ஆகஸ்ட் 24, 2012


பார்வையற்றவர்களுக்கான பிறைலி(Braille) முறை 



உலகில்  உள்ள   கண்பார்வை அற்றவர்களின்  எண்ணிக்கை 40  மில்லியன் எமது சூழலிலும் நீங்கள் இவர்களை  அவதானித்திருப்பீர்கள் இவர்களது வெள்ளை பிரம்பும் கறுப்பு கண்ணாடியும் இவர்களை அடையாளப்படுத்தும் குறியீடுகளாக மாறிவிட்டது  .இவர்களுக்கே உரித்தான தனித்துவமான எழுத்து மொழிதான் braille .நாம் பயன்படுத்தும் பல  அன்றாட சாதனங்களில் சில அடையாளங்கள் பொறிக்கப்பட்டிருப்பதை அவதானித்திருக்கிறீர்களா ?
இவை கண்பார்வை அற்றோர் இலகுவாகப் பயன்படுத்துவதற்காக பொறிக்கப்பட்டுள்ளது key  board  ,phone  ,coins ,lift swith ரூபாய் நோட்டுக்கள் ,ATM machine என பலசாதனங்களில் இவை பொறிக்கப்பட்டுள்ளன  பெரும்பாலான உலகநாடுகளில் கண்பார்வை அற்றோருக்காக  இவ்வாறு  குறியீடுகள் பொறிக்கப்படுதல் நடைமுறையில் பின்பற்றப்பட்டு வருகின்றன 

ATM  keypad


lift switch 


இவ்வெழுத்தை கண்டுபிடித்தவர் பிரெஞ்சு நாட்டை சேர்ந்த Louis braille என்ற டீன்ஏஜ் பையன் 1821 இல் கண்டுபிடித்தார் அப்போது இவருக்கு வயது 15  இவர் இவர் ஒரு விபத்திலே தன் கண்பார்வையை இழந்தவர் இவர் braille ஐ கண்டுபிடித்ததும்  இதை தனது பாடசாலையில் உள்ள ஏனைய பார்வைஅற்ற மாணவர்களுக்கு  கற்பித்தார் .இவரது இக்கண்டுபிடிப்பால் பார்வை அற்றோருக்கான கற்பித்தல் முறை முழுவதுமாக மாற்றப்பட்டது 
braille இன் அறிமுகத்திற்கு முற்பட்ட காலத்தில் இவர்களுக்கான கற்பித்தல் முறையில் எழுதுதலையும் வாசித்தலையும் தவிர்த்து வந்தார்கள் braille  இவற்றை மாற்றி அமைத்தது  

அத்துடன் braille இன் கண்டுபிடிப்பிற்கு முன் கண்பார்வை அற்றோருக்கு கல்விகற்பதற்கும் அலுவலக வேலைகளை செய்வதற்குமான சந்தர்ப்பங்கள் மிகக்குறைவாகவே காணப்பட்டன  
இன்று எழுத்துமொளிகளில் முக்கிய கண்டுபிடிப்பாக braille திகழ்கிறது கண்பார்வைஅற்றோற்கென தனித்துவமான எழுத்தாணியும் சிலேட்டும் உள்ளது 

கண்பார்வை அற்றவர்களுக்கென தனித்துவமான எழுத்தாணியும் சிலைட்டும் இருக்கின்றது இவற்றை கண்டுபிடித்தவர் Charles barbier

Braille  இன் 100 வது நினைவுதினத்தின் போது கண்பார்வை அற்றவர்களில் மிகப்பெரிய சாதனையாளர்களில் ஒருவரான Helen  keller  "பார்வையற்றவர்களாகிய நாம் louis  Braille இற்கும் Gutenberg இற்கும் மிகவும் கடமைப்பட்டவர்கள் "என்று கூறி உள்ளார் (Gutenberg அச்சியந்திரத்தின் கண்டுபிடிப்பாளர் )

Braille ,gutenberg ஆல் பலர்   கல்வியில் முன்னேற முடிந்தது ஆனால் அதிலும் ஒரு தடைக்கல் இருந்தது பதிப்பகங்கள் Braille எழுத்துக்களை இலகுவாக கண்பார்வை அற்றவர்களுக்கான புத்தகங்களை உருவாக்கிவிடுகின்றன அனால் அவற்றை அதிக விலைக்கே விற்கின்றன
Braille  எழுத்தும் காலத்தோடு சில மாற்றங்களை அடைந்துள்ளது பிரிட்டின் ,அமெரிக்கா விற்கிடையில் இம்மொழியில் சில வேறுபாடுகள் காணப்படுகின்றன


charles barbier  1828 இல் Royal institution of blind youth இற்கு சென்றார் அங்கு louis   braille யிடம் night  writing   ஐ அறிமுகப்படுத்தினர் barbier இதை கண்டுபிடித்தது இரவில் ராணுவ வீரர்கள் தங்களுக்குள் இரகசியமாக உரையாடுவதற்காக அனால் night writing வரவேற்கப்படவில்லை இவரது நைட் writing எழுத்தும் braille எழுத்தும் அடிப்படையில் ஒத்தவை




braille எழுத்துக்கள் 2 dot அகலமும் 3 dot உயரமும் உடையவை.மொத்தமாக ஒரு செல்லில் 6 டொட்கள் காணப்படும்.

braille  எழுத்துக்களில் டாஸ் பயன்படுத்தப்படுவதில்லை.ஒரு செல்லில் அமைந்துள்ள டொட்களின் அடிப்படையில்தான் இலக்கங்கள் இருக்கின்றன.1,2,3 ஆகிய இலக்கங்கள் இடது புறத்தில் டொட்டாக இடப்படும்.4,5,6 வலது புறத்தில் டொட்டாக இடப்படும்.சரி கப்பிட்டல் லெட்டர்,கொமா போன்றவற்றை எப்படி குறிப்பிடுவார்கள்?
அதற்கும் வழி இருக்கின்றாது.
6 ஆவது டொட் இருக்கும் இடத்தில் ஒரு டொட் இருந்தால் அச்செல்லின் அடுத்த செல்லில் எழுதப்பட்டிருக்கும் எழுத்து கப்பிட்டல் லெட்டராகும்.4,5,6 இலும் 3இலும் டொட்கள் இருந்தால் அடுத்த செல்லில் இருப்பது எண்களாகும்.அத்துடன் "a" இல் இருந்து"j" வரையான எழுத்துக்களும் 0 இல் இருந்து 9 வரையான எண்களும் ஒரேமாதிரியானவை.

braille எழுத்துக்களால் எழுதப்பட்டுள்ள ஒரு வரி அண்ணளவாக 40 எழுத்துக்களை கொண்டிருக்கும் braille எழுத்துக்களால் எழுதப்பட்டுள்ள ஒரு பக்கம் இவ்வாறான 25 வரிகளைக்கொண்டது.சாதாரண ஒரு புத்தகத்தின் பக்கத்தைவிட braille எழுத்துக்களை கொண்ட புத்தகத்தின் பக்கம் பெரியது.அத்துடன்  சாதாரண புத்தகத்தின் பேப்பர் தடிப்பை விட இதன் தடிப்பு அதிகம் நிறையும் அதிகம்.இதனால் புத்தகம் பெரிய பருமனுடையதாகவே ஆக்கப்பட்டிருக்கும்.

இதை மேலும் விளக்க வேண்டுமானால் harrypotter புக் 8 பாகங்களாகத்தான் வெளிவந்தது
ஆனால் braille எழுத்துக்களால் ஆன harrypotter  புக் 14 பாகங்களாக வெளிவந்தது

braille எழுத்துக்களில் 2 வகை உண்டு

 1 .Contracted braille /Grade 2 
இதில் சொற்களாக எழுத்துவடிவங்கள் ஆக்கப்பட்டிருக்கும்.இதைத்தான் அதிகமானவர்கள் கற்கின்றார்கள்.


2 .Un contracted braille /Grade  1
இவற்றுள் எதை ஆரம்ப மாணவர்களுக்கு கற்பிப்பதுஎன்பதைப்பற்றி பல கருத்துவேறுபாடுகள் உண்டு.Un contracted braille யானது contracted braille ஐ கற்பதற்கு முக்கியமாக அவசியமானது என கருத்துக்கூறுகின்றார்கள்.ஆனால் Un contracted braille யானது  contracted braille ஐ விட அதிக நேரமெடுப்பதாகவும் குறிப்பிடுகின்றனர்.

இதில் தனித்தனி எழுத்துக்கள் சிம்போல்கல் சேர்ந்தே சொற்கள்  ஆக்கப்படுகின்றன.
அமெரிக்க வேர்ஸன் Braille இல் அண்ணளவாக 200 வரையான சுருக்கக்குறியீடுகள் உள்ளன. "and," "you", "for", "ed" போன்ற பல குறியீடுகள் காணப்படுகின்றன.

Braille ஐப்பயன்படுத்தும் விசேடதேவையுடையோர்  Braille எழுத்துக்களை தமது விரல் நினிகளின் உதவியுடன் விரல்நுனிகளால் எழுத்துக்களை தடவியே வாசிப்பார்கள்.இவர்கள் ஒரு புத்தகத்தின் பக்கத்தில் இடதுபுறமிருந்து வலப்புறம் நோக்கியே தடவிவாசிப்பார்கள்.ஆனால் எழுதும் போது வலது புறத்தில் இருந்து இடதுபுறம் நோக்கி எழுதுவார்கள். அதாவது வலதுபுறமிருந்து இடதுபுறம் நோக்கி எழுதி முடித்ததும் எழுதிய ஒற்றையின் மற்றைய பக்கத்தை கைவிரல்  நுனியால் தடவி வாசிப்பார்கள்.
இது ஒருமுறைதான் ஆனால் இப்படிப்பல முறைகள் இருக்கின்றன.

Braille ஐ படிப்பதோ எழுதுவதோ அவ்வளவு இலகுவான காரியமல்ல.காரணம் எழுத்துக்கள்,எண்கள்,குறியீடுகள் என அனைத்துமே குறியீடாக இருப்பதுதான்.முத்லாவதாக குறியீடுகளின் அர்த்தத்தை புரிந்துகொள்ளவேண்டும்.அடுத்ததாக எழுத்துக்களுக்கான வடிவங்களை உருவாக்கப்பழகவேண்டும்.அதற்குப்பிறகுதான் சொற்களை உருவாக்கப்பழகமுடியும்.கண்பார்வையற்ற சிறுவர்களது முதன்மைப்பாட நூல்களில் Braille பயன்படுத்தப்படுவது வரவேற்கத்தக்க விடயம்தான் ஆனால் சிறுவர்களது ஆரம்பக்கற்கைகளில் வார்த்தைகளை விளங்கிக்கொள்வதற்கு அதிகமாக படங்களையே பாடப்புத்தகங்களில் வரையப்பட்டிருக்கும்.துரதிஸ்ரவசமாக இப்படங்களால் பார்வையற்ற சிறுவர்களுக்கு எவ்விதப்பயனுமில்லை.

இதற்காக மாறுபட்ட பாடத்திட்டமொன்றை உருவாக்கினார்கள்.அதில் அதிகமாக கதைகள் இடம்பெற்றிருந்தன.ஆசிரியர்களுக்கு கற்பிப்பதற்கான விஸேட உபகரணங்களை வழங்கினார்கள்.புடைத்த உருவாமைப்பைக்கொண்ட எழுத்துக்களை வாசித்தல் எழுதலை விட புத்தகமாக உருவாக்குதல்தான் மிகவும் கடினமானது. ஒரு நாவலை புத்தகமாக வெளியிடவேண்டுமானால் இது பற்றிய அறிவுடைய ஒருவர் Braille எழுத்தில் புத்தகமாக்க வேண்டிய  பகுதியை கைஎழுத்துப்பிரதியாக எழுதவேண்டும்.இதற்கே 100 க்குமேல் நேரம்தெவையில்லை.பின்னர் இதை அவர்கள் optical character recognition (OCR) இன் உதவியுடன் ஸ்கான் செய்வார்கள்.பின்னர் புடைத்தேழுத்துக்களாக பிறிண்ட் செய்யப்படும்.

Braille யை வாசிப்பதும் சற்றுக்கடினம்தான்.அண்ணளவாக கண்பார்வையற்ற ஓருவரால் 125 தொடக்கம் 200 சொற்களை 1 நிமிடத்தில் வாசிக்கமுடியும்.ஆனால் ஒரு  college student ஆல் ஒரு நிமிடத்தில் 280 சொற்கள் வரை வாசிக்க முடியும்.கண்தெரியாதவர்கள் புத்தகங்களை audio books ஆகவே பயன்படுத்துகின்றார்கள்.

6 டொட்களைக்கொண்ட Braille எழுத்துக்களால் 63 combinations களை உருவாக்கமுடியும்.எழுத்துக்கள்,எண்கள் இவற்றுடன் குறியீடுகள் இவை எல்லாவற்றையும் சேர்த்துஎழுதினால் எல்லாம் கடினமாகிவிடும்.இதனால் பலசுருக்கக்குறியீடுகளைக்கண்டுபிடித்திருக்கிறார்கள்.விஞ்ஞான,கணித,மற்றும் இசைக்குறியீடுகள் இந்த வகையறாக்கள்தான். 63 combinations ஐ வைத்து பில்லியன் கணக்கான குறியீடுகளை உருவாக்க முடியும்.இதன் காரணமாக பலர் குழப்பங்களை சந்திக்கவேண்டிஏற்பட்டது.இதன் காரணமாக  International Council of English Braille (ICEB) ஆனது Unified English Braille ஐ உருவாக்கியுள்ளது.இது நியமமாக பயன்படுத்தப்படுகின்றது.ஆங்கிலம்பேசுகின்ற அனேகனாடுகளில் Unified English Braille ஐயே பயன்படுத்துகின்றார்கள்.ஆனால்  Britain இல் Braille Authority of Great Britain (BAUK) உருவாக்கிய சிஸ்டமே பயன்படுத்தப்படுகின்றது.


இதனால் Braille Authority of North America (BANA)  ஸ்ராண்டட் ஆன Braille கோட்களை அறிமுகப்படுத்தியது.

இவ்வாறு அறிமுகப்படுத்தப்பட்ட கோட்கள் 
  • English Braille, American edition for literary material, like novels and magazines
  • Nemeth Code of Braille Mathematics and Scientific Notation for math and science
  • Computer Braille Code
  • Braille Code for Chemical Notation
  • Music Braille Code

சில முக்கியமான இடங்களில் 6 டொட்களிற்குப்பதிலாக 8 டொட்களும் பயன்படுத்தப்படுகின்றன.உதாரணம்  ASCII கோட்.

Chinese Braille,Hebrew Braille ,Tibetan Braille என Braille இல் பல வகைகள் இருந்தாலும்.அடிப்படையில் பல ஒற்றுமைகள் இருக்கின்றன.பல நாடுகளில் Braille மாற்றங்களை அடைந்துள்ளது அவ்வ்ளவுதான்.ஆனால் சிலர் முற்றுமுழுதாகவே மாற்றங்களைrefreshable Braille  என்றவகையில் முயற்சிசெய்வதுதான் சிக்கலைமேலும் கூட்டும்.

 Braille ஐ அறிந்திராதவர்கள்கூட  Braille ஐ வாசிப்பதற்கான வழியை Hyung Jin Lim கண்டுபிடித்திருக்கிறார்.இந்த கருவியை கையில் அணிந்துகொண்டு

 வழக்கமாக வாசிப்பது போல் விரல் நுனியால் எழுத்துக்களை தடவியபடி

 செல்லும்போது விரல் நுனியில் இருக்கும் சென்சரினால் உருவாக்கப்படும் 

சிக்னல் bluetooth மூலமாக வாசிப்பவர் அணிந்திருக்கும் headphone க்கு

 செல்லும்.இதை அவர் ஒலி வடிவில் கேட்கமுடியும்.

Zhenwei இனால் உருவாக்கப்பட்ட கருவி.இது டச் ஸ்கிறீனைப்போல் செயற்படும்.சாதரண எழுத்துக்களை இது ஒலி வடிவில் வெளிப்படுத்தும்.குரல்மூலம் இதை செயற்படுத்த முடியும்.

இது எப்படி செயற்படுகின்றது என்பது கீழே வீடியோவில்...





Yanko என்பவரால் பார்வையற்றவர்களுக்காக உருவாக்கப்பட்ட  smartphone இதில்  தட்டச்சில்  உள்ள எழுத்துக்களை மாற்றமுடியும்.வேறு வேறு மெனுக்களை உருவாக்க முடியும் அத்துடன் மேலே குறிப்பிட்ட கருவிகளின் வசதிகளையும்  கொண்டது.



 Danni Luo வால் அமைக்கப்பட்ட பிரின்ரர்.


embossing braille printer
embossing braille printer
embossing braille printer
embossing braille printer
embossing braille printer
embossing braille printer

1 கருத்து:

Raji சொன்னது…

வாழ்த்துக்கள்

கருத்துரையிடுக