செப்டம்பர் 17, 2012


மனித பரிணாமம் = மல்டிபிள் பர்சனாலிடி டிஸ்ஆர்டர்?


========================================

Please Note:
மனித பரிணாம துறை என்பது மிகப்பெரியது. முடிந்தவரை இந்த பதிவை
 எளிதாக்கி, சுவாரசியமான நடையில் தரவே முயற்சித்துள்ளேன். இன்றைய 
காலத்திற்கு, குறிப்பாக இளைய தலைமுறையினருக்கு அவசியமான 

இக்கட்டுரையை சற்றே பொறுமையுடன் முழுமையாக படியுங்கள்.

========================================
1867-ஆம் ஆண்டு, கல்வர் என்ற இயற்கையாளர், மனித பரிணாமம் குறித்த 
விளக்கப்படம் ஒன்றை வரைந்தார். ப்லாடிபஸ் என்ற உயிரினமாக டைனாசர்கள் 
மாறுவதை போன்றும், கங்காருவில் இருந்து மனிதன் பரிணாமம் அடைந்ததாகவும் விளக்கியது அந்த படம்.

நல்லவேளையாக 1871-ஆம் ஆண்டு, மனித பரிணாமம் குறித்த தன்னுடைய பிரபல புத்தகத்தை வெளியிட்டார் டார்வின். இல்லையென்றால் மனித பரிணாமத்தை விளக்குகின்றேன் என்ற பெயரில் கற்பனைக்கு எட்டாத கற்பனை படங்களை வரைந்து தள்ளியிருப்பார்கள் பரிணாமவியலாளர்கள்.

குரங்கு போன்ற ஒன்றிலிருந்து(?) மனிதன் வந்ததாக கூறப்படும் கோட்பாட்டை டார்வின் பிரபலப்படுத்த, மனித பரிணாமம் குறித்த ஒருமித்த கருத்து பரிணாமவியலாளர்களிடயே உருவாகியது.

மனித பரிணாமம் என்றவுடன் சட்டென நம் நினைவுக்கு வருவது குரங்கிலிருந்து மனிதன் படிப்படியாக உருமாறும் அந்த படம் தான். யாராலும் அவ்வளவு எளிதில் மறக்க முடியாத அந்த படத்தை பிரபல ஓவியரான ருடால்ப் ஜலிங்கர் (Rudolph Zallinger), 1966-ஆம் ஆண்டு வெளியான "Early Man" என்ற புத்தகத்திற்காக வரைந்தார்.

Fig 1: "Early Man" புத்தகத்தில் இடம் பெற்ற ஜலிங்கர் வரைந்த படம்   

குரங்கிற்கும் மனிதனிற்கும் இடையே சுமார் 13 இடைநிலை உயிரினங்களை கொண்டிருந்தது அந்த படம். இந்த படமே இன்று சுருக்கப்பட்டும் வரையப்பட்டு வருகின்றது.

இப்படம் குறித்த சர்ச்சைகள் நீண்ட காலமாகவே புழக்கத்தில் இருக்கின்றன. சில மாதங்களுக்கு முன்பாக இதுக்குறித்து கருத்து தெரிவித்த "நேச்சர்" ஆய்விதழின் எடிட்டரான ஹென்றி ஜீ, மனித பரிணாமத்தை விளக்கும் இந்த வரிசையை முட்டாள்தனமானது என்று குறிப்பிட்டார்.

“We have all seen the canonical parade of apes, each one becoming more human. We know that, as a depiction of evolution, this line-up is tosh. Yet we cling to it. Ideas of what human evolution ought to have been like still colour our debates.” - Henry Gee, Palaeoanthropology: Craniums with clout, Nature, 478, 6th October 2011, page 34, doi:10.1038/478034a.  
குரங்குகள் படிப்படியாக மனிதனாகும் அணிவகுப்பை நாம் எல்லோரும் பார்த்திருப்போம். பரிணாமத்தை விளக்கும் ஒரு படமாக இந்த வரிசை முட்டாள்தனமானது என்பது நமக்கு தெரியும். இருப்பினும் நாம் இதனை பிடித்துக் கொண்டிருக்கின்றோம். மனித பரிணாமம் எப்படி இருந்திருக்க வேண்டும் என்ற ஐடியாக்கள் இன்னும் விவாதத்துக்குரியதாகவே இருக்கின்றன - (extract from the original quote of) Henry Gee, Palaeoanthropology: Craniums with clout, Nature, 478, 6th October 2011, page 34, doi:10.1038/478034a.

ஹென்றி ஜீ ஏன் இப்படி குறிப்பிட வேண்டும்?

இந்த கேள்விக்கான பதில் மிக எளிதானது. அது, அந்த படத்தில் உண்மையில்லை என்பது தான். மனிதன் படிப்படியாக மாறுவதை போலவெல்லாம் நம்மிடம் ஆதாரங்களில்லை. 

குரங்கு போன்ற ஒன்றிலிருந்து மனிதன் வந்ததாக பரிமாணவியலாளர்கள் ஒருமித்த கருத்தை கொண்டிருந்தாலும், அது எப்படி நடந்தது என்பதில் கடுமையான குழப்பங்கள் அவர்களிடையே உண்டு. ஒருவர் ஒன்றை ஆதாரம் என்று காட்டுவார், அதனை இன்னொருவர் மறுப்பார். அப்படி இல்லையா, ஆதாரம் என்று கருதப்பட்ட ஒன்று காலப்போக்கில் ஓரங்கட்டப்படும். அப்படியும் இல்லையா, ஆதாரம் என்று கருதப்பட்டது பித்தலாட்டம் என்று நிரூபிக்கப்பட்டு அதிர்ச்சியை உண்டாக்கும். மனித பரிணாம வரலாற்றை உற்று நோக்கினால் நமக்கு கிடைக்கும் சுருக்கம் இதுதான்.

வரலாற்றில் குரங்கினங்கள் இருந்திருக்கின்றன, மனித இனங்கள் இருந்திருக்கின்றன. ஆனால், குரங்கு போன்ற ஒன்றிலிருந்து மனிதன் படிப்படியாக மாறியதற்கு தான் இதுவரை நம்மிடம் ஆதாரங்கள் இல்லை. இருப்பவை எல்லாம் முன்னுக்கு பின் முரணான தகவல்களும், குழப்பங்களும் மட்டுமே.

அப்படி என்ன குழப்பங்கள் என்கின்றீர்களா? அதனை ஆழமாக அலசி ஆராயவே இந்த கட்டுரை முயற்சிக்கின்றது.

மனித பரிணாமம் என்றால் என்ன? 

பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்பாக இன்றைய மனிதர்களின் மூதாதையரும், குரங்குகளின் மூதாதையரும் ஒரு பொதுவான மூதாதையரில் இருந்து பிரிந்துவிட்டார்கள் என்பது பரிணாம புரிதல்.

                                     Fig 2: எளிமைப்படுத்தப்பட்ட மனித பரிணாம விளக்கப்படம் 

சரி, அப்படியென்றால் அந்த பொதுவான மூதாதையர் யார்? அந்த பொதுவான மூதாதையரில் இருந்து வந்த மனிதனின் மூதாதையர் யார்?

இந்த கேள்விக்கான விடை, "இன்னும் தெளிவான முடிவுக்கு பரிணாம உலகம் வரவில்லை" என்பது தான். என்ன, நம்முடைய மூதாதையர் யார் என்ற தெளிவு இல்லாமலேயே மனிதன் குரங்கு போன்ற ஒன்றிலிருந்து தான் வந்திருப்பான் என்று சொல்கின்றார்களா? என்று நீங்கள் கேட்டால் அதற்கு கீழ்காணும் கருத்து ஒரு ஹின்ட்டை கொடுக்கும்.

"..Ramapithecus, a species of fossil ape from south Asia, which was mistakenly assumed to be an early human ancestor in the 1960s and 1970s, but later found to be a close relative of the orangutan" - Fossils May Look Like Human Bones: Biological Anthropologists Question Claims for Human Ancestry, Science daily, 16th Feb 2011
தென்னாசியாவில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட ரமபிதகஸ் என்ற படிமம், மனிதனின் மூதாதையர் என்று 1960-1970க்களில் தவறுதலாக எண்ணப்பட்டது. ஆனால் இந்த படிமம் ஓரங்குட்டான் குரங்கின் நெருங்கிய உறவினர் என்பது பின்னர் தெரியவந்தது - (extract from the original quote of) Fossils May Look Like Human Bones: Biological Anthropologists Question Claims for Human Ancestry, Science daily, 16th Feb 2011.    

மேற்கண்ட உதாரணம் போலத்தான் இன்று வரை நடந்து வருகின்றது. ஒரு படிமத்தை மனிதனின் மூதாதையர் என்பார்கள், பின்னர் அது குரங்கின் படிமம் என்றோ அல்லது மனிதனின் மூதாதையர் இல்லை என்றோ நிராகரிக்கப்படும். இன்று வரை மனிதனின் மூதாதையர் "இந்த குரங்கு போன்ற ஒன்று தான்" என்று எந்த ஆதாரத்தை நோக்கியும் பரிணாம உலகால் கைக்காட்ட முடியவில்லை.

ஆக, மனிதன் எதிலிருந்து வந்தான் என்ற கேள்விக்கு "குரங்கு போன்ற ஒன்றிலிருந்து" என்ற பொதுவான பதில் மட்டுமே உள்ளதே தவிர ஆதாரங்கள் என்று ஒன்றுமில்லை. 

இன்னும் ஆழமாக மனித பரிணாமத்தை கீறுவோம்....

அப்படி என்ன தான் பிரச்சனை? 

ரைட். இந்த வவ்வால் பார்த்திருப்பீர்கள் :-). பாலூட்டியான அந்த உயிரினம் நன்கு பறக்கக்கூடியது என்பது நாம் அறிந்ததே. வவ்வால் பறக்கும் தன்மையை கொண்டிருந்தாலும் அது பறவைகளிலிருந்து பரிணாமம் அடைந்தது என்று பரிணாம உலகம் கூறுவதில்லை. மாறாக, பறக்கும் தன்மையை வவ்வால் தன்னிச்சையாக வளர்த்து கொண்டது என்றே பரிணாம உலகம் கூறுகின்றது (Convergent Evolution).

ஆக, ஒரே பண்புகள் இருவேறு உயிரினங்களில் காணப்படுகின்றது என்பதற்காக அதிலிருந்து இது வந்தது என்று அர்த்தமல்ல. வவ்வாலிடம் காட்டும் இந்த அணுகுமுறையை மனித பரிணாமத்தில் காட்டாதது தான் குழப்பங்களுக்கு முதல் காரணம்.

மனிதனுக்கும் குரங்கினங்களுக்கும் சிலபல ஒற்றுமைகள் உள்ளனவா, அப்படியென்றால் மனிதன் குரங்கிலிருந்து தான் வந்திருக்க வேண்டும். ஆதிகால குரங்கின படிமங்களில் மனிதனின் சில தன்மைகள் தென்படுகின்றவா, அப்படியானால் அவை மனிதனின் மூதாதையராக தான் இருக்க வேண்டும். இப்படித்தான் பல படிமங்களை மனிதனின் மூதாதையர் என்று எண்ணி பின்னர் அவை அழிந்து போன குரங்கின் படிமம் என்றோ அல்லது மனிதனின் மூதாதையர் இல்லையென்றோ நிரூபிக்கப்பட்டு ஓரங்கட்டப்பட்டன.

இதில் கவனிக்கப்பட வேண்டிய மற்றொரு முக்கிய விவகாரமும் உண்டு. சுமார் 40-80 இலட்சம் ஆண்டுகளுக்கு இடையில், மனிதர்களின் மூதாதையர்களும் சிம்பன்சிக்களின் மூதாதையர்களும் ஒரு பொதுவான மூதாதையரில் இருந்து பிரிந்துவிட்டனர் என்பது பரிணாம யூகம். ஆகையால், இந்த இடைப்பட்ட காலத்தில் மனிதத்தன்மைகள்(?) சிலவற்றுடன் குரங்கு போன்ற படிமங்கள் கிடைக்கின்றனவா, அப்படியென்றால் மனித பரிணாமத்திற்கு ஆதாரமாக காட்ட உங்களுக்கு ஒரு உறுப்பினர் கிடைத்தாகிவிட்டது :-).

ஆனால் இந்த லாஜிக்கில் அர்த்தமுள்ளதா? நிச்சயம் இல்லை. காரணம், சுமார் 80 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பான குரங்கின படிமங்கள் கூட மனிதனின் அதே சில தன்மைகளை பிரதிபலிக்கின்றன. ஆனால் அவற்றை மனிதனின் மூதாதையர் என்று பரிணாம உலகம் கூறுவதில்லை. குரங்கின் படிமங்கள் என்றே கூறுகின்றனர். ஏன் இந்த இரட்டை நிலை?

Find an ape-like creature between 4 and 8 million years ago that fits at least some of these criteria, and you have a contender for an early human. What remains unclear is whether these characteristics are good indicators of membership in the human family. Wood and Harrison suggest that they might not be - Ancestor Worship, Wired, 22nd Feb 2011.
40-80 இலட்சம் ஆண்டுகளுக்கு இடையில், மனிதனின் சில தன்மைகளோடு காணப்படும் ஒரு உயிரினத்தை கண்டுபிடியுங்கள். அப்படியானால் உங்களுக்கு ஆரம்பகால மனிதனுக்கான ஒரு உறுப்பினர் கிடைத்தாகிவிட்டது. ஆனால் இம்மாதிரியான தன்மைகள் இருப்பது மனித குடும்பத்தில் அவற்றிற்கு ஒரு இடத்தை கொடுத்துவிடுமா என்பது இன்னும் தெளிவாகவில்லை. இல்லை என்றே ஆலோசனை கூறுகின்றனர் வுட் மற்றும் ஹாரிசன் (என்ற உயிரியல் மானிடவியலாளர்கள்) - (Extract from the original quote of) Ancestor Worship, Wired, 22nd Feb 2011.

யாரையெல்லாம் மனிதனின் மூதாதையர் என்று கருதினர்?

1. Sahelanthropus tchadensis - 70 லட்சம் ஆண்டுகளுக்கு முந்தைய படிமம்.
2. Orrorin tugenensis - 60 லட்சம் ஆண்டுகளுக்கு முந்தையது.
3. ஆர்டி (Ardipithecus ramidus) - 44 லட்சம் ஆண்டுகளுக்கு  முந்தையது.
4. லூசி (Australopithecus afarensis) - 32 லட்சம் ஆண்டுகளுக்கு  முந்தையது.
5. செடிபா (Australopithecus sediba) - 19 லட்சம் ஆண்டுகளுக்கு  முந்தையது.

நீங்கள் மேலே காண்பவை எல்லாம் நம்முடைய மூதாதையர் என்று எண்ணப்பட்ட பிரபல படிமங்கள். 

படிமங்கள் என்றவுடன் ஒரு விசயத்தை நினைவில் கொள்வது நல்லது. இந்த பழங்கால படிமங்கள் என்பவை துகள்கலாகவே (fragments) நமக்கு பெரும்பாலும் கிடைத்துள்ளன. அவற்றை மறுசீரமைத்து (Reconstruction) தான் தங்கள் எண்ணங்களை வெளிப்படுத்துகின்றனர் பரிணாமவியலாளர்கள். உதாரணத்திற்கு ஆர்டி மற்றும் லூசியின் மறுசீரமைக்கப்பட்ட படிமங்களை பாருங்கள்.

Fig 3: (a) ஆர்டியின் படிமம் (b) லூசியின் படிமம் 

ஒருவர் ஒருமாதிரியாக இந்த துகள்களை மறுசீரமைத்து ஒரு கருத்தை சொல்லுவார். இன்னொருவரோ வேறுமாதிரியாக மறுசீரமைத்து வேறொரு கருத்தை சொல்லுவார். நீங்கள் ஆதிகால மனிதன் படம் என்பதாக பல்வேறு படங்களை பார்த்திருப்பீர்கள். அவையெல்லாம் இப்படியாக மறுசீரமைக்கப்பட்டு பின்னர் அவற்றிற்கு கற்பனையில் தோல் போர்த்தப்பட்டு வரையப்பட்டவைகளே.

சரி விசயத்திற்கு வருவோம். ஆர்டி குறித்த தகவல்கள் சில ஆண்டுகளுக்கு முன்பாக (2009) வெளிக்கொண்டுவரப்பட்டபோது மிகப்பெரிய பாதிப்பை பரிணாம உலகில் அது ஏற்படுத்தியது. சைன்ஸ் மற்றும் டைம் போன்ற இதழ்கள் அதனை அவ்வருடத்தின் மிகச்சிறந்த கண்டுபிடிப்பாக வர்ணித்தன. ஆனால் அந்த உற்சாகம் நீண்ட நாள் நீடிக்கவில்லை. சில மாதங்களிலேயே ஆர்டியின் மனித மூதாதையர் அந்தஸ்து கேள்விக்குறியாக்கப்பட்டது.

"Both TIME and Science named her the "Scientific Breakthrough of the Year." But now Ardi has found herself in a spot of controversy. Two new articles being published by Science question some of the major conclusions of Ardi's researchers, including whether this small, strange-looking creature is even a human ancestor at all" - Ardi: The Human Ancestor Who Wasn't?, Time, 27th May 2010. 
டைம் மற்றும் சைன்ஸ் ஆகிய இரண்டும் ஆர்டியை "அவ்வருடத்தின் அறிவியல் கண்டுபிடிப்பாக" பெயரிட்டன. ஆனால் ஆர்டி இப்போது சர்ச்சையில் சிக்கியுள்ளது. சைன்ஸ் ஆய்விதழில் பிரசுரமாகியுள்ள இரண்டு கட்டுரைகள் ஆர்டி ஆய்வாளர்களின் முக்கிய முடிவுகளை கேள்விக்குறியாக்கியுள்ளன. சிறிய, விந்தையான இந்த உயிரினம் மனித மூதாதையரா என்ற கேள்வியும் அதில் அடக்கம் - (extract from the original quote of) Ardi: The Human Ancestor Who Wasn't?, Time Science, 27th May 2010.

ஆர்டி முதற்கொண்டு நீங்கள் மேலே காணும் படிமங்களை மனிதனின் மூதாதையர் என்று கருத முக்கிய காரணம், அவற்றில் தென்பட்ட மனிதத்தன்மைகளே(?). முக்கியமான தன்மைகள் என்றால் இரு கால்களால் நடப்பதும் (Bipedalism), சிறிய கோரைப்பற்களுமே. ஆனால் மனித மூதாதையர் என்று கருதப்பட்ட இவற்றில் காணப்படும் அதே தன்மைகள் 80-70 லட்சம் ஆண்டுகளுக்கு முந்தைய குரங்கின படிமங்களிலும் காணப்படுகின்றன (உதாரணத்திற்கு Oreopithecus, Ouranopithecus மற்றும் Gigantopithecus போன்றவை). ஆனால் இவற்றை மனிதனின் மூதாதையர் என்று பரிணாமவியலாளர்கள் கூறுவதில்லை.

80-40 லட்சம் ஆண்டுகளுக்கு இடையில் மனித தன்மைகளுடன் குரங்கு போன்ற(?) படிமம் கிடைத்தால் அவை மனித மூதாதையர். அதுவே 80 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு கிடைத்தால் அவை குரங்குகள். என்ன லாஜிக் இது? தங்கள் யூகங்களுக்கு ஏற்றார்போல ஆதாரங்களை வளைத்து கொள்கின்றார்கள் என்பதை தவிர வேறென்ன காரணம் இருக்க முடியும்?

அப்படியானால் மனிதனின் மூதாதையர் என்று கருதப்படும் இந்த பழங்கால படிமங்கள்?

Sahelanthropus tchadensis, Orrorin tugenensis மற்றும் ஆர்டி குறித்து நேச்சர் ஆய்விதழில் சென்ற ஆண்டு வெளியான ஆய்வுக்கட்டுரை, இந்த படிமங்கள் மீதான எதிர்மறை விமர்சங்களை மேலும் அதிகப்படுத்தியது. இவை குரங்கின் படிமங்களாக இருக்கவே அதிக வாய்ப்பிருப்பதாக கூறினார்கள் அந்த ஆய்வாளர்கள்.

"We believe that it is just as likely or more likely that they are fossil apes situated close to the ancestry of the living great ape and humans" - Terry Harrison, a professor in New York university's Department of Anthropology and director of its Center for the Study of Human Origins. Science Daily, Feb. 16, 2011. 
இவை குரங்கின் படிமங்களாக இருக்கவே அதிக வாய்ப்புள்ளதாக நாங்கள் நம்புகின்றோம் - (extract from the original quote of) Terry Harrison, a professor in New York university's Department of Anthropology and director of its Center for the Study of Human Origins. Science Daily, Feb. 16, 2011.

அடுத்து லூசிக்கு வருவோம். 

Australopithecus afarensis (லூசி இந்த பிரிவை சேர்ந்தது தான்) குறித்து பாரம்பரியமிக்க PNAS (Proceedings of the National Academy of Sciences) ஆய்விதழில் வெளியான ஆய்வுக்கட்டுரை, இந்த படிமங்களில் காணப்படும் கீழ்த்தாடை கொரில்லாக்களை ஒத்திருப்பதாகவும், இவற்றை மனிதனின் மூதாதையர் என்று கூறுவதில் சந்தேகம் இருப்பதாகவும் குறிப்பிட்டது. கூடவே மனித மூதாதையர் என்ற நிலையிலிருந்து Australopithecus afarensis வெளியேறுவதாகவும் கூறியது. லூசியை மனித மூதாதையர் இல்லை என்று கூறும் விக்கிபீடியா இந்த ஆய்வுக்கட்டுரையையே மேற்கோள் காட்டுகின்றது.

"Mandibular ramus morphology on a recently discovered specimen of Australopithecus afarensis closely matches that of gorillas......
The presence of the morphology in both the latter and Au. afarensis and its absence in modern humans cast doubt on the role of Au. afarensis as a modern human ancestor"
 - Gorilla-like anatomy on Australopithecus afarensis mandibles suggests Au. afarensis link to robust australopiths, PNAS, 17th April 2007.
சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட Australopithecus afarensis படிமத்தில் காணப்படும் கீழ்த்தாடை உருவமைப்பு கொரில்லாக்களோடு நெருக்கமாக ஒத்துப்போகின்றது.........Australopithecus afarensis மற்றும் Australopithecus robustus ஆகிய இரண்டிலும் இந்த உருவமைப்பு காணப்படுகின்றது. அதே நேரம் தற்காலத்திய மனிதர்களில் இது காணப்படவில்லை. Australopithecus afarensis மனிதனின் மூதாதையர் என்ற கருத்தில் இதன்மூலமாக சந்தேகம் விதைக்கப்படுகின்றது - (Extract from the original quote of) Gorilla-like anatomy on Australopithecus afarensis mandibles suggests Au. afarensis link to robust australopiths, PNAS, 17th April 2007.

இறுதியாக செடிபா:

ஆஹா...செடிபாவை பொருத்தவரை நிலைமை சற்று வித்தியாசமானது. பொதுவாக மனித மூதாதையர் என்று கருதப்படும் படிமங்கள் முதலில் பரபரப்பாக பேசப்படும். பின்னர், சிறிது காலத்திற்கு பிறகு மனித மூதாதையர் இல்லை என்று ஓரங்கட்டப்படும். ஆனால் செடிபாவை பொருத்தவரை அதுக்குறித்த தகவல்கள் வெளியானதில் இருந்தே சர்ச்சைகளும் அலங்கரித்துவிட்டன.

2008-ஆம் ஆண்டு செடிபா படிமங்கள் கண்டுபிடிக்கப்பட்டு, 2010-ஆண்டு லீ பெர்கர் மற்றும் அவரது குழுவினரால் இதுக்குறித்த தகவல்கள் வெளிவந்து பரபரப்பூட்டின. இதனை மனிதனின் மூதாதையர் என்று கூறிய பெர்கரின் கருத்து மற்ற ஆய்வாளர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது, மிகைப்படுத்தப்படுவதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டது.

"..the researchers' suggestion that the fossils represent a transitional species in human evolution, sitting between Australopithecus and Homo species, has been criticized by other researchers as overstated" - Claim over 'human ancestor' sparks furore, 8 April 2010, Nature, doi:10.1038/news.2010.171.
(மனித பிரிவுக்கு முந்தைய) Australopithecus பிரிவுக்கும், (மனித பிரிவான) ஹோமோவுக்கும் இடைப்பட்டவைகளாக செடிபா படிமங்கள் இருப்பதாக கூறும் ஆய்வாளர்களின் கருத்து "மிகைப்படுத்தப்பட்டதாக" மற்ற ஆய்வாளர்களால் விமர்சிக்கப்படுகின்றது - (extract from the original quote of) Claim over 'human ancestor' sparks furore, 8 April 2010, Nature, doi:10.1038/news.2010.171. 
இன்னும் வேண்டுமா என்பது போல, சைன்ஸ் ஆய்விதழில் வெளியான ஒரு கட்டுரை லீ பெர்கரின் நம்பகத்தன்மை மீது கேள்வி எழுப்பியது. சற்று காலம் அடங்கியிருந்த செடிபா குறித்த செய்திகள் தற்போது (இவை சார்ந்த பாறைகளில் நடத்தப்பட்ட CT Scan வடிவில்) மறுபடியும் ஆரம்பித்து உள்ளன (July 2012). ஆனால் விடை என்னவோ அதே தான். சில தொல்லுயிரியலாளர்களே செடிபாவை மனித மூதாதையர் என்று ஏற்றுக்கொள்வதாக சமீபத்திய நியூயார்க் டைம்ஸ் குறிப்பிடுகின்றது. இருப்பினும் பொறுத்திருந்து பார்ப்போம், செடிபா வரலாற்றை மாற்றுகின்றதா என்று... :-)

மொத்தத்தில், மனித பரிமாணம் தன் பர்சனாலிடியை ஒவ்வொருவிதமாக வரலாற்றில் மாற்றிக்கொண்டே தான் வந்துள்ளது. 

"Anyone who has studied the history of paleoanthropology knows how many times the list of our direct ancestors has been changed, and future discoveries of previously-unknown species will continue to change the picture. We have an outline of our ancestry, but the details are still subject to change" - Ancestor Worship, Wired, 22nd Feb 2011.
நம்முடைய மூதாதையர் யார் என்ற பட்டியல் எத்தனை முறை மாற்றியமைக்கப்பட்டிருக்கின்றது என்பதை தொல்லுயிரியல்-மானிடவியல் வரலாற்றை படித்த அனைவரும் அறிவர். முன்பு நாம் அறியாத உயிரினங்கள் குறித்த கண்டுபிடிப்புகள் தொடர்ந்து காட்சியை மாற்றியமைத்து வருகின்றன. நம்முடைய மூதாதையர் எப்படி இருந்திருக்க வேண்டும் என்பது குறித்த சுருக்கமான வர்ணனை நம்மிடம் உண்டு. அந்த தகவல்களும் மாறக்கூடியவையே - (extract from the original quote of) Ancestor Worship, Wired, 22nd Feb 2011.

மனிதன் எதிலிருந்து வந்தான் என்று கேட்டால் "குரங்கு போன்ற ஒன்றிலிருந்து" என்று கூறி, மனித பிரிவுக்கு முந்தைய Ardipithecus மற்றும் Australopithecus பிரிவுகளை காட்டுவார்கள் பரிணாமவியலாளர்கள். அப்படியா என்று அந்த பிரிவுகளுக்குள் சென்று அங்கிருக்கும் படிமங்களை படித்தால் ஒவ்வொன்றாக இவர்களே மறுத்திருப்பார்கள் அல்லது சர்ச்சைக்குரியதாக இருக்கும். அப்புறம் எப்படி இவற்றில் இருந்து மனிதன்?

நான் முன்னவே கூறியது போன்று, மனிதன் எதிலிருந்து வந்தான் என்ற கேள்விக்கு "குரங்கு போன்ற ஒன்றிலிருந்து" என்ற பொதுவான பதில் மட்டுமே உள்ளதே தவிர ஆதாரங்கள் என்று ஒன்றுமில்லை. எந்த படிமத்தை நோக்கியும் இது தான் மனித மூதாதையர் என்று ஒருமித்த கருத்தோடு கூறமுடியாத நிலையில் தான் பரிணாம உலகம் இருக்கின்றது. 

அதெல்லாம் சரி, அப்ப நம்ம பிரிவு?

நம்முடைய ஹோமோ பிரிவு ரொம்ப சுவாரசியமானது. இந்த ஹோமோ பிரிவு குறித்து, இறைவன் நாடினால், விரிவாக எதிர்காலத்தில் பார்ப்போம். இப்போதைக்கு இந்த கட்டுரைக்கு ஏதுவாக சில தகவல்களை சுருக்கமாக பார்த்துவிடுவோம்.

ஹோமோ பிரிவில் முக்கிய உறுப்பினர்கள் என்றால் அவை பின்வருபவை தான். 

1. Homo Habilis
2. Homo erectus
3. Homo Sapiens (நியாண்டர்தல் மனிதர்கள் மற்றும் தற்காலத்திய மனிதர்கள்)

Fine. நம் ஹோமோ பிரிவின் முதல் உறுப்பினரான H.habilis-லேயே சர்ச்சை கால் மேல் கால் போட்டு உட்கார்ந்துள்ளது. இதன் உடலமைப்பு குரங்குகளை போன்று அமைந்துள்ளதாக விக்கி கூறுகின்றது. சில ஆண்டுகளுக்கு முன்பாக "பரிணாம கோட்பாடு கேள்விக்குறியாக்கப்பட்டதாக" பல ஊடகங்களும் அல்லோலப்பட்டன. அதற்கு காரணம், மீவ் லீக்கி என்ற பிரபல தொல்லுயிரியலாளரும், அவரது குழுவினரும் கண்டெடுத்த H.habilis மற்றும் H.erectus படிமங்கள் தான். இவை இரண்டும் ஒன்றுக்கொன்று அருகாமையிலேயே கண்டெடுக்கப்பட்டன.

H.habilis பரிணாமம் அடைந்து H.erectus-ஆக மாறியதாக நீண்ட காலமாக எண்ணப்பட்டது. ஆனால் லீக்கியின் ஆய்வு இதனை கேள்விக்குறியாக்கியது. இந்த இரண்டு உயிரினங்களும் சுமார் ஐந்து லட்சம் ஆண்டுகள் ஒன்றுக்கொன்று அருகாமையில் வாழ்ந்ததும், habilis-இல் இருந்து erectus வரவில்லை என்பதும் தெளிவானது.

"Their co-existence makes it unlikely that Homo erectus evolved from Homo habilis" - Meave Leakey, BBC, Finds test human origins theory. 8th August 2007
இரண்டும் சமகாலத்தில் வாழ்ந்தது, Homo Habilis-லிருந்து Homo Erectus வந்திருக்க வேண்டும் என்ற கருத்தினை சாத்தியமற்றதாக ஆக்கியுள்ளது - (extract from the original quote of) Meave Leakey, BBC, Finds test human origins theory. 8th August 2007

இந்த நிகழ்வை தான் ஊடகங்கள் "பரிணாம கோட்பாடு கேள்விக்குறியாக்கப்பட்டதாக" பிரபலப்படுத்தின. ஆக, இதிலிருந்து அது வந்தது என்ற யூகம் (வழக்கம் போல) செயலிழந்து, இரண்டிற்கும் பொதுவான மூதாதையர் என்ற புது யூகம் வந்துவிட்டது.

Fig 4: (a) பழைய பரிணாம யூகம் (b) புதிய பரிணாம யூகம். 

H.habilis குறித்த சர்ச்சைகள் புதிதல்ல. இவற்றை மனித பிரிவிலிருந்து நீக்கி முந்தைய பிரிவான Australopithecus-சில் சேர்க்க வேண்டுமென்று சில துறைச்சார்ந்த வல்லுனர்கள் கூறிவந்தார்கள். அவர்களில் பிரபல தொல்லுயிரியலாளரான ரிச்சர்ட் லீக்கியும் ஒருவர்.

எது எப்படியோ மனிதனின் மூதாதையர் என்ற அந்தஸ்திலிருந்து H.habilis-சும் கீழிறக்கப்பட்டுவிட்டது. 

எந்தவொரு சர்ச்சையும் இன்றி "இவன் தான் மனிதன்" என்று எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்படும் மனிதனின் மூதாதையர் என்றால் அது H.erectus தான். இன்றைய மனிதனின் உடற்கூறுகலோடு ஒத்திருக்கின்றது இவர்களது உடலமைப்பு. சுமார் 18 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னால் தோன்றியதாக கருதப்படும் இவர்களை அறிவில் குறைந்தவர்கள் என்று பரிணாமவியலாளர்கள் கூறுவது மற்றுமொரு யூகமே.

இவர்கள் பேசக்கூடிய தகுதியை பெற்றிருந்திருக்கின்றார்கள், நெருப்பை உருவாக்கக்கூடியவர்களாகவும், கண்ட்ரோல் செய்யக்கூடியவர்களாகவும் இருந்திருக்கின்றார்கள். மனிதர்களை போல சமூக கட்டமைப்பை கொண்டிருந்திருக்கின்றார்கள். சிக்கலான கருவிகளை பயன்படுத்தியிருக்கின்றார்கள். எல்லாவற்றிற்கும் மேலாக மிதவை போன்றவைகளில் கடல் கடந்து பயணித்திருக்கின்றார்கள். கடல் மார்க்கமாக இடம் விட்டு இடம் போவதெல்லாம் அறிவில் குறைந்தவர்கள் செய்யக்கூடிய காரியமா?

சுருக்கமாக சொல்லப்போனால் மனிதன் தோன்றியதிலிருந்தே அறிவில் சிறந்தவனாகத் தான் இருந்திருக்கின்றான். படிப்பவர்களை வியப்பின் உச்சிக்கே அழைத்துச் செல்லும் இவை குறித்தும், மேலும் சிலவற்றை (like Laetoli footprints etc) குறித்தும் எதிர்க்கால பதிவுகளில் விரிவாக பார்ப்போம். (இன்ஷா அல்லாஹ்)

எப்படி நியாண்டர்தல் மனிதர்கள் விசயத்தில் தங்கள் தவறான பார்வையை பரிணாமவியலாளர்கள் மாற்றிக்கொண்டார்களோ, அதேநிலை விரைவில் H.erectus-க்கும் வரலாம். 

இறுதியாக:

1. மனித பரிணாம படத்தில் காணப்படும் வரிசையில் எந்த உண்மையும் கிடையாது. இனியும் யாராவது அந்த படத்தை காட்டினால், ஹென்றி ஜீ கூறியது போல "முட்டாள்தனமானது" என்று நீங்கள் கூறலாம்.

2. மனிதனின் மூதாதையர் என்று கருதப்படும் (பிரபல) குரங்கு போன்ற படிமங்கள் எவையும் மனிதனின் மூதாதையர் அல்ல. அல்லது அட்லீஸ்ட் ஒருமித்த கருத்துக்கு பரிணாம உலகம் இன்னும் வரவில்லை.

3. மனித இனம் திடீரென்றே படிமங்களில் தோன்றியுள்ளது. குரங்கு போன்ற ஒன்றிலிருந்து  படிப்படியாக மனிதன் தோன்றியதற்கு ஆதாரங்கள் இல்லை.

4. மனிதன் தான் தோன்றியதிலிருந்தே அறிவில் சிறந்தவனாகத் தான் இருந்திருக்கின்றான்.

So, What's more?????? :-) :-)

இறைவன் நம் அனைவரையும் மூட நம்பிக்கைகளில் இருந்து காத்து நேர்வழியில் செலுத்துவானாக.....ஆமீன்.

இறைவனே எல்லாம் அறிந்தவன்...

My Sincere thanks to:
1. Smithsonian Institution.

Figure Sources:
Fig 1 - Wikipedia.
Fig 2 - Drawn by Aashiq Ahamed
Fig 3 - Wikipedia
Fig 4 - University of California (Berkeley) website.

References:
1. Human Family Tree - Smithsonian Institution's Nation Museum of Natural History. link
2. Raining on Evolution’s Parade - I.D. Magazine, March/April 2006. link
3. March of Progress - wikipedia. link
4. Australopithecus - Encyclopedia Brittanica. link
5. Claim over 'human ancestor' sparks furore - Nature, 8 April 2010, doi:10.1038/news.2010.171. link
6. Australopithecus africanus - Australian Museum. link
7. Australopithecus sediba: can we stop calling it a 'missing link? - Telegraph blogs. September 10th, 2011. link
8. Convergent evolution - Biology Online. link
9. Behavioral and phylogenetic implications of a narrow allometric study of Ardipithecus ramidus - Homo, Volume 62, Issue 2, April 2011, Pages 75–108. link
10. Ardi: The Human Ancestor Who Wasn't? - Time Science, 27th May 2010. link
11. The evolutionary context of the first hominins - Nature 470, 347–352, 17 February 2011, doi:10.1038/nature09709.link
12. Ancestor Worship - Wired, February 22, 2011. link
13. Was “Ardi” not a human ancestor after all? New review raises doubts - Scientific American blog, February 16, 2011. link
14. Fossils May Look Like Human Bones: Biological Anthropologists Question Claims for Human Ancestry - Science daily, Feb. 16, 2011. link
15. When it comes to evolution, headlines often get it wrong - University of California (Berkeley) Museum of Paleontology, September 2007. link
16. Head to head - Nature, 9 August 2007, doi:10.1038/nature05986. link
17. Finds test human origins theory -  BBC, 8 August 2007. link
18. Fossil Find Challenges Evolutionary Theory - Digital Journal, 9 Aug 2007. link
19. Fossil find casts doubt on origins of man - ABC News, 10 Aug 2007. link
20. Our Species Mated With Other Human Species, Study Says - National Geographic, March 6, 2002.  link
21. Human precursors went to sea, team says - Physorg. August 17th, 2011. link
22. Hominids Went Out of Africa on Rafts - Wired. January 8, 2010. link
23. Primitive Humans Conquered Sea, Surprising Finds Suggest - National Geographic, February 17, 2010. link
24. Ancient Island Tools Suggest Homo erectus Was a Seafarer - Science, 13 March 1998, Vol. 279 no. 5357 pp. 1635-1637, DOI: 10.1126/science.279.5357.1635. link
25. Neanderthals, Humans Interbred—First Solid DNA Evidence - National Geographic, May 6, 2010. link
26. List of human evolution fossils - Wikipedia. link
27. Disappearing Link, Our Evolutionary Ancestors Keep A-Changing - Salvo magazine. link
28. Sahelanthropus - Wikipedia. link
29. Hominid and hominin – what’s the difference? - Australian Museum. link
30. Lucy (Australopithecus) - Wikipedia. link
31. Gorilla-like anatomy on Australopithecus afarensis mandibles suggests Au. afarensis link to robust australopiths - PNAS,  April 10, 2007. doi:  10.1073/pnas.0606454104. link
32. Proceedings of the National Academy of Sciences of the United States of America - Wikipedia. link
33. CT Scans Reveal Early Human Fossils inside Rock - Scientific Amaerican. July 13, 2012. link
34. Surprise Human-Ancestor Find, Key Fossils Hidden in Lab Rock - National Geographic. July 12, 2012. link
35. Australopithecus sediba - Wikipedia. link
36. Ramus - Online Encyclopedia. link
37. The diet of Australopithecus sediba - Nature, 27 June 2012, doi:10.1038/nature11185. link
38. Paleoanthropologist Now Rides High on a New Fossil Tide - Science, 9th September 2011, vol. 333 no. 6048 pp. 1373-1375, DOI: 10.1126/science.333.6048.1373. link
39. Some Prehumans Feasted on Bark Instead of Grasses - New York Times, June 27, 2012. link
40. Candidate Human Ancestor From South Africa Sparks Praise and Debate - Science, Vol. 328 no. 5975 pp. 154-155, DOI: 10.1126/science.328.5975.154. link
41. Palaeoanthropology: Craniums with clout - Nature, 478, 6th October 2011, page 34, doi:10.1038/478034a. link
42. Homo erectus - Wikipedia. link
43. Evolutionary Back Story: Thoroughly modern spine supported human ancestor - Science News, Volume 169, No. 15, May 6, 2006, p. 275. link
44. Bat - Wikipedia. link
45. Australopithecus - Wikipedia. link
46. Laetoli - Wikipedia. link
47. Human ancestors walked comfortably upright 3.6 million years ago, new footprint study says - Scientic American, 20th March 2010. link

வஸ்ஸலாம்.

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹமத் அ 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக