ஜூலை 02, 2012


எமக்கு தெரியாத சில 

சியோனிஸ உண்மைகள் - பிம்பங்களிற்கு அப்பால்

து நடந்தது சுமார் ஒரு வருட
 காலங்களிற்கு முன்னர்.  Azoun. 
ஒரு சிறிய கிராமம். சிறு 
பயிர்செய்கை, ஆடுவளர்த்தல் 
என தம் பொருளாதாரங்களில் 
தத்தளிப்பவர்கள். சிறிய வாழ்க்கை.
 அதிகம் அப்பாவிகள். கூகுள் 
ஏர்த்தில் கூட மனிதர்கள் 
பார்த்திருப்பார்களா? என 
எண்ண வைக்கும் கிராமம். 
Qalqilya மாகாணத்தில் அமைந்துள்ளது. ஆக்கிரமிக்கப்பட்ட பலஸ்தீனின் 
மேற்குக்கரையில் அமைந்த மாகாணம் அது.

அதிகாலையில் ஸியோனிஸ இராணுவம் இந்த மாகாணத்தில் உள்ள அசூன் 
கிராமத்தை சுற்றி வளைத்தது. பின்னர் உள் நுழைந்தது. துப்பாக்கி பிரயோகம் 
செய்யவில்லை. எறிகுண்டுகளை வீசவில்லை. பொஸ்பரஸ் குண்டுகளை 
பிரயோகிக்கவில்லை. ஏன் ரப்பர் குண்டுகள் கூட சுடப்படவில்லை. பின்னர் 
என்ன தான் செய்தார்கள் இவர்கள்?. எதற்காக இந்த சுற்றிவளைப்பு?

நேராக வீடுகளினுள் புகுந்த இராணுவம் சிறுவர்களை தேடியது. வீடு வீடாக, 
தெரு தெருவாக சல்லடையிட்டு தேடியது. இறுதியில் 06 சிறுவர்களை 
கையில் எந்த போட்டோவும் இல்லாமல்14 வயதில் இருந்து 16 வயதிற்கு 
உட்பட்ட சிறுவர்களை கிராம முற்றலில் கொண்டு வந்தது. தெரிந்துதெடுத்த 
ஆறு சிறுவர்களை இழுத்து சென்று தங்கள் ஹம்பி ரக கவசவாகன
ங்களினுள் வீசி எறிந்தது. அடுத்த கணம் கிராமத்தை விட்டு வெளியேறி 
விட்டது. எல்லாம் ஒரு சில நிமிடங்களில் நடந்து முடிந்த காட்சிகள்.

எந்த ஊடகங்களும் கவரேஜ் செய்ய முடியாத கணப்பொழுதுகளில் இவை 
நடைபெற்றன. சட்டலைட் இமேஜில் கூட தெளிவாக தெரியாத புலர் 
காலைப்பொழுதுகளில் இவையனைத்தும் நடந்து முடிந்து விட்டன. 
நோ மோர் எவிடன்ஸ். பலஸ்தீனத்தின் சிதைந்த கட்டிடங்களும் 
அதில் படுத்திருந்த பூனைகளையும் தவிர வேறு சாட்சியங்கள் 
இதற்கில்லை.

ஜெனினில் அமைந்துள்ள ஸியோனிஸ்ட்களின் 'Military Court" ல் 
வைத்து ஒரு வருடகாலமாக தடுத்து வைக்கப்பட்டிருந்த இந்த 06 
சிறுவர்களும் விசாரிக்கப்பட்டார்கள். இவர்கள் இப்போது POW. 
அதாவது Prisinors of War. எந்த யுத்தத்தில் கைது செய்யப்பட்டார்கள் 
என்ற கேள்வி உங்கள் உள்ளத்தில் எழுலாம். அவர்கள் எந்த 
சண்டையிலும் ஈடுபட்டவர்கள் அல்ல. அன்பு தாயினதும் அருமை 
தந்தையினதும் சகோத சகோதரிகளினதும் அரவணைப்பில் 
வளர்ந்தவர்கள். அன்றிரவும் அவ்வாறே உறங்கியவர்கள்.

ஆனால் இஸ்ரேலிய நீதிமன்றம் தீர்ப்பளித்தது. “ இஸ்ரேலிய 
இராணுவ டாங்கிகளிற்கும், கவசவாகனங்களிற்கும் எதிராக கற்களை 
வீசியவர்கள். கற்களை ஆயுதமாக கொண்டு பெருமைமிகு இஸ்ரேலிய 
இராணுவ சிப்பாய்களை கொலை செய்ய எத்தனித்தவர்கள். இதுதான் 
இவர்கள் மீது சாட்டப்பட்ட குற்றம். தீர்ப்பின் படி 05 வருடங்கள் முதல்
 12 வருடம் வரை சிறை தண்டனை அளிக்கப்பட்டது.

காலீத் அபூ ஹானியா - 12 ஆண்டுகள், இஹாப் மஷால் - 8 ஆண்டுகள், 
ஒஸ்மான் முகமது ஒம்ரான் - 9 ஆண்டுகள், சாத்ஜி அப்தெல்-ஹபீஸ் 
முகமது அபூ ஹனியாஹ் மற்றும் ஷாத் ஸெய்த் அபூ ஹனிய்யாஹ்
 - 5 ஆண்டுகள்.

இத்தோடு விட்டதா ஸியோனிஸ நீதிமன்றம். இந்த சிறுவர்களின் 
உறவினர்கள் இவர்களிற்கு அடைக்கலம் கொடுத்ததாக கூறி ஒவ்வொரு 
குடும்பத்திற்கும் தலா 5000 இஸ்ரேலிய நாணயம் தண்டம் எனவும் 
அறிவித்தது. தவறும் பட்சத்தில் மேலதிகமாக இரண்டு வருடகாலம் 
சிறையிலடைக்கப்படுவர் என்றும் அந்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

நீதிபதி தீர்ப்பை வாசிக்கும் போது “ இறைமையுள்ள இஸ்ரேலிய சட்டங்கள் 
வயது ரீதியில் வித்தியாசப்படுகிறது. அந்த வகையில் 18 வயது இஸ்ரேலிய 
குடிமகனிற்கு உரித்தான சட்டங்கள் 14 வயது பலஸ்தீனியரிற்கு பொருந்தும்
 என்றும் குறிப்பிட்டார்.

ஒவ்வொரு வருடமும் ஸியோனிஸ இராணுவமும், பொலிசாரும் 
கூட்டாக 500 முதல் 700 வரையான பலஸ்தீன சிறார்களை கைது 
செய்து ஏதாவது ஒரு குற்றத்தை சுமத்தி 01 வருடம் முதல் 12 வருடங்கள் 
வரை சிறைக்கு அனுப்புகிறார்கள். இதிலிருந்து விடுதலையாகி வரும் 
இளைஞர்கள் கல்வியறிவற்றவர்களாக மாறிவிடுகின்றனர். ஜெரூஸலத்தின் 
வீதிகளில் யூதர்களின் கூலிகளாக தொழில் செய்ய நிர்ப்பந்திக்கப்படும் ஒரு 
சமூக அவல சக்கரம் இன்னமும் சுழல்கிறது.

ஆயுத சன்னத்தமாக வரும் யூத இராணுவத்தையும் அதனது அமெரிக்க 
டாங்கிகளையும் நோக்கி கற்களை வீசியதை தவிர இவர்கள் செய்த குற்றம் 
எதுவுமில்லை. ஆனால் அந்த ஆயுதம் தாங்கிய இராணுவமும், டாங்கிகளும் 
அப்பாவிகளை குறிவைத்து சுடுகின்றன. அழிக்கின்றன. அவற்றிற்கு இறுதியில் 
கிடைப்பது பாராட்டு. “ உலகின் தலை சிறந்த 10 இராணுவங்களில்
 ஒன்று”. “உலகின் தலை சிறந்த 10 உளவமைப்புகளில் ஒன்று” 
என்பன போன்றவையே. கல்லை எறிந்த சிறுவன் 12 வருடங்கள் 
இஸ்ரேலிய பாதாள சிறைகளில் தள்ளப்பட்டு சித்திரவதை 
செய்யப்படுகின்றான்.

பலஸ்தீனர்களின் நியாயமும், இஸ்ரேலியர்களின் அநியாயமும் மீண்டும் 
ஒரு முறை மறைந்து போகின்றது. இதற்கு இந்த சிறுவர்கள் சாட்சி...

ABU SAYYAF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக