அவர் பெயர் நூர். ஆப்கனிஸ்தான் வாசி. நண்பர்களுடன் சேர்ந்து சந்தோஷமாக பீடி புகைத்துக்கொண்டே அரசியல் பேசிக்கொண்டிருந்தார். கும்பலாக வந்தார்கள். பிடித்து
கீழே தள்ளி நாலு சாத்து சாத்தினார்கள். எட்டி
உதைத்தார்கள். அப்படியே வாரி ஜீப்பில் போட்டு
கொண்டு போய் உள்ளே தள்ளினார்கள். விசாரணை
தொடங்கியது. உண்மையைச் சொல் துப்பாக்கிகளை
எங்கே வைத்திருக்கிறாய் என்றான் ஒருவன். எந்தத் துப்பாக்கியை
என்றார் நூர். பளாரென்று ஒரு அறை விழுந்தது. நான்கு பேர்
நூரின் மீது ஏறி நின்று மிதித்தார்கள். அவர் உடைகளைக் களைந்தார்கள்.
ஒரு
ஜெர்மன் ஷெப்பர்ட் நாய் ஏவிவிடப்பட்டது. அடுத்த ஐந்தாவது நிமிடத்தில்
நூர்
அலறியடித்துக் கொண்டு அத்தனை 'உண்மைகளையும்' கக்கிவிட்டார்.