இஸ்ரேலின் - ஈரான் மீதான தாக்குதல் திட்டம்
அமெரிக்காவின் ஒபாமா நிருவாகம் ஈரான் மீதான திடீர் தாக்குதலிற்கு இஸ்ரேலிய அரசிற்கு பச்சைக்கொடி காட்டியுள்ளது. எல்லை கடந்த பயங்கரவாதம், சதி நாச முயற்ச்சி போன்ற ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை தமது ஊடக ஊதுகுழல்கள் மூலம் தொடர்ச்சியாக சொல்வதன் மூலம் சர்வதேச ஒத்துழைப்பை இதற்கு பெற்றுக்கொள்ளலாம் என திட்டமிட்டுள்ளது அமெரிக்கா. அமெரிக்க இராஜாங்க செயலக மிக முக்கிய அதிகாரி ஒருவரால் மேற்படி தகவல் வெளியாகியுள்ளது.உலகில் நிராகரிக்க முடியாத சக்தியாக வளர்ந்துள்ள ஜேர்மனிக்கும் ஈரானிற்கும் இடையிலான நெருக்கமான உறவுகள் இஸ்ரேலிய அரசிற்கு கவலை தரும் விடயமாக மாறியுள்ளது. ஈரானிய அனுச்செறிவூட்டலிற்கு ஜேர்மன் ஆதரவளிப்பதுடன் அதை துரிதப்படுத்த முற்படுமானால் உலக அரங்கில் ஈரான் அனு ஆயுத வல்லமையுடைய தேசமாக மாறுவதுடன், ஜேர்மனியும் ஈரானிய ஏவுகணைத்தொழில் நுட்பத்துடன் வல்லரசாக உருவாகும். இவ்விரு நாடுகளின் இராணுவ வளற்ச்சி இஸ்ரேலிற்கும் அமெரிக்காவிற்கும் பெரும் பின்னடைவுகளை அரசியல் ரீதியாகவும், இராணுவ ரீதியாகவும் உருவாக்கவல்லன.
கடந்த ஒக்டோபர் 03ல் டெல்அவிவிற்கு விஜயம் செய்த அமெரிக்க பாதுகாப்பு செயலர் Leon Panetta லியோன் பெனேட்டா இது குறித்து இஸ்ரேலிய பிரதமருடனும், பாதுகாப்பு அமைச்சருடனும் தொடரான 5 மணித்தியால உரையாடலை மேற்கொண்டுள்ளார்.
ஈரான் மீதான திட்டமிட்ட பொய்யான குற்றச்சாட்டுக்களை எப்படி நடைமுறை படுத்துவது என்பது தொடர்பாக அமெரிக்க சீ.ஐ.ஏ. அமைப்பானது பல ஒழுங்கமைக்கப்பட்ட திட்டங்களை வகுத்துள்ளது. இவற்றை கூலிக்கு வேலை செய்யும் மூன்றாம் தரப்பு ஏஜென்ட்கள் மூலம் நிறைவேற்றுவதன் ஊடாக ஈரான் மீதான பயங்கரவாத மற்றும் சதிமுயற்ச்சி குற்றச்சாட்டுக்களை உலக அரங்கில் உண்மையென காட்டி ஐ.நா.சபையில் கொண்டு வரும் நிறைவேற்று அதிகாரம் மூலம் ஈரானை தனிமைப்படுத்தும் அமெரிக்காவின் நாடகம் தெளிவாகிறது.
இதற்கு முன்பும் ஈரானை தாக்க பல முனைப்புகளுடன் தயார்படுத்தல்கள் செய்யப்பட்டபோது அவை கைகூடவில்லை. இறுதியாக ஒக்டோபர் முதல் வாரத்தில் தாக்குதல் நிகழ்த்துவது என தீர்மானிக்கப்பட்டது. 10 நாட்கள் தொடர் தாக்குதல் நிகழ்த்துவதன் மூலம் ஈரானை நிர்மூலம் செய்யும் திட்டம் தயார்படுத்தப்பட்ட நிலையில் ஐக்கிய நாடுகள் சபையில் பலஸ்தீன தேச விவகாரம் அமெரிக்க கைகளை விட்டு வேறு திசைகளில் நகரும் அபாயம் காணப்பட்டதும், ஜேர்மனி பலஸ்தீன எல்லை 1931ல் உள்ளது போல் இருக்க வேண்டும் என கூறியதும் ஸியோனிஸ மற்றும் அமெரிக்க கூட்டு தாக்குதலை தாமதப்படுத்தியது. இப்போது இஸ்ரேல் ஊடாக அமெரிக்கா தனது இலக்கை அடையப்பார்க்கிறது.
சரிந்துள்ள பொருளாதாரத்தின் காரணமாக வோல் ஸ்டீரீட் மக்கள் எழுச்சியை திசை திருப்ப இவர்கள் ஈரான் யுத்தத்தை பயன்படுத்தப்பார்க்கிறார்கள். ஜேர்மனிய ஈரானிய இராணுவ கூட்டிற்கு முன்னதான தாக்குதலே இஸ்ரேலை பாதுகாக்கும் என்பது இவர்களது எண்ணம். சவுதி இராஜதந்திரி Saudi Ambassador Adel al-Jubeir மீதான தாக்குதல் தொடர்பான அமெரிக்க நாடகம் அமெரிக்க அரசியல்வாதி ஜோன் மெக்கெய்ன் John McCain வாய்வழியாக அம்பலமானது வேறு விடயம். - Abu Sayyaf
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக