தடுமாறும் சிரியா அரசு நிகாப் மீதான தடை நீக்கி சூதாட்ட விடுதியையும் மூடியுள்ளது
சிரிய இடைக்கால அரசு நாட்டின் சட்ட திருத்தங்களை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கின்றது இதன் ஒரு கட்டமாக முஸ்லிம் பெண்கள் அணியும் நிகாப் மீதான தடை நீக்கப்பட்டுள்ளதுடன் சிரிய தலைநகர் டமஸ்கஸ் நகரில் இயங்கி வந்த சூதாட்ட விடுதியும் மூடப்பட்டுள்ளது என்று அறிவித்துள்ளது ஜனாதிபதி பஷார் அல் அஸத் அரசாங்கம் கடந்த 2010 ஆம் ஆண்டு ஜூலை மாதம் வகுப்பறைகளில் நிகாப் உடை அணிய தடை விதித்தார் என்பது குறிபிடத்தக்கது
சிரியா மத்தியக்கிழக்கில் அதன் தென்மேற்கு எல்லையில் இஸ்ரேலையும், மேற்கு எல்லையில் லெபனானையும் ஜோர்டானையும், கிழக்கில் ஈராக்கையும், வடக்கே துருக்கியையும் எல்லையாகக் கொண்டுள்ள நாடு . சிரியா 1936 இல் பிரான்சிடமிருந்து சுதந்திரம் பெற்றது ஆனாலும் 1963 இலிருந்து பாசாட் என்ற கட்சி நாட்டை ஆண்டு வருகின்றது ௧௯௭௦ ஆம் ஆண்டு முதல் பாசாட் கட்சியான அஸத் குடும்பத்தை சேந்தவராக ஆண்டு வருகின்றனர் விரிவாக
மற்ற அரபு முஸ்லிம் நாடுகளை போன்று சிரியாவிலும் மேற்கு சார்பு ஆட்சியாளர்களுக்கு எதிராக ஆர்பாட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது அரசுக்கெதிரான ஆர்பாட்டங்களுக்கு பணிந்து சிரிய அரசு கடந்த மார்ச் மாதம் கலைக்கப்பட்டு புதிய அரசை அமைக்குமாறு ஜனாதிபதி பஷார் அல் அஸத் கோரினார்.
ஆனால் கடந்த மூன்று வாரங்களாக சிரிய அரசுக்கெதிரான ஆர்ப்பாட்டங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன . கடந்த மூன்று வாரங்களில் மட்டும் ஆர்ப்பாட்டங்களில் குறைந்தது 80 பேர் கொல்லப்பட்டுள்ளனர். அரசுக்கெதிராக ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் அரசியல் திருத்தங்களை வலியுறுத்தி தொடர்ந்து போராடி வருகின்றனர் அரசு சொந்த மக்களுக்கெதிராக வன்முறையை பயன்படுத்துவதாக அரசுக்கு எதிரான கண்டனம் எழுந்துள்ளன