு 15ம் தேதி இடம்பெற்றிருப்பதையும் அதனிடையே உள்ள 10 நாட்கள் நீக்கப்பட்டிருப்பதையும் காணலாம்.
நாட்களை நீக்கிய கிருத்துவ (பிரிட்டன்) காலண்டர்கள்
கி.பி. 1752ம் ஆண்டு பிரிட்டன் நாட்டுக் காலண்டாரில் செப்டம்பர் மாதம் புதன்கிழமை 2ம் தேதிக்குப் பிறகு வியாழக்கிழமை 14ம் தேதியாக மாற்றப்பட்டு, 13 நாட்கள் நீக்கப்பட்டிருப்பதைக் காணலாம்.
இஸ்லாத்திற்கு தூரோகம் செய்த தாத்தாரியர்கள்
துர்க்கியை ஆட்சித் தலைமையாகக் கொண்ட முஸ்லிம் தலைமை தமது ஈமானிய பலவீனத்தால் யூதர்களுக்கு அடிமையாகத் துவங்கிய காலம் அது. 1926ம் ஆண்டு, இஸ்லாமிய மணிமகுடங்களில் ஒன்றாக ஹிஜ்ரி காலண்டரை புறக்கணித்துவிட்டு கிருத்துவக் காலண்டரை தங்களின் ஆட்சி காலண்டராக மாற்றினர். ஹிஜ்ரா காலண்டருக்கும் கிருத்துவக் காலண்டருக்கும் இடையே ஆன வித்தியாசமாகிய சுமார் 12 நாட்களை 1926ம் ஆண்டு நீக்கிவிட்டு டிசம்பர் மாதத்தை 18 நாட்களோடு முடித்துக் கொண் ஜனவரியைத் துவக்கினர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக