ஏப்ரல் 11, 2011

பிரான்ஸ் -முகத்திரை தடையை மீறிய பெண்கள்

 ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான பிரான்ஸில் இன்று முதல் முஸ்லிம் பெண்கள் அணியும் நிகாப் என்ற முகத்திரைக்கு தடை விதிக்கப்படுகிறது. இந்தத் தடையை மீறுபவர்களுக்கு ரூ 10000 அபராதம் விதிக்கப்படும். இதனை அணியச் சொல்லி யாரும் வற்புறுத்தினால் அவர்களுக்கு ஒரு வருட சிறைத்தண்டனையும் ரூ 20லட்சம் அபராதமும் விதிக்கப்படும் என பிரான்ஸ் அரசு சட்டம் இயற்றியுள்ளது.
இந்தத் தடையை மீறி இன்று பிரான்ஸில் பல பெண்கள் முகத்திரையிட்டு வந்தனர். ஆர்ப்பாட்டம் நடத்த முயன்றதற்காக இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 
பிரான்ஸில் ஏறத்தாழ 50 லட்சம் முஸ்லிம்கள் வசித்து வருகின்றனர். இதில் ஏறத்தாழ 2000 பெண்களே முகத்தை மறைக்கும் நிகாப் அணிந்து வருகின்றனர். இருந்தாலும் இந்தத் தடையை இஸ்லாத்திற்கெதிரான ஒரு செயலாக முஸ்லிம்கள் கருதுகின்றனர். பிரான்ஸ் ஜனாதிபதி சர்கோஸி முகத்திரை அணிவது பெண்களை அடிமைப்படுத்தும் செயல் எனத் தெரிவித்து அதனை நீக்குவதற்காகத்தான் தடையை கொண்டு வந்ததாக தெரிவித்திருந்தார்.
சட்டத்தில் பெண்,முஸ்லிம்,முகத்திரை போன்ற வார்த்தைகள் மிகவும் கவனமாக தவிர்க்கப்பட்டு பொது இடங்களில் முகத்தினை மறைப்பது சட்ட விரோதமானது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தத் தடையினை நீக்கக் கோரி பிரான்ஸ் நாட்டுக்கு அல் காய்தா எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தத் தடை குறித்து கென்ஷா டிரைடர் என்ற பெண்மணி கூறும்போது என்னை நிகாப் அணியக் கூடாது என தடுத்தால் ஐரோப்பாவிலுள்ள மனித உரிமை நீதிமன்றத்தை அணுகுவேன் என தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக