நவம்பர் 07, 2011

பன்றிக் கொழுப்பு.. உஷார்..



    ஷேக் சாஹிப் என்னும் சகோதரர் பிரான்ஸ் நாட்டிலுள்ள பிகால் (Pegal) என்ற நகரத்தில் உணவுப் பொருட்கள் தரக்கட்டுப்பாட்டு மையத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார். அவர் பணியாற்றும் துறை தரத்தை நிர்ணயம் செய்யும் துறை (Quality Control) என்பதால் உணவு மற்றும் மருந்துப் பொருட்களை ஆய்வு செய்து அதன் தரத்தை பதிவு செய்வதே அவருக்குக் கொடுக்கப்பட்ட வேலை.

எந்த ஒரு நிறுவனமாக இருந்தாலும் அவர்களின் தயாரிப்பை விற்பனைச் சந்தையில் அறிமுகப்படுத்தும் போது உணவுப் பொருளாக இருந்தாலும், மருந்துப் பொருளாக இருந்தாலும் அதை சோதனைக்குட்படுத்திய பின்பே அறிமுகப்படுத்தும். அவ்வாறு மேற்கொள்ளப்படும் சோதனையில் விற்பனைக்கு வரவிருக்கும் உணவு மற்றும் மருந்துகளின் கலவையை (ingredients) சோதனை செய்து அதை பிரான்ஸ் நாட்டின் உணவு தரக்கட்டுப்பாடு மையம் அங்கீகாரம் அளித்தபின் மட்டுமே விற்பனைக்காக வெளிவரும். உணவுத் தரக்கட்டுப்பாடு மையத்தில் உணவுப்பொருட்களை பிரித்து அதன் கலவையை (ingredients) ஆய்வு செய்வார்கள். இந்த கலவைகள் சிலவற்றிற்கு அறிவியல் பெயர்களும் இருக்கும், சிலவற்றிற்கு குறியீட்டுப் பெயர்களும் இருக்கும். எடுத்துக்காட்டாக E-904, E-141 என்று.

இவ்வாறு சோதனை செய்து கொண்டிருந்த ஷேக் சாஹிப் சில கலவைகளைக் (ingredients) குறித்து அந்த நிறுவனத்திடம் விளக்கம் கேட்டபோது "உங்களுக்கு கொடுக்கப்பட்ட வேலையை மட்டும் செய்யுங்கள், எந்தவித கேள்விகளும் கேட்கவேண்டாம்" என்ற பதில்தான் வந்தது. இவர்களின் இந்த பதில் ஷேக் சாஹிப்பின் சிந்தையில் மேலும் சந்தேகங்களை எழுப்பியது. அதற்கடுத்து அவர்களின் கோப்புகளை ஆய்ந்து பார்க்கும் போது உலக முஸ்லிம்கள் அனைவருக்கும் அதிர்ச்சியூட்டும் தகவல்களை கிடைக்கப்பெற்றுத் திகைத்தார்.

சற்றேறக்குறைய எல்லா மேற்கத்திய நாடுகள் மற்றும் ஐரோப்பாவிலும் முதலாம் வகை மாமிசமாக உணவுக்குத் தேர்ந்தெடுப்பது பன்றியே ஆகும். எனவேதான் பலவகை பன்றிகளை உற்பத்தி செய்யும் பன்றிப் பண்ணைகள் அதிகமாக அந்நாடுகளில் உள்ளன. பிரான்ஸில் மட்டும் இதுபோன்ற பன்றிப் பண்ணைகள் 42,000 ஆயிரத்துக்கும் மேல் உள்ளன. ஏனைய விலங்கினங்களைக் காட்டிலும் பன்றியின் மாமிசத்தில் அதிகமான கொழுப்பு உள்ளது. ஐரோப்பியர்களும், அமெரிக்கர்களும் அதிகப்படியான கொழுப்பைத் தவிர்க்கவே முயற்சி செய்கின்றனர்.

இந்நிலையில் பன்றிகளிலிருந்து நீக்கப்பட்ட கொழுப்பு எங்கே செல்கிறது என்பதுதான் கேள்வி?

உணவுத் தரக்கட்டுப்பாடு மையத்தின் மேற்பார்வையில்தான் எல்லாப் பன்றிகளும் அறுக்கும் கொட்டில்களில் அறுக்கப்படுகின்றன. அறுத்த பன்றிகளிலிருந்து நீக்கிய பெரும்பான்மையான கொழுப்பை எவ்வாறு அப்புறப்படுத்துவது என்பதுதான் இவர்களுக்குத் தலைவலி. ஆரம்ப காலத்தில் முறையாக இதை எரித்துவிடுவார்கள்.

இவர்கள் பன்றிக் கொழுப்பை எரிப்பதால் எவ்வித பயன்பாடும் இல்லை. எனவே இதை எவ்வாறு பயன்படுத்தலாம் என எண்ணத்தொடங்கினர். பன்றிகளிலிருந்து நீக்கப்பட்ட கொழுப்புகளைக் கொண்டு முதல்கட்டச் சோதனையாக சோப்புகளைத் தயார் செய்து பார்த்தனர். இவர்களின் இந்த முயற்சி பலன் கொடுத்தது. அதற்கடுத்த கட்டமாக முழுவீச்சில் இந்த பன்றிக் கொழுப்பை பல வேதியியல் நொதிப்பொருட்களைக் கொண்டு அமிலங்களாக மாற்றி விற்பனைக்கு இறக்கி விட்டனர்.

பல்வேறு காரணங்களுக்காக உற்பத்தி நிறுவனங்கள் பெரும்பாலும் இதை வாங்கத் துவங்கினர். அவ்வேளையில் ஐரோப்பாவில் உணவுப் பொருட்களுக்கான சட்டம் கொண்டுவரப்பட்டது. எல்லா உற்பத்தி நிறுவனங்களும் அவை உற்பத்தி செய்யும் உணவுப் பொருட்கள், காஸ்மெடிக் பொருட்கள் (சோப்பு, ஷாம்பூ, முகக் கிரிம், ஹேர் கிரிம்..) மற்றும் மருந்துப் பொருட்களின் அட்டையில் அவற்றில் கலந்துள்ள கலவைகளை (ingredients) கண்டிப்பாக குறிப்பிடவேண்டும் என்று. இதனால் பன்றிக் கொழுப்பு கலந்துள்ள பொருட்களில் இதை பன்றிக் கொழுப்பு (Pig Fat) என்றே குறிப்பிட்டு வெளியிட்டுக்கொண்டிருந்தனர்.

இந்நிலையில் இஸ்லாமிய நாடுகளில் இதுபோன்ற பன்றிக் கொழுப்பு சேர்க்கப்பட்ட பொருட்களுக்கு தடைவிதிக்கப்பட்டது. இத்தடையின் விளைவாக பன்றிக் கொழுப்பைச் சேர்த்துள்ள பொருட்களின் விற்பனையில் பின்னடைவு ஏற்பட்டது.

பன்றிக் கொழுப்பு என்று எழுதியிருந்தாலும் ஐரோப்பியர்களால் அப்பொருட்கள் விரும்பி வாங்கப்பட்டே வந்தன. இஸ்லாமிய நாடுகளிலும், முஸ்லிம்களாலும் இவ்வாறான உற்பத்திப் பொருட்கள் புறக்கணிக்கப்படுவதால் பன்றிக் கொழுப்பு (Pig Fat) என்று எழுதுவதற்கு பதிலாக விலங்குகள் கொழுப்பு (Animals Fat) என்று எழுதினர். அப்போது மீண்டும் ஐரோப்பிய நாடுகள் இஸ்லாமிய நாடுகளில் விலங்குகளின் கொழுப்பு அடங்கிய பொருட்களை விற்பனை செய்ய அங்கீகாரம் கேட்டனர். விலங்குகளின் கொழுப்பு என்று ஐரோப்பிய நிறுவனங்கள் கூறிய போது எந்த வகையான விலங்குகள் என்பதற்கு ஆடுகள் மற்றும் மாடுகளின் கொழுப்பு என்று கூறினர். மீண்டும் ஒரு கேள்வி அப்போது எழுந்தது. ஆடு மற்றும் மாடுகளின் கொழுப்பு எனினும் அது முஸ்லிம்களுக்கு ஹராம்தான். ஏனெனில் ஐரோப்பிய நாடுகளில் ஆடுகள் மற்றும் மாடுகள் இஸ்லாமிய முறைப்படி அறுக்கப்படாததால். இக்காரணத்தின் அடிப்படையில் இஸ்லாமிய நாடுகளின் தடையும், முஸ்லிம்களின் புறக்கணிப்பும் இப்பொருட்கள் மீது தொடர்ந்தது. கி.பி.1970-லிருந்து ஐரோப்பிய நாடுகளில் வசித்து வருபவர்களுக்கு இந்த உண்மை தெரியாமலிருக்காது.

இஸ்லாமிய நாடுகளின் தடையால் ஐரோப்பிய பெரும் பெரும் தயாரிப்பு நிறுவனங்களின் விற்பனையின் மூலம் கிடைக்கும் 75% வருவாயை இழந்தனர். இந்த 75% என்பது பல பில்லியன்ஸ் டாலர்களுக்கும் அதிகமாகும்.

இதன் முடிவாக அவர்கள் விலங்குகளின் கொழுப்பு என்பதை எழுதுவதும் தவிர்த்து குறியீட்டு மொழியைப் (Coding Language) பயன்படுத்தத் துவங்கினர். குறியீட்டு முறையானது உணவு தரக்கட்டுப்பாடுத் துறையின் நிர்வாகத்தினருக்கு மட்டுமே தெரியும். அப்பொருட்களைப்பயன்படுத்தும் பொதுமக்களுக்கு குறியீட்டு கலவைகள் (E-INGREDIENTS) பற்றி சற்றும் அறிய வாய்ப்பில்லை.

E-INGREDIENTS என்ற கலவைகளை பெரும்பாலான உற்பத்தி நிறுவனங்கள் பயன்படுத்துகின்றன. பற்பசை, ஷேவிங் கிரீம், சிவிங்கம், சாக்லேட், இனிப்புப் பண்டங்கள், பிஸ்கட்ஸ், கார்ன் பிளாக்ஸ் (Corn Flakes), டோஃபி (Toffees), டின் மற்றும் குப்பிகளில் நிரப்பப்பட்ட உணவுப்பொருட்கள் மற்றும் குளிர்பானங்கள் என்று எல்லா பொருட்களிலும் இந்த வகையான கலவைகளை கலக்கின்றனர். விட்டமின் மாத்திரைகள் மற்றும் பல மருந்துப் பொருட்களிலும் பன்றிக்கொழுப்பின் கலவைகளைக் கலந்து முஸ்லிம் நாடுகளில் விற்பனைக்காகப் பரவச்செய்துள்ளனர்.

பன்றிக் கொழுப்பை உட்கொள்வதாலும், பயன்படுத்துவதாலும் உடலில் ஏற்படும் மாற்றங்கள் - வெட்கம் அகன்றுவிடுதல், தீய எண்ணங்களை உருவாகிவிடுதல், வன்முறை எண்ணங்களை வளர்த்துவிடல் போன்ற தன்மைகள் தங்களையறியாமலே மாற்றம் அடையச் செய்யக்கூடிய தன்மை பன்றிக் கொழுப்பு கொண்டுள்ளது என்பது மற்றுமொறு செய்தி. முஸ்லிம்களை இதுபோன்ற தீய தன்மைக்கு ஆளாக்க முயற்சிசெய்யும் அவர்களின் யுக்திகளில் இதுவும் ஒன்று.

இக்கட்டுரையின் நோக்கம் என்னவென்றால் ஒவ்வொரு முஸ்லிமும் தாங்கள் அன்றாடம் பயன்படுத்கூடிய பொருட்களில் கீழ்கண்ட கலவைக் குறியீடுகள (E-INGREDIENTS) இருக்கின்றனவா என ஒப்பிட்டுப்பார்த்து அதை முற்றிலும் நிராகரிக்க வேண்டும். ஏனெனில் இவையனைத்தும் பன்றியின் கொழுப்பிலிருந்து செய்யப்பட்டவையாகும்.

E100, E110, E120, E140, E141, E153, E210, E213, E214, E216, E234, E252,E270, E280, E325,
E326, E327, E334, E335, E336, E337, E422, E430, E431, E432, E433, E434, E435, E436, E440,
E470, E471, E472, E473, E474, E475, E476, E477, E478, E481, E482, E483, E491, E492, E493,
E494, E495, E542, E570, E572, E631, E635, E904.


தானாகவே செத்ததும், இரத்தமும், பன்றியின் மாமிசமும், அல்லாஹ் அல்லாத பெயர் சொல்லப்பட்டதும் ஆகியவைகளைத்தான் உங்கள் மீது ஹராமாக (தடுக்கப்பட்டவையாக) ஆக்கிருக்கிறான். ஆனால் எவரேனும் பாவம் செய்யாத நிலையில் - வரம்பு மீறாமல் (இவற்றை உண்ண) நிர்பந்திக்கப்பட்டால் அவர் மீது குற்றமில்லை. நிச்சயமாக அல்லாஹ் கருணைமிக்கோனும், மன்னிப்பவனுமாக இருக்கின்றான். (அல்குர்ஆன்-2:173)

உங்களில் ஒருவர் தமக்கு விரும்புவதையே தம் சகோதரருக்கும் விரும்பாதவரை, (பரிபூரண) முஃமினாக ஆகமாட்டார் என நபி(ஸல்) கூறினார்கள்.
(புகாரி, முஸ்லிம்: அனஸ்(ரலி))

இதுபோன்ற பன்றிக் கொழுப்பைக் கொண்டுள்ள பொருட்களை நாம் நிராகரிப்போம், மற்றவர்களுக்கும் இச்செய்தியை எடுத்துரைப்போம்!

சற்று காலத்தின் பின்சென்று சில நிகழ்வுகளை இதோடு தொடர்புபடுத்திப் பார்ப்போம். கி.பி 1857-ல் தெற்காசிய நாடுகளில் ஆங்கிலேயர்களின் ஆதிக்கம் கோலோச்சிய காலம், கிழக்கிந்தியக் கம்பெனியில் பல்வேறு இந்தியர்கள் சிப்பாய்களாக பணியாற்றிக்கொண்டிருந்தனர். அப்பொழுது பாதுகாப்புக்குத் தேவையான குண்டுகளும், துப்பாக்கித் தோட்டாக்களும், வெடிபொருட்களும் ஐரோப்பாவில் தயாரித்து ஆசிய நாடுகளுக்கு கடல்வழி மூலம் கொண்டுவந்தனர். ஐரோப்பாவிலிருந்து ஆசிய நாடுகளுக்கு கடல் மூலம் பயணிக்க அப்போது ஒரு மாதத்திற்கும் மேலாகியது. கடற் பயணத்தின்போது வெடிமருந்துப் பொருட்களும், தோட்டாக்களும் ஒன்றோடு ஒன்று உராய்வதாலும் வேறுபட்ட வெட்பநிலையாலும் வெடித்துவிடுவதும் உண்டு, வீணடைந்துவிடுவதும் உண்டு. இத்தகைய நிலையைத் தவிர்க்க தோட்டாக்கள்மீதும், வெடிகுண்டுகள் மீதும் கொழுப்பு பூச்சை மேற்கொண்டனர். அதற்கு பயன்படுத்திய கொழுப்பு பன்றிகளின் கொழுப்பும் மற்றும் மாடுகளின் கொழுப்புமாகும்.

இக்கொழுப்புகள் பூசப்பட்ட குண்டுகள் அனைத்தும் அதன் மூடியைத் திறப்பதற்கு பற்களைப் பயன்படுத்துவது போன்ற அமைப்பைக் கொண்டிருந்தன. பன்றிக் கொழுப்பு மற்றும் மாடுகளின் கொழுப்பு பற்றிய செய்தி சிப்பாய்களிடையே பரவ ஆரம்பித்த்தது. ஆங்கிலேய கிழக்கிந்தியக் கம்பெனியில் இருந்த பெரும்பாலான முஸ்லிம் இராணுவ வீரர்கள் பன்றி இஸ்லாத்தில் தடுக்கப்பட்ட பிராணி என்பதாலும், இந்துமதத்தில் பசுவை தெய்வமாக வணங்குவதாலும் அதைப் பயன்படுத்தத் தயங்கினர். மேலும் இத்தகைய செயலை எதிர்த்து இந்திய சிப்பாய்கள் டில்லிக்கு அருகேயுள்ள மீரத் என்ற இடத்தில் 1857, மே 10ம் தேதி பஹதுர் ஷா தலைமையில் போராடினர். இப்போராட்டத்தில் 100 க்கும் மேலான ஐரோப்பியர்கள் கொல்லப்பட்டார்கள். இந்நிகழ்ச்சி "சிப்பாய்க் கலகம்" என்று வரலாற்றில் பதியப்பட்டுள்ளதை வரலாறு படித்தவர்கள் அறிவார்கள்.

சென்ற ஆண்டு நடந்த சில நிகழ்ச்சிகளையும் இதோடு சற்று தொடர்புபடுத்திப் பார்ப்போம். பாலஸ்தீனத்தில் முஸ்ஸிம்களைக் கொன்று குவித்தும் அராஜகம் புரிந்தும் வரும் யூதர்கள் தங்களைப் பாலஸ்தீனப் போராளிகளிடமிருந்து காத்துக்கொள்ள இத்தகைய செயலையே கையாண்டனர். அதாவது முஸ்லிம்கள் பன்றியைத் தொடவும் மாட்டார்கள், அது அவர்களுக்கு விலக்கப்பட்டதாகும் என்பதன் அடிப்படையில் யூத மத போதகரான எலிசர் பிசர் (Eliezer Fisher) பன்றிக் கொழுப்புகளை அடங்கிய பைகள் பேருந்துகளிலும், வியாபார வர்த்தகக் கட்டிடங்களிலும், அவர்கள் தங்கியிருக்கும் குடியிருப்புகளிலும் அதிகமாக கட்டித் தொங்கவிட ஆலோசனையளித்தார்.

தற்கொலைப் படைகள் தாக்குதல் நடத்தினால் அவர்கள் மேல் இந்த பன்றிக்கொழுப்பு படிந்து அசுத்தமான முறையில் இறந்துகிடப்பர். அதை அவர்கள் விரும்பவும் மாட்டார்கள். எனவே தற்கொலைப் படைகளிடமிருந்து தங்களைக் காத்துக்கொள்ள இந்த அணுகுமுறையை இஸ்ரேலிய பாதுபாப்பு அமைச்சராகிய யாக்கூ எட்ரி (Yaacov Edri)யும் பரிந்துரை செய்தார். இச்செய்தியை பெரும்பாலான ஊடகங்களிலும் வெளிவந்திருந்தது.

ஆரம்ப காலம் தொட்டே இஸ்லாத்தின் எதிரிகளான இதுபோன்றவர்கள் தங்களின் காழ்ப்புணர்ச்சிகளால் இவ்வாறான செயல்கள் புரிந்து வருவது புதிதல்ல. முஸ்லிம்களாகிய நாம் விழிப்புடன் இருப்போம் மேலும் அவர்களின் தயாரிப்புகளைப் புறக்கணிப்போம்.

"நீங்கள் யூதர்களாக அல்லது கிறிஸ்தவர்களாக மாறிவிடுங்கள். நீங்கள் நேர்வழியை அடைவீர்கள்" என்று அவர்கள் கூறுகிறார்கள். "அப்படியல்ல! (நேரான வழியைச் சார்ந்த) இப்ராஹீமின் மார்க்கத்தையே பின்பற்றுவோம், (இணை வைக்கும்) முஷ்ரிக்குகளில் நின்றும் அவரில்லை" என்று (நபியே!) நீர் கூறுவீராக! (அல்-குர்ஆன் - 2:135)
நம் அனைவரையும் நேர்வழியில் செலுத்த அல்லாஹ் போதுமானவன்.


ARTICLE BY MALIK KHAN

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக