நவம்பர் 07, 2011

பலஸ்தீன தடுப்புக்காவல் கைதிகள் மீதான சித்திரவதையை மறைக்கும் இஸ்ரேலிய மருத்துவர்கள்

ஸியோனிஸ சிறைக்கூடங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பலஸ்தீன கைதிகளின் மீது இஸ்ரேலிய இராணுவ மற்றும் காவல் துறையினர் விசாரணை என்ற பெயரிலும் புலனாய்வு என்ற பெயரிலும் செய்யும் சித்திரவதைகள் பற்றி எந்த ஊடகங்களும் பேசுவதில்லை. காரணம் ஸியோனிஸத்தின் கட்டுப்பாட்டிலேயே உலக ஊடகங்கள் இயங்குகின்றன.

அமெரிக்காவின் 06 மிகப்பெரிய ஊடகங்களே அமெரிக்காவின் 96 விகிதமான ஊடகங்களை கட்டுப்படுத்துகின்றன. உலகின் மொத்த ஊடகங்களில் 56 விகிதமானவை நேரடியாகவோ மறைமுகமாகவோ ஸியோனிஸத்தின் கட்டுப்பாட்டிலேயே உள்ளன. இது நாம் உணர மறுக்கும் உண்மை. அவ்வகையில் பலஸ்தீன தடுப்பு கைதிகள் (Palestinian detainees) தொடர்பாக எந்த வகையான செய்திகளும் பேச்சுக்களும் வெளிவராமல் இருப்பதில் ஸியோனிஸ லொபிகள் மிக மிக அவதானத்துடன் செயற்பட்டு வருகின்றன.


கைது செய்யப்பட்டு சிறைச்சாலை கொண்டு செல்லப்படுபவர்கள் சிறைக்கூடங்களில் வைத்து கடுமையாக தாக்கப்படுகி்ன்றனர். மணல் நிறைக்கப்பட்ட பிளாஸ்டிக் குழாய்களினால் உள்ளங்காலில் பலமாக பலமுறை அடிக்கப்படுகின்றனர், உறை நிலை குளிர் நீர் கொண்ட பாத்திரத்தில் அடியில் துளையிட்டு அதன் கீழ் பலஸ்தீனியர்கள் இருத்தப்படுவர். ஒரு கதிரையில் கை மற்றும் கால்கள் கட்டப்பட்ட நிலையில் தலையை கூட அசைக்க முடியாதவாறு பிணைக்கப்பட்டு அந்த பாத்திரத்தின் துளைக்கு நேராக இருத்தப்படுவர். துளி துளியாக விழும் நீர் மெல்ல மெல்ல நரம்பு தொகுதியை பலமாக தாக்கும். மரண வலி. மண்டை பிளப்பது போல் இருக்கும்.


உண்மையை கூறும் படி பொய்யின் சொந்தக்காரர்களான இந்த யூத இராணுவம் பிளாஸ்டிக் பைகளை நீரை நிரைத்து தலையில் கட்டி விடுவர். நரம்பு மண்டலம் பாதிப்படையும் ஒரு வகை இரசாயன ஊசியை உடலில் செலுத்தி பின்பு நித்திரை கொள்ள விடாமல் தொடர்ந்தும் விசாரண செய்வர். மொத்த நரம்பு மண்டலமும் வெடிப்பது போல் இருக்கும். ஒரு சிலரிற்கு உடலில் சில விளங்க முடியாத பரிசோதனைகளையும் செய்துள்ளனர் இவர்கள்.


நான்கு பேர் தடுத்து வைக்கப்படும் உலக சிறைச்சாலை தர நிர்ணயங்களிற்கு மாற்றமாக சுமார் 10 முதல் 14 பேர்வரை அடைக்கப்படுகின்றனர். உளவியல் ரீதியான பாதிப்புக்களை ஏற்படுத்தும் நெறிப்படுத்தப்பட்ட சொற்றொடர்களை கொண்டே விசாரணையாயினும் சரி, பரிகாசமாயினும் சரி மேற்கொள்ளப்படுகின்றன.


அமெரிக்க மருந்து கம்பனிகளில் உற்பத்தி செய்யப்படும் பல மருந்துகளை பரீட்சித்து பார்ப்பதற்கு பலஸ்தீன கைதிகளிற்கு வழங்கும் முறை மிக அண்மையில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. குரங்குகளிலும், தவளைகளிலும் செய்யப்படும் பரிசோதனைகளைத்தான் நம் சகோதர முஸ்லிம்களின் உடலில் பரீட்சார்த்தம் செய்யப்பட்டுள்ளன. இந்த மிருகத்தனமான மனித உரிமை மீறல்கள் பற்றி எந்த ஊடகங்களும் பேசியதில்லை.


இஸ்ரேலிய இராணுவம் கூறிவைத்து எப்போதும் சுடுவது பலஸ்தீன சிறார்களையே. இது அமெரிக்கா படித்துக்கொடுத்த பாடம். அதே போன்றே பலஸ்தீன சிறுவர்களையும் அற்ப காரணங்களை காட்டி கைது செய்யும்  இஸ்ரேலிய இராணுவம் அவர்களை மிருகத்தனமாக தாக்கியுள்ளது. பலஸ்தீன கைதிகளில் மரணித்தவர்களின் உடல் உறுப்புக்கள் பல முறை திருடப்பட்டுள்ளன. ஆனால் இவையனைத்தும் ஸியோனிஸ்ட்களால் இருட்டடிப்புச் செய்யப்பட்டுள்ளன.


தடுப்புக்காவலில் உள்ள கைதிகள் கடுமையாக தாக்கப்பட்டு அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்க்ப்பட்டவுடன் பார்வையிடும் யூத டாக்டர்ள் விபத்தினால் ஏற்பட்டவை என பொய் அறிக்கையிடுகின்றனர். ஆனால் இவற்றிற்கெல்லாம் விசாரணை கமிஷன்கள் கிடையாது. பலஸ்தீனர்களின் இந்த விடயங்கள் பற்றி யாரும் பேசுவதில்லை. ஒரு யூதன் ஸியோனிஸ்டாக மாறுகையில் அவன் எவ்வளவு படித்தவனாக இருந்தாலும் நடைமுறைகள் என பார்க்கையில் அவனும் குற்றவாளியே.
 
-  Abu Sayyaf



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக