ஏப்ரல் 29, 2011

ஐ.நா அறிக்கையால் சமாதானத்துக்கு அச்சுறுத்தல் - வோல் ஸ்ட்ரீட்!


இலங்கை மீதான யுத்த குற்ற விசாரணைகள், பாரிய பாதிப்புகளை ஏற்படுத்தும் என, த வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகளின் இலங்கை தொடர்பிலான அறிக்கை குறித்து, த வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கை வெளியாகி உள்ள நிலையில், இலங்கைக்கு எதிராக யுத்தக் குற்ற விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என அழுத்தம் பிரயோகிக்கப்பட்டு வருகிறது.

எனினும் இந்த அறிக்கை, யுத்தக் குற்றம் சார்ந்த விடயங்களிலேயே அவதானம் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறிப்பாக இலங்கையின் ஜனாதிபதி தவணை முறை மாற்றப்பட்டமை உள்ளிட்ட அரசியல் சார்ந்த விடயங்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்படவில்லை.

ஏற்கனவே இலங்கையில் இடம்பெற்ற வன்னி யுத்தம் குறித்த விமர்சகர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், வன்னி யுத்தத்தைத் தொடர்ந்து இலங்கை அரசாங்கம் பிழையான வழி ஒன்றை பற்றிச் செல்வதாக த வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் வன்னி யுத்தில் இடம்பெற்ற குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில், சர்வதேச அழுத்தங்கள் அதிகரிக்கும் போது, அது மேலும் பிழையான செயற்பாடுகள் இடம்பெறுவதற்கு வழிவகுக்கலாம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தற்போது இந்த அறிக்கைக்கு எதிராக, இலங்கையில் தேசிய ரீதியாக ஆர்ப்பாட்டங்களும், எதிர்ப்பு கருத்துக்களும் வெளிப்படுத்தப்படுகின்றன.

இவ்வாறான நிலையில், சர்வதேச அமைப்புகள், இலங்கையின் யுத்த குற்றங்கள் தொடர்பில் குறைவான அவதானத்தை செலுத்தி, ஏனைய அரசியல் விவகாரங்களில் அதிக அவதானம் செலுத்த வேண்டும் என, அந்த பத்திரிகை வலியுறுத்தியுள்ளது.

அவ்வாறு செய்யப்படும் போது, இலங்கையில் தமிழ் மக்களும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஜனநாயகமான அரசியல் சூழ்நிலை உருவாக ஏதுநிலைகள் ஏற்படும் எனவும், த வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் சுட்டிக்காட்டியுள்ளது.

இதனை தவிர்த்து, வெறும் தவறுகளை சுட்டிக்காட்டி அழுத்தம் கொடுக்கும் போது, இலங்கையில் மீண்டும் குழப்ப நிலைகள் தோன்ற வழிவகுக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு பான் கீ மூன் கேரவில்லை - இன்னர் சிற்றி பிரஸ்!

Friday, April 29, 2011
ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் பான் கீ மூன், யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பாகாப்பு பேரவையிடமோ அல்லது பொதுச் சபையிடமோ கோரவில்லை என இன்னர் சிற்றி பிரஸ் ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.

ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புப் பேரவை தற்போதைய தலைவர் நெஸ்டர் ஒஸ்டரியோ, நிபுணர் குழு அறிக்கையை பார்வையிட்டதாகத் தெரிவித்துள்ளார்.

இது ஓர் வழயைமான நடவடிக்கை எனவும், நடவடிக்கை எடுக்குமாறு எவ்வித கோரிக்கையும் விடுக்கப்படவிலi;ல எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்
.

ஏப்ரல் 27, 2011

வீடொன்று வாடகைக்கு எடுக்கப்பட்டு 5 மாத காலமாக சுரங்கம் தோண்டப்பட்டு தப்பித்த தலிபான்கள்

ஆப்கானிஸ்தானின்   கந்தஹார்   நகரிலுள்ள சர்போஸா சிறைச்சாலையிலிருந்து வெளியிலிருந்து இரகசியமாக தோண்டப்பட்ட சுரங்கப் பாதையினூடாக  476 கைதிகள்  தப்பிச் சென்றதையடுத்து,  அந்நாட் டின்   சிறைச்சாலைகளின்   பாதுகாப்பு  குறித்து கேள்வி எழுந்துள்ளது.
வீடொன்று வாடகைக்கு எடுக்கப்பட்டு  5 மாத காலமாக

ஏப்ரல் 18, 2011

பான் கீ மூன் நியமித்திருந்த நிபுணர் குழு சமர்பித்துள்ள அறிக்கையின் சுருக்கம்..

இலங்கையில் இடம்பெற்ற சில உரிமை மீறல்கள் போர்க் குற்றங்களின் தன்மையையும் மனிதத்துவத்திற்கு எதிரான  குற்றச் செயல்களின் தன்மையையும் கொண்டுள்ளன என்று நிபுணர் குழு தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. இலங்கையின் பதிலளிக்கும் கடப்பாடுகள் தொடர்பாக தனக்கு ஆலோசனை வழங்க ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் நியமித்திருந்த நிபுணர் குழு கடந்த செவ்வாய்க்கிழமை அறிக்கையை கையளித்திருந்தது. அதன் சாராம்சம்

ஏப்ரல் 11, 2011

பிரான்ஸ் -முகத்திரை தடையை மீறிய பெண்கள்

 ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான பிரான்ஸில் இன்று முதல் முஸ்லிம் பெண்கள் அணியும் நிகாப் என்ற முகத்திரைக்கு தடை விதிக்கப்படுகிறது. இந்தத் தடையை மீறுபவர்களுக்கு ரூ 10000 அபராதம் விதிக்கப்படும். இதனை அணியச் சொல்லி யாரும் வற்புறுத்தினால் அவர்களுக்கு ஒரு வருட சிறைத்தண்டனையும் ரூ 20லட்சம் அபராதமும் விதிக்கப்படும் என பிரான்ஸ் அரசு சட்டம் இயற்றியுள்ளது.
இந்தத் தடையை மீறி இன்று பிரான்ஸில் பல பெண்கள் முகத்திரையிட்டு வந்தனர். ஆர்ப்பாட்டம் நடத்த முயன்றதற்காக இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 
பிரான்ஸில் ஏறத்தாழ 50 லட்சம் முஸ்லிம்கள் வசித்து வருகின்றனர். இதில் ஏறத்தாழ 2000 பெண்களே முகத்தை மறைக்கும் நிகாப் அணிந்து வருகின்றனர். இருந்தாலும் இந்தத் தடையை இஸ்லாத்திற்கெதிரான ஒரு செயலாக முஸ்லிம்கள் கருதுகின்றனர். பிரான்ஸ் ஜனாதிபதி சர்கோஸி முகத்திரை அணிவது பெண்களை அடிமைப்படுத்தும் செயல் எனத் தெரிவித்து அதனை நீக்குவதற்காகத்தான் தடையை கொண்டு வந்ததாக தெரிவித்திருந்தார்.
சட்டத்தில் பெண்,முஸ்லிம்,முகத்திரை போன்ற வார்த்தைகள் மிகவும் கவனமாக தவிர்க்கப்பட்டு பொது இடங்களில் முகத்தினை மறைப்பது சட்ட விரோதமானது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தத் தடையினை நீக்கக் கோரி பிரான்ஸ் நாட்டுக்கு அல் காய்தா எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தத் தடை குறித்து கென்ஷா டிரைடர் என்ற பெண்மணி கூறும்போது என்னை நிகாப் அணியக் கூடாது என தடுத்தால் ஐரோப்பாவிலுள்ள மனித உரிமை நீதிமன்றத்தை அணுகுவேன் என தெரிவித்துள்ளார்.

லிபியா மீதான அமெரிக்க ஆக்கிரமிப்பு! அதிர்ச்சியூட்டும் உண்மைகள்!!



லிபியா மீதான அமெரிக்க ஆக்கிரமிப்பு! அதிர்ச்சியூட்டும் உண்மைகள்!!
நேட்டோ படைகளின் சீறும் போர்க்கப்பல்கள் மத்தியதரைக் கடலின் நீரைக் கொதிநிலைக்குக் கொண்டு சென்றிருக்கின்றன. உலக ரவுடியாக தன்னைத் தானே நியமித்துக் கொண்டிருக்கும் அமெரிக்காவின் தலைமையில் நேட்டோ படைகள் லிபியாவின் தலைநகர் திரிப்போலியின் மேல் குண்டு வீச்சு நடத்தி வருகின்றன. அதில் வழக்கம் போல அப்பாவி மக்கள் பலர் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த நாற்பத்தியிரண்டு வருடங்களாக லிபியாவின் சர்வாதிகாரியாய் இருந்து வரும் முவாம்மர் கடாஃபியை எதிர்த்து ஜனநாயகத்துக்காகப் போராடி வரும் ஜனநாயக வீரர்களுக்கு உதவும் பொருட்டு ‘மனிதாபமானத்தின்’ அடிப்படையில் தான் தாங்கள் இந்தத் தாக்குதலைத் துவங்கியதாக நேட்டோ நாடுகள்



தாய்மார்களே உஷார்!உங்கள் குழந்தைகள்...
  சமீபகாலமாக திடீரென்று சிறு குழந்தைகளின் பார்வை இழைப்பு, கோளாறு, மழலையிலிருந்தே முகக் கண்ணாடி! இவைகள் ஏன்?!

''அம்மாவுக்கு வேலை இருக்கு... நீ அமைதியா டி.வி பார்த்துட்டு இரு... நான் வேலை முடிச்சுட்டு வந்துடுறேன்!'' என்று தங்கள் குழந்தைகளை டி.வி பெட்டிகள் / டி.வி. முன் அமரவைத்துப் பழகும் உம்மாக்கள் கொஞ்சம் காலம் கழித்து ஏன் இப்போவே, ''என்னோட புள்ள / மவ என்கிட்ட சரியாவே ஒட்ட மாட்டேங்குது எப்பவும் அடம் பிடிச்சுகிட்டு அழுதுட்டே இருக்கு. சில விஷயங்களில் கோபமும் படுது டி.வி போட்டாதான் அழுகையை நிற்கிறது!'' என்று புலம்புவார்கள்.
நம்புவதற்கு கஷ்டமாகத்தான் இருக்கும். ஆனால், நம்புங்கள்...

ஏப்ரல் 10, 2011



இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு படை 100 பலஸ்தீனிய பெண்களை நடுநிசியில் கைது செய்து இழுத்து சென்றுள்ளது


இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு படை பலஸ்தீன மேற்கு கரை பிரதேச கிராமம் ஒன்றை நடு நிசியில் சுற்றி வளைத்து நூற்றுகணக்கான பெண்களை கடத்தி சென்றுள்ளது மேற்கு கரை பிரதேச கிராமான அவார்டா என்ற கிராமமே ஆக்கிரமிப்பு படையின் சுற்றி வளைப்புக்கு இலக்காகியுள்ளது இஸ்ரேலின் சட்டவிரோத குடியிருப்பு ஒன்றில் குடியேற்றப்பட்ட 5 இஸ்ரேலியர் குடியேற்றவாதிகள் கொல்லப்பட்டமையுடன்

ஏப்ரல் 07, 2011


தடுமாறும் சிரியா அரசு நிகாப் மீதான தடை நீக்கி சூதாட்ட விடுதியையும் மூடியுள்ளது


சிரிய இடைக்கால அரசு நாட்டின் சட்ட திருத்தங்களை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கின்றது இதன் ஒரு கட்டமாக முஸ்லிம் பெண்கள் அணியும் நிகாப் மீதான தடை நீக்கப்பட்டுள்ளதுடன் சிரிய தலைநகர் டமஸ்கஸ் நகரில் இயங்கி வந்த சூதாட்ட விடுதியும் மூடப்பட்டுள்ளது என்று அறிவித்துள்ளது ஜனாதிபதி பஷார் அல் அஸத் அரசாங்கம் கடந்த 2010 ஆம் ஆண்டு ஜூலை மாதம் வகுப்பறைகளில் நிகாப் உடை அணிய தடை விதித்தார் என்பது குறிபிடத்தக்கது


  

SONY உருவான கதை - அக்யோ மொரிட்டா (வரலாற்று நாயகர்)



இரண்டாம் உலகப்போரினால் உருத்தெரியாமல் சிதைந்துபோன ஒரு தேசம் ஜப்பான். உலகநாடுகளில் அது புரிந்த அட்டூழியங்களுக்கு அமெரிக்கா அணுகுண்டுகள் மூலம் பதிலடி கொடுத்தபோது இனி பல தலைமுறைகளுக்கு அந்த தேசம் தலையெடுக்க முடியாது என்றுதான் உலகம் எண்ணியது. ஆனால் போரில் தோற்றாலும் பொருளாதாரத்தில் தோற்க விரும்பாத ஜப்பானியர்கள் தன்னம்பிக்கையையும் உழைப்பையும் உரமாக விதைத்தனர் ஜப்பானிய மண்ணில் ஒருசில தலைவர்கள் மட்டுமல்ல ஒரு தேசமே தன்னம்பிக்கையோடு எழுந்து நின்று போர் முனையில் காட்டிய வேகத்தை நாட்டை மறுசீரமைப்பதிலும் காட்டினார்கள் விளைவு

ஏப்ரல் 06, 2011

கனனி கற்றுத் தரும் இஸ்லாம்
கம்பியூட்டர் இன்று மனித வாழ்வின் இன்றியமையாத ஒரு பகுதியாக மாறிவிட்டது எனலாம். அந்தளவிற்கு மனித வாழ்வின் பெரும் பகுதிகளை அது தன்னகத்தே ஆக்கிக் கொண்டுள்ளது. தொழில்த்துறை, கல்வித் துறை தகவல்த்துறை… என எல்லாத் துறைகளும் இனி கனணி இல்லையேல் பெரும் சிரமத்திற்குள்ளாகும் என்பது கண்கூடு. அதிலும் தொழில் வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு கனணியின் உதவி அளப்பொரியதாகும். ஒருவர் ‘Autocad’ என்ற மென்பொருளைப் பயன்படுத்தி கட்டிட அமைவு முறையைக் கனணியில் வரைகிறார் ஆனால்

முஸ்லிம் – ஐவரி கோஸ்ட் ஒரு சிறு குறிப்பு


M.ஷாமில் முஹம்மட்
ஐவரி கோஸ்ட் மேற்கு ஆபிரிக்காவில் உள்ள ஒரு நாடு இது ‘கோட் டிவார்’ எனவும் அழைக்கப்படுகிறது. இதன் எல்லைகளாக மேற்கில் லைபீரியா மற்றும் கினி ஆகிய நாடுகளும், வடக்கே மாலி மற்றும் புர்கினா பாசோ, கிழக்கே கானா தெற்கே கினி வளைகுடா ஆகியனவும் அமைந்துள்ளன.
உத்தியோக பூர்வ தகவலின் படி இங்கு 38.6  வீதமானவர்கள் முஸ்லிம்கள் என்றும் கிறிஸ்தவர்கள் 32. 8வீதம் என்றும் , ஆபிரிக்கன் பழம்குடி மதப் பிரிவினர் 11.9 வீதம் என்றும் எந்த மதத்தையும் சாராதவர்கள் 16.7 வீதம் என்றும் தெரிவிக்கின்றது அரபு மூல தகவல்களின் பிரகாரம் முஸ்லிம்கள் 40 தொடக்கம் 45 வீதமானவர்கள் என்று தெரிவிக்கின்றது மற்றுமொரு

கிரிக்கெட்: துயரத்தில் மூழ்கியிருக்கும் முஸ்லிம் மக்களின் கதை!

பிரேமதாச அரங்கிற்கு அருகாமையில் வசிக்கும் பிள்ளைகள் கிரிக்கெட் விளையாடும் காட்சி இது. அவர்கள் மத்தியில் பாதுகாப்புக் கடமையில் ஒர் இராணுவ வீரர்.
எங்களது   அணி  உலகக் கிண்ணத்தினை வென்றெடுப்பது எமக்கும் விருப்பமானது.       நாங்கள் முஸ்லிம்கள்தான் என்றாலும்   எங்களுக்கும் நாடு குறித்த உணர்வு  இருக்கிறது.   ஆனாலும் இந்த உலகக் கிண்ணத்தால் அதிகமாகத் துயரடைவது நாம்தான்.  பிரேமதாஸ விளையாட்டரங்கு அமைக்கப்பட முன்பிருந்தே நாங்கள் இங்கு குடியிருக்கிறோம்.
ஆனால் கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும் நாட்களில் எங்கள் வீடுகளுக்குள் சிறைப்பட்டிருக்கிறோம். நாங்கள் தெருவிலிறங்கிச் சென்றால் போட்டியில் தோற்றுவிட நேருமா? உண்மையில் எங்களுக்கு இந்தக் கிரிக்கெட் மீதே வெறுப்பாக இருக்கிறது. எங்களால் வழமைபோல வாழ முடியவில்லை. கிரிக்கெட் போட்டி நடைபெறும்

ஆறு பாரிய பூகம்பங்கள் உலகை உலுக்கும் அபாயம்

உலகில் இந்த மாதத்தில் ஆறு பாரிய பூகம்பங்கள் ஏற்படலாம் என்று இலங்கை யின் பேராதனைப் பல்கலைக்கழக நிபுணர்கள் குழு ஒன்று எதிர்வு கூறியுள்ளது.
உலகளாவிய ரீதியில் பாதிப்புக்களை ஏற்படுத்தக் கூடிய 05 றிச்டர் அளவுகோலுக்கு மேற்பட்ட இந்த ஆறு பூகம்பங்களில் ஒன்று இந்தோனேசியாவில் ஏற்படலாம் என்றும் அது இலங்கையிலும் பாதிப்புக்க ளை ஏற்படுத்தும் வாய்ப்புக்கள் இருப்பதாகவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.
பேராதனைப் பல்கலைக்கழகத்தின் புவியியற் கல்விப் பிரிவைச் சேர்ந்த பேராசிரியர் அத்துல சேனாரத்ன தலைமையிலான புவியியல் நிபுணர்கள் குழு இந்த ஆய்வை மேற் கொண்டது.
இதன்போது ஏப்ரல் 03ஆம் திகதிக்கும் 10ஆம் திகதிக்கும் இடையில் ஜப்பானிலும் ஏப்பிரல் 06 ஆம் திகதிக்கும் 10 ஆம் திகதிக் கும் இடையில் சீனாவிலும் ஏப்பிரல் 10ஆம் திகதிக்கும் 15ஆம் திகதிக்கும் இடையில் துருக்கி, ஈரான், நியூசிலாந்து, இந்தோனேசியா ஆகிய நாடுகளையும் பூகம்பங்கள் தாக்கும் வாய்ப்புக்கள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. அத்துடன் ஜப்பானில் ஏப்பிரல் 16ஆம் திகதிக்கும் 20ஆம் திகதிக்கும் இடையில் மீண்டும் பூகம்பம் தாக்கும் வாய்ப்பு வாய்ப்பு இருப்பதாகவும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.
இந்தோனேசியாவில் ஏற்படக் கூடிய பாரிய பூகம்பத்தினால் இலங் கையிலும் அதன் பாதிப்பு உணரப் படலாம் என்று அவர்கள் கூறியுள்ளனர். ஏற்கெனவே 2004ஆம் ஆண்டு இந்தோனேசியாவின் சுமாத்ரா தீவுக்கருகே கடலுக்கு அடியில் ஏற்பட்ட பூகம்பத்தினால் தோன்றிய சுனாமி இலங்கையில் பாரிய அழிவுகளை ஏற்படுத்தியது குறிப்பிடத் தக்கது.