செப்டம்பர் 17, 2012


ஈரானை இஸ்ரேல் எந்நேரத்திலும் தாக்கலாம்?: அமெரிக்க, பிரித்தானிய படைகளும் வளைகுடா நோக்கிப் படையெடுப்பு!

ஈரானின் அணு உலைகளை இலக்குவைத்து இஸ்ரேல் எந்நேரத்திலும் தாக்குதல் நடத்தலாம் என்ற நிலை வளைகுடாவில் தோன்றியுள்ளதுடன் அமெரிக்க மற்றும் பிரித்தானியப் படைகள் வளைகுடாப் பகுதியை நோக்கிப் படையெடுத்துள்ளன.இருபத்தைந்து நாடுகளின் போர்க்கப்பல்கள், விமானந் தாங்கிக் கப்பல்கள், நீர்மூழ்கிகள் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த ஹோர்மூஸ் நீரிணைப்  (Strait of Hormuz) பகுதியில் இதுவரை இல்லாத அளவில் அவை  மிகப்பெரிய போர் ஒத்திகையை அங்கு நடத்தவுள்ளன. கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த ஹோர்மூஸ் நீரிணையின் ஊடாக தினசரி 18 மில்லியன் மசகெண்ணெய் பெரல்களைக் கப்பல்கள் கொண்டுசெல்கின்றன. இந்த வழியைத் தடைசெய்யப்போவதாக  ஈரான் பல மாதங்களாக எச்சரித்து வருகின்றது. இதன்மூலம் உலக நாடுகள் பலவற்றினை ஸ்தம்பிக்க வைக்கமுடியுமென ஈரான் கருதுகின்றது. இந்நீரிணையூடான வழியை மூடுமானால் ஈரான் மீது தாக்குதல் நடத்த உலகநாடுகள் பல தயாராகவுள்ளன. ஈரானிடம் அதிநவீன தொழில்நுட்பங்கள் இல்லாதபோதிலும் சிறிய ரக நீர்மூழ்கிக் கப்பல்கள், அதிவேக தாக்குதல் படகுகள் போன்றவற்றின் மூலம் அமெரிக்க மற்றும் பிரித்தானிய கப்பல்களை அது தாக்கலாம் என நம்பப்படுகின்றது. ஈரான் மீது தாக்குதல் நடத்தப்படுமானால் இஸ்ரேலில் ஒன்றுமே எஞ்சாது என அந்நாட்டின் புரட்சிகரப் படையின் கட்டளைத் தளபதி  ஜெனரல் மொஹமட் அல் ஜபாரி எச்சரித்துள்ளார்.

மனித பரிணாமம் = மல்டிபிள் பர்சனாலிடி டிஸ்ஆர்டர்?


========================================

Please Note:
மனித பரிணாம துறை என்பது மிகப்பெரியது. முடிந்தவரை இந்த பதிவை
 எளிதாக்கி, சுவாரசியமான நடையில் தரவே முயற்சித்துள்ளேன். இன்றைய 
காலத்திற்கு, குறிப்பாக இளைய தலைமுறையினருக்கு அவசியமான 

இக்கட்டுரையை சற்றே பொறுமையுடன் முழுமையாக படியுங்கள்.

========================================
1867-ஆம் ஆண்டு, கல்வர் என்ற இயற்கையாளர், மனித பரிணாமம் குறித்த 
விளக்கப்படம் ஒன்றை வரைந்தார். ப்லாடிபஸ் என்ற உயிரினமாக டைனாசர்கள் 
மாறுவதை போன்றும், கங்காருவில் இருந்து மனிதன் பரிணாமம் அடைந்ததாகவும் விளக்கியது அந்த படம்.

நல்லவேளையாக 1871-ஆம் ஆண்டு, மனித பரிணாமம் குறித்த தன்னுடைய பிரபல புத்தகத்தை வெளியிட்டார் டார்வின். இல்லையென்றால் மனித பரிணாமத்தை விளக்குகின்றேன் என்ற பெயரில் கற்பனைக்கு எட்டாத கற்பனை படங்களை வரைந்து தள்ளியிருப்பார்கள் பரிணாமவியலாளர்கள்.

குரங்கு போன்ற ஒன்றிலிருந்து(?) மனிதன் வந்ததாக கூறப்படும் கோட்பாட்டை டார்வின் பிரபலப்படுத்த, மனித பரிணாமம் குறித்த ஒருமித்த கருத்து பரிணாமவியலாளர்களிடயே உருவாகியது.

முஸ்லிம் உலகை ஆத்திரப்படுத்தி அதனை சாக்காக வைத்து தனது இராணுவத்தை உள்நுழைக்கும் ஸியோனிஸ சதி - யெமன் ஒரு சாம்பிள் !!

முஹம்மத் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களை நிந்தனை செய்யப்பட்டு அமெரிக்காவில் வெளியான 
திரைப்படம் பற்றி நாம் அறிந்துள்ளோம். 
அதன் பின்னரான உலகலாவிய முஸ்லிம் 
உம்மாவின் எழுச்சி பற்றி நாம் பல 
வீடியோக்களையும், போட்டோக்களையும் பார்த்துள்ளோம். மெய்சிலிர்த்துள்ளோம். 
உலகளாவிய முஸ்லிம் உம்மாவின் எழுச்சி 
பற்றி இஹ்வானிய பாணியில் 
புளுகாங்கிதம் அடைந்துள்ளோம்.

செப்டம்பர் 14, 2012


நபியை அவமதிக்கும் திரைப்படத்தின் மறுபக்கம் - லிபிய ஏவுகணை தளங்கள் சொல்லும் அரசியல்


லிபியாவில் எரிகிறது அமெரிக்க தூதரகம். லெபனானில் அதன் சுவர்கள் தகர்க்கப்படுகின்றன. யெமனில் ஆர்.பி.ஜி. குண்டு அதனுள் விழுந்து வெடிக்கிறது. இவையெல்லாம் சாம்பிள் செய்திகள். நபி பெருமானார் பற்றிய மிக கேவலமான காழ்ப்புணற்ச்சிகளுடனும் புனைவுகளுடனும் ஒரு ஆங்கில திரைப்படம் வெளியாகியுள்ளது. இதனை படமாக எடுத்தவன் steve klien எனப்படும் Sam Impasil. இதனை வெளியிட்டவன் Terry Jones. இந்த டெர்ரி ஜோன்ஸ் கிறிஸ்தவ பாதிரி. குர்ஆனை எரிப்பேன் என்று முழங்கியவன். ஆங்கிலத்திலும் பின்னர் அரபியிலும் வந்தது. இது நடந்தது ஜுலை மாதத்தில். படமாக வெளியாவதற்கு முன்னர் 14 நிமிட ட்ரெய்லர் முன்காட்சிகள் காண்பிக்கப்பட்டன. ஆனால் அவை செப்டெம்பர் 11ம் திகதி உலக அளவில் மீடியாக்களில் பேசு பொருளாக்கப்பட்டது. 
இதன் பின்னால் உள்ள அரசியல் பற்றி நாம் அநேகமாக கவனிக்க தவறி விடுகிறோம். 

செப்டம்பர் 11, 2012


ஈரானுக்கு எதிராக புதிய “சிவப்புக்கோடுகளை” ஒபாமா பரிசீலிக்கிறார்

By Peter Symonds 
இஸ்ரேல் தாக்குதல் நடத்துவதை திசைதிருப்பும் பாவனையில், ஈரானுக்கு எதிரான போர் ஏற்படும் சாத்தியப்படக்கூடிய பல ஆக்கிரோஷமான நடவடிக்கைகளை ஒபாமா நிர்வாகம் பரிசீலிக்கிறது. ஞாயிறு நியூ யோர்க் டைம்ஸ் பெயரிடப்படாத அமெரிக்க ஆதாரங்களின் அடிப்படையில் கொடுத்துள்ள தகவல்படி வெள்ளை மாளிகை “போருக்குச் சற்றே குறைந்த தன்மையில் பல வகை நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருகிறது”; இது ஈரானின் அணுச் சக்தி நிலையங்களை இஸ்ரேலிய தாக்குதல்கள் நடத்துவதை தள்ளிவைக்கும் முயற்சி, தெஹ்ரானை மீண்டும் பேச்சுவார்த்தைகளுக்காக மேசைக்கு வரும் கட்டாயத்திற்கு உட்படுத்துதல் ஆகும்.
“ஏற்ககனவே, கடற்படைப் பயிற்சிகள், புதிய ஏவுகணை முறைகள்

செப்டம்பர் 10, 2012



கள்வர்களின் காலம் அறிவியல் தொழில்நுட்பத்தின் மோசடிகளும் ரகசியங்களும்


ராஜ் சிவா 



“குட் மார்னிங் சார்! கீதா. காலிங் ஃப்ரம்... பாங்க்.
சார் ஃப்ரியா இருந்தா ஒரு 2 நிமிசம் பேசிக்கலாமா?
எங்க பாங்க்ல ஒரு புது பர்சனல் லோன் ஆஃபர் பண்ணி இருக்கோம்.
நீங்க எங்க ஒர்க் பண்றீங்கன்னு தெரிஞ்சுக்கலாமா சார்.
உங்க சம்பளம் எவ்ளோன்னு சொல்ல முடியுமா சார்?”
நீங்கள் மொபைல் ஃபோன் வாங்கிய நாளிலிருந்து இந்த வகையிலோ அல்லது இது போன்ற வேறு ஒரு வகையிலோ, ஐஸ்கிரீம் தடவிய கீதாக்களின், பிரியாக்களின் குரல்களை வாரத்துக்கு ஒருமுறையாவது கேட்கத் தவறியிருக்க மாட்டீர்கள். நிதி மந்திரியாக நீங்கள் இருந்தாலும், இந்தக் குரல்கள் உங்களைத் துரத்துவதிலிருந்து உங்களால் தப்பவே முடியாது. இந்தக் குரல்களின் பின்புலத்தில் இருக்கும் மெல்லிய மர்மத்தையும், சதியையும் நீங்கள் புரிந்து கொள்ள மாட்டீர்கள் என்பதே உண்மை. சாதாரணமாகப் பார்க்கும் போது, ஒரு வங்கி தனது வாடிக்கையாளனுக்குக் கடன் கொடுத்து, அதனால் வரும் வட்டியைப் பெற்றுக் கொள்வதற்காக இப்படித் துரத்துகிறது என்றுதான் தோன்றும். ஆனால் இங்கு அதைவிட மிகப் பெரிய விசயம் ஒன்று மறைந்திருக்கிறது என்பதை யாரும் அறிந்து கொள்வதில்லை.

செப்டம்பர் 06, 2012


சர்ச்சைக்குரிய பின்லேடன் கொலைபற்றியபுத்தகம்

பிரபலமாக தர்பொழுது இதைப்பற்றித்தான் அமெரிக்க இராணுவத்தலைமைச்செயலகம் கூட கத்திக்கொண்டிருக்கின்றது.ஒசாமா வின்லேடனை சீல்படையினர்  நாட்டிற்குள் ஊடுருவிக்கொன்றார்கள்.அந்த மிஸினில் கூடவே இருந்த ஒரு சீல் வீரர்தான் இதைவெளியிட்டுள்ளார்.கொலை பற்றி விபரமாக எழுதப்பட்டுள்ளதால் எதிரிகளுக்கு  இந்தமிஸினுடன் சம்பந்தப்பட்டவர்கள் பற்றிய விபரம் தெரிந்துவிடலாம்.இதனால் அவர்களுக்கு ஆபத்த ஏற்பட்டுள்ளது. என்று அமெரிக்க இராணுவ தலைமைச்செயலகம் அறிவித்துள்ளது.

செப்டம்பர் 02, 2012


சுயஸ்கால்வாயில் ஈரானிய போர்கலங்கள் - அமெரிக்க ஈரானிய ரகசிய டீல்?

Abu Sayyaf
   மீண்டும் ஈரானிய கப்பல்கள் கொள்கலன்களை சுமந்து கொண்டு,
 சண்டை கலங்களின் 
வழித்துணையுடன் சிரியா சென்றடைந்துள்ளது. 
கொள்கலன்களில் சிரிய 
சண்டையை மேலும் கொண்டு நடாத்துவதற்கான ஆயுத 
தளவாடங்கள் அனுப்பப்பட்டுள்ளன.
 இவை சிரியாவை சென்றடைந்த 
பாதையே இங்கு சில சர்ச்சைகளை கிளப்புகிறது. “சுயஸ் கால்வாய்” 
ஊடாகவே ஈரானிய கப்பல்கள் 
சிரியாவை நோக்கி சென்றடைந்துள்ளன. இந்நிகழ்வு கடந்த ஒரு மாதகாலத்தில் 
நடக்கும் இரண்டாவது நிகழ்வாகும். ஆகஸ்ட் 31, 2012 ல் சரியாக மாலை
(கிறீன்விச்) 17:43:47 வது நொடியில் இவை சுயஸ் கால்வாயூடாக 
பிரவேசித்துள்ளன.

ஆகஸ்ட் 30, 2012


Printers பாவனையில் மாற்றத்தை ஏற்படுத்தப்போகும் High-Tech Printers and 3D Printers.

21 ஆம் நூற்றாண்டில் இருக்கும் நாங்கள் இன்னமும் ஒரே வகையான Printers ஐ தான் பயன்படுத்தி வருகின்றோம். ( Ink-jet Printer , Dot matrix printer and laser printer )

Phones , Computers , Laptops , Tablets போன்றவற்றில் பல மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்ட போதும் Printers வகையில் அவ்வளவாக மாற்றங்கள் ஏற்படவில்லை.

Future இல் ஒவ்வொரு சாதனங்களும் அடையபோகும் மாற்றங்களையும் புதிதாக கண்டுபிடிக்கபடபோகும் சாதனங்களையும் Concept Designs எனும் பெயரில் பற்பல நிறுவனங்கள் வெளியிட்டு வருகின்றன. இவையே எதிர்காலத்தில் அந்நிறுவனங்களின் நிலைத்திருப்பிற்கு காரணமாக அமையபோகின்றமை வேறு விடயம். அந்த வகையில் எதிர்காலத்தில் வர இருக்கும் Printers இன் Concept Designs ஐ இப்பதிவில் பார்ப்போம் வாருங்கள்.

இன்று முகநூலில் முகம் கொடுக்க நேரிட்ட கசப்பான எச்சரிக்கையூட்டும் அனுபவம் குறித்து எழுதப்பட்ட அவசரமான பதிவு.இது உங்களின் பிரசுரத்திற்காக அனுப்பி வைக்கப் படுகின்றது. இதனை ஏனைய சகோதர ஊடகங்களுடன் பகிந்து கொள்வதில் எவ்வித ஆட்சேபனையும் இல்லை. அன்புடன் -சுவைர் மீரான். (யாழ்ப்பாணம்)


முஸ்லிம்களே எச்சரிக்கையாக இருங்கள், 
உங்களை வலையில் வீழ்த்தி, அழ அகலம், நீதி
 நியாயம் தெரியாமல் நீங்கள் பதியும் 
மடத்தனமான வார்த்தைகளை வைத்தே மொத்த 
முஸ்லிம் சமூகத்தினதும் இரத்தைத்தை  
ஓட்ட சதி நடக்கின்றது. நடப்பது என்ன என்றே 
புரியாமல் மந்தைக் கூட்டம் போல 
எல்லாவற்றுக்கும் தலையாட்டிப் பழகி விட்ட முஸ்லிம்களைக் கொண்டே அவர்களின் குழிகளை வெட்டும் நாசகார வேலை
காண கச்சிதமாக மேற்கொள்ளபடுகின்றது.

பெளத்த சிங்கள மக்களை முஸ்லிம்களுக்கு
 எதிராக தூண்டிவிட முஸ்லிம்களின் பெயரால் புதிய சதிமுயற்சிகள் 
நடைபெறுகின்றதோ என சந்தேகப் படும் படியான ஒரு நிகழ்வுக்கு முகநூலில்முகம் 
கொடுக்க நேரிட்டதன் விளைவே இந்த விழிப்பூட்டல்
கட்டுரை.