முஸ்லிம் – ஐவரி கோஸ்ட் ஒரு சிறு குறிப்பு
M.ஷாமில் முஹம்மட்
ஐவரி கோஸ்ட் மேற்கு ஆபிரிக்காவில் உள்ள ஒரு நாடு இது ‘கோட் டிவார்’ எனவும் அழைக்கப்படுகிறது. இதன் எல்லைகளாக மேற்கில் லைபீரியா மற்றும் கினி ஆகிய நாடுகளும், வடக்கே மாலி மற்றும் புர்கினா பாசோ, கிழக்கே கானா தெற்கே கினி வளைகுடா ஆகியனவும் அமைந்துள்ளன.
உத்தியோக பூர்வ தகவலின் படி இங்கு 38.6 வீதமானவர்கள் முஸ்லிம்கள் என்றும் கிறிஸ்தவர்கள் 32. 8வீதம் என்றும் , ஆபிரிக்கன் பழம்குடி மதப் பிரிவினர் 11.9 வீதம் என்றும் எந்த மதத்தையும் சாராதவர்கள் 16.7 வீதம் என்றும் தெரிவிக்கின்றது அரபு மூல தகவல்களின் பிரகாரம் முஸ்லிம்கள் 40 தொடக்கம் 45 வீதமானவர்கள் என்று தெரிவிக்கின்றது மற்றுமொரு
அரபு ஆங்கில தகவலின் படி அங்கு முஸ்லிம்கள் 60 வீதமானவர்கள் இவர்கள் இந்த எண்ணிக்கையை மறைக்கும் நோக்கில் முஸ்லிம் பெயர்களை கொண்டவர்களும் எந்த மதத்தையும் சாராதவர்கள் மற்றும் பழம்குடி மதப் பிரிவினர் என்ற பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்று தெரிவித்துள்ளது 1893 இல் பிரான்ஸ் காலனித்துவ நாடாக்கப்பட்டு 1960இல் பிரான்சிடம் இருந்து சுதந்திரம் அடைந்துள்ளது 1993 வரையில் பீலிக்ஸ் ஹுபொயே போய்னி என்ற முதல் சர்வாதிகார ஜனாதிபதியின் ஆட்சியில் இருந்தது .இவர் சுடான் பரம்பரையை சேர்ந்தவர் இவரின் பரம்பரையினர் முஸ்லிம்கள் என்று அரபு மூல தகவல்கள் தெரிவிக்கின்றது ஆனாலும் மேற்குலகுடன் மிகவும் நெருக்கமான உறவை கொண்ட இவர் குறிப்பாக பிரான்சுடன் மிகவும் நெருக்கமான உறவை கொண்ட இவர் தன்னை ஒரு கத்தோலிக்கராக மட்டும் அடையாளப் படுத்தினார் இதை அடிப்படையாக கொண்டே பிரான்ஸ் ஐவரி கோஸ்ட் விடுதலையான போது இவரிடம் ஒப்படைத்ததாக நிறைய பதிவுகள் உண்டு ஆனால் இவர் ஒரு முஸ்லிம் பெண்ணை திருமணம் முடித்தார் இவர்களுக்கு ஐந்து குழந்தைகள் பிறந்தது அனைத்தும் கிருஸ்தவ கத்தோலிக்க அடிப்படையில் வளர்க்கப்பட்டது என்று தகவல்கள் தெரிவிக்கின்றது
ஹுபொயே போய்னியின் காலத்தில் நாடு பொருளாதரத்தில் வளமான நாடாக உருவானதாக தெரிவிக்கப்டுகின்றது உலகில் கொக்கோவை அதிகம் உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்யும் மிக பெரிய ஏற்றுமதியாளர் என்ற பெயரை பெற்றுள்ளது அதேபோன்று சஹாரா நாடுகளில் தங்கத்தை ஏற்றுமதி செய்யும் நான்காவது பெரிய ஏற்றுமதியாளர் என்ற பெயரையும் கொண்டுள்ளது இது தவிர மரப் பலகை, கோப்பி , சீனி போன்றவற்றையும் ஏற்றுமதி செய்கின்றது இங்கு தனிநபர் ஆள்வீத வருமானம் மற்ற ஆபிரிக்க நாடுகளுடன் ஒப்பிடும்போது உயர்ந்து காணப்பட்டது .
மறுபுறத்தில் மேற்கு உலகின் கிருஸ்தவ மதம் மாற்றும் அமைப்புகளின் கோட்டையாக விளங்கியது பாமர கிராமிய முஸ்லிம்கள் , உட்பட ஆபிரிக்க பழம் குடியினர் மிகவும் நுட்பமான முறையில் மதம் மாற்றபட்டுள்ளனர் இங்கு முஸ்லிம்கள் பெரும்பான்மை என்றாலும் அதிகாரத்தில் பெரும்பாலும் முஸ்லிம்கள் இடம்பெறவில்லை ஐவரி கோஸ்ட் வட பகுதியில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழ்கின்றனர் 1993 ஆம் ஆண்டுக்கு பின்னர் அங்கு அடிக்கடி முஸ்லிம்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்துள்ளது
ஹுபொயே போய்னியின் பின்னர் 1995இல் தேர்தல் இடம்பெற்றது இது மோசடியான தேர்தலாக பார்க்கப்பட்டது இதில் ஹுபொயே விரும்பிய மற்றுமொரு கத்தோலிக்கர் பேய்டை-Bédié- என்பவர் தெரிவானதாக அறிவிக்கபட்டார் இந்த தேர்தலில் போட்டியிட்ட அல் ஹசன் திராமனே உபாதரா என்ற பலமான முஸ்லிம் ஜனாதிபதி வேட்பாளர் திட்டமிட்டு தேர்தல் களத்தில் இருந்து அகற்றபட்டார் ஆட்சியில் அமர்ந்த பேய்டை -Bédié- கொடுரமான முறையில் எதிர் தரப்புகளை ஒடுக்கினார் இதனால் 1999 ஆம் ஆண்டு இராணுவப் புரட்சி ஏற்பட்டது.
பின்னர் கபாக்போ என்ற மற்றும் மொரு கத்தோலிக்கர் ஜனாதிபதியானார் இவர் 2010 ஆம் ஆண்டு வரை பல சட்டவிரோத வழிமுறைகளை கையாண்டு பதவியில் நீடித்தார் பின்னர் 2010ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் முதல் கட்டத்திலும் 2011ஆம் ஆண்டு இரண்டாம் கட்டத்திலும் நடைபெற்ற தேர்தல்களில் அல் ஹசன் வெற்றி பெற்றார் ஆனாலும் அவரை வெற்றியை ஏற்றுகொள்ளாத கபாக்போ இவருக்கு எதிராக போராட்டத்தில் இறங்கியுள்ளார் அல் ஹசன் என்பவரின் தேர்தல் வெற்றியை பிரான்ஸ் , அமெரிக்கா உட்பட பல மேற்கு நாடுகள் ஏற்று கொண்டுள்ளன அல் ஹசன் என்பவர் சர்வதேச நாணய நிதியத்தின் முக்கிய அதிகாரியாக செயல்பட்டவர் என்பதும் தற்போது தேர்தல் முடிவுகளை எதிர்த்து கிளர்ச்சி செய்யும் கபாக்போ விடவும் மேற்கு உலகிற்கு மிகவும் நெருக்கமானவர் என்று அறியப்பட்டவர் எனினும் பிரான்ஸ் இரண்டு தரப்புகளும் மறைமுகமாக உதவுவதாக தெரிவிக்கபடுகின்றது.
இரு தரப்புக்கும் இடையில் 2003 ஆம் ஆண்டு ஏற்பட்ட உடன்படிக்கையை அமுல்படுத்தும் நோக்கியில் ஐநா சமாதன படை கடந்த 2004 ஆம் ஆண்டு தொடங்கம் நிலை கொண்டுள்ளபோதும் இந்த வருடம் ஆரம்பத்தில் வெளியான ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் அல் ஹசன் ஜனாதிபதி என்றது இந்த முடிவை ஏற்றுகொள்ளாது இரு தரப்புக்கும் இடையில் 2003ஆம் ஆண்டு செய்யப்பட்ட ஒப்ந்ததையும் கிழிந்து வீசிய கபாக்போ பெரும்பாலும் கிறிஸ்தவ மக்களை கொண்டு உருவாக்கப்பட்ட தனது சொந்த இராணுவத்தின் மூலம் முஸ்லிம் தரப்பின் மீது கடும் தாக்குதல்களை நடாத்தி வருகின்றார் இங்கு நிலை கொண்டுள்ள ஐநா சமாதன படையையும் மீறி படுகொலைகள் நடைபெற்று வருகின்றது
கடந்த நாட்களில் அபிட்ஜான் பிரதேச 12 மஸ்ஜித் இமாம்கள் கொல்லபட்டுள்ளனர் என்று பிரான்ஸ் செய்திகள் தெரிவிக்கின்றது நடந்து வரும் தாக்குதல்களில் 10 மஸ்ஜிதுகள் முற்றாக அழிக்கப்பட்டுள்ளது, பல மஸ்ஜிதுகள் மீது கைகுண்டு தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன என்பது குறிபிடத்தக்கது
இந்த ஆண்டில் மேற்கு ஆபிரிக்காவின் மிக மோசமான படுகொலை நிகழ்வாக தற்போது இடம்பெற்று வரும் கொலைகள பார்க்கபடுகின்றது தேர்தல் முடிவுகளுக்கு முரணாக ஜனாதிபதி பதவியை மீண்டும் கைப்பற்றியுள்ள கிபாக்போவை பதவி விலக கோரி அல் ஹசன் தலைமையிலான மக்கள போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் டுவேகுவே எனும் ஐவரி கோஸ்ட்டின் சிறிய நகரொன்றில் இடம்பெற்ற சண்டையில் 1000 வரையானவர்கள் கொல்லபட்டுள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றது.