அக்டோபர் 24, 2011



லிபியாவின் "விடுதலை"


முன்னாள் ஆட்சியாளர் மௌம்மர் கடாபியை தான்தோன்றித்தனமாக படுகொலை செய்த பின்னர்இந்த வாரயிறுதியில் லிபியாவின் நேட்டோ பின்புலத்திலான தேசிய இடைக்கால சபை (NTC) நாடு "விடுதலை"அடைந்துவிட்டதாக அறிவிக்கும் நிலையில் உள்ளது.

கடாபியின் முன்னாள் நீதித்துறை மந்திரியும் இடைக்கால தேசிய சபையின் தலைவருமான முஸ்தாபா அப்தெல் ஜலீலால் அளிக்கப்பட்ட உரையோடு கொண்டாடப்பட்டு வருவதுலிபிய மக்களின் விடுதலை அல்லமாறாக அது காலனித்துவ நாட்களை மீண்டும் கொண்டு வரும் நோக்கத்தோடு தொடுக்கப்பட்ட யுத்தங்களில் பிரதான ஏகாதிபத்திய சக்திகளின் வெற்றியாகும்.
அந்நாட்டின் உள்கட்டமைப்பின் பெரும்பகுதிகளை இடித்து ஆயிரக்கணக்கான ஆண்கள்பெண்கள்மற்றும் குழந்தைகளைக் கொல்லும் மற்றும் காயப்படுத்தும் விதத்தில் சுருங்கி போயிருந்த ஒரு நேட்டோ தாக்குதல் பிரச்சாரத்தின் மூலமாக அது எட்டப்பட்டதுஅதன் இறுதி அத்தியாயத்தில்,சிர்ட்டின் கடற்கரை நகரத்தை காட்டுமிராண்டித்தனமாக கைப்பற்றியதும்,கடாபிஅவருடைய மகன் மற்றும் அவருடைய ஆட்சியின் ஏனைய முன்னாள் உறுப்பினர்களைப் படுகொலை செய்ததும் ஒட்டுமொத்த நடவடிக்கையின் குற்றத்தனத்தையே அடிக்கோடிடுகின்றன.
"மனிதாபிமானநோக்கங்களுக்காகவும்கடாபி ஆட்சியிலிருந்து லிபிய மக்களைக் காப்பாற்றுவதற்காகவுமே லிபிய யுத்தம் தொடுக்கப்பட்டது என்ற போலித்தனத்தின் உச்சக்கட்ட வெளிப்பாட்டை இந்த குற்றங்கள் எடுத்துக்காட்டுகின்றனபொதுமக்கள் மீதான இரத்தந்தோய்ந்த ஒருவிதமான தாக்குதலைத் தடுப்பதற்காக வடிவமைக்கப்பட்டதாக எடுத்துரைக்கப்பட்ட அமெரிக்க-நேட்டோ தலையீடுசிர்ட்டேவில் "எதிர்ப்பாளர்களின்ஒரு இராணுவம் அதையே செய்யவிமான பாதுகாப்பை நேட்டோ அளித்தது.
யுத்தத்தின் தொடக்கத்தில் இருந்தேபுவி-மூலோபாய மற்றும் பொருளாதார நலன்களைத் பின்தொடர்வதற்காக அமெரிக்கா மற்றும் மேற்கு ஐரோப்பிய சக்திகளால் நடத்தப்பட்ட ஆட்சி மாற்றத்திற்கான ஒன்றாகவே அந்த யுத்தம் இருந்து வந்துள்ளதுமத்தியதரைக்கடல் பகுதியின் ஒரு முக்கிய எரிசக்தி-உற்பத்தி நாட்டில் மேற்கின் மேலாதிக்கத்திற்கு சவால்விடுத்து,கடாபி ஆட்சியோடு கணிசமான அளவிற்கு எண்ணெய்உள்கட்டமைப்பு மற்றும் ஆயுத உடன்படிக்கைகளைத் தீர்மானித்திருந்த சீனா மற்றும் ரஷ்யாவின்மீது ஒரு கூர்மையான பழிவாங்கும் தண்டனையை வழங்குவதே அவர்களின் யுத்த நோக்கமாகும்.
கடாபியைத் தூக்கியெறிவதில், BP, ConocoPhillips, Total மற்றும் ENI போன்ற பிரதான மேற்கத்திய பெருவர்த்தகங்கள் லிபியாவின் எண்ணெய் மற்றும் எரிவாயு வளங்களின்மீது மிகவும் இறுக்கமான கட்டுப்பாட்டை ஸ்தாபிக்கும் வாய்ப்பைநேட்டோ சக்திகள் கண்டனமேலும் மேற்கில் துனிசியாவிலும்,கிழக்கில் எகிப்திலும் இரண்டிலும் எழுந்த மக்களின் எழுச்சிகளால் அதிர்ந்து போயிருந்த அந்த பிராந்தியத்தில் இராணுவ அதிகாரத்தை ஸ்திரப்படுத்துவதற்கான ஒரு கருவியாக திரிப்போலியில் ஒட்டுமொத்தமாக ஓர் ஓட்டுமொத்த அடிவருடி ஆட்சியை நிறுவவும் அவை பார்த்தன.
அடியாட்களையும்மேற்கத்திய உளவுத்துறை "உடைமைகளையும்",விலைக்கு வாங்கப்பட்ட முன்னாள் லிபிய அதிகாரிகளையும்அந்நாட்டின் மறுகாலனித்துவத்திற்கு தங்களின் சேவைகளை அர்பணிக்கக்கூடியவர்களையும் கொண்டிருக்கும் ஓர் ஆட்சி தான் திரிப்போலியிலும்பெங்காசியிலும் வடிவெடுக்கும்ஐரோப்பாவிலும்,அமெரிக்காவிலும் உள்ள "இடதுஎன்றழைக்கப்படும் அரசியல்ரீதியாகவும்,அறிநெறிரீதியாகவும் மிகவும் சீரழிந்த உட்கூறுகளால் மட்டுமே "விடுதலை"மற்றும் "ஜனநாயகம்என்ற இந்த இழிவார்ந்த அமைப்பை ஏற்றுக் கொள்ள முடியும்.
நியூ யோர்க் டைம்ஸ் மற்றும் வாஷிங்டன் போஸ்ட் ஆகிய இரண்டுமே,லிபியாவில் அமெரிக்காவின் செல்வாக்கை ஸ்திரப்படுத்துவதில் வாஷிங்டன் தீவிர பாத்திரம் வகிக்க வேண்டுமென வலியுறுத்தும் தலையங்கங்களோடு கடாபியின் படுகொலைக்கு வெள்ளியன்று விடையிறுப்பு காட்டின. “அந்த படுகொலை லிபியாவின் மாற்றத்திற்கு முடிவாக அல்லாமல் ஒரு தொடக்கமாக பார்க்கப்பட வேண்டும்,” என்று வாஷிங்டன் போஸ்ட் எழுதியது. “பாதுகாப்பு படைகளுக்கான ஓர் அமெரிக்க பயிற்சி திட்டத்திற்கு லிபியாவின் எண்ணெய் வளத்தை விலையாக கொடுக்கலாம்என குறிப்பிட்டுஅமெரிக்க"தலைமை எடுக்க வேண்டுமெனஅந்த தலையங்கம் வாதிட்டது. "ஒரு ஜனநாயக அரசாங்கத்தின்கீழ் லிபியாவின் ஸ்திரப்பாடானதுசுதந்திரத்தை நாடும் அரேபிய மத்திகிழக்கில் மாற்றத்திற்கான பரந்த அலையைத் தூண்டிவிட உதவக்கூடும்,” என்று அது குறிப்பிட்டதுஅமெரிக்க ஆதிக்கதின்கீழ் இருப்பது என்பதைக் குறிக்கஇங்கே "சுதந்திரம்என்ற அந்த சொல் அமெரிக்க வெளியுறவு கொள்கையின் பாரம்பரிய வழியில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
"பணத்திற்கு அப்பாற்பட்டு (எண்ணெய் வளத்திற்கு தான் நன்றி கூற வேண்டும்லிபியா அதில் செழிப்பாக உள்ளதுலிபியாவிற்கு நீடித்த தொழில்நுட்ப ஆலோசனையும்முழுநேர ஒத்துழைப்பும் தேவைப்படுகிறது,”என்று நியூ யோர்க் டைம்ஸ் ஆலோசனை கூறியதுஇதுபோன்ற "அறிவுரை"லிபியாவில் எண்ணெய் உடன்படிக்கை நிபந்தனைகளை திருத்தி எழுதுகையில் உள்ளடக்கப்படும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
அமெரிக்க-நேட்டோ இராணுவ தலையீட்டைத் தொடர மறைமுகமாக போலிக்காரணத்தைக் காட்டும் விதத்தில்தரையிலிருந்து வான்வழி ஏவுகணைகள் உட்பட லிபியாவின் ஆயுத கையிருப்புகளை அழிப்பது மற்றும் டஜன் கணக்கான "எதிர்ப்புபோராளிகள் இருப்பது குறித்து இரண்டு தலையங்கங்களுமே கவலைதோய்ந்த பத்திகளை சேர்த்திருந்தன.
மௌம்மர் கடாபியின் காட்டுமிராண்டித்தனமான படுகொலைவாஷிங்டனால் பகிரங்கமாக கோரப்பட்ட ஓர் அரச படுகொலையாகும்சிர்ட்டேவிற்கு பறந்து கொண்டிருந்த கடாபியின் பயணத்தை நேட்டோ யுத்தவிமானங்களும்,அமெரிக்காவின் ஓர் ஆளில்லா வேட்டை விமானமும் தாக்குவதற்கு வெறுமனே 48 மணிநேரத்திற்கு முன்னதாக, “எதிர்ப்பாளர்களின்"கருணைக்கு அவரை விட்டுவைத்துதிரிப்போலிக்கு பறந்திருந்த வெளிவிவகாரத்துறை செயலர் ஹிலாரி கிளிண்டன்ஆட்சியில்லாத அந்த லிபிய தலைவரை முடிந்தவரை விரைவாக "பிடிக்க வேண்டும் அல்லது கொல்ல வேண்டுமெனஅழைப்புவிடுத்தார்.
நாசரிசத்தால் (Nasserism) ஈர்க்கப்பட்டிருந்த கடாபி, 1969 செப்டம்பரில் இளம் அதிகாரிகளின் ஓர் ஆட்சி கவிழ்ப்பு திட்டத்தைத் தலைமையேற்று நடத்தினார்அவருடைய மரணத்திற்கு நீண்டகாலத்திற்கு முன்னரேஅவர் புரட்சிகர தேசியவாதத்திற்கான எவ்வித யோசனையையும் கைவிட்டிருந்தார்.அந்த ஆரம்பக்கட்ட நாட்களில்பாரிய காலனித்துவ-எதிர்ப்பு போராட்டங்களோடு பிணைந்த ஒரு தேசிய மற்றும் சமூக திட்டத்தை வலியுறுத்திக் கொண்டுபல நாடுகளில் லிபியாவை போன்ற தேசியவாத ஆட்சிகள் அதிகாரத்திற்கு வந்தன.
லிபியாவில்இது அமெரிக்கா மற்றும் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு முழுவதுமாக அடிபணிந்திருந்த இட்ரிஷ் மன்னரின் ஊழல்மிக்க முடியாட்சியைத் தூக்கியெறிந்தமை மற்றும் ஆபிரிக்க கண்டத்தில் நிறுவப்பட்டிருந்த மிக பிரமாண்டமான அமெரிக்க இராணுவத் தளமான வீலஸ் விமானத்தளத்தை மூடியமைவெளிநாட்டு எண்ணெய் நிறுவனங்களோடு கடுமையான பேரத்தில் ஈடுபட்டமைமற்றும் தடையாணைகளை நடைமுறைப்படுத்தியமை உட்பட எண்ணெய்யை ஓர் ஆயுதமாக பயன்படுத்த OPECக்கு அழுத்தம் கொடுத்தமை ஆகியவற்றை உட்கொண்டிருந்தது.
அந்த கொள்கை தான் அப்போதைய தேசிய பாதுகாப்பு ஆலோசகரான ஹென்றி கிஸ்சிங்கெர் தலைமையில் கடாபியைக் கொல்லவோ அல்லது தூக்கியெறியவோ இரகசிய நடவடிக்கைக்கு ஒப்புதல் வழங்க 1969இல் இட்டுச் சென்றது.
னைத்து தீவிர தேசியவாத ஆட்சியாளர்களைப் போலவே கடாபியாலும்ஏகாதிபத்தியத்திற்கும் சோவியத் ஸ்ராலினிச அதிகாரத்துவத்திற்கும் இடையில் சமாளித்துக் கொண்டுசர்வதேச சூழலின் கீழ்உபாயங்களுக்கான பெரிய வாய்ப்புகளைப் பெற முடிந்ததுஅதேவேளை உள்நாட்டிற்குள் எழுந்த சமூக போராட்டங்களை ஒடுக்க ஒடுக்குமுறை மற்றும் சீர்திருத்தங்களின் ஒரு கூட்டுக்கலவையை பயன்படுத்தினார். 1991இல் சோவியத் ஒன்றியத்தின் சிதைவு லிபியாவையும்அதேபோன்ற ஆட்சிகளையும் ஏகாதிபத்திய சக்திகளோடு ஓர் இணக்கத்தை எட்டச் செய்தது.
2003இல்ஈராக்கின் அமெரிக்க தலையீட்டையொட்டிஅணு ஆயுதங்களை நோக்கிய எவ்வித விருப்பங்களையும் மறுத்தும்பயங்கரவாதத்தைக் கண்டித்தும்மேற்குடனான உறவுகளை சமாதானமாக்க விரும்பியது.அதேவேளை அல்கொய்தாவிற்கு எதிரான உலகளாவிய சிலுவையுத்தத்தில் அமெரிக்க உளவுத்துறையோடு கூடி வேலைசெய்ததுஅவர் இந்த போக்கை எடுத்த உடனேஎண்ணெய் உடன்படிக்கைகள்ஆயுத ஒப்பந்தங்கள் மற்றும் ஏனைய ஆதாய உடன்படிக்கைகளுக்காக வாஷிங்டனும் மற்றும் ஒவ்வொரு பிரதான மேற்கு ஐரோப்பிய சக்தியும் கடாபியை அரவணைத்துக் கொண்டன.
இருந்தபோதினும்கடாபியின் ஆரம்பக்கட்ட தீவிரத்தன்மையை ஏகாதிபத்திய சக்திகள் ஒருபோதும் மறந்துவிடவும் இல்லைஅவரை ஒருபோதும் நம்பவும் இல்லைஇவ்விதத்தில்வெகுநீண்டகாலத்திற்கு முன்னர் இல்லாமல் அவரிடம் பணிந்து அன்பைக்காட்டிய அதே அரசியல் பிரபலங்கள்,அவரின் பேரச்சமூட்டுகின்ற படுகொலையையும் குரூர திருப்தியுடன் பார்க்கின்றன.
2009 இல் வெளிவிவகாரத்துறையில் இருந்த லிபிய ஆட்சியாளரின் மகன் மௌடெஸ்செம் படுகொலை செய்யப்பட்டதை வரவேற்றிருந்த ஹிலாரி கிளின்டன் வியாழனன்று கடாபியின் படுகொலை குறித்து கூறுகையில்,சிரித்துக்கொண்டே, “நான் வந்தேன்நான் பார்த்தேன்அவர் மரணத்தைஎன்று அறிவித்தார்.
இதுபுதிய மெக்சிகோவில் பிறந்து ஓர் அமெரிக்க குடிவாசியான முஸ்லீம் மதகுரு அன்வர் அல்-அவ்லாகி விஷயத்தில்ஓர் அரச படுகொலைக்கு சொந்தம் கொண்டாட கடந்த ஆறுமாதங்களில் மூன்றுமுறை தொலைக்காட்சி கேமராவின் முன்னால் தோன்றியுள்ள ஒரு ஜனாதிபதியின் தலைமையில்,அமெரிக்க அரசாங்கத்தின் அடிதடித்தனத்தைத் தொகுத்தளிக்கிறது.
வியாழனன்று அவர் அளித்த உரையில், “உலகில் அமெரிக்க தலைமையின் வலிமையை நாம் காண்கிறோம்,” என்பதையே கடாபியின் படுகொலை நிரூபித்துள்ளதென ஒபாமா முறையிட்டார்.
இது முட்டாள்தனமானதாகும்வெளியுறவு கொள்கையின் ஓர் இடையறா கருவியாக விளங்கும் படுகொலையென்பது அமெரிக்க பலத்தின் அடையாளமல்லமாறாக அது வரலாற்று வீழ்ச்சியாகும்அது பகிரங்கமான வன்முறை நடவடிக்கைகள் மூலமாக ஆழமான நெருக்கடியையும்அமெரிக்க முதலாளித்துவத்தின் வீழ்ச்சியையும் ஏதாவதொருவிதத்தில் சரிக்கட்ட முடியுமென்ற ஆளும் வர்க்கத்தின் நம்பிக்கையிழந்த மற்றும் அறிவற்ற நம்பிக்கையைப் பிரதிபலிக்கிறது.
ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் அமெரிக்க தலையீடுகளால் உருவாக்கப்பட்ட நெருக்கடிகள்புதிய மற்றும் இன்னும் இரத்தம் தோய்ந்த யுத்தங்களுக்கு மட்டுமே அஸ்திவாரத்தை அமைத்துள்ளனஅமெரிக்கா பின்பற்றும் "மதிப்புகள் மற்றும் நலன்கள்யுத்தங்கள் வருவதற்கு நீண்டகாலமாகாது என்பது போன்ற பணயத்தில் இருக்குமென உணரப்படும் எந்தவொரு இடத்திலும் அமெரிக்க தாக்குதலை அனுமதிக்கும் ஒரு முன்னெச்சரிக்கை யுத்த கோட்பாட்டை தெளிவாக விளக்கஒபாமா லிபிய தாக்குதலைப் பயன்படுத்தியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக