“றோ“ இந்திய அரசின் கொலைக்கரம் - கடந்தகால நிகழ்வுகளும் நிகழ்கால நிமிடங்களும்
R.A.W. - இந்த பெயர் இந்தியாவிற்குள்ளேயே பலரிற்கு தெரியாது. ஒரு சாதாரண அடிமட்ட இந்திய குடிமகனிற்கும் இந்த சொல்லிற்கும் சம்மந்தமேயில்லை. அவர்களிற்கு தெரிந்ததெல்லாம் C.B.I. மட்டுமே.
ஆனால் தெற்காசியாவிலும் இன்னும் பல நாடுகளிலும் இந்த R.A.W.ன் (Research and Analysis Wing (R&AW or RAW) திருவிளையாடல்கள் ஏராளம்.
எப்படி மத்திய கிழக்கில் அமெரிக்க உளவமைப்பான C.I.A. சதி நாச வேலைகளில் ஈடுபடுகின்றதோ அதையொத்த வேலைகளையே
றோவும் செய்கிறது. அமெரிக்க சீ.ஐ.ஏ., பிரித்தானிய M16, இஸ்ரேலிய மொஸாட், ரஷ்ய கே.ஜீ.பீ. போன்றவற்றிற்கு நிகரான கட்டமைப்பில் மட்டுமல்லாது சதி நாச வேலைகளிலும் முன்னணியில் திகழும்
பாகிஸ்தானுடனான எல்லைப் போர் போன்றவற்றில் ஏற்பட்ட
இழப்புகளிற்கு முக்கியமான காரணி எதிரியின் நகர்வுகள் பற்றிய துல்லியமான திரட்டப்பட்ட தகவல்கள் இல்லாமையே என்பதை
உணர்ந்த இந்திய அரசு 1968ல் இந்த அமைப்பை ஸ்தாபித்தது.
இந்தியாவின் அரசியல், இராணுவ நலன்களிற்கு பாதகமாக
தொடர்பான தகவல்களை துல்லியமாக திரட்டுதல், பயங்கரவாத தாக்குதல்களிற்கு எதிரான பதில் தாக்குதல்களை திட்டமிடல்,
தனி நபர், குழுக்கள் போன்றவற்றிற்கு எதிரான நிழல்
நடவடிக்கைகளை மேற்கொள்ளல், புலனாய்வு தகவல்களை அரசிற்கு
முன் கூட்டியே வழங்கள், ஆளும் அரசின் ஸ்திரத்தன்மைக்கு ஏற்ற புற
நிலை களங்களை செயற்கையாக உருவாக்குதல் என இது பல
முனைகளில் முணைப்புடன் பணியாற்றுகிறது.
பிரதமர் தவிர்ந்த வேறெவர்க்கும் பதிலளிக்க வேண்டிய கட்டாயமற்ற, மட்டற்ற அதிகாரங்களை கொண்ட தேசிய நிறுவனம் இது. இதன்
அனைத்து விதமான வசதிகளும் தேவைகளும் பூர்த்தி செய்யப்பட்ட நிலையில் இந்திய தேசத்தின் வெளிவிவகார மற்றும் பாதுகாப்பு கொள்கைகளை நிர்ணயிக்கும் மத்திய அமைப்பாகும்.
இந்த அமைப்பின் பின்கள வேலைகளை செய்ய R&AW Allied Service (RAS)
எனும் துணை நிலை செயற்பாட்டமைப்புக்களும் உள்ளன. சஜ்சீவ் திரிபாதியின் தலைமையில் இன்றைய றோ செயற்பட்டு வருகின்றது.
இதன் கட்டமைப்பு கீழ் வருமாறு உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த அமைப்பின் பல உளவு மற்றும் தாக்குதல் நடவடிக்கைகளை
நாம் வரலாற்றில் கண்டுள்ளோம். அவற்றில் சிலவற்றை மீட்டி பார்ப்போம் இப்போது.
பங்களாதேசில் ஆட்சிக்கவிழ்ப்பில் ஈடுபட்டமை
முஜீ’புர் ரஹ்மானின் கொலையுடன் தொடர்பு பட்டமை
பங்களாதேஷ் முக்தி வாகினி (Bangladeshi guerilla organisation Mukti Bahini) போராட்ட குழுவிற்கு ஆயுத மற்றும் பயிற்ச்சிகளை வழங்கியமை
இந்திய அனு உற்பத்தி மற்றும் பரிசோதனை போன்றவற்றிற்கு பாதுகாப்பு வழங்கியமை (Operation Smiling Buddha )
பாகிஸ்தானின் கவ்டா அனு உற்பத்தி நிலைய கட்டுமான வரைபடத்தை களவாடியமை ( (KRL), Pakistan's main nuclear weapons laboratory as well as an
emerging center for long-range missile development)
மாலை தீவில் தமிழ் போராட்ட அமைப்பான புளொட் - People's Liberation Organisation of Tamil Eelam (PLOTE) மூலம் ஆட்சியை கைப்பற்ற திட்ட
மிட்டமை மற்றும் ஒருங்கினைத்தமை. (Operation Cactus)
தென்னாபிரிக்க இனவெறி அரசிற்கு எதிராக செயற்பட்ட ஆபிரிக்க அமைப்புக்களை ஆயுத மயப்படுத்தியமை (Retired R&AW officers were
deputed to work in training institutes of intelligence agencies of some African states)
காலிஸ்தான் அமைப்பின் பல தலைவர்களை கொன்றொழித்தமை
(Requested by Indra Gandi)
காஷ்மீர் மாநிலத்தில் பல சட்டவிரோத கொலைகளை, கைதுகளை நிகழ்த்தியமை (Freelance killings and Tourchers with th blessings of Indian State Government)
பொற்கொவில் தாக்குதலின் மூளையாக செயற்பட்டமை (Operation
Blue Thunder)
இலங்கை போராளிக்குழுக்களிற்கு பயிற்ச்சியளித்தமை மற்றும்
ஆயுதங்களை வழங்கியமை (T.E.L.O. - P.L.O.T.E. - E.P.R.L.F. - L.T.T.E.)
இலங்கையின் சில அரசியல் தலைவர்களின் படுகொலைகளில்
பின்புல சக்தியாக நின்று தமிழ் இயக்கங்களை பயன்படுத்தியமை
(Political Assasinations and Penitration Shadow Activities)
ராஜீவ் படுகொலைக்கு பின்புல சூழலை உருவாக்கியமை. பின்பு அதே படுகொலையை விசாரித்து தாம் விரும்பியவாறு முடித்தமை
(Sri Prampuththur Bomb Blast and Investigations - Ragothaman & Karthikeyan)
இந்திய பாகிஸ்தானிய பேச்சு வார்த்தைகளை குழப்ப வேண்டும் என்று இந்திய அரசு கருதினால் அதன் பின்னணில் குண்டு வெடிப்புக்களை நிகழ்த்தியமை (Hindu Muslim Communal Crisis via R.A.W.)
இவையெல்லாம் றோவின் நேரடியான அல்லது மூன்றாம் தரப்பின் ஊடான நிழல் நடவடிக்கைகளாகும். இப்பேர்து புதிய வடிவம் எடுத்துள்ள அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ள றோவின் சில வேலைத்திட்டங்களை பார்ப்ப்போம்.
அமெரிக்க வேண்டுகோளின் பேரில் சீன ஷின்ஸியாங் அனு
உலைகளை வேவு பார்த்தமை மற்றும் அவை தொடர்பாக பெறப்பட்ட தகவல்களை வழங்கியமை ( Lop Nur, Xinjiang, India and the USA shared a
common fear about the nuclear capabilities of China)
அமெரிக்க வேண்டுகோளின் பேரில் ஷின்ஸியாங் மக்களிடையே சீன
அரச விரோத போராட்டத்தை வலுவடைய வைத்தமை
அமெரிக்க வேண்டுகோளின் பேரில் பயங்கரவாதத்திற்கு எதிரான
போரில் முனைப்புடன் பங்கு பற்றியமை (providing intelligence on Usama
Bin Ladin and the Taliban's whereabouts. Maps and photographs of terrorist training
camps in Afghanistan and Pakistan)
அமெரிக்க வேண்டுகோளின் பேரில் ஆப்கானிஸ்தான் பெக்ரம் விமான நிலையத்தில் பாகிஸ்தானிற்கு எதிரான போராளிகளை
தயார்படுத்தியமை
அமெரிக்க வேண்டுகோளின் பேரில் பாகிஸ்தானில் தற்கொலை
தாக்குதலை தீவிரமாக்கியமை
அமெரிக்க வேண்டுகோளின் பேரில் திபெத் போராட்டத்தை ஒழுங்கு படுத்தியமை
அமெரிக்க வேண்டுகோளின் பேரில் தலாய் லாமாவின் குற்றங்களை தடயங்கள் இல்லாமல் மறைக்கின்றமை
அமெரிக்க வேண்டுகோளின் பேரில் தலாய் லாமாவின் உயிர்
பாதுகாப்பிற்கு உத்தரவாதம் வழங்குகின்றமை
அமெரிக்க வேண்டுகோளின் பேரில் பம்பாய் நரிமன் பகுதியில்
இஸ்ரேலிய மொஸாட் தாக்குதல் அணியை தொடர்ந்தும் உல்லாச
பயணிகள் போல் தங்க வைத்து பராமரிக்கின்றமை
அமெரிக்க வேண்டுகோளின் பேரில் இலங்கை இராணுவத்திற்கு வன்னியுத்தத்தில் புலனாய்வு தகவல்களை வழங்கியமை
அமெரிக்க வேண்டுகோளின் பேரில் பாகிஸ்தானிய கடற்படை
தளத்தின் மீதான தாக்குதலை ஒருங்கிணைத்தமை (Operation P.N.S.
Naval Base - Karachi)
அமெரிக்க வேண்டுகோளின் பேரில் பம்பாய் தாக்குதல் மற்றும்
அண்மைய பம்பாய் குண்டு வெடிப்பு போன்றவற்றை சீ.ஐ.ஏ.யுடன்
இணைந்து நடாத்தியமை.
பிற்பாதியில் ”அமெரிக்க வேண்டுகோளின் பேரில்” எனும் பதப் பிரயோகத்தில் வருவன யாவும் பிரதமர் மன்மோகன் சிங்கின்
அரசின் கீழ் நிகழ்த்தப்பட்டவை. ப்றீமேசன் எனும் சாத்தானிய
அமைப்பின் முது நிலை அங்கத்தவரே பிரதமர் மன்மோகன் சிங்.
ஆனால் மீடியாவின் வெளிப்படுத்தல்களில் அப்பாவித்தனமான
இந்தியாவின் பொருளாதார சிற்பி இவர்.இந்த பொருளாதார
சி்ற்பியை இந்திய பிரதமராக்கியதன் காரணமே ஸியோனிஸ
பல்தேசிய கம்பனிகளை இந்திய நாட்டுள் கால் ஊன்ற வைக்கவே.
சுய பொருளாதாரம் எனும் நிலையில் இருந்து விதேச
பொருளாதாரம் எனும் நிலைக்கு இந்தியாவை கொண்டு செல்லும் பணியை தனது தலைமை அமைப்பான ப்றீமேசனிற்கு செவ்வனே நிறைவேற்றியவர் இந்த மன்மோகன் சிங். அன்றைய மிகைச் கொர்பச்சேவ் செய்த சேவையையே இன்றைய மன்மோகன் சிங் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு செய்து முடித்துள்ளார்.
இதன் இன்னொரு அங்கமே அமெரிக்க இராணுவ நலன்சார் அபிலாஷைகளை நிறைவேற்ற றோவை கருவியாகப் பயன்படுத்தல் எனும் பென்டகனின் திட்டமிடலாகும். இந்த சாத்தானிய கூட்டணிக்காக றோ, மத்திய கிழக்கு, இலங்கை, பாகிஸ்தான், மியன்மார், பங்களாதேஷ், நேபாளம், வட
ஆபிரிக்கா, மேற்கைரோப்பா என தனது எல்லைகளை அகட்டிக்கொண்டுள்ளது.
வெறுமனே மொசாட்டையும்,
சீ.ஐ.ஏ.யையும் மட்டும் நாம்
கவனத்தில் எடுக்கும் காலமல்ல இது. நமக்குள் ஒருவனாக இருந்து
கொண்டு எம்மையே அழிக்க காத்திருக்கும் எதிரி எம்மடியிலோ
அல்லது எம் எல்லையிலோ தான் இருக்கின்றான். - அபூ மஸ்லமா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக