அக்டோபர் 31, 2011

குழம்பி நிற்கும் சோனக 

தேசம் - இலங்கை

முஸ்லி்ம்கள் பற்றிய 

சிறு குறிப்பு


ஹஜ் பெருநாள் இன்னும் சில தினங்களில் எம்மை 
நெருங்கி வருகிறது. உழ்கியா. இன்று இலங்கை முஸ்லிம்களின் 
இருப்பை தீர்மானிக்கும் விடயமாக மாறிவிடுமோ என எண்ணும் 
அளிவிற்கு பயமுறுத்துகிறது. இது பர்ளு அல்ல, சுன்னத்து தான் 
என ஆலிம்கள் அலறும் நிலை. பொளத்த நாட்டில் பசுவதை பற்றி 
சற்று யோசிக்கத்தான் வேண்டும் என முஸ்லிம் 
அரசியல்வாதிகளின் முனுமுனுப்புக்கள் மெல்ல காற்றில் 
கலக்கிறது.
மேய்ச்சல் வெளிகளில் மாடுகளை சந்தோஷமாக பிடித்து வந்து 
உழ்கியா கொடுத்த எமக்கு மேர்வின் சில்வாவிடம் 
அனுமதியெடுக்கும் நிலை. மேர்வின் சில்வாவின் கருத்துக்களை 
இஸ்லாமிய சஞ்சிகைகளும், இணையங்களும் வெளியிடும் 
கையறு நிலை. மாடு அறுக்கவும் ஜம்மியதுல் உலமா மாநாடு 
போடும் காலமிது.

கடந்த வாரம் மாளிகாவத்தையில் முஸ்லிம்கள் அதிகாலையில் 
சுற்றி வளைக்கப்பட்டு மைதானத்திற்கு கொண்டு செல்லப்பட்டு 
விசாரணை செய்யப்பட்டுள்ளனர். முகமூடி போட்ட 
தலையாட்டிகள் மட்டும் தான் இல்லாத குறை. இந்த செயல்
எதை சொல்ல வருகிறது. முஸ்லிம்கள் பயங்கரவாதிகள் என்றா? 
அல்லது பயங்கரவாதம் மாளிகாவத்தையில் உள்ளதென்றா? 
வனாத்தமுல்லையும், தொட்டலங்கையும், லக்கியும் 
துமிந்தவும் சுட்டுக்கொண்ட கொடிகாவத்தையும் அமைதியாக 
நித்திரை செய்கையில் மாளிகாவத்தை மட்டும் விளித்திருக்கிறது.
சூத்திரம் புரியவில்லை.

கிறிஸ் நபர்கள், மத்திய கொழும்பு முஸ்லிம் வீடுகள் 
தரைமட்டமாக்கப்படும் “புதிய நகர் திட்டம்”, நாளைய தெஹிவலை 
முதல் இதர பகுதிகள் வரை முஸ்லிம்களின் இருப்பு தொடர்பான 
அச்சம் என குழம்பி நிற்கிறது தெற்கிலங்கை. அன்று ஜீலியன் 
ரிச்சர்ட்ஸ் ஜெயவர்த்தன கூறியது போல் “முஸ்லிம்கள் வேக 
வேகமாக குவியும் கொழும்மபை விட்டு அதே வேகத்தில்
வெளியேறுவார்கள்” என குறிப்பிட்ட வார்த்தைகள் 
உண்மையாகிவிடுமோ எனும் அச்சம் வேறு மெல்ல விஸ்வரூபம் 
எடுக்கிறது. இது தெற்கு.

கல்முனை நகர சபைக்காக சந்தி சிரிக்கும் முஸ்லிம்கள்.
ஒருவரை ஒருவர் காட்டிக்கொடுக்கும் முஸ்லிம்கள், 
பொத்துவில்லின் நிலவிவகாரம், கிண்ணியாவின் கெடுபிடி 
என கிழக்கிலும் பிரச்சனைகளின் அணிவகுப்பு.

புத்தளத்தில் ஒரு பொலிஸ் கொல்லப்பட்டதற்காக பொலிஸ் 
திணைக்களமே போர்கோலம் பூண்டு நிற்கிறது. 
அநுதராதபுரத்தில் பொலிஸார் வேடிக்கை பார்க்க பேரினவாதம் 
சுவர்களை தகர்க்கிறது. கற்பிட்டியில் கெடுபிடி செய்கிறது.

வடக்கில் மீண்டும் குடியேற முடியாத முடங்கிய சமுதாயமாக 
முஸ்லிம்கள் உள்ளனர். அரசியல் கட்சிகளின் அஜன்டாக்கள் 
தான் இவர்களின் மீள்குடியேற்றங்களை நிர்ணயிக்கின்றன. 
பொலிவிழந்த வாழ்க்கை. வாழ்தல்.

 ஆக மொத்தத்தில் இலங்கை முஸ்லிம்களிடம் ஒரு நிச்சயமற்ற
வாழ்வியல் ஒழுங்கே காணப்படுகிறது. இருப்பு தொடர்பிலான
அச்சம், வாழ்தல் தொடர்பிலான பயமென ஒட்டுமொத்த முஸ்லிம் 
சமூகமும் நிம்மதியின்றி தவிக்கும் நாட்கள் இவை. 
சொல்லப்போனால் உல்லாசமாக வாழ்ந்த சோனகரிற்கான 
சோதனைக்காலமிது.

ஐக்கியம், ஒற்றுமை, ஒரு தலைமைத்துவம் என எல்லோரும் 
சொல்கிறார்கள். எழுதுகிறார்கள். நேற்று பிரிந்து கட்சி 
ஆரம்பித்தவரும் இதைத்தான் சொல்கிறார்கள். காலம் காலமாக 
கட்சியில் பிரியாமல் இருப்பவரும் இதைத்தான் சொல்கிறார். 
இஸ்லாமிய இயக்கங்கள் ஒரு படி மேலே போய் 3-103 ஆயத்தை 
உரக்க முழங்குகிறது.

இலங்கை முஸ்லிம்களின் பிரச்சனைகள் இடியப்பக்கடையில் 
ஆரம்பித்து இணையத்தளம் வரை விரிவாகவும் விளக்கமாகவும் 
ஆராயப்படுகின்றன. ஆனால் தீர்வுகள் மட்டும் சரியாக வருவதாக 
தெரியவில்லை. குருட்டுப்பார்வையால் கண்டதை ஊமை 
மொழியால் விளக்கம் தரும் நிலையிது.

இலங்கை முஸ்லிம்கள் தங்களை நிறையவே மாற்றிக்கொள்ள 
வேண்டியிருக்கிறது. ஹஜ்ஜில் கூட எகொனமி, பிறீமியம், லக்சரி 
என எக்குலுவ்சிப் பக்கெஜ்களை கொண்ட சமூகமல்லவா நாம். 
அப்பிள் போன்கள் அரசியல் செய்யும் சமூகத்திற்கு 
சொந்தக்காரர்கள் அல்லவா நாம். மய்யத்து வீட்டிற்கும் தம்-
புரியாணி அனுப்பி உறவு பாராட்டும் சமூகமல்லவா இலங்கை 
சோனவர்கள். தியாகமில்லாமல் சொர்க்கம் புக நினைக்கும் 
மனிதர்கள் நாம்.

நமது வாழ்க்கை தடம் முற்றிலும் மாற்றப்படல் வேண்டும். 
இலங்கையின் வருங்கால மற்றும் நிகழ்கால சவால்களிற்கு
முகங்கொடுக்கவல்ல ஒரு சமூகமாக நாம் மாற பர்மா 
(மியன்மார்) முஸ்லிம்களிடம் கற்க நிறையவேயிருக்கிறது. 
அதே போல் இஸ்ரேலின் கிழக்கு ஜெரூஸலேம் பகுதியில் 
வாழும் அராபிய முஸ்லிம்களின் சமூக அரசியல் 
ஒழுங்குகள் தொடர்பாக கற்கவும் நிறையவேயிருக்கிறது.

Abu Sayyaf

அக்டோபர் 29, 2011

லிபியா பற்றிய பிசாசுகளின் வாக்குமூலம்


ஞாயிறன்று அமெரிக்க வெளிவிவகாரச் செயலர்லிபியாவின் பதவியகற்றப்பட்ட அரச தலைவர் முயம்மர் கடாபி காட்டுமிராண்டித்தனமாக கொலை செய்யப்பட்டது குறித்து ஒரு சுயாதீன விசாரணைக்கு வாஷிங்டன்வலுவான ஆதரவு” கொடுக்கும் என ஆர்ப்பாட்டமாக அறிவித்தார்.

அவருக்கு ஏற்கனவே தெரியாத எதைப்பற்றி திருமதி கிளின்டன் விசாரணைக்கு உட்படுத்த விரும்புகிறார்?
தனது பிறந்த நகரான சிர்ட்டேயில் இருந்து தப்பியோடுகையில்

அக்டோபர் 28, 2011

பெருகிவரும் உலக முஸ்லிம் மக்கள் தொகை


முஸ்லிம் மக்கள் தொகையில் தற்போது முதலிடத்தில் இருக்கும் இந்தோனேசியாவை விரைவில் பாகிஸ்தான் பின்னுக்குத் தள்ளி முதலிடத்தைப் பிடிக்கும் என்று அமெரிக்கா ஆய்வு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வாஷிங்டனை சேர்ந்த மத மற்றும் பொதுவாழ்க்கை குறித்த ஆராய்ச்சி மையம் ஒன்று நடத்திய ஆய்வில், அடுத்த இருபது ஆண்டுகளில் இஸ்லாமியர் அல்லாதவர்களின் எண்ணிக்கையிலிருந்து இரு மடங்கு அதிகமாக இஸ்லாமியர்களின் எண்ணிக்கை இருக்கும் என்று தெரியவந்துள்ளது. இது குறித்து அந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

பற்றியெரியும் பசுமை தேசம் : லிபிய போரில் நேட்டோவின் பிரதான ஆயுதம் “அல் ஜஸீரா”


உமர் முத்தார் அவர்கள் எந்த சுதந்திர போராளிகளை 
கொண்டு போராடி, லிபிய விடுதலையை பெற்றுக்கொடுத்தாரோ
அதே சுதந்திரப் போராளிகள் எனும் பெயரை சூடிக்கொண்டவர்களை 
வைத்து அமெரிக்கா லிபிய ஆக்கிரமிப்பை பரிபூரணமாக அடைந்து
கொண்டுள்ளது. உலக வரலாற்றில் அமெரிக்க மற்றும் மேற்கின் 
ஏகாதிபத்திய சக்திகளால் உருவாக்கப்படும் பொம்மை அரசாங்கங்கள் 
ஆகக்குறைந்தது 40 வருடங்களாவது ஆட்சியில் இருப்பது வழமை.  
 
ஆக நாளைய லிபிய “ஜனநாயக”(?) அரசாங்கமும் அமெரிக்க

அக்டோபர் 25, 2011

ஆதி மனிதரின் தோற்றம் உறுதிப்படுத்தப்படும் இஸ்லாமியக் கருத்துகள்

by Kavin Pitha
 
ஆதிமனிதத் தோற்றம் மத்திய கிழக்குப் பகுதியில் (இன்றைய சவூதி, பாலஸ்தீனம்) தான் அமைந்துள்ளது என அண்மையில் வெளிவந்துள்ள ஆய்வு முடிவு ஆழமான சிந்தனைக்குரியதாகும்.
ஆதிமனிதர்கள் ஆப்பிரிக்காவில் தோன்றினர், என்றும், அங்கிருந்து புலம் பெயர்ந்து பல நாடுகளுக்கும் பரவினர் என்றும் இதுவரை கூறப்பட்டு வந்தது. ஆனால் இப்போது வெளிவந்துள்ள புதிய ஆய்வு ஆதி மனிதத் தோற்றம் மத்திய கிழக்கில் தான் ஏற்பட்டுள்ளது என்பதற்கு பல ஆதாரங்களைத் தருகிறது. மனிதனின் பரிணாம வளர்ச்சி பற்றி இதுவரை இருந்து வந்த கருத்துகள் தொல்லியவாளர்களின் கருதுகோள்கள் யாவற்றையும் இந்த புதிய ஆய்வு மாற்றியுள்ளதாக, மானுடவியல் துறை அறிஞர்கள் கூறுகின்றனர்.
டெல்அவிவ் பல்கலைக்கழகத்தின் சார்பில் நடத்தப்பட்ட ஆதிமனிதத் தோற்றம் குறித்த ஆய்வுக்கு அறிஞர்கள் அவி கோஃபர் மற்றும் நான்பர்காய் ஆகியோர் தலைமையேற்றனர். இந்தக் குழுவினர் இஸ்ரேலின் பென்குரியன் விமான நிலையத்திலிருந்து 15 கி.மீ தொலைவில் உள்ள ரோஷ்ஹா அய்ன் என்ற இடத்திற்கு அருகில் உள்ள ‘கெசம்’ குகையில்

வரலாற்று பின்னணியில் ஹிஜ்ரா காலண்டர்



ஒவ்வொரு சமுதாயத்திற்கும் அடையாளமாக நாட்காட்டிகள் உள்ளன. அச்சமுதாயங்கள் பெருமைப் படக்கூடிய பல அர்த்தங்கள் அந்த நாட்காட்டிகளில் அடங்கியுள்ளன. மூஸா (அலை) அவர்களின் காலத்தை மதித்து அவர்களின் நபித்துவக் காலத்தில் இருந்து தமது நிகழ்வுகளுக்கு தேதியிட யூதர்கள் ஆரம்பித்ததும், ஈஸா (அலை) அவர்களின் பிறப்பைக் கண்ணியப்படுத்தி அதிலிருந்து தேதியிட கிருத்தவர்கள் ஆரம்பித்ததும் இதனால்தான். இவ்வாறு ஒவ்வொரு சமூகமும் தனது கொள்கை கோட்பாடுகளுடனும் நாகரீகத்துடனும் தொடர்புபடக் கூடிய அம்சங்களை கொண்டு, தமது நாட்காட்டிகளை நிர்ணயித்தனர்.

ஈரான் மீது போர் அறிவிப்பு செய்யும் சாத்தானிய தேசங்கள்

து வரலாற்றின் கனதியான காலம். ஏன் 
எச்சரிக்கை மிக்கதும் பயங்கரமிக்கதுமான காலம் என்று கூட சொல்லாம்.
ஒரு புரம் உலகலாவிய முஸ்லிம் உம்மாவின் சடுதியான எழுச்சி. மறு 
புரம் சாத்தானிய தேசங்களின் முஸ்லிம்கள் மீதான வியப்பூட்டும் 
தாக்குதல்கள் என உலக சம நிலை குழம்பி நிற்கிறது. நிற்கட்டும்.

கேர்ணல் கடாபியின் கடைசி நிமிடங்கள் -  

 

கம்யூனிசத்தை கருவறுத்த சிங்கள மறுமலர்ச்சி

[சிங்கள பேரினவாதத்தின் தோற்றம், ஒரு காலனிய ஆட்சி மாற்றம்]
(பகுதி : எட்டு)


கொழும்பு நகரிற்கு மிக அருகாமையில், இரத்மலானையில் "கொத்தலாவல இராணுவப் பயிற்சிக் கல்லூரி" அமைந்துள்ளது. ஈழப் போர்க்களத்தில் கடமையாற்றிய பல இராணுவ அதிகாரிகளை அங்கே தான் உற்பத்தி செய்து அனுப்பிக் கொண்டிருந்தார்கள். தற்போது தெற்காசிய நாடுகளில் இருந்தும் புதிய மாணவர்களை சேர்த்துக் கொள்கின்றனர். பனாமா நாட்டில் இயங்கிக் கொண்டிருந்த, லத்தீன் அமெரிக்காவுக்கான இராணுவப் பயிற்சிக் கல்லூரிக்கு நிகராக பேசப்பட்டாலும், அதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை. கல்லூரிக்கு தனது பெயரை வழங்கிய, ஜோன் கொத்தலாவல இலங்கையின் மூன்றாவது பிரதமராக 1953 முதல் 1956 வரை பதவி வகித்தவர். இலங்கையின் மேட்டுக்குடியில் பிறந்து, பிரிட்டிஷ் காலனிய காவல்துறையில் பணியாற்றியவர். யார் இந்த கொத்தலாவல? லத்தீன் அமெரிக்க நாடுகளின் வலதுசாரி சர்வாதிகாரிகளைப் போன்ற குணாம்சம் பொருந்திய ஒருவர். தீவிர கம்யூனிச எதிர்ப்பாளர்.

அக்டோபர் 24, 2011



லிபியாவின் "விடுதலை"


முன்னாள் ஆட்சியாளர் மௌம்மர் கடாபியை தான்தோன்றித்தனமாக படுகொலை செய்த பின்னர்இந்த வாரயிறுதியில் லிபியாவின் நேட்டோ பின்புலத்திலான தேசிய இடைக்கால சபை (NTC) நாடு "விடுதலை"அடைந்துவிட்டதாக அறிவிக்கும் நிலையில் உள்ளது.

அக்டோபர் 17, 2011



சார்பியல் கொள்கையும் 


இஸ்லாத்தின் பார்வையும்:


உங்கள் அனைவரின் மீதும் இறைவனின் அமைதி உண்டாவதாக.

இறை மறையின் காலம் பற்றிய செய்திகளையும், தவறாக காண்பிக்கப்படும் நபியின் விண்வெளி பயணத்தை பற்றிய அறிய சில செய்திகளையும், சில விசயங்களை மறைத்து பொய் தகவல்களை இணைத்து வெளிப்படுத்திய நாத்திக, கம்முனிஷ பொய்களையும் உடைப்பதற்கே நம்முடைய இந்த பதிவுகள்.

இப்பிரபஞ்சத்தில் அனைத்தும் காரண காரியங்களோடு உருவாக்கப்பட்டுள்ளது. அதுதான் விதி. இப்பிரபஞ்சம் நேர்த்தியாக வடிவமைக்கபட்டதுமில்லாமல் பொதுவான இயற்பியல் விதிகளுக்கு கட்டுப்பட்டு அதன் பயணத்தை தொடர்கிறது. ஒரு சிறு பொருள் அசைந்தாலும் கூட ஏதேனும் ஒரு அர்த்தம் இருக்கும், இயற்பியல் விதிகளின் படியே செயல்படும். மனிதன் தான் செயல்படுத்தும் செயல்களில் கூட ஒரு நேர்த்தியை எதிர்பார்க்கிறான், அப்படியிருக்க இறைவனின் அரசாட்சி இப்பிரபஞ்சம் நேர்த்தியாக உள்ளதும், அடிப்படை இயற்பியல் விதிகளுக்கு கட்டுப்பட்டு நடப்பதும் இறைவனின் நேர்த்தியை குறிப்பது. தானாக உருவானது என்ற வாதத்தை வைக்கும் நாத்திகர்கள் இயற்பியல் விதிகளை பின்பற்றி அனைத்தையும் சரியான முறையில் இயக்க வேண்டிய அவசியம் இயற்கைக்கு இல்லை என்பதை உணர வேண்டும்.

அக்டோபர் 16, 2011


காருண்ய நபி (ஸல்) அவர்கள் தோற்றுவித்த குர்ஆனிய சமுதாயம்.

மனிதன் இந்த உலகில் வாழவே பிறக்கின்றான். அதுவும் ஏனைய உயிரினங்களைப் போலல்ல. அவற்றை விடச் சிறப்பாக இவன் வாழ வேண்டும். எனவே, அதற்கேற்ற விதத்தில் உயர்ந்த பண்புகளை வளர்த்துக் கொண்டு, சீராகவும் ஒழுங்கு கட்டுப்பாடுகளுடனும் வாழ வழி செய்து கொள்வது அவசியம்.

ஆனால், மனிதருள் ஒரு சாரார் தாம் சார்ந்துள்ள மதங்களின் மீது ஏற்பட்ட அபரிமிதமான பற்றின் காரணமாக உலக வாழ்வை, மனைவி மக்களை மற்றும் கடமைகளைத் துறந்து காடு, மலைகளிலும் ஆசிரமங்களிலும் தஞ்சமடைந்தார்கள். அங்கு தனித்துத் தவமிருந்து, தியானங்கள் புரிந்து முக்தி நிலை காண முயற்சிகளை மேற்கொண்டார்கள். இன்றும் அத்தகையவர்கள் இல்லாமலில்லை.

பயங்கரவாத சதித்திட்டங்களை தீட்டுகிறது என்ற குற்றச்சாட்டில் ஈரானுக்கு எதிராக அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை முடுக்கிவிடுகிறது


BY BILL VAN AUKEN 

புதன்கிழமையன்றுவெள்ளை மாளிகை தான் புதிய சுற்றுப் பொருளாதாரத் தடைகளை ஈரானுக்கு எதிராக சுமத்துவதாக அறிவித்ததுதுணை ஜனாதிபதி ஜோசப் பிடென் வாஷிங்டனில் சௌதி தூதரைப் படுகொலை செய்ய இருந்ததாகக் கூறப்படும் திட்டம் பற்றிக் கேட்கப்படுகையில் “அனைத்து விருப்பங்களும் மேசை மீது உள்ளன” என எச்சரித்தார்இது இராணுவத் தாக்குதல்கள் நடத்தும் வாய்ப்பையும் தெரிவிக்கிறது.

வோல் ஸ்ட்ரீட்டிற்கு எதிரான போராட்டத்தில் உள்ள அரசியல் பிரச்சினைகள்


BILL VAN AUKEN

ற்போது மூன்றாவது வாரத்தில் இருக்கும் வோல் ஸ்ட்ரீட் முற்றுகை போராட்டம்போஸ்டன்சிகாகோலோஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் அந்நாட்டின் ஏனைய நகரங்கள் மற்றும் சிறுநகரங்களிலும் அதேபோன்ற முற்றுகை போராட்டங்களோடுஅமெரிக்கா முழுவதும் ஒரு சக்திவாய்ந்த ஆதரவை உருவாக்கியுள்ளது.
ஆர்ப்பாட்டக்காரர்களும்சமூக சமத்துவத்திற்கான அவர்களின் கோரிக்கையும்முதலாளித்துவம்வங்கிகள் மற்றும் பெருநிறுவனங்களின்மீது மில்லியன் கணக்கானவர்களிடையே அதிகரித்துவரும் கோபத்தினையும் மற்றும் வேலைகள்நாகரீகமான வாழ்க்கை நிலைமைகளின் அவசர தேவைக்கும் மற்றும் மருத்துவ கவனிப்புகல்வி மற்றும் ஏனைய அடிப்படை சமூகதேவைகளுக்கும் ஓர் உத்திரவாதத்தைக் கோரும் ஒரு வெளிப்பாட்டையும் உருவாக்கியுள்ளது.

அக்டோபர் 13, 2011


மழை மனிதனுக்கு கற்றுத்தரும் பாடம்


உங்கள் அனைவரின் மீதும் ஏக இறைவனின் அமைதி நிலவட்டுமாக....

நாம் இந்த பதிவில் எடுத்திருக்கும் தலைப்பு மழை, வெய்யிலில் தெரியும் நிழலின் அருமை அது போன்று வானம் பார்த்த பூமியை கேட்டால் தெரியும் மழையின் அருமை.


சரி முதலில் மழை (Rain) எவ்வாறு உருவாகிறது என்று நாம் பாப்போம்.
வெப்பத்தின் காரணமாக கடல்கள், ஏரிகள், ஆறுகள்

சிரியா மீதான ரஷ்ய மற்றும் சீனாவின் தடுப்பதிகாரம்.(Veto)

Cartoon By Latuf Carlos.
 சர்வதேச உறவுகளை இன்னும் சூடாக்குவதை உறுதியாக்கும்நடவடிக்கையில், ரஷ்யா மற்றும் சீனா ஆகியவை செவ்வாயன்று  ஐ.நா.பாதுகாப்புச் சபையில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை நசுக்குவதற்கும், சர்வதேச பொருளாதாரத் தடைகள் விதிப்பதற்கும் கொண்டுவரப்பட்ட சிரிய ஆட்சியைக் கண்டிக்கும் ஐரோப்பிய ஆதரவுடைய தீர்மானம் ஒன்றைத் தடுப்பதற்குத் தங்கள் தடுப்பதிகாரத்தைப் பயன்படுத்தின.

அக்டோபர் 12, 2011

கிரீன் டீ புற்று நோய்க்கு அருமருந்து!

கிரீன் டீக்கு பச்சைக் கொடி காட்டியவர் சீன நாட்டு மன்னராக இருந்த ஷென் நங்தான். புதிதாகப் பறிக்கப்பட்ட பச்சைத் தேயிலை இலைகளை வெந்நீரில் போட்டு கொதிக்க வைத்தபோது கருஞ்சிவப்பு நிறத்தில் திரவம் வெளிப்பட்டது.

அதைக் குடித்த நங் தாங்கமுடியாத உற்சாகத்தால் குதிக்க ஆரம்பித்துவிட்டார்.  அந்த ஆட்டத்திலிருந்து தொடங்கியதுதான் கீரின் டீயின் வரலாறு. சாயா என்ற வார்த்தைக்கும் சொந்தக்காரர்கள் சீனர்கள்தான். "சா' என்ற சொல்லிலிருந்தே சாயா.

அக்டோபர் 11, 2011


அரிசி வேண்டுமா? அல்லது "சிங்களம் மட்டும்" வேண்டுமா?

[சிங்கள பேரினவாதத்தின் தோற்றம், ஒரு காலனிய ஆட்சி மாற்றம்]
(பகுதி : ஏழு )

அரபுலகில் ஏற்பட்ட மக்கள் எழுச்சி, இலங்கையில் 1953 ம் ஆண்டு ஏற்பட்டது. ஆங்கிலேயரிடம் இருந்து சுதந்திரம் பெற்ற இலங்கையில் நடந்த முதலாவது வர்க்கப் போராட்டம், இரும்புக் கரம் கொண்டு அடக்கப்பட்டது. கொழும்பு, காலி முகத் திடலில், வரலாறு காணாத அளவுக்கு மக்கள் வெள்ளம் நிரம்பி வழிந்தது. சுமார் இரண்டு லட்சம் உழைக்கும் மக்கள் ஒன்று திரண்டு நடத்திய ஆர்ப்பாட்டப் பேரணிகளில், இடதுசாரிக் கட்சிகள் தலைமை தாங்கின. அரசின் பொருளாதார கொள்கைகளுக்கு எதிராக, எதிர்கட்சிகள் பல்லின மக்களை திரட்டி இருந்தனர்.

குப்ரின் மீது எழும் தனிமனிதனதும் சமூகங்களினதும் வரலாற்று முடிவு.

நிராகரிப்பாளர்களின் செயல்கள் வெட்;டவெளியில் தோன்றும் கானல் நீரை ஒத்தவை. தாகமுடையோன் அதனை நீரென்றே கருதி விடுகிறான். அங்கே வந்து பார்க்கும் போது தான் அது எதுவுமல்ல என அவனுக்குத் தெரிகிறது. அங்கே அவன் அல்லாஹ்வைக் காண்பான். அல்லாஹ் அவனது கணக்கைப் பூரணமாகத் தீர்த்து விடுகிறான். அல்லாஹ் மிக விரைவாகக் கணக்குக் கேட்கக் கூடியவனாவான். (ஸுரா நூர் : 39)

இந்த வசனம் இறைநிராகரிப்பாளர்களின் செயல்களுக்கு உதாரணம் கூறுகின்றது. அச்செயல்கள் எத்தகைய பெறுமானமும் அற்றவை என்பதே இந்த உதாரணத்தின் சுருக்கமான பொருள்.

அக்டோபர் 09, 2011


காம்ப் டேவிட் கட்டுக்கதை - The Myth Of Camp David.

2000 காம்ப் டேவிட் உச்சி மாநாடு.

2002 April மாதம் WSWS.COM இணையத்தளத்தில் வெளியான இக்கட்டுரை காம்ப் டேவிட் பற்றி பல விடயங்களை தெளிவுபடுத்துவதால்  அதன் தமிழாக்கத்தை இங்கே பதிவிடுகிறேன்.2000 ஆண்டு இடம்பெற்ற காம்ப் டேவிட் உச்சி மாநாடு தோல்வியடைய பாலஸ்தீனியர்களே காரணம் என சியோனிச ஊடங்கங்கள் பொய்ப் பிரச்சாரம் செய்துவந்தனர்.அவை சுத்தப் பொய் என்று இந்தக் கட்டுரை தெளிவாக தெளிவுபடுத்துகிறது.இந்தக் கட்டுரையில் ஏதாவது பிழை இருந்தால் சுட்டிக்காட்டவும்.இந்தக் கட்டுரை உங்களுக்கு பயனளிக்கும் என நம்புகிறேன்.

அக்டோபர் 08, 2011


சிர்ட்டே நகரில் நடக்கும் படுகொலைகள்

  அமெரிக்காபிரிட்டன்பிரான்ஸ் தலைமையிலான நேட்டோ நாடுகள்லிபிய நகரமான சிர்ட்டேயில் கொடூரமான யுத்த குற்றங்களில்ஈடுபட்டுள்ளனவடஆபிரிக்க நாட்டில் எஞ்சியிருக்கும்

அக்டோபர் 06, 2011


லிபியா : “மகுடத்தின் மீதிருக்கும் இரத்தினக்கல்"

லிபியாவிற்கான வாஷிங்டன் தூதர் அமெரிக்க தொழிலதிபருடனான ஒரு சமீபத்திய தொலைத்தொடர்பு உரையாடலில்வட ஆபிரிக்க நாடுகளின் எண்ணெய் வளங்களைக் குறித்த ஒரு அடைமொழியை உதிர்த்துள்ளார்.
முன்னர் திரிபோலியில் மூடப்பட்டிருந்த அமெரிக்க தூதரகத்தின் கொடிகம்பத்தில் அமெரிக்க தேசியக்கொடியை மீண்டும் அண்மையில் ஏற்றிய பின்னர், 

அன்வர் அல் அவ்லாகியின்

 மரணம் சொல்லித் தரும்

 பாடங்கள்



அன்வர் அல் அவ்லாகிசமகால முஸ்லிம் அறிஞர்களுள் சற்று 
வித்தியாசமானவர். ஸியோனிஸ மற்றும் அமெரிக்க மேற்குலக 
சக்திகளின் உலகலாவிய முஸ்லிம் உம்மாவிற்கு எதிரான 
செயற்பாடுகளை துணிச்சலுடன் கண்டித்தவர். இவர்களின்
 இந்த நயவஞ்சக செயற்பாடுகளிற்கான இஸ்லாத்தின் 
உன்னதமான தீர்வை தயங்காமல் முன்வைத்தவர். இவரை

அக்டோபர் 05, 2011


ஆங்கிலேய அடிவருடிகளின் அற்புதத் தீவு


கலையரசன் 
[சிங்கள பேரினவாதத்தின் தோற்றம், ஒரு காலனிய ஆட்சி மாற்றம்]
(பகுதி : ஆறு)

இந்திய சுதந்திரத்திற்காக ஆயுதமேந்தியும், அறவழியிலும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றுள்ளன. ஆனால், இலங்கையின் சுதந்திரத்திற்கான போராட்டம் எதுவும் நடைபெறவில்லை. "பிரிட்டிஷ்காரர்கள் இந்தியப் பெருநிலப்பரப்பிற்கு சுதந்திரம் கொடுத்த வேளை, போனால் போகிறதென்று இலங்கைக்கும் சுதந்திரம் கொடுத்தார்கள்," என்று பலர் இன்னமும் நம்புகின்றார்கள். 

பலஸ்தீனிலிருந்து மக்கா வரை - வரலாற்றுப் பார்வை.

From Palestine to Makkah (Historical Glance)




Onislam.com இணையத்தளத்துக்கு மஸ்ஜிதுல் அக்சாவின் இமாம்Sheikh Yousef Juma Salama  வழங்கிய  பேட்டியின் தமிழ் வடிவம்.


 ஹஜ் என்பது இஸ்லாத்தில் மிக முக்கியமான ஒரு கடமையாகும்.பாலஸ்தீன் என்பது அல்லாஹ்வின் தூதர்களின் தொட்டிலாகும் ஏனெனில் குர்ஆனில் கூறப்பட்டுள்ள பல நபிமார்கள் பாலஸ்தீனுடன் தொடர்புபட்டவர்கலாகவே உள்ளனர்.எல்லாவற்றுக்கும் மேலாக உலகில் இதவரை நடந்த இனிமேல் நடக்காத உலக மகா உச்சி மாநாடு பலஸ்தீனிலே இடம்பெற்றது.

அக்டோபர் 02, 2011


அக்டோபர் 01, 2011

இஸ்ரேல் பற்றிய ஊடகங்களின் பத்து பெரிய பொய்கள்

இஸ்ரேல் ரப்பிகள்.

 மைக்கல் கோலன் (Michel Collen) ஒரு பெல்ஜிய எழுத்தாளர் அதுபோல் அவர் ஒரு ஊடகவியலாளரும் கூட.அவர் இஸ்ரேல் பற்றி எழுதிய புத்தகமான " Isrel - Let's Talk About It " என்ற புத்தகத்தில் இஸ்ரேல் பற்றி பொய்யான தகவல்கள் பரப்பி இஸ்ரேலுக்கு அனுதாபம் தேடிக்கொடுத்துக் கொண்டிருக்கிற அமெரிக்க மற்றும்  ஐரோப்பிய ஊடகங்களை கடுமையாக சாடியுள்ளார்.அவர் இதை தனது புத்தகத்தில் "பத்து பெரிய பொய்கள்" என்ற தலைப்பின் கீழ் மிகத் துல்லியமாக விவரித்துள்ளார். இவை இஸ்ரேலின் இருப்பையும் அதன் கொடூர செயற்பாடுகளையும் நியாயப்படுத்த மேற்கத்தைய  ஊடகங்களால் பயன்படுத்தப்பட்டு வருபவை என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீ லங்கா முஸ்லிம்களை நோக்கிய பேரினவாதத்தின் எழுச்சி


செரந்திப் முஸ்லிம்கள். பின்பு சிலோன் முஸ்லிம்கள். இன்று ஸ்ரீலங்கா முஸ்லிம்கள். ”நாளை”?. இந்த கேள்வியின் உஷ்ணம் இப்போது மெல்ல ஒவ்வொரு முஸ்லிமின் தேகக்கூட்டிற்குள்ளும் புகைய ஆரம்பித்துள்ளது.
இலங்கை தமிழர்களின் போராட்டம் பாசிஸ தேர்வுகளை தங்களது அடைவுகளின் இலக்காக தேர்ந்து கொண்டதனால் தனது அழிவின் விதியை முள்ளிவாய்காலில் எழுதி முடித்தது. ஈழத்தை விழுங்கி ஏப்பம் விட்ட பௌத்த பேரினவாத பூதம் இப்போது முஸ்லிம்களை நோக்கி தனது இனவாத கரங்களை நீண்ட முற்பட்டுள்ளது.