சீனாவின் அட்டூழியம்
ரமழானிலும் தொடர்கிறது....
பேசப்படாத
முஸ்லிம்கள்
Xinjiang. சீனாவின் கொலைக்களம். இங்கு உய்குர் முஸ்லிம்கள் மீது சீனா அரசால் கட்டவிழ்க்கப்பட்டுள்ள அடக்குமுறைகளும், சித்திரவதைகளும், படுகொலைகளும் வெளிஉலகிற்கு தெரியவருவதில்லை. அமெரிக்க ஊடகங்கள் எவ்வளவு முயன்றும்
இதன் ஒரு காட்சியையேனும் படமாக்க முடியாமல் போயுள்ளது. யாராவது சீன
அரசின் கொலைகளம் பற்றி தகவல்களை வழங்க முற்பட்டாலோ அல்லது
சேகரித்தாலோ அவர்கள் தேச துரோகிகளாக பிரகடனப்படுத்தப்பட்டு மக்கள்
முன்னிலையில் சதுக்கங்களில் வைத்து தலையில் சுடப்படுவர்.
இப்போது சீனா இன்னொரு கட்டளையை பிறப்பித்துள்ளது. சின்ஷியங்
இப்போது சீனா இன்னொரு கட்டளையை பிறப்பித்துள்ளது. சின்ஷியங்
மாகாணத்தில் நோன்பு நோற்பதை தடை செய்ததே அந்த கட்டளை.
ரமழான் மாதமானதால் முஸ்லிம்கள் ஒன்றாக கூடி நோன்பு நோற்க,
திறக்க முற்படுவர். இதனால் பிரிவினைவாத புரட்சி கருத்துக்கள்,
எண்ணங்கள் வலுப்பெறும் என்பது சீனா சர்வாதிகாரிகளின் பயம்.
ஏற்கனவே சின்ஷியாங்களில் பலர் ஒன்றாக கூடுவது தடை
செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் முஸ்லிம்கள் மறைமுகமாகவும்,
களவாகவுமே சீனா அரசிற்கு தெரியாமல் நோன்பினை நோக்கும்
நிலைக்கு தள்ளப்பட்டுள்னர். இதில் உள்ள சவால் என்னவென்றால்,
நோன்பு நோற்ற நிலையில் ஒருவர் பிடிபட்டால் அவர் அரச சட்டத்தை
மீறியவர் என்ற வகையில் கைது செய்யப்படுவார்.
முஸ்லிம் நாடுகள் வாய்மூடி நிற்கின்றன. சீனாவின் பொருளாதரத்தில்
முஸ்லிம் நாடுகள் வாய்மூடி நிற்கின்றன. சீனாவின் பொருளாதரத்தில்
கட்டுண்டு போன தேசங்கள் பல. சீன உறவை பகைக்க அவை விரும்பவில்லை.
அது அவர்கள் பிரச்சனை எனும் வெளியுறவு கொள்கையை கடைப்பிடிக்கவே
எத்தனிக்கின்றன. அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு மாற்று தீர்வான சீன உறவுகள்
அவர்களிற்கு அவசியமாகவும் படுகின்றன. இது தான் இன்றைய முஸ்லிம் உலகு.
Xinjiang ன் வடமேற்கு பகுதியிலேயே இந்த கட்டாய சட்டம் சீன அதிகாரிகளால் அமுல்படுத்தப்பட்டு கவனமாக கண்காணிக்கப்படுகிறது. Dilxat Raxit முனிச்சை
Xinjiang ன் வடமேற்கு பகுதியிலேயே இந்த கட்டாய சட்டம் சீன அதிகாரிகளால் அமுல்படுத்தப்பட்டு கவனமாக கண்காணிக்கப்படுகிறது. Dilxat Raxit முனிச்சை
(ஜேர்மனி) தளமாக கொண்ட உலக உய்குர் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர்
இன்று இது பற்றிய செய்திகளை வெளியிட்டுள்ளார்.
சீனாவின் முஸ்லிம்கள் புனித நோன்பு மாதம் தொடங்குவதற்கு முன்பாக
சீனாவின் முஸ்லிம்கள் புனித நோன்பு மாதம் தொடங்குவதற்கு முன்பாக
சுமார் 11 பேர் Xinjiang வட மேற்கு பகுதியில் சீன அதிகாரிகளினால் பரவலாக
கொலை செய்யப்பட்டுள்ளனர். கடந்த வாரம் இரண்டு சுடப்பட்ட முஸ்லிம்களின்
உடல்களை கொண்டு வந்து வீதியில் போட்டு விட்டு இவற்றை முஸ்லிம்
தீவிரவாதிகள் செய்ததாக கூறிச் சென்றுள்ளனர். 100 இற்கும் மேற்பட்ட Uighur
முஸ்லிம்கள் இதனை சாக்காக வைத்து கைது செய்யப்பட்டுள்னர்.
Xinjiang அரச முஸ்லிம் ஊழியர்கள் நோன்பு நோட்க முடியாது. அவ்வாறு
Xinjiang அரச முஸ்லிம் ஊழியர்கள் நோன்பு நோட்க முடியாது. அவ்வாறு
நோன்பு நோற்பது தெரிய வந்தால் அவர்களது ஓய்வூதியம் நிறுத்தப்படும்.
பொதுத்துறை, தனியார்துறை ஊழியர்கள் நோன்பு நோட்பதும் தடை
பொதுத்துறை, தனியார்துறை ஊழியர்கள் நோன்பு நோட்பதும் தடை
செய்யப்பட்டுள்ளது. அவ்வாறு யாராவது நோன்பு நோட்பார்களாயின்
அவர்களது போனஸ் நிறுத்தப்படும். அவர்களது சேமலாப நிதிகள், படி
அதிகரிப்புக்கள் போன்றனவும் நிறுத்தப்படும்.
Xinjiang மாகாண அரசில் அங்கம் வகிக்கும் அரசியல் சார்ந்த உறுப்பினர்கள்
Xinjiang மாகாண அரசில் அங்கம் வகிக்கும் அரசியல் சார்ந்த உறுப்பினர்கள்
தாங்கள் நோன்பு நோட்க போவதில்லையெனவும், நோன்பு நோட்பவர்களிற்கு
ஆதரவாக செயற்படப்போவதில்லையெனவும் உத்தியோக பூர்வமாக
எழுத்தில் கடிதம் சமர்ப்பிக்க வேண்டும். மீற செயற்பட்டால் சீன
கம்யூனிச கட்சிக்கும் , சீன குடியரசிற்கும் துரோகம் இழைத்தவர்களாக
கணிக்கப்படுவர்.
உணவகங்கள், ஹோட்டல்கள் போன்றவை பகல் பொழுதுகளில்
உணவகங்கள், ஹோட்டல்கள் போன்றவை பகல் பொழுதுகளில்
மூடப்படுவது தடை விதிக்கப்பட்டுள்ளது. அரச மற்றும் தனியார்
துறை கன்டீன்களில் உணவுகள், லஞ் பொதிகள் முஸ்லிம்களிற்கு
கட்டாயமாக வழங்கப்பட்டு அவர்கள் அவதானிக்கப்படுகிறார்கள்.
பள்ளிவாசலிற்கு செல்லும் முதியவர்கள், அங்கு நீண்ட நேரம்
தரித்திருப்பவர்கள் தங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும்.
தொழுகைக்காக செல்லும் பெண்கள் தங்கள் முகங்களை
இனங்காணக்கூடிய வகையில் திறந்த நிலையில் பேணிக்
கொள்ள வேண்டும் போன்ற சட்டங்கள் அமுல்படுத்தப்பட்டுள்ளன.
இது தான் இன்றைய சீனா முஸ்லிம்களின் குறிப்பாக ஸின்ஷியாங்
முஸ்லிம்களின் நிலை.
பர்மாவின் இராணுவ ஜுண்டா அரசினுள் சீன உளவுப்பிரிவு ஆழமாக
பர்மாவின் இராணுவ ஜுண்டா அரசினுள் சீன உளவுப்பிரிவு ஆழமாக
ஆதிக்கம் செலுத்தும் நிலைியில் தான் ரோஹிங்கியா முஸ்லிம்கள்
நிர்மூலம் செய்யப்பட்டார்கள். அப்படியானால் நம்மை சுற்றி நிகழும்
பல நிகழ்வுகளிற்கு நாம் இன்னும் இஸ்ரேலையும், ஸியோனிசத்தையும்
சந்தேகம் கொள்ளும் சிந்தனைகளில் எங்கேயோ தப்புள்ளதா என்பதை
மீளாய்வு செய்து பார்த்தல் நல்லது. ஏனென்றால் சீன உளவாளிகளும்
தங்கள் பிராந்திய நலன்களிற்காக சில இன முரண்பாடுகளை
தோற்றுவிக்க கூடியவர்களாக இருக்கலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக