நவம்பர் 11, 2011

2030 -ல் தமிழக முஸ்லிம்கள்...!PrintE-mail

உலகம் தோன்றிய காலம் முதல் 11 ஆம் நூற்றாண்டு வரை 
ஏற்படாத மாற்றங்கள் கடந்த 100 ஆண்டுகளாக ஏற்பட்டு 
வருகின்றன. அறிவியல், தொழில்நுட்பத்தின் அபரிமிதமான 
வளர்ச்சியும் தொடர்ந்து அவற்றில் மேற்கொள்ளப்பட்டு வரும் 
ஆய்வுகளும் அதன் முடிவில் உற்பத்தி செய்யப்படும் 
பொருட்களும் மனித வாழ்வின் அனைத்து நிலைகளிலும் 
விரைவான மாற்றத்தை ஏற்படுத்தி வருகின்றன.
மூலப் பொருள் உற்பத்தியும் சரக்குப் போக்குவரத்தும் 
விரைவுபடுத்தப்பட்டதின் விளைவாக உலகளாவிய வணிகம் 
கொடிகட்டிப் பறக்கிறது. இனிவரும் ஆண்டுகளில் இவை 
இன்னும் வீரியம் பெற இருக்கிறது. இத்தகைய உலகளாவிய
நிகழ்வுகளுக்கேற்ப

நவம்பர் 09, 2011

 அகிலமெங்கும் சீரிய(ஸான) ஒரே 

 

செயல். அரிதான விடியோக்கள். 

 

காண‌த்த‌வ‌றாதீர்க‌ள்.


எங்கேயும்! ஒவ்வொரு விநாடியும் !! எச்சூழ்நிலையிலும்!!! அகிலம் முழுவதிலும்!!!! “



மண்ணிலும், விண்ணிலும், நீரிலும், மலையிலும், சோலையிலும், பாலைவனத்திலும், மழையிலும், பனியிலும், வெயிலிலும், ஊணத்திலும், நலத்திலும், பாதையிலும், வீதியிலும், வீட்டிலும், படிக்கட்டுகளிலும், பிர‌யாண‌த்திலும், சண்டையிலும், சமாதான‌த்திலும், சிறையிலும், சுக‌போக‌த்திலும், ந‌ட்பிலும், ப‌கையிலும், வசந்தங்களிலும், பேரிடர்களிலும்……எல்லா சூழ்நிலைக‌ளிலும் அகிலத்தில் ஒவ்வொரு விநாடியும் அனைத்திடத்திலும் கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டுடன் ஒரே சீரிய செயல்.
ஓ மானுடனே! சிந்திப்பாயா ? உள்ளத்தை திறக்கும் காட்சிகள். சற்றே சிந்தியுங்கள்.
பார்ப்ப‌வை எல்லாம் நதியில் ஒரு துளிதான்.

அகிலஉலக பிரஜைகளான‌ முஸ்லீம்களே ! உன் சகோதரர்களை பார் ?.



மனிதர்கள் மட்டுமா?

அல்குரான் 55:6 وَالنَّجْمُ وَالشَّجَرُ يَسْجُدَانِ


55:6. (கிளைகளில்லாச்) செடி கொடிகளும், (கொப்புங் கிளையுமாக வளரும்) மரங்களும் - (யாவும்) அவனுக்கு ஸுஜூது செய்கின்றன. …. (ஸுஜூது ‍= வணங்குதல்)
 

நவம்பர் 08, 2011

புத்தகங்கள் தலையணைகளாக, சோதனைகள் வாழ்க்கையாக...



அஸ்ஸலாமு அலைக்கும், 

நம் அனைவர் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் 
சமாதானமும் நிலவுவதாக...ஆமீன்.

"இறைவன் ஏன் என்னை இவ்வளவு சோதிக்கின்றானோ 
தெரியவில்லை" - இம்மாதிரியான எண்ணம் நம்மில் 
பலருக்குள்ளும் ஒரு சந்தர்ப்பத்தில் எழுந்திருக்கலாம். 
அப்படியான சூழ்நிலையில் நம்மை உற்சாகப்படுத்தவும், சீர்தூக்கி 
பார்க்கவுமே இந்த பதிவு.

சகோதரி பிர்தவ்ஸ் - இவருடைய வாழ்க்கையை முதன் முதலாக 
படித்தபோது வியந்து போய் பார்த்துக்கொண்டிருந்தேன். கண்டிப்பான 
பிராமண குடும்பத்தில் பிறந்து வளர்ந்து,

அமெரிக்காவும் இஸ்லாமோபோபியா வலையமைப்பும்.


        இஸ்லாத்தின் மீதும் முஸ்லிம்கள் மீதும் பயம்,வெறுப்பு,வெறி மற்றும் அறியாமைத் தகவல்கள் பரப்புவது அமெரிக்காவில் இஸ்லாமொபியா நெட்வேர்க்கு ஒரு பெரும் லாபமான செயற்பாடாக உள்ளது.

Center for American Progress Action Fund தனது ஆறு மாத கால,138 பக்க"Fear Inc - Exposing the Islamophobia Network in America",என்ற ஆராய்ச்சியை சமிபத்தில்

நவம்பர் 07, 2011

பன்றிக் கொழுப்பு.. உஷார்..



    ஷேக் சாஹிப் என்னும் சகோதரர் பிரான்ஸ் நாட்டிலுள்ள பிகால் (Pegal) என்ற நகரத்தில் உணவுப் பொருட்கள் தரக்கட்டுப்பாட்டு மையத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார். அவர் பணியாற்றும் துறை தரத்தை நிர்ணயம் செய்யும் துறை (Quality Control) என்பதால் உணவு மற்றும் மருந்துப் பொருட்களை ஆய்வு செய்து அதன் தரத்தை பதிவு செய்வதே அவருக்குக் கொடுக்கப்பட்ட வேலை.

சியோனிச பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கான வழி




 1860ஆம் ஆண்டு ஜெர்மனியில் பிறந்த யூதனான தியோடோர் ஹெஸிலின்(Theodor Herzl) சிந்தனையில் உதித்து, 1896ஆம் ஆண்டு உருப்பெற்றதே சியோனிசம்(Zionism). அடிப்படையில் அவன் ஒரு பத்திரிக்கையாளன். 'Altneuland'  [புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட பழைய நிலம்] என்ற நாவலை அவன் எழுதியுள்ளான். அந்நாவலின் கற்பனையே தற்போது நிஜமாகி 'இஸ்ரேல்'ஆக நிற்கிறது. 

பலஸ்தீன தடுப்புக்காவல் கைதிகள் மீதான சித்திரவதையை மறைக்கும் இஸ்ரேலிய மருத்துவர்கள்

ஸியோனிஸ சிறைக்கூடங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பலஸ்தீன கைதிகளின் மீது இஸ்ரேலிய இராணுவ மற்றும் காவல் துறையினர் விசாரணை என்ற பெயரிலும் புலனாய்வு என்ற பெயரிலும் செய்யும் சித்திரவதைகள் பற்றி எந்த ஊடகங்களும் பேசுவதில்லை. காரணம் ஸியோனிஸத்தின் கட்டுப்பாட்டிலேயே உலக ஊடகங்கள் இயங்குகின்றன.

இஸ்ரேலின் - ஈரான் மீதான தாக்குதல் திட்டம்




அமெரிக்காவின் ஒபாமா நிருவாகம் ஈரான் மீதான திடீர் தாக்குதலிற்கு இஸ்ரேலிய அரசிற்கு பச்சைக்கொடி காட்டியுள்ளது. எல்லை கடந்த பயங்கரவாதம், சதி நாச முயற்ச்சி போன்ற ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை தமது ஊடக ஊதுகுழல்கள் மூலம் தொடர்ச்சியாக சொல்வதன் மூலம் சர்வதேச ஒத்துழைப்பை இதற்கு பெற்றுக்கொள்ளலாம் என

எழுச்சியாக எழுந்த அமெரிக்க மக்களின் கோபம் ..!


                ''உலகத்தின் சொர்க்கபுரி'' என்று முதலாளித்துவம் பெருமைப்பட்டுக் கொள்ளும் அமெரிக்காவில் கடந்த மூன்று வாரங்களாக ஆட்சியாளர்களுக்கு எதிராக எழுந்துள்ள தொழிலாளர்களின் எழுச்சி என்பது உலக மக்களின் பார்வையை திருப்பி இருக்கிறது. உலக முதலாளித்துவத்தின் சூதாட்ட மையமாக திகழும் அமெரிக்காவின் ''வால் ஸ்டிரீட்'' பகுதியை கைப்பற்றுவோம் என்ற முழக்கத்துடன்என்று தொடங்கப்பட்ட போராட்டம் இன்று

நவம்பர் 04, 2011

லிபியா-கதாஃபி : 'போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்'


மக்களால்  தேர்ந்தெடுக்கப்படாமல்... இராணுவப்புரட்சி மூலம் 
சண்டையின்றி இரத்தமின்றி ஆட்சியை கைப்பற்றிய...

கதாஃபி...
(லிபிய மக்களுக்கு) 
மிகவும் நல்ல ஆட்சியாளர்தான்..!
'தான் மட்டுமே என்றேன்றும் லிபியாவை ஆளவேண்டும்' என நினைகாத வரை..!

கதாஃபி...
(லிபிய மக்களுக்கு) 
மிகவும் நல்ல ஆட்சியாளர்தான்..! 
தந்நாட்டு மக்களை அநியாயமாக கொன்று குவித்து கொலைகாரன் ஆகாத வரை..!

இந்த லிபிய மக்கள் கடாஃபியின் கீழ் எப்படி வாழ்ந்தார்கள்..? ஆட்சியாளரான 
கடாஃபியின் ஆட்சி எப்படி இருந்தது..? அது பற்றி மேற்கத்திய சியோனிச 
ஊடகங்களால் மறைக்கப்பட்ட உண்மைகளை இனியும் நாம் அறியாதிருக்க 
கூடாது சகோ..! அவற்றில் சில உங்கள் ஆச்சர்ய பார்வைக்கு..!

நவம்பர் 03, 2011

கிழடு தட்டிய முதலாளித்துவம்!


முதலாளித்துவத்தின் கொடூரம்.


வட்டியும்,  ஏக போக உரிமையும் இல்லாமல் முதலாளித்துவம் வளர இயலாது. ஆனால் இவ்விரண்டையும் முதலாளித்துவம் தோன்றுவதற்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இஸ்லாம் ஒழித்து விட்டது என்பதைச் சுட்டிக் காட்டுவதே போதியதாகும்.

அக்டோபர் 31, 2011

குழம்பி நிற்கும் சோனக 

தேசம் - இலங்கை

முஸ்லி்ம்கள் பற்றிய 

சிறு குறிப்பு


ஹஜ் பெருநாள் இன்னும் சில தினங்களில் எம்மை 
நெருங்கி வருகிறது. உழ்கியா. இன்று இலங்கை முஸ்லிம்களின் 
இருப்பை தீர்மானிக்கும் விடயமாக மாறிவிடுமோ என எண்ணும் 
அளிவிற்கு பயமுறுத்துகிறது. இது பர்ளு அல்ல, சுன்னத்து தான் 
என ஆலிம்கள் அலறும் நிலை. பொளத்த நாட்டில் பசுவதை பற்றி 
சற்று யோசிக்கத்தான் வேண்டும் என முஸ்லிம் 
அரசியல்வாதிகளின் முனுமுனுப்புக்கள் மெல்ல காற்றில் 
கலக்கிறது.
மேய்ச்சல் வெளிகளில் மாடுகளை சந்தோஷமாக பிடித்து வந்து 
உழ்கியா கொடுத்த எமக்கு மேர்வின் சில்வாவிடம் 
அனுமதியெடுக்கும் நிலை. மேர்வின் சில்வாவின் கருத்துக்களை 
இஸ்லாமிய சஞ்சிகைகளும், இணையங்களும் வெளியிடும் 
கையறு நிலை. மாடு அறுக்கவும் ஜம்மியதுல் உலமா மாநாடு 
போடும் காலமிது.

கடந்த வாரம் மாளிகாவத்தையில் முஸ்லிம்கள் அதிகாலையில் 
சுற்றி வளைக்கப்பட்டு மைதானத்திற்கு கொண்டு செல்லப்பட்டு 
விசாரணை செய்யப்பட்டுள்ளனர். முகமூடி போட்ட 
தலையாட்டிகள் மட்டும் தான் இல்லாத குறை. இந்த செயல்
எதை சொல்ல வருகிறது. முஸ்லிம்கள் பயங்கரவாதிகள் என்றா? 
அல்லது பயங்கரவாதம் மாளிகாவத்தையில் உள்ளதென்றா? 
வனாத்தமுல்லையும், தொட்டலங்கையும், லக்கியும் 
துமிந்தவும் சுட்டுக்கொண்ட கொடிகாவத்தையும் அமைதியாக 
நித்திரை செய்கையில் மாளிகாவத்தை மட்டும் விளித்திருக்கிறது.
சூத்திரம் புரியவில்லை.

கிறிஸ் நபர்கள், மத்திய கொழும்பு முஸ்லிம் வீடுகள் 
தரைமட்டமாக்கப்படும் “புதிய நகர் திட்டம்”, நாளைய தெஹிவலை 
முதல் இதர பகுதிகள் வரை முஸ்லிம்களின் இருப்பு தொடர்பான 
அச்சம் என குழம்பி நிற்கிறது தெற்கிலங்கை. அன்று ஜீலியன் 
ரிச்சர்ட்ஸ் ஜெயவர்த்தன கூறியது போல் “முஸ்லிம்கள் வேக 
வேகமாக குவியும் கொழும்மபை விட்டு அதே வேகத்தில்
வெளியேறுவார்கள்” என குறிப்பிட்ட வார்த்தைகள் 
உண்மையாகிவிடுமோ எனும் அச்சம் வேறு மெல்ல விஸ்வரூபம் 
எடுக்கிறது. இது தெற்கு.

கல்முனை நகர சபைக்காக சந்தி சிரிக்கும் முஸ்லிம்கள்.
ஒருவரை ஒருவர் காட்டிக்கொடுக்கும் முஸ்லிம்கள், 
பொத்துவில்லின் நிலவிவகாரம், கிண்ணியாவின் கெடுபிடி 
என கிழக்கிலும் பிரச்சனைகளின் அணிவகுப்பு.

புத்தளத்தில் ஒரு பொலிஸ் கொல்லப்பட்டதற்காக பொலிஸ் 
திணைக்களமே போர்கோலம் பூண்டு நிற்கிறது. 
அநுதராதபுரத்தில் பொலிஸார் வேடிக்கை பார்க்க பேரினவாதம் 
சுவர்களை தகர்க்கிறது. கற்பிட்டியில் கெடுபிடி செய்கிறது.

வடக்கில் மீண்டும் குடியேற முடியாத முடங்கிய சமுதாயமாக 
முஸ்லிம்கள் உள்ளனர். அரசியல் கட்சிகளின் அஜன்டாக்கள் 
தான் இவர்களின் மீள்குடியேற்றங்களை நிர்ணயிக்கின்றன. 
பொலிவிழந்த வாழ்க்கை. வாழ்தல்.

 ஆக மொத்தத்தில் இலங்கை முஸ்லிம்களிடம் ஒரு நிச்சயமற்ற
வாழ்வியல் ஒழுங்கே காணப்படுகிறது. இருப்பு தொடர்பிலான
அச்சம், வாழ்தல் தொடர்பிலான பயமென ஒட்டுமொத்த முஸ்லிம் 
சமூகமும் நிம்மதியின்றி தவிக்கும் நாட்கள் இவை. 
சொல்லப்போனால் உல்லாசமாக வாழ்ந்த சோனகரிற்கான 
சோதனைக்காலமிது.

ஐக்கியம், ஒற்றுமை, ஒரு தலைமைத்துவம் என எல்லோரும் 
சொல்கிறார்கள். எழுதுகிறார்கள். நேற்று பிரிந்து கட்சி 
ஆரம்பித்தவரும் இதைத்தான் சொல்கிறார்கள். காலம் காலமாக 
கட்சியில் பிரியாமல் இருப்பவரும் இதைத்தான் சொல்கிறார். 
இஸ்லாமிய இயக்கங்கள் ஒரு படி மேலே போய் 3-103 ஆயத்தை 
உரக்க முழங்குகிறது.

இலங்கை முஸ்லிம்களின் பிரச்சனைகள் இடியப்பக்கடையில் 
ஆரம்பித்து இணையத்தளம் வரை விரிவாகவும் விளக்கமாகவும் 
ஆராயப்படுகின்றன. ஆனால் தீர்வுகள் மட்டும் சரியாக வருவதாக 
தெரியவில்லை. குருட்டுப்பார்வையால் கண்டதை ஊமை 
மொழியால் விளக்கம் தரும் நிலையிது.

இலங்கை முஸ்லிம்கள் தங்களை நிறையவே மாற்றிக்கொள்ள 
வேண்டியிருக்கிறது. ஹஜ்ஜில் கூட எகொனமி, பிறீமியம், லக்சரி 
என எக்குலுவ்சிப் பக்கெஜ்களை கொண்ட சமூகமல்லவா நாம். 
அப்பிள் போன்கள் அரசியல் செய்யும் சமூகத்திற்கு 
சொந்தக்காரர்கள் அல்லவா நாம். மய்யத்து வீட்டிற்கும் தம்-
புரியாணி அனுப்பி உறவு பாராட்டும் சமூகமல்லவா இலங்கை 
சோனவர்கள். தியாகமில்லாமல் சொர்க்கம் புக நினைக்கும் 
மனிதர்கள் நாம்.

நமது வாழ்க்கை தடம் முற்றிலும் மாற்றப்படல் வேண்டும். 
இலங்கையின் வருங்கால மற்றும் நிகழ்கால சவால்களிற்கு
முகங்கொடுக்கவல்ல ஒரு சமூகமாக நாம் மாற பர்மா 
(மியன்மார்) முஸ்லிம்களிடம் கற்க நிறையவேயிருக்கிறது. 
அதே போல் இஸ்ரேலின் கிழக்கு ஜெரூஸலேம் பகுதியில் 
வாழும் அராபிய முஸ்லிம்களின் சமூக அரசியல் 
ஒழுங்குகள் தொடர்பாக கற்கவும் நிறையவேயிருக்கிறது.

Abu Sayyaf

அக்டோபர் 29, 2011

லிபியா பற்றிய பிசாசுகளின் வாக்குமூலம்


ஞாயிறன்று அமெரிக்க வெளிவிவகாரச் செயலர், லிபியாவின் பதவியகற்றப்பட்ட அரச தலைவர் முயம்மர் கடாபி காட்டுமிராண்டித்தனமாக கொலை செய்யப்பட்டது குறித்து ஒரு சுயாதீன விசாரணைக்கு வாஷிங்டன்“வலுவான ஆதரவு” கொடுக்கும் என ஆர்ப்பாட்டமாக அறிவித்தார்.

அவருக்கு ஏற்கனவே தெரியாத எதைப்பற்றி திருமதி கிளின்டன் விசாரணைக்கு உட்படுத்த விரும்புகிறார்?
தனது பிறந்த நகரான சிர்ட்டேயில் இருந்து தப்பியோடுகையில்

அக்டோபர் 28, 2011

பெருகிவரும் உலக முஸ்லிம் மக்கள் தொகை


முஸ்லிம் மக்கள் தொகையில் தற்போது முதலிடத்தில் இருக்கும் இந்தோனேசியாவை விரைவில் பாகிஸ்தான் பின்னுக்குத் தள்ளி முதலிடத்தைப் பிடிக்கும் என்று அமெரிக்கா ஆய்வு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வாஷிங்டனை சேர்ந்த மத மற்றும் பொதுவாழ்க்கை குறித்த ஆராய்ச்சி மையம் ஒன்று நடத்திய ஆய்வில், அடுத்த இருபது ஆண்டுகளில் இஸ்லாமியர் அல்லாதவர்களின் எண்ணிக்கையிலிருந்து இரு மடங்கு அதிகமாக இஸ்லாமியர்களின் எண்ணிக்கை இருக்கும் என்று தெரியவந்துள்ளது. இது குறித்து அந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

பற்றியெரியும் பசுமை தேசம் : லிபிய போரில் நேட்டோவின் பிரதான ஆயுதம் “அல் ஜஸீரா”


உமர் முத்தார் அவர்கள் எந்த சுதந்திர போராளிகளை 
கொண்டு போராடி, லிபிய விடுதலையை பெற்றுக்கொடுத்தாரோ
அதே சுதந்திரப் போராளிகள் எனும் பெயரை சூடிக்கொண்டவர்களை 
வைத்து அமெரிக்கா லிபிய ஆக்கிரமிப்பை பரிபூரணமாக அடைந்து
கொண்டுள்ளது. உலக வரலாற்றில் அமெரிக்க மற்றும் மேற்கின் 
ஏகாதிபத்திய சக்திகளால் உருவாக்கப்படும் பொம்மை அரசாங்கங்கள் 
ஆகக்குறைந்தது 40 வருடங்களாவது ஆட்சியில் இருப்பது வழமை.  
 
ஆக நாளைய லிபிய “ஜனநாயக”(?) அரசாங்கமும் அமெரிக்க