செப்டம்பர் 06, 2012


சர்ச்சைக்குரிய பின்லேடன் கொலைபற்றியபுத்தகம்

பிரபலமாக தர்பொழுது இதைப்பற்றித்தான் அமெரிக்க இராணுவத்தலைமைச்செயலகம் கூட கத்திக்கொண்டிருக்கின்றது.ஒசாமா வின்லேடனை சீல்படையினர்  நாட்டிற்குள் ஊடுருவிக்கொன்றார்கள்.அந்த மிஸினில் கூடவே இருந்த ஒரு சீல் வீரர்தான் இதைவெளியிட்டுள்ளார்.கொலை பற்றி விபரமாக எழுதப்பட்டுள்ளதால் எதிரிகளுக்கு  இந்தமிஸினுடன் சம்பந்தப்பட்டவர்கள் பற்றிய விபரம் தெரிந்துவிடலாம்.இதனால் அவர்களுக்கு ஆபத்த ஏற்பட்டுள்ளது. என்று அமெரிக்க இராணுவ தலைமைச்செயலகம் அறிவித்துள்ளது.

இந்த சர்ச்சைக்குரிய புத்தகத்தின் பெயர் "No Easy Day" ...(No Easy Day: The Firsthand Account of the Mission that Killed Osama bin Laden ) இதை எழுதியவர் முன்னாள் நேவி சீல் அதிரடிப்படை வீரர் பிஸ்ஸோனெட் மார்க் ஒன் என்ற புனைபெயரில் இதை வெளியிட்டுள்ளார்.இவர் இதில் நேரடியாகப்பங்குபற்றியதால் தனது அனுபவம்,பார்த்தவற்றை இதில் எழுதியுள்ளார்.அத்துடன் சீல் படையினரின் பயிற்சிகள் சில மிஸின்களைப்பற்றியும் இதில் எழுதியுள்ளார்.உண்மையில் இந்தப்புத்தகம் செப்ரம்பர் 11 இல் உலகவர்த்தகமையக்கட்டிடங்கள் அழிக்கப்பட்ட நினைவு தினத்தில் வெளியிடுவதற்குத்திட்டமிடப்பட்டிருந்தது.புத்தகம் அதிக வரவேற்பைப்பெற்றதன் காரணமாக செப்ரெம்பர் 4இலேயே வெளியிடப்பட்டுவிட்டது.அமேசன் தளத்தில் முன்னனி விற்பனை லிஸ்டில் இப்புத்தகமும் இடம்பெற்றுள்ளது.3 லட்சம் பிரதிகள் வெளியிடுவதாக தீர்மானித்திருந்தார்கள்.ஆனால் தற்பொழுது 575 000 பிரதிகள் விற்பனையாகி உள்ளன.அமெரிக்கா பின்லேடன் எவ்வாறு கொல்லப்பட்டார் என்று கொல்லப்பட்டவுடன் கூறியுள்ளது ஆனால் உண்மை என்னவென்று இந்தப்புத்தகத்தில் உள்ளது.புத்தகத்தை எழுதிய பிஸ்ஸோனெட் இத்துடன் நிற்காமல் ஹொலிவூட்டின் முன்னனி இயக்குனர்களில் ஒருவரான ஸ்டீபன் ஸ்பில்பேர்க்கிடம் இதை ஒரு அக்ஸன் திரைப்படமாக எடுக்குமாறு கோரியுள்ளார்.

பின்லேடன் பதுங்கியிருந்த கட்டிடத்தின் 3 ஆவது தளத்தில் வைத்துக்கொலை செய்யப்பட்டபோது இவரும் கூடவே இருந்திருக்கின்றார்.இதன் பின்னர் சீலில் இருந்து ஓய்வுபெற்றுள்ளார்.இந்தப்புத்தகத்தை பின்லேடனை கொலை செய்யும் மிஸினில் பங்குபற்றியதால் உயிர் நீத்த வீரர்களின் குடும்பங்களுக்கு சமர்ப்பிப்பதாகக்கூறியுள்ளார் பிஸ்ஸோனெட்.இந்தப்புத்தகத்தை வெளியிட்டதால் இவர் யார் என்றவிபரம் முழுமையாகவெளியே தெரிந்துள்ளது. நேவி அதிரப்படை எவ்வாறு இயங்குகின்றது.யாரெல்லாம் இரகசிய உறுப்பினர்களாக இருக்கலாம்? போன்ற விபரங்கள் வெளியாகியுள்ளதால் இப்புத்தகம் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஒபாமாவின் மீது தாக்கத்தை  ஏற்படுத்தும் என நம்பப்படுகின்றது.

அமெரிக்கபாதுகாப்புத்துறையைசேர்ந்த ஜோர்ஜ்லிட்டில் இந்தப்புத்தகத்தால் அமெரிக்க நாட்டின் தேசியப்பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படலாம்.இதமால் பிஸ்ஸோனெட் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்  என்று கூறியுள்ளார்.
பிஸ்ஸோனெட்டினால் வெளியிடப்பட்ட புகைப்படம்


பின்லேடன் கொல்லப்பட்ட செய்திக்காக காத்திருக்கும் ஒபாமா,ஜொப் பிட்டன் கிளாரி கிளிண்டன்  மற்றும் தேசியபாதுகாப்பு உறுப்பினர்கள்



இது இவ்வாறிருக்க அல்கொய்தாஅமைப்பு பிஸ்ஸொனெட் பற்றியதகவல்களை வெளியிட்டு பின்லேடனைகொன்றதற்குப்பழிவாங்க ஏனைய அமைப்புக்களையும் அழைத்துள்ளது.
இவர்மீது நடவடிக்கை எடுப்பதற்கு ஆலோசித்துவருவதாக பெண்டகனும் அறிவித்துள்ளது.பாதுகாப்புத்துறை பிஸ்ஸொனெட்டிற்கு கடிதம் ஒன்றையும் அனுப்பியுள்ளது .உங்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் வெளியிடப்பட்ட புத்தகங்களை மீளப்பெற்றுக்கொள்ளவும் எனவும்அச்சுறுத்தியுள்ளது.




நேவி சீல்சிடமிருந்து மோசமான அனுபவங்களைப்பெற்றதால் நான் ஓய்வுபெறப்போகின்றேன்.இவற்றை புத்தகமாக வெளியிடப்போகின்றேன் என்று பிஸ்ஸொனெட் முன்பே கூறியதாக முன்னாள் சீல் வீரர் பிரண்டங்கேப் தெரிவித்துள்ளார்.பிஸ்ஸோனெட்டிற்கு தலைமைத்துவம் மறுக்கப்பட்டதுடன் இவரது குழு பயிற்சியின் இடையில் திருப்பி அனுப்பப்பட்டதாகவும் மேலும் அவர் கூறியுள்ளார்.


பிஸ்ஸோனெட்  60 Minutes ற்குப்பேட்டியளிக்கும்போது

எது எப்படியோ இந்தப்புத்தகத்தால் பிஸ்ஸோனெட்டிற்கு அல்கொய்தா குறிவைத்துவிட்டது.அத்துடன் இப்புத்தகம் ஒபாமாவையும் ஆட்டிவைக்கப்போகின்றது.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக