சீனாவின் அட்டூழியம்
ரமழானிலும் தொடர்கிறது....
பேசப்படாத
முஸ்லிம்கள்
Xinjiang. சீனாவின் கொலைக்களம். இங்கு உய்குர் முஸ்லிம்கள் மீது சீனா அரசால் கட்டவிழ்க்கப்பட்டுள்ள அடக்குமுறைகளும், சித்திரவதைகளும், படுகொலைகளும் வெளிஉலகிற்கு தெரியவருவதில்லை. அமெரிக்க ஊடகங்கள் எவ்வளவு முயன்றும்
இதன் ஒரு காட்சியையேனும் படமாக்க முடியாமல் போயுள்ளது. யாராவது சீன
அரசின் கொலைகளம் பற்றி தகவல்களை வழங்க முற்பட்டாலோ அல்லது
சேகரித்தாலோ அவர்கள் தேச துரோகிகளாக பிரகடனப்படுத்தப்பட்டு மக்கள்
முன்னிலையில் சதுக்கங்களில் வைத்து தலையில் சுடப்படுவர்.