நபியை அவமதிக்கும் திரைப்படத்தின் மறுபக்கம் - லிபிய ஏவுகணை தளங்கள் சொல்லும் அரசியல்
லிபியாவில் எரிகிறது அமெரிக்க தூதரகம். லெபனானில் அதன் சுவர்கள் தகர்க்கப்படுகின்றன. யெமனில் ஆர்.பி.ஜி. குண்டு அதனுள் விழுந்து வெடிக்கிறது. இவையெல்லாம் சாம்பிள் செய்திகள். நபி பெருமானார் பற்றிய மிக கேவலமான காழ்ப்புணற்ச்சிகளுடனும் புனைவுகளுடனும் ஒரு ஆங்கில திரைப்படம் வெளியாகியுள்ளது. இதனை படமாக எடுத்தவன் steve klien எனப்படும் Sam Impasil. இதனை வெளியிட்டவன் Terry Jones. இந்த டெர்ரி ஜோன்ஸ் கிறிஸ்தவ பாதிரி. குர்ஆனை எரிப்பேன் என்று முழங்கியவன். ஆங்கிலத்திலும் பின்னர் அரபியிலும் வந்தது. இது நடந்தது ஜுலை மாதத்தில். படமாக வெளியாவதற்கு முன்னர் 14 நிமிட ட்ரெய்லர் முன்காட்சிகள் காண்பிக்கப்பட்டன. ஆனால் அவை செப்டெம்பர் 11ம் திகதி உலக அளவில் மீடியாக்களில் பேசு பொருளாக்கப்பட்டது.
இதன் பின்னால் உள்ள அரசியல் பற்றி நாம் அநேகமாக கவனிக்க தவறி விடுகிறோம். இஸ்லாத்திற்கு எதிராக எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்தின் காட்சிகளிற்கு பின்னாள் அமெரிக்காவின் அரசியல் முகம் தெளிவாக தெரியவர வாய்ப்புக்கள் இல்லை. உலகளாவிய அமெரிக்க எதிர்ப்பலையின் முன் அமெரிக்க அரசியல் தலைவர்கள் தங்களை அமெரிக்கர்களை காக்கும் கர்த்தர்களாக முன்னிறுத்த முயல்கின்றனர். பூகோள அரசியலை சரியாக அவதானிக்கும் ஒருவரிற்கு இதன் நிழல் அரசியல் வியூகம் விளங்காமல் இருக்க முடியாது.
கி.மு. 2000 ஆண்டுகளிற்கு முன்னைய கதை என இதனை தயாரிப்பாளர்கள் சொல்லியுள்ளனர். ஜோர்ஜ் என்ற பெயரில் தான் நபியின் பாத்திரத்தை வடிவமைத்து படமெடுத்த பின்பு, அதற்கு ஒலி மாற்றம் செய்துள்ளனர். இதில் நடித்த நடிகைகளிற்கே தெரியாது இதில் இப்படி ஒரு அரசியல் இருக்கும் என்று. புராதன இதிகாச கதை என்று வேறொரு திரைக்கதை சொல்லப்பட்டே படமாக்கப்பட்டுள்ளது. முழுக்க முழுக்க பொய், மோசடி, நயவஞ்சகம் போன்றவற்றின் துணையுடன் இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது. 500 மில்லியன் டொலர் தயாரிப்பிற்காக ஒதுக்கப்படுவது சாதாரண விடயமல்ல. இந்த ரிசேர்வ் நிதி எங்கிருந்து வந்தது. சூட்டிங் நடந்த இடங்கள் அனைத்திலும் ஸியோனிஸ யூத ரப்பிகள் தவறாமல் நடமாடியுள்ளனர். உலகின் கவனத்தை வேறொரு கோணம் நோக்கி நகர்த்தி, முஸ்லிம்களின் எதிர்பினை, எழுச்சியினை வைத்து ஆதாயம் தேடும் அமெரிக்க அரசியல் உலக வரலாற்றில் கேவலமான வரிகளை கொண்டு எழுதப்பட வேண்டியவை.
லிபியா. பெங்காஸியில் உள்ள அமெரிக்க தூதரகம் தாக்கப்படுகிறது. தீயில் எரிகிறது. செய்தது அல்-காய்தாவின் சக அமைப்பான அன்சாரே ஷரியத் என செய்தி சொல்கின்றன ஊடகங்கள். ஆனால் உண்மையில் இதனை தாக்கியதில் பெரும்பங்கெடுத்தவர்கள் சுதந்திர போராளிகள். அதாவது லிபிய புரட்சி என்ற பெயரில் நடந்த சர்வதேச சதியின் போது அமெரிக்க மல்பரோ சிக்கரட்களை புகைத்தபடி கண்மண் தெரியாமல் சுட்ட மேஷனரிகள்.
திரிப்போலியில் அல்லவா பிரதம ஸ்தானிகராலயம் உள்ளது. அங்கல்லவா உயர் ஸ்தானிகர் இருக்கிறார். அவ்வாறானால் பெங்காஸி ஏன் இலக்கு வைக்கப்பட்டது. காரணம் உண்டு. அங்கு தான் அமெரிக்க உதவி தூதர் “கிறிஸ்டோபர் ஸ்டீவன்ஸ்” இருந்தார். லிபிய சண்டையில் சீ.ஐ.ஏ.யின் முழு நேர அதிகாரியாக செயற்பட்டவர் இவர். அரபு வசந்தத்தின் அமெரிக்க நலன்களிற்கான பொருப்பாளர். கடாபியை கேவலமாக கொலை செய்யும் வரை திட்டங்களை வடிவமைத்து செயற்படுத்தியவர். சுருங்க சொல்லின் இலங்கையின் எரிக் சொல்கைய்ம் போல செயற்பட்டவர். பின் எதற்காக இவர் கொல்லப்பட்டார்?...
லிபியாவின் “ஏவுகணை கட்டமைப்பு” என்பது ரஷ்யாவால் வடிவமைக்கப்பட்ட அதிதொழில் நுட்பம் வாய்ந்த புரொஜெக்ட். இரசாயன ஆயுதங்களை ஏந்தி செல்லும் முகப்புகளையுடைய ஏவுகனைகள், குறிப்பாக வான் இலக்குகளை தாக்கும் தரையில் இருந்து ஏவப்படும் அதி நவீன சாம் ஏவுகனை கட்டமைப்புக்கள் இங்கே உள்ளது. இவற்றை செயழிலக்க வைப்பதும் முடிந்தால் அவற்றை கையகப்படுத்துவதுமே இவரிற்கு பென்டகனால் வழங்கப்பட்ட அசைன்மென்ட். இது தொடர்பாக இவருடன் கூட்டாக செயற்பட மேலும் நான்கு சீ.ஐ.ஏ. உயர்நிலை அதிகாரிகள் பெங்காஸியில் தளமமைத்து செயற்பட்டு வந்தனர். இது கடந்த 3 மாதங்களாக செயற்படுத்தப்படும் சீக்ரட் பிளேன்.
இவருடன் இந்த அசைன்மென்டில் சம்மந்தப்பட்ட மற்றைய அதிகாரிகளும் கொல்லப்பட்டுள்ளனர். அவர்கள் இந்த செயற்திட்டம் தொடர்பாக புறப்பட தயாரான போதே கொல்லப்பட்டனர். இந்த கொலைகளிற்கு பின்னாள் அமெரிக்கா உள்ளதா? இவர்கள் ரஷ்யாவினால் விலை போய் விட்டா்கள் என்பதனால் கொல்லப்பட்டா்களா? இல்லை இந்த உளவு குழுவினரை மோப்பம் வைத்து லிபிய இஸ்லாமிய போராளிகள் கொன்றனரா? கலக கும்பலுடன் உள்நுழைந்த ரஷ்யாவால் வாடகைக்கு அமர்த்தப்பட்டவர்கள் இதனை செய்தார்களா என்பதில் பலத்த கேள்விகள் எழுந்துள்ளன. எப்படியாயினும் இந்த கொலைகளிற்கு பின்னால் அரசியல் உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக