ஏப்ரல் 10, 2011



இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு படை 100 பலஸ்தீனிய பெண்களை நடுநிசியில் கைது செய்து இழுத்து சென்றுள்ளது


இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு படை பலஸ்தீன மேற்கு கரை பிரதேச கிராமம் ஒன்றை நடு நிசியில் சுற்றி வளைத்து நூற்றுகணக்கான பெண்களை கடத்தி சென்றுள்ளது மேற்கு கரை பிரதேச கிராமான அவார்டா என்ற கிராமமே ஆக்கிரமிப்பு படையின் சுற்றி வளைப்புக்கு இலக்காகியுள்ளது இஸ்ரேலின் சட்டவிரோத குடியிருப்பு ஒன்றில் குடியேற்றப்பட்ட 5 இஸ்ரேலியர் குடியேற்றவாதிகள் கொல்லப்பட்டமையுடன்
தொடர்பு பட்டதாக இந்த நடுநிசி சுற்றிவளைப்பு பார்க்கபடுகின்றது.
நடுநிசியில் பல வீடுகளை உடைத்துகொண்டு புகுந்த ஆகிரமிப்புபடை 100 வரையான பெண்களையும் 200 வரையான வாலிபர்கள் ,சிறுவர்கள் என்று 300 பேர்களை இழுத்து சென்றுள்ளது விரிவாக
பலவந்தமாக இழுந்து செல்லப்பட்டவர்களின் DNA மாதிரிகள் பெறப்பட்டுள்ளது இவர்களில் 20 பெண்களும் 20 ஆண்களும் எந்த குற்ற சாட்டுக்களும் இன்றி தொடர்ந்து அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.
மார்ச் மாதம் மாட்டும் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு படை 76 பலஸ்தீனியர்களின் வீடுகளை இடித்து தகர்த்துள்ளது என்றும் பெப்ரவரி மாதம் 70 வீடுகளையும் ஜனவரி மாதம் 29 வீடுகளையும் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு படை இடித்து தகர்த்து பலஸ்தீன குடும்பங்களை நடு வீதியில் போட்டுள்ளது என்று சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக