ஜூலை 15, 2011

ஜனநாயமும் தீவிரவாதமும் ஒன்றே



தீவிரவாதம், ஜனநாயம்., இவற்றுடன் இவற்றுக்கு எதிரான இஸ்லாம் என்ற தலைப்பின் கீழ் உங்களைச் சந்திப்பதற்குக் காரணம் இருக்கின்றது. உங்கள் கைகளில் ஏதேனும் செய்திப் பத்திரிக்கை இருக்கின்றதா? சற்று அதன் பக்கங்களைப் புரட்டிப் பாருங்கள். ஏதாவது ஒரு பக்கத்திலாவது இந்த மூன்று சொல்லாட்சிகளையும் குறித்ததொரு தகவல் இல்லாமல் இருக்காது.

இந்த வார்த்தைகளைக் கேட்டுக் கேட்டு இப்பொழுது அந்த வார்த்தைகளைக் கேட்டால் எந்த அதிர்ச்சியும் வருவதில்லை. காலப் போக்கில் அவை நமது வாழ்வில் ஒரு அங்கம் என்ற அளவில் நம்மை அது பக்குவப்படுத்தி விட்டது, அல்லது மரத்து விட்டது என்று தான் அர்த்தம்.

சரி..! இந்த மூன்று அம்சங்கள் குறித்தும் விளக்கம் எதுவும் இருக்கின்றதா? ஆம்..! இஸ்லாம் என்ற சொல்லுக்கு கட்டுப்படுதல், அமைதி என்ற பல அர்த்தங்கள் உண்டு. பின் எப்படி அதனுடன் மேலும் இரண்டு வார்த்தைகளை இணைக்க முடிகின்றது. இணைத்துப் பேச முடிகின்றது. ஏன் அந்த வார்த்தைகளுக்கு புது அர்த்தம் எதுவும் கண்டு பிடித்தாகி விட்டதா? அல்லது இஸ்லாம் என்ற பதத்திற்கும் அந்தக் கொள்கையைப் பின்பற்றுகின்றவர்களுக்கும் முரண்பாடுகள் மிகைத்து விட்டதா? எது சரி..!

இதெல்லாம் எங்களுக்கு எதற்கு என்று சோம்பல் முறிக்கின்றீர்களா? முடியாது..! சமூகப் பொறுப்பு என்ற ஒன்று அனைவருக்கும் உண்டு. ஏனெனில் ஜனநாயகம், தீவிரவாதம் என்ற சொல்லாட்சிக்குப் பின்னால் தான் ஹிரோஷிமாவில், நாகசாகியில் அணுகுண்டுகள் போடப்பட்டன. தீவிரவாதம், ஜனநாயகம் என்ற சொல்லாட்சியைப் பயன்படுத்தித்தான் ஈராக்கின் மக்கள் அபூகிரைப் சித்ரவதைக் கூடத்தில் அலங்கோலப்படுத்தப்பட்டனர். தீவிவாதம், ஜனநாயகம் என்ற சொல்லாட்சியைப் பயன்படுத்தித் தான் குவாண்டனாமோவில் சித்ரவதைக் கூண்டுகளுக்கு உள்ளே மிருகங்களை விடவும் கேவலமாக மனிதன் நடத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றான்.

நாளை இதே சொல்லாட்சியைப் பயன்படுத்தி உங்களையும், நீங்கள் இல்லையென்றால் உங்களது சந்ததியினரை இதே நிலைக்கு ஆளாக்கி விட மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம். எனவே, இந்த கட்டுரையின் பக்கம் உங்களது கண்கள் நிலைகுத்தி அல்ல, நிதானமாக சிந்தித்து சிந்தித்து நகரட்டும்..! ஆரம்பம்..!

தீவிரவாதம்..! என்றால் என்ன? இதுவரை எந்த அரசாவது அது பற்றிய விளக்கத்தைக் கொடுத்துள்ளதா? சரி..! குஜராத்.., சபர்மதி எக்ஸ்பிரஸ்.., சரி இதற்கு மேல் விளக்கத் தேவையில்லை, கிட்டத்தட்ட 2000 முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். அந்த படுகொலைக்குக் காரணமாகச் சொல்லப்பட்ட 'சபர்மதி எக்ஸ்பிரஸை பெட்ரோல் ஊற்றி முஸ்லிம்கள் கொளுத்தினார்கள்' என்பதை இன்றைய விசாரணைக் கமிஷன்கள் மறுக்கின்றது. ஆனால், அந்த ஜனநாயக அரசு முன்னின்று நடத்திய அந்த இனப்படுகொலைக்குப் பின்னர், மேலும் முஸ்லிம்கள் கைது செய்யப்பட்டார்கள், இன்னும் தடா என்ற கொடுஞ் சட்டத்தின் கீழ் இன்றும் கொட்டடிகளில் கிடக்கின்றார்கள். சரி..! அவர்கள் தீவிரவாதிகள்., அவர்கள் செய்த தவறு தான் என்ன? தங்களது இளவல்களை, பெண்களை, குழந்தைகளை, தாய்மார்களை, தந்தைமார்களை, உற்றார் உறவினர்கள் என்று சங்க பரிவாரக் கும்பல்களின் கொலை பாதகச் செயலுக்கு இரையாக்கினார்கள். அதனால் அவர்கள் மீது தீவிரவாதப் பட்டம். முஸ்லிம்..! தீவிரவாதிகள்...

சரி..! சற்று வெளியில் வருவோம்..! ஈராக்..! அவர்களும் தீவிரவாதிகள்.., எப்படி..? அங்கே ஒரு ஆட்சியாளர், அவர் தான் சதாம் உசேன்.., அமெரிக்காவின் சொல்லுக்கு ஆட மறுத்தார். எண்ணெய் வளங்களை அமெரிக்காவுக்குத் தாரை வார்ப்பதற்குப் பதிலாக தன்னை வளப்படுத்திக் கொள்ளப் பார்த்தார், இன்னும் அரபுக்களின் வளங்களை அரபுக்கள் தான் அனுபவிக்க வேண்டும் என்றார். இஸ்ரேல் என்ன வளைகுடாப் பகுதிக்கு என்ன தாதாவா? என்றார். பிடித்தது சனியன். தீவிரவாதிகளுக்குப் பயிற்சி.., இராசயன ஆயுத உற்பத்தி என்ற பிரச்சாரம்..! சரி.., போர் நடந்தது. தீவிரவாதிகளைக் காணோம், அவர்களை விட்டாகி விட்டது, இரசாயன ஆயுதத்தையும் காணோம்.., ஈராக்கில் நுழைந்ததற்கான காரணமே இன்னும் பிடிபடவில்லை. சரி.., விட்டு விட்டுப் போக வேண்டியது தானே..! அபூ கிரைப்பில் ஏன் அந்த சித்ரவதை..! அமெரிக்கப் படைகள் நிரந்தரமாக இருப்பதற்கான படைத்தளங்கள் கட்டமைக்கப்படுகின்றன. காரணம், தீவிரவாதம்.., ஜனநாயக விரோதம்..,

யுக்ரைனில் ஜனநாயம் என்ற போர்வையில் ரஷ்யா ஒரு அணியிலும், மேற்கத்திய நாடுகள் ஒரு அணியிலும் ஒரு நாட்டின் இறையாண்மையை, மக்களை துண்டாக்கி பண பலமும், படை பலமும், மீடியா பலமும் பொருந்திய மேற்கத்திய நாடுகள் தனது ஆதிக்கத்தில் என்றும் போல் தக்கவைத்துக் கொண்டது.

மற்றொமொறு யுக்தியாக, மக்களால் நன்மை செய்வார்கள் என்ற உயர்ந்த நோக்கில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியாயர்கள் தனது சுய லாபத்திற்காக வலிமையுள்ளவர்களின் அடிவருடிகளாக நீதியையும், தன்மானத்தையும், மக்களின் நம்பிக்கையையும் அடகு வைத்து பலம் பொருந்தியவர்களின் காவலாளிகளாக மாற்றப்படுகிறார்கள். முரண்டு பிடிப்பவர்கள் தண்டிக்க வைக்கப்படுகிறார்கள்.

சரி..! நமது பக்கத்து நாடு.., நேபாளம். மன்னராட்சி அறிமுகம். பத்திரிக்கைகளுக்கு வாய்ப்பூட்டு..! என்ன செய்ய.., அமெரிக்கா மன்னராட்சிக்கு மலர்வளையம் வைக்கின்றது, நவீன ஆயுதங்கள் இறக்குமதியாகின்றன. பங்களாதேஷில் அரசியல் ஸ்திரத்தன்மையற்ற நிலைமை நிலவுகின்றது. மன்மோகன் சிங் குதிக்கின்றார். சார்க் மாநாட்டுக்கு நான் போக மாட்டேன். ஜனநாயகம் மலர வேண்டும். நல்ல காரணம், நல்ல நோக்கம் தான். என்ன செய்ய கொள்கைப் பிடிப்பு தளர்கின்றதே..? எவ்வாறு..?

சற்று எட்ட தூரத்தில் பர்மா..! இராணுவ ஆட்சி.., ஜனநாயகத்திற்குப் போராடும் ஒரு பெண்மணி, வீட்டுக் காவலில்.., சார்க் மாநாட்டுக்குப் போகாத மன்மோகன் சிங் ன் அமைச்சர், இராணுவ ஆட்சி நடக்கும் பர்மா விற்கு ஒப்பந்தம் போடப் போகின்றார், ஏன்.., பர்மா, பங்களாதேஷ் வழியாக இந்தியாவுக்கு எண்ணெய்க் குழாய் பதிப்பதற்கான ஒப்பந்தத்திற்காக..! ஏன்..! அங்கு விளையும் ஓபியம் என்ற கஞ்சா தான் இன்றைக்கு உலக வல்லரசின் உளவுத் துறைக்கே தீணி போடுவதாக வேறு பிரச்சாரம் அந்த நாட்டிலேயே வெகுவேகமாக நடக்கின்றது. அதன் முன்னாள் தலைவரே அதனை ஒப்புக் கொண்டுள்ளார். மனித விரோத, சர்வாதிகார இராணுவ ஆட்சியுடன் எப்படி ஒப்பந்தம் போடுகின்றோம். ஆனால் பக்கத்தில் பாகிஸ்தானில் மட்டும் ஜனநாயகம் இன்னும் மலரவில்லை என்று தினம் அரைப்பக்கத்துக்கு செய்தி வாசிக்கின்றோம்.., முரண்பாடுகள்..!

சரி.., மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட வெனிசூலா அதிபர் அவ்வப்பொழுது அமெரிக்காவின் அச்சுறுத்தலுக்கு ஆளாக்கப்படுகின்றார். அவரைக் கவிழ்ப்பதற்கான அத்தனை முயற்சிகளும் செய்யப்படுகின்றன. சரி..! கியூபா.. பிடரல் காஸ்ட்ரோ.., அவரையும் மக்கள் நேசிக்கின்றார்கள். இருந்தும் என்ன? நான் நேசிக்கவில்லையே..! என்கிறார் புஷ்..! பின்னே என்ன அங்கும் தீவிரவாதத்திற்கு பயிற்சி.., ஆயுத சப்ளை..!

சரி.., இப்படியே போய்.., இப்பொழுது ஈரான், சிரியா அடுத்த இலக்காக குறி வைக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் ஆளில்லாத விமானம் ஈரானின் மீது பறந்து கொண்டு எங்கே ஆதாரம் கிட்டதா என்று அலைகின்றது. அந்நிய நாட்டின் வான் எல்லை மீறப்படுகின்றது. அந்நிய நாட்டின் இறையாண்மை தூக்கி எறிப்படுகின்றது.

ஆக, நாம் தீவிரவாதம் என்ற சொல்லுக்கு அர்த்தம் தேடினால் எங்கெங்கோ அலைகின்றீர்களே என்று கேட்கின்றீர்களா..?!

மேலே உள்ள ஆதாரங்களின் மீது சற்று கவனத்தைத் திருப்பினால், அதிகாரத் தோரணையுடன் ஆட்சியில் வீற்றிருக்கும்.., சுருங்கச் சொன்னால் நாட்டின் உயர்அந்தஸ்தில் இருந்து கொண்டு தடி எடுத்தால் அது நிர்வாக யுக்தி, அரசியல் சாணக்கியம். அதேநேரத்தில் அதிகாரம் இல்லாத.., ஏன்.., தனிநபர் ஆயுதம் எடுத்தால் தான் என்றில்லை.., வீட்டில் ஆடு அறுக்க கத்தி வைத்திருந்தாலும் அது தீவிரவாதம்.

பக்கத்து நாட்டின் மீது போட்டுத் தாக்க ஒரு நாடு அணுஆயுதம் தயாரித்தால் அது ராஜ தந்திரம்.., ஆனால் தனிமனிதன் வெடிக்காத பட்டாசை கையில் வைத்திருந்தால் அது தீவிரவாதம். இப்பொழுது புரிகின்றதா.., ஆட்சி, அதிகாரம், ஆகிய அனைத்தையும் ஒருங்கிணைத்துக் கொண்டு ஒரு சமூகத்தின் மீது அராஜகம் கட்டவிழ்த்து விடப்படும். ஆனால், அந்த சமூகம் எந்தவித உணர்ச்சியையோ எதனையும் அது வெளிக்காட்டக் கூடாது. புழுப் பூச்சியை குச்சியால் நிமிண்டினால் கூட சற்று அது உணர்;ச்சியைக் காட்டும், ஆனால்.., மனிதன்.., காட்டக் கூடாது. அதிலும் முஸ்லிம் காட்டவே கூடாது.

ஆப்கானில், பாலஸ்தீனில், ஈராக்கில், செசன்யாவில்.., காஷ்மீரில்.., தாய்லாந்து, என்று நீங்கள் எங்கு திரும்பினாலும் முஸ்லிம்கள் மீது சொல்லொண்ணா படுகொலைகள் கட்டவிழ்த்து விடப்பட்ட போதிலும், அந்த சமூகம் உணர்ச்சியற்ற ஜடமாக உலா வர வேண்டும் என்பது விபரீதமானதொரு எதிர்பார்ப்பு..

அடுத்தது ஜனநாயகம்..! நம் நாட்டில் இதுவரை நடந்த தேர்தல்களைக் கருத்தில் கொண்டால், கிட்டத்தட்ட 60 சதவீதத்திற்கு மேல் எங்கும் ஓட்டு பதிவானது கிடையாது. ஆக, 40 சதவீதம் பேர்கள் தேர்தல்முறையை விட்டே விலகி நிற்கின்றார்கள். மீதி 60 சதவீதம் பேர்கள் தங்களுக்குப் பிடித்த வேட்பாளரைத் தேர்வு செய்கின்றார்கள். குறைந்தது மூன்று கட்சிகள் என்று கணக்கில் எடுத்துக் கொண்டால், சராசரியாக ஒரு கட்சிக்கு 20 சதவீத ஓட்டு என்றால், வெற்றி பெறும் வேட்பாளருக்கு ஓட்டளித்தவர்கள் 20 சதவீதம் என்றாகின்றது. ஆக, ஜனநாயகம் என்பது 80 சதவீதம் பேர் வெறுப்பில் 20 சதவீதம் பேரின் விருப்பம் நிறைவேறுகின்றது. இது என்ன ஜனநாயகம்..! இது ஜனநாயகம் என்றால், முரண்பாடுகள் தான் முதலாக அமையும். ஏனெனில், அறுதிப் பெரும்பான்மையோடு வெற்றி பெற்றோம் என்று வெற்றி பெற்றவர்கள் அறிவிப்பது என்பது, அறுதிப் பெரும்பான்மையின் வெறுப்பில் வெற்றி பெற்றிருக்கின்றோம் என்று தான் அர்த்தமாகின்றது.

இது மக்களால் மக்களுக்காக தேர்வு செய்யப்படும் தலைமை. தலைமைகள் என்ன ஆரோக்கியமாகவா இருக்கின்றது. நாடாளுமன்றத்திலும், சட்டமன்றங்களிலும் பதவி வகிப்பவர்களுக்கு குறைந்த பட்ச தகுதி என்னவென்றால், அவர் மீது ஏதாவது ஒரு வகையிலாவது கிரிமினல் வழக்கு பதிவாகி இருக்க வேண்டும் என்பது கட்டாயமாகி விட்டது.

சரி..! ஜனநாயகப்படி தேர்வு செய்யப்பட்ட அரசுகள், நாடுகள் சந்தித்த பிரச்னைகள் என்ன?..! ஜனநாயகம் இல்லை, மக்கள் அவதிப்படுகின்றார்கள், அவர்களுக்கு சுவாசத்தை மீட்டுத் தரப் போகின்றோம் என்றார்கள். ஆப்கானில் தேர்தல் நடந்தன. வாக்குப் பெட்டிகள் பாக்கிஸ்தானில் இருந்து, வாக்குச் சீட்டுகள் முத்திரையிடப்பட்டபடி ஆப்கான் வந்து சேர்ந்தன. என்ன ஆச்சரியம்..! ஜனநாயகத் தேர்தலில் கர்சாய் வெற்றி பெற்று விட்டார். மிக நீண்ட நாட்கள் கழித்து ஈராக்கில் ஜனநாயக அடிப்படையில் தேர்தல். வேட்பாளரே முன் வந்து நான் தேர்தலில் நிற்கவில்லை என்று அறிவித்த அதிசயம் அங்கு நிகழ்ந்தது. சரி.., மற்ற நாடுகளாக இருந்தால் அங்கு சர்வதேச பார்வையாளர்கள் முன்னிலையில் தேர்தல் நடக்கும். கண்காணிப்பு இருக்கும். ஆனால், ஈராக்கில் அவர்களுக்கு அனுமதி இல்லை. அதிகம் பேசிய அல் ஜஸீரா தொலைக்காட்சி நிலையம் பூட்டப்பட்டது, ஏன்..? நிருபர்களும் கூட நிரந்தரமாக உலகத்தை விட்டே அனுப்பப்பட்டு விட்டார்கள். காரணம்.., அங்கு ஜனநாயகம் இல்லை.

ஏன் இரண்டாம் உலகப் போருக்கு முன்னால் ஜெர்மனியில் நடந்த தேர்தலில் ஹிட்லர் அரிதப் பெரும்பான்மையில் வெற்றி பெற்றார். அதுவே இரண்டாம் உலகப் போருக்கு வழிவகுத்த காரணிகளில் ஒன்றாகவும் அமைந்தது. ஏன்.., ஜனநாயகம்.., எங்கள் பாஷையில் ஜனநாயகம் என்றால்.., எங்களது நலன், அமெரிக்காவின் நலன், யூதர்களின் நலன், பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் நலன்.., இதுவே இரண்டாம் உலகப் போருக்கான விதை. ஜெர்மன் மக்கள் ஹிட்லரை விரும்பினால் என்ன, நாங்கள் அவரை விரும்பவில்லையே..!

இரண்டாம் உலகப் போரின் ஆரம்பம் அது. இந்த வரலாறு அமெரிக்க, பிரிட்டிஷ், யூத அடிவருடிகளினால் எழுதப்பட்ட வரலாறல்ல. உண்மை வரலாறு. போலந்து நாட்டில் ஆரம்பித்த போரின் ஆரம்பமானது, ஏதோ தார்மீகக் காரணத்தின் அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டதல்ல, மாறாக அது ஒரு சுய நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு திட்டமிடலோடு ஆரம்பிக்கப்பட்டது. போலந்தின் மீது ஜெர்மனி போர் தொடுப்பதற்கு முன்பாக போலந்தின் இராணுவமானது செக்கோஸ்லோவாகியாவைத் தாக்கியது. ஹிட்லரோடு போலந்து நாட்டவர்கள் நல்லதொரு தொடர்போடும், உறவோடும் தான் அப்பொழுது வரை இருந்தார்கள்.

இந்த நேரத்தில் ஹிட்லரின் தலைமையிலான ஜெர்மனி மத்திய ஐரோப்பிய வணிக மையத்தில் அசைக்க முடியாத சக்தியாக உருவெடுக்கின்றது. ஐரோப்பிய மார்க்கெட்டில் ஜெர்மனியின் கை ஓங்கி வருவதை பிரிட்டன், அமெரிக்கா மற்றும் யூத வணிக நிறுவனங்கள் முற்றிலும் விரும்பவில்லை. உலகிலேயே முதல் சமூகப் பாதுகாப்பு திட்டத்தையும், அத்துடன் ஜெர்மனி நாட்டவர்கள் அனைவருக்கு இலவச மருத்துவ வசதியையும் ஹிட்லரின் அரசு அறிவிக்கின்றது. இந்த நிலையில், நியூயார்க், லண்டன் நகரங்களைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கக் கூடிய யூத வியாபாரக் கம்பெனிகள் வெளிப்படையாகவே ஹிட்லரின் அரசுக்கு எதிராகப் போர்ப் பிரகடனம் என்று செய்தித் தாள்களில் அறிவிப்புச் செய்கின்றன. இது நடந்தது 1933 ல், இதற்குப் பின்னர் ஜெர்மனியில் நடைபெற்ற ஜனநாயக அடிப்படையிலான தேர்தலில் ஹிட்லர் வரலாறு காணாத வெற்றியைப் பெறுகின்றார். இதனை அடுத்து பாரிஸ் ல் இருந்து வெளிவந்த யூதப் பத்திரிக்கை ஒன்று (டுந னுசழவை னந எiஎசந) இவ்வாறு தலையங்கம் எழுதியது, ''ஹிட்லர் போரை விரும்பவில்லை, ஆனால் அவர் மீது நாங்கள் போரைத் திணிப்போம்'' என்றது.

அந்த நேரத்தில் பிரிட்டிஷ் முடியாட்சியானது கிட்டத்தட்ட 500 மில்லியன் ஆசிய மக்களையும், ஆப்ரிக்கர்களையும் தங்களது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்தது. ஹிட்லரின் ஜனநாயக அடிப்படையிலான தேர்தலானது தங்களது கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் ஏனைய நாடுகளுக்கும் பரவினால் என்ன ஆவது என்று பிரிட்டிஷ் அரசு யோசிக்க ஆரம்பித்தது. ஹிட்லரின் மூளையில் உதித்த மூன்றாவது ரெய்க் என்ற திட்டத்தை நாசமாக்குவது என்று முடிவெடுத்தது பிரிட்டிஷ் அரசு.

அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் ஏனைய ஐரோப்பிய நாடுகளையும், இன்னும் அமெரிக்காவையும் விட வெகு வேகமாக முன்னேறி இருந்தது ஜெர்மனி. இன்னும் ஜெர்மனியின் அதிக மக்கள் தொகை வளர்ச்சியானது, ஐரோப்பிய நாடுகளிலேயே அதிக மனித வளத்தைக் கொண்ட நாடாகவும் அது திகழ்ந்தது. வின்த்;ரோப் ஆல்ட்ரிக் என்ற ஜேஸ் நேஷனல் பேங்க் ன் ஜெனரல் டைரக்டர் என்பவர் இவ்வாறு தனது கருத்தைப் பதிவு செய்திருக்கின்றார், அதாவது ''பிரிட்டிஷ் அரசு உருவாக்கும் அரசியல் சூழ்நிலைகள் ஹிட்லரை ஆயுதத்தைத் தூக்க வைக்கும்'' என்றார். போலந்து நாட்டவர்கள் ஜெர்மனியுடன் அமைதியாக இருக்கவே விரும்பினார்கள். இன்னும் ஹிட்லருடன் இணக்கமாக இருப்பதன் மூலம், சோவியத் அரசாட்சியின் பொழுது தாங்கள் இழந்த பகுதிகளை மீட்டெடுக்க முடியும் என்றும் அவர்கள் நம்பினார்கள். இன்னும் அமைதி நடவடிக்கைகளுக்குத் தோதாக பல வணிக வசதிகளை ஏற்படுத்தித் தரவும் ஜெர்மனி இணக்கம் தெரிவித்திருந்தது. டான்சிக் துறைமுகப் பிரச்னையை பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக் கொள்வது, துறைமுகத்தை போலந்தும் ஜெர்மனியும் பயன்படுத்திக் கொள்வது என்பது போன்ற திட்;டங்களை ஹிட்லர் போலந்து அரசின் முன் வைத்தார். இருந்தும் என்ன செய்ய பிரான்ஸும், பிரிட்;டனும் பின்னுக்கு நிற்கும் என்று நம்பி போலந்து ஏமாந்தது.

அதனால் போலந்து அரசு துறைமுகத்தை உங்களுக்கு நாங்கள் தந்து விட்டால், எங்களது பொருளாதாரம் முடங்கி விடும் என்று அதற்கு இணங்க மறுத்தது. ஹங்கேரி, சுவிட்சர்லாந்து மற்றும் செக்கோஸ்லோவிகியா போன்ற அண்டை நாடுகள் துறைமுகம் இல்லாமலேயே பணக்கார நாடுகளாக உள்ளன. எங்களுக்கு அதுவும் போய் விட்டால் நிலைமை மோசமாகி விடும் என்று கூறினார். இந்தப் பேச்சுவார்த்தைக்கான முன்மொழிவுகள் நடந்து கொண்டிருக்கும் போதே, போலந்து தன்னுடைய படைகளை ஜெர்மனிக்கு எதிராகத் திரட்ட ஆரம்பித்தது. இன்னும் இரண்டு நாடுகளும் எந்தவித ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளிலும் 25 வருடத்திற்கு ஈடுபடக் கூடாது என்ற ஒப்பந்தத்தையும் மீறி போலந்து ஜெர்மனிக்கு எதிராக போர் அச்சுறுத்தல் நடவடிக்கைகளில் இறங்கியது. போலந்தின் வெளியுறவு அமைச்சர் கோல் பெக் எந்தவித பேச்சுவார்த்தைக்கும் தயாராக இல்லை. ஹிட்லரோ பேச்சுவார்த்தைக்கு வலியுறுத்திக் கொண்டிருந்தார். டான்ஸிக் துறைமுகத்தை விடுவிப்பது, ஒரு வருடத்திற்குள் சர்வதேச கண்காணிப்பின் கீழ் அங்கு தேர்தலை நடத்துவது, தேர்தலுக்குப் பின் சிறு மக்கள் குழுவை இரு தரப்பிலும் பரிமாற்றம் செய்து கொள்வது, ஜெர்மனிக்கு எதிரான பிரச்சாரத்தை போலந்து பத்திரிக்கைகள் நிறுத்திக் கொள்வது போன்ற கோரிக்கைகளை முன்வைத்துப் பேசுவோம் என்றார் ஹிட்லர். ஆனால் போலந்து அதனை நிராகரித்தது. இந்த நிலையில் ஆகஸ்டு 1939 ல் 76,535 ஜெர்மனியர்கள் போலந்தை விட்டும் வெளியேறினர். அவர்களில் ஒருஇனத்தாரான வோல்க்ஸ்டியூட்ஸ் என்பவர்கள் 4000 பேர் கொல்லப்பட்டனர். சிலர் சித்ரவதைகள் செய்யப்பட்டு அங்ககீனப்படுத்தப்பட்டனர். கிட்டத்தட்ட 12,500 ஜெர்மனியர்கள் போலந்தில் இனச் சுத்திகரிப்பு செய்யப்பட்டனர். அப்பொழுது, ஆகஸ்டு 30, 1939 ல் பிரிட்டனைச் சேர்ந்த ஹாலிபேக்ஸ் என்ற பிரபு ஒருவர், ஜெர்மனிய சிறுபான்மையினரை இனச்சுத்திகரிப்பு செய்வதை நிறுத்துமாறு போலந்தைக் கேட்டுக் கொண்டார். போலந்தின் உள்விவகாரத்தில் தலையிடாமல் ஒதுங்கிக் கொள்ளுமாறு அவரை எச்சரித்தார் போலந்தின் வெளியுறவுத் துறை அமைச்சர் கோல் பெக். போலந்து அரசே முன்னின்று  மோடி வேலை பார்த்திருக்கின்றது. இருந்தும் என்ன.., அரசே முன்னின்று செய்வதால் அது தீவிரவாதமல்ல.

எல்லைகளில் நடந்த பல்வேறு அத்துமீறல்கள், போலந்தில் நடைபெற்ற ஜெர்மனிய சிறுபான்மையினருக்கு எதிரான நடவடிக்கைகள், மற்றும் ஜெர்மனியில் போலந்து நாட்டவர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் என்று இருபக்கமும் விபரீதமங்கள் அதிகரித்தன. ஜெர்மனிக்கும், ஸ்டாலின் சோவியத் ரஷ்யாவுக்கும் இடையே ஆக்கிரப்பில் ஈடுபடுவதில்லை என்பதற்கான ஒப்பந்தங்கள் ஆகஸ்டு 23, 1939 ல் கையெழுத்தானதன் பின்பும், ஸ்;டாலினுடைய மறைமுக ஈடுபாட்டில் மூலம் தான் இரண்டாம் உலக யுத்தம் வெடித்தது. அந்த ஒப்பந்தமும் கூட போலந்தின் மீது இரண்டு பேரும் நடத்தவிருக்கும் ஆக்கிரமிப்புக்கு எதிராக இருவரும் குரல் கொடுக்கக் கூடாது என்ற கூட்டுத்திருட்டு ஒப்பந்தமாகவே இன்றளவும் சித்தரிக்கப்படுகின்றது.

இந்த இடைப்பட்ட நாட்களில் போலந்து 18 சதவீத மக்களையும், ஜெர்மனி 7.4 சதவீத மக்களையும், ரஷ்யா 12 சதவீத மக்களையும் இழந்தது. செப்டம்பரில் நடந்த போர் மிதமான அளவில் நடந்தாலும் போலந்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது. போலந்து இராணுவமானது அதன் நேசநாடுகளின் உதவியின்றி, அதாவது பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் ன் உதவியின்றி தனிமைப்படுத்தப்பட்டது. அதனை மூன்று பக்கமும் ஜெர்மன் இராணுவம் சுற்றி வளைத்துக் கொண்டது.

ஜெர்மனிக்கு எதிராக போலந்து இராணுவம் உக்கிரமாகப் போரிட்டாலும், ஜெர்மனியின் தொழில் நுட்பத்திற்கு முன்னால் போலந்து செயலற்றதாகி விட்டது. போருக்குப் பின்னால் போலந்தை ஜெர்மனியும், ரஷ்யாவும் ஆக்கிரமித்துக் கொண்டன.

இந்தப் போரின் பொழுது சோவியத் ரஷ்யாவின் (Nமுஏனு) சிறப்பு அதிரடிப்படையானது போலந்து இராணுவ அதிகாரிகள் 4500 பேரைக் கொன்று புதைத்தது. இது அரசே முன்னின்று நடத்திய மோடி வேலை. என்ன செய்ய.., அரசே முன்னின்று செய்வதால் இது தீவிரவாதமல்ல?! இவர்களில் கல்வியாளர்கள், மருத்துவர்கள் போன்றவர்களும் அடங்குவர்.

இந்தச் சம்பவத்தை அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் உளவுத் துறைகள் நன்கு அறிந்தே இருந்தன. இருப்பினும், இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர், சோவியத், யூத, அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் வழக்கறிஞர்கள் முன்னிலையில் விசாரணைக்கு வந்த இந்த வழக்கில் ஜெர்மனி தான் இந்தப் படுகொலைகளுக்குக் காரணம் என்று திட்டமிட்ட வகையில் குற்றம் சுமத்தப்பட்டு, 17 அப்பாவி ஜெர்மன் அதிகாரிகளுக்கு மரண தண்டனை வழங்கினார்கள். சோவியத் ன் கடுமையான பிரச்சார யுக்தி மூலம் இந்தப் படுகொலையைச் செய்தது, ஜெர்மனியின் நாஜிகள் தான் என்றானது. கடந்த 1990 ல் கோர்பச்சேவும், முன்னால் போலந்தின் சர்வாதிகாரியாகவும் திகழ்ந்த ஜெனரல் டபிள்யூ ஜாருஸெல்ஸ்கி என்பவரும் இணைந்து வெளியிட்டதொரு அறிக்கையில், இந்தப் படுகொலைகளைச் செய்தது, ஸ்டாலினின் தலைமையில் இயங்கிய Nமுஏனு படைகள் தான் என்று கூறியது நினைவு கூறத்தக்கது.

செப்டம்பர் 1939 ல் போலந்துக்கு எதிரான போரில் ஜெர்மனி வெற்றி பெற்றது. இந்தப் போரைப் பற்றி ஜெர்மன் அதிகாரிகள் கூறும் பொழுது, குழந்தையின் தொண்டையை அறுப்பதை விட மிக எளிதாகவே இருந்தது, போலந்தின் மீதான வெற்றி என்றனர். இருப்பினும், ஜெர்மன் படைகளுக்கு எதிராக போலந்து இராணுவம் காட்டிய வீரத்தை ஹிட்லர் மிகவும் புகழ்ந்துரைத்தார். கைதிகளாகப் பிடிபட்டவர்களை ஹிட்லர் நல்லமுறையில் நடத்தினார். ஜெனிவா ஒப்பந்தங்களை மதித்து நடந்தார்.

போலந்தின் தலைநகர் வார்ஸா கைப்பற்றப்பட்டாலும், அதுவே மிகப் பெரும் தலைவலியாக உருவெடுத்தது. ஒவ்வொரு நகரமும் முற்றுகைத்தளமாக மாறியது. ஒவ்வொரு தெருவும் மிஷின்கன் துப்பாக்கியின் முனையில் காவல் காக்கப்பட்டது. நகரத்தை விட்டு பெண்களும், குழந்தைகளும் வெளியேறுவதற்காக வேண்டி, போர் நிறுத்தத்தை அறிவித்தார் ஹிட்லர். இன்றைய புஷ்ஷும் இதையே பல்லூஜாவில் செய்தார். மொத்த ஃபல்லுஜாவின் மக்களும் நகரத்தை விட்டும் வெளியேற்றப்பட்டனர். அகதி முகாமில் வைக்கப்பட்டிருக்கின்றனர். எஞ்சியோர் சுட்டுக் கொல்லப்பட்டு, அவர்களது பிணம் தெருவில் நாய்களுக்கு இரையானது. அரசே முன்னின்று நடத்திய தீவிவராதம்..?

போலந்து இராணுவ அதிகாரி அவ்வாறு மக்கள் வெளியேற வேண்டாம் என்று மக்களைக் கேட்டுக் கொண்டார். காலக்கெடுவை நீட்டித்துப் பார்த்தார் ஹிட்லர். இன்னும் பொதுமக்களின் மீது தாக்குதல் நடத்தாமல் மிகவும் கவனத்துடன் நடந்து கொள்ளுமாறு தன்னுடைய அனைத்துப் படைப்பிரிவுகளுக்கும் உத்தரவிட்டார் ஹிட்லர். இன்னும் குழந்தைகள், வயதானவர்கள், பெண்கள் ஆகியோர்களை பாதுகாப்பான கிராமப் பகுதிகளின் பக்கம் சென்று விடுவமாறு கேட்டுக் கொண்டார். தலைநகர் வார்ஸாவில் இருந்த போலந்தின் ஜனாதிபதி அதற்கு இணக்கம் தெரிவிக்கவில்லை, உடன்பட மறுத்தார். அடுத்தாக வெளிநாடுகளைச் சேர்ந்த தூதரக அதிகாரிகள், அவர்களது குடும்பத்தவர்கள் வார்ஸா நகரத்தை விட்டும் காலி செய்து விடும்படி கோரினார். அக்டோபர் 6 ல், க்ரோல் ஒபெரா ஹவுஸ் ல் ஹிட்லர் நிகழ்த்திய நீண்டதொரு உரையில், தான் மிகவும் நடுநிலையோடு செயல்பட விரும்புவதாகவும், போலந்து அதனைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்திக் கூறினார். மீண்டும் அவர் நட்புறவை ஏற்படுத்திக் கொள்ளுமுகமாக மீண்டும் இன்னொரு ஒப்பந்தத்தை செய்து கொள்வோம் என்று போலந்தை அழைத்தார். ஆனால் அவர்கள் அதனைத் தள்ளுபடி செய்து விட்;டனர்.

ஜெர்மனிக்கு உள்ள ஒரு தலைவலி என்னவென்றால் போலந்தில் நாஜி சார்பு ஆட்சியை நிறுவ இயலவில்லை என்பதேயாகும். போலந்தில் இயங்கி வந்த அனைத்து அரசியல் இயக்கங்களும் திரைமறைவு இயக்கங்களாக மாறிப் போனது. வலது சாரிகளும், யூதர்களும், கம்யூனிஸ்டுகளும் தீவிரவாத இயக்கங்களைத் தோற்றுவித்து, ஜெர்மனி வீரர்களைக் கொலை செய்து வந்தனர். இரயில்களை வெடிகுண்டு வைத்துத் தகர்த்தனர். வங்கிகளைக் கொள்ளையடித்தனர், நிர்மூலமாக்கினர், உணவு விடுதிகளிலும் வெடிகுண்டுகளை வீசினர். கொரில்லா யுத்தமானது போலந்திற்குள் தலைவிரித்தாட ஆரம்பித்தது. ஹிட்லரின் வார்த்தைகளில் சொல்ல வேண்டுமென்றால், 1598 லிருந்து 1939 வரைக்கும் அவர்களிடம் (போலந்து மக்கள்) எந்த மாற்றமுமில்லை'' என்றார். போலந்து கெரில்லாக்கள் இரும்புக் கரம் கொண்டு அடக்கப்பட்டனர். ஒரு ஜெர்மனியன் கொல்லப்பட்டால் 10 போலந்து நாட்டவர்கள் கொல்லப்பட்டார்கள். இருப்பினும், கெரில்லா யுத்தம் நின்றபாடில்லை, பிரச்னை அதிகரிக்க அதிகரிக்க ஹிட்லரின் அடக்குமுறையும் அதிகரிக்க ஆரம்பித்தது. ஹிட்லர் இன்றிருந்தால் போலந்தின் கெரில்லாப் போராளிகளை ஒழித்துக் கட்டப்பட வேண்டிய தீவிரவாதிகள் என்று அறிக்கை விட்டிருப்பார். புஷ்ஷைப் போலவே..! அரச தீவிரவாதம்..!

செப்டம்பரில் நடந்த யுத்தத்தில் 10,572 ஜெர்மனியர்கள் கொல்லப்பட்டனர், 3,322 பேர் காயமடைந்தனர், 3,404 பேரைக் காணவில்லை. போலந்து ன் பக்கமோ இழப்பு இதனைவிடப் பத்து மடங்கு அதிகமாக இருந்தது. இன்றைக்கு ஈராக்கில் நடந்து கொண்டிருப்பது போல.., எத்தனை அமெரிக்க வீரர்களின் உடல்கள் அனுப்பப்பட்டுக் கொண்டிருந்தாலும் கவலையில்லை, புஷ்ஷின் எண்ணெய்க் கம்பெனிக்கு எண்ணெய் கிடைத்தால் சரி..!

இதில் சிறப்பு அம்சம் என்னவென்றால், போலந்தில் வாழ்ந்த சிறுபான்மை முஸ்லிம்கள் ஒன்றிணைந்து தாய்நாட்டைக் காக்க, 13 வது வில்னியஸ் கேவல்ரி ரெஜிமண்டில் முஸ்லிம் பிரிவு ஒன்று முதன் முதலாக உருவாக்கப்பட்டது. இவ்வாறு அமைக்கப்பட்ட அந்த குதிரைப்படைப் பிரிவுக்கு அலி ஜெல்ஜாஸிவிக்ஸ் என்பவர் தலைமை தாங்கினார், இந்தப் படை மிகவும் வீரத்துடன் போரிட்டது குறிப்பிடத்தக்கது. போலந்துக்கு எதிரான போரில் ஜெர்மனி வெற்றி பெற்றவுடன், இந்தப் படையானது உள்நாட்டுப் படையுடன் இணைந்து திரைமறைவு யுத்தத்தில் கலந்து கொண்டது. இன்னும் முஸ்லிம் லியூட்டினென்ட் கலோனல் ஒருவரும், 1948 வரைக்கும் போமரெனியா வில் ரஷ்யாவிற்கு எதிராக நடந்த யுத்தத்தில் கலந்து கொண்டார்.

மேலே உள்ள வரலாற்றுச் சம்பவத்தை இன்றைய அமெரிக்காவின் அடாவடித் தனங்களோடு சற்று ஒப்பீடு செய்து பார்ப்பது நல்லது.

இரண்டாம் உலகப் போரின் ஆரம்பம், ஜெர்மனி என்ற வல்லரசை சகிக்க இயலாத அமெரிக்க, பிரிட்டிஷ் மற்றும் யூத பணக்கார வியாபாரிகளின் வெறுப்புணர்வு தான் என்றால் அது மிகையில்லை. எனவே தான் அவர்கள் ஹிட்லரே வெறுத்தாலும் கூட அவர் மீது போரைத் திணிப்பது என்று முடிவெடுத்தனர். அதற்கு யூதர்களது கைகளில் இருந்த பத்திரிக்கைகள் தூபம் போட்டன. போலந்திற்கு பல்வேறு சலுகைகளை அளிக்க விரும்பிய போதும் கூட, போலந்து எந்தவித பேச்சுவார்த்தைகளுக்கும் கட்டுப்படவில்லை. இரண்டாம் உலகப் போருக்கு ஹிட்லர் மட்டும் காரணமல்ல, மாறாக சோவியத் ன் சர்வாதிகாரியான ஸ்டாலினும் கூட காரணர்த்தாவாகவே இருந்தார். இன்னும் தொழில்முறைப் போட்டியாளராக ஜெர்மனியை வரித்தெடுத்துக் கொண்ட யூதர்களும், அவர்களுடன் இணைந்து கொண்ட அமெரிக்கர்களும் காரணகர்த்தாக்களாவர். இன்னும் ஆப்ரிக்காவிலிருந்து ஆசியா வரைக்கும் பரவியிருந்த சாம்ராஜ்யம் எங்கே அஸ்தமித்து விடுமோ என்று பயந்த பிரிட்டனும் இரண்டாம் உலகப் போருக்குக் காரணமாகும்.

ஆக, உலகத்தை நடுநடுங்க வைத்த கோடிக்கணக்கான மக்களைப் பழி எடுத்த இரண்டாம் உலக மகா யுத்தத்தை யார் ஆரம்பித்து வைத்தது என்றால், ஜனநாயகம் என்ற பெயரிலும், கம்யூனிஸம் என்ற பெயரிலும், முதலாளித்துவம் என்ற பெயரிலும், வியாபாரம் என்ற போர்வையிலும், பாஸிஸம், நாஜிஸம் என்ற பெயரிலும் இந்த உலகத்தையும், இந்த உலகத்தில் உள்ள மக்களையும் தங்களது கைப் பிடிக்குள் போட்டுக் கொள்ள முயன்ற ஆதிக்கவாதிகள் தான்.

இவர்கள் தான் இன்றளவும் உலகத்தின் அத்தனைப் பிரச்னைகளுக்கும் காரணகர்த்தாக்களாக இருக்கின்றார்கள். எண்ணெய் முதலாளிகளின் வியாபாரப் பரவலுக்கு ஒத்துப் போக மறத்த தாலிபான்கள் தீவிரவாதிகளாக்கப்பட்டார்கள். வளைகுடாவில் எடுக்கப்படும் எண்ணெய் அரபுக்களுக்கு உரியது, அந்நிய சக்திகளுக்கு என்ன வேலை என்று கேட்ட சதாம் தீவிரவாதியாக்கப்பட்டார். அந்த எண்ணெய் முதலாளிகளின் குழுமத்தில் உள்ளவர்களில் முக்கியமானவர் அப்பன் புஷ்.

அன்றைய தினம் சோவியத் கம்யூனிஸத்திற்கு எதிரான கொள்கையாக இஸ்லாம் மத்திய ஆசியாவில் கருதப்பட்டதன் விளைவு.., சைபீரியாவில் உள்ள மரண முகாம்களில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டனர். ஹிட்லரின் ஆட்சிப் பரவலுக்கும், அவரது மூன்றாவது ரெய்க் என்ற கொள்கைப் பரவலுக்கும் ஏனைய ஐரோப்பிய நாடுகள் தடையாக இருந்தன. இன்னும் ஜெர்மனியை மிகப் பெரிய வளர்ச்சியடைந்த நாடாக்க அவர் முயன்றதன் விளைவு, எதிரிகளைச் சம்பாதித்துக் கொண்டார். ஹிட்லரின் எதிரிகளை உசுப்பி விட்டு அதன் மூலம் தங்களது இஸ்ரேல் என்ற கள்ளக் குழந்தையைப் பெற்றெடுத்துக் கொள்ள தீட்டிய சதித் திட்டத்தின் ஒரு பகுதியே, ஹிட்லரின் யூத வெறுப்புணர்வில் விளைந்தது யூத இனச் சுத்திகரிப்பு.

ஆனால் இதில் எதிலும் தலையிடாத நிலைப்பாட்டில் இருந்தவர்கள் முஸ்லிம்கள். அவர்கள் மிகப் பெரிய ஆதிக்க சக்தியாகவோ அல்லது பொருளாதார சக்தியாகவோ அல்லது இராணுவ வலிமை மிக்க சக்தியாகவோ சமீப கால வரலாற்றில் என்றுமே அவர்கள் தங்களை இனங் காட்டிக் கொண்டதில்லை. பின்னர் ஏன் அவர்கள் தீவிரவாதிகளாகச் சித்தரிக்கப்படுகின்றார்கள்.

அது தான் மிகப் பெரிய சூட்சுமம். எந்தக் கொள்கையையும் உறுதியோடு எதிர்க்கும் உள வலிமை அதனிடம் உண்டு. எனவே, எப்பொழுது எந்தக் கொள்கை அரியணை ஏறினாலும் அதன் அடக்குமுறைக்கு முதல் எதிர்ப்பு முஸ்லிம்களிடத்திலிருந்து தான் வரும். அதனை இஸ்லாம் என்ற கொள்கை அவர்களுக்கு வழங்கிக் கொண்டிருக்கும் என்ற உண்மை முஸ்லிம்கள் அறிந்திருக்கின்றார்களோ இல்லையோ, இந்த ஏகாதிபத்தியத் தீவிரவாதிகள் அறிந்தே வைத்திருக்கின்றார்கள்.

இரண்டாம் உலகப் போர்.., நடப்பதற்கு முன்னாள்.., அப்பொழுது தான் அமெரிக்கா வளர்ந்து கொண்டிருந்தது. பிரிட்டன்.., அது முதுகெலும்பு சற்று வளைந்திருந்தது.., பொருளாதாரம் அதளபாதாளத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. பிரான்ஸ்.. ஹிட்லரிடம் சரணடைந்தே விட்டது. ஆஸ்திரியா, செக்கோஸ்லோவாகியா, போலந்து, கிரீஸ் ஆகியவை இப்பொழுது ஹிட்லரின் கைவசம். சுருங்கச் சொன்னால், 1942 ம் ஆண்டின் மத்தியில், உலக வரலாற்றில் எந்த ஒரு நாடும், எந்த ஒரு சமயத்திலும் ஆதிக்கம் செலுத்தியிராத மிகப் பெரிய பரப்பளவு ஐரோப்பியப் பகுதி ஜெர்மனியின் ஆதிக்கத்தின் கீழ் இருந்தது. இது தவிர வட ஆப்ரிக்கா முழுவதிலும் ஆட்சி செலுத்தியது.

இப்பொழுது தான் பிரச்னையே ஹிட்லருக்கு ஆரம்பமாகின்றது.., 1942 ம் ஆண்டின் பிற்பகுதியில், எகிப்தில் எல் அலமைன் போரிலும், பின்னர் ரஷியாவில் ஸ்டாலின்கிராடுப் போரிலும் ஜெர்மனி தோல்வியடைந்தது. அதன் பின்னர் தான் ஹிட்லரையும் தோற்கடிக்க முடியும் என்ற எண்ணம் ஏனைய ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்பட்டது. அதனை அடுத்து வந்த இரண்டு ஆண்டுகளிலும் ஹிட்லருக்குத் தோல்விமேல் தோல்வியே. இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர், ஏப்ரல் 30 ஆம் தேதி ஹிட்லர் தற்கொலை செய்து கொண்டதுடன், ஏழு நாட்கள் கழித்து ஜெர்மனி சரணடைந்தது.

ஹிட்லரை வீழ்த்தியதில் தலையாய பங்கு வகித்தது, எகிப்தில் ஹிட்லருக்கு ஏற்பட்ட தோல்வி. அதனை அடுத்து ரஷ்யாவில் ஏற்பட்ட தோல்வி. ஹிட்லரின் தோல்விக்குக் காரணமான கம்யூனிஸத்தை வீழ்த்திய அளவு இஸ்லாத்தை அதன் போராட்ட குணத்தை அதன் எதிரிகளால் ஒழித்துக் கட்ட இயலவில்லை. எனவே தான் அதன் மீது தொடுக்கின்ற தாக்குதல்களுக்கும் காரணம் கற்பிக்கும் பொழுது தீவிரவாதப் பழி சுமத்தப்படுகின்றது, மனித குலத்திற்கு எதிரானதென்று சித்தரிக்கப்படுகின்றது. ஹிட்லர் முஸ்லிம்களுடன் நட்புரிமை பாராட்டி வந்ததும், முஸ்லிம்கள் ஹிட்லரின் அணியில் சேர்ந்து கொண்டதும் வரலாற்றுத் தவறல்ல, மாறாக முஸ்லிம்கள் மீது சொல்லொண்ணா அடக்குமுறைகளை பிரிட்டனும், அமெரிக்காவும் இன்னும் ஆப்ரிக்கப் பிரதேசத்தில் ஃபிhன்ஸும், இவர்களுடன் யூத சதிகளும் இணைந்து கொள்ளவே இவர்கள் அனைவருக்கும் எதிரான முகாமில் இருந்த ஹிட்லருடன் முஸ்லிம்கள் இணைந்து கொள்ள வேண்டியதேற்பட்டது.

யூதர்களின் அறிவிப்புப்படி, ஹிட்லரே போரை விரும்பா விட்டாலும், ஹிட்லரின் மீது போரைத் திணிப்போம் என்றார்கள். எனவே தான், ஹிட்லர் யூதர்களை தனது முதல் எதிரியாக, அழிக்கப்பட வேண்டிய இனமாகப் பார்த்தார். ஆனால் வரலாறு நெடுகிலும் அத்தகையதொரு போர்ப் பிரகடனத்தை முஸ்லிம்கள் யார் மீதும் சுமத்தியது கிடையாது. அவ்வாறிருக்க முஸ்லிம்கள் மீது ஏன் இவர்கள் போர் பிரகடனம் அறிவித்தது போல் நடந்து கொள்கின்றார்கள். தீவிரவாதிகள் என்று கூறுகின்றார்கள். குவாண்டனாமோ, அபூகிரைப் சித்ரவதை முகாமில் வைத்து சித்ரவதைகளைச் செய்கின்றார்கள். இனச்சுத்திகரிப்பு நடவடிக்கைகளில் இறங்குகின்றார்கள்.

ஹிட்லரை அவர்கள் எதிர்த்ததற்கு காரணம், ஜனநாயக முறையிலான தேர்தலில் அவர் மக்களின் அமோக ஆதரவுடன் ஆட்சியை ஆரம்பித்தார். இரண்டாவது, ஜெர்மனி மக்களுக்கு இரண்டு உத்ரவாதங்களைத் தந்தார், ஒன்று வாழ்க்கைத் தரத்தை உயர்த்துதல், இரண்டாவது அனைத்து குடிமக்களுக்கும் மருத்துவ வசதி. மூன்றாவது, தேக்கமற்ற சமூக வளர்ச்சிக்கு நிறைவான மனித வளம். இந்த மூன்று காரணிகளும் தான் ஜெர்மன் மீது போர்ப் பிரகடனம் செய்ய வைத்தன.

உண்மையில் ஹிட்லரை விட உன்னதமான ஜனநாயகம் இஸ்லாத்தில் தான் இருக்கின்றது. இரண்டாவது, இஸ்லாம் தன்னுடைய கொள்கையை ஏற்றுக் கொண்டவர்களையும், ஏற்றுக் கொள்ளாதவர்களையும் சமமாகப் பாவிக்கக் கூடியதொரு உண்மையான ஜனநாயகக் கொள்கையைக் கொண்டிருக்கின்றது. அது ஆட்சிக்கு வந்த போதெல்லாம் ஏனைய கொள்கையினர் சுதந்திரமாக வாழ்ந்தனர், சுதந்திரமாக தங்களுடைய வணக்க வழிபாடுகளை நிறைவேற்றிக் கொண்டனர். மூன்றாவதாக, அதனிடம் மற்ற சமுதாயத்தினரை விட நிறைவான மனித வளம் இருக்கின்றது. அந்த மனித வளத்தை முழுமையான முன்னேற்றப் பாதையின் கீழ் கொண்டு செல்வதற்கான பொருளாதாரக் கொள்கையும் அதனிடம் இருக்கின்றது. ஹிட்லரைப் போன்ற சர்வாதிகாரியாக அல்ல, மாறாக, நடுநிலையான சமுதாயத்தை அமைப்பதற்குத் தேவையான சமூக நீதி அதனிடம் இருக்கின்றது. எனவே, தான் தங்களது சுரண்டலுக்கு எதிர்ப்புக் குரல் கொடுக்க யாரும் இருக்கக் கூடாது என்று இன்றைய அமெரிக்காவும், பிரிட்டனும், அவர்களுடன் இணைந்து தோளோடு தோளாக நின்கின்ற யூதர்களும் நினைக்கின்றார்கள்.

ஏனெனில், இறுதி வரைக்கும் அவர்கள் அடிமை வாழ்வு வாழ மாட்டார்கள். அவர்களின் உடலில் உயிர் ஒட்டிக் கொண்டிருக்கும் நிலையிலும் அடக்குமுறைக்கு எதிராகப் போர் தொடுப்பார்கள். அவர்கள் தான் முஸ்லிம்கள். படைத்தவனுக்கு மட்டுமே அடிமைகளாக இருப்பதில் சந்தோஷம் அடைபவர்கள். பனி படர்ந்த சைபீரிய மரணப்படுகொலை முகாம்.., வருடம் 1941, தார்த்தாரிஸ்தான் மற்றும் புகரா விலிருந்து கொண்டு வரப்பட்டவர்கள் அந்த முஸ்லிம்கள். தங்களது தலைக்கு மேலாக கத்தி தொங்கிக் கொண்டிருந்த நிலையிலும் மறைமுகமாக அந்த முகாம்களில் தொழுகையை நிறைவேற்றிய வண்ணம் அவர்கள் இருந்திருக்கின்றார்கள் என்ற செய்தியைப் படிக்க முடிகின்றது.

இன்றைக்கும் அவர்களது இளவல்கள் தான் செசன்யாவில் ரஷ்யாவோடு போர் தொடுத்து வருகின்றார்கள். உலகத்தின் பார்வையில் தீவிரவாதிகளாக..!

இரண்டாவது உலகப் போர் நிறைவு பெற்று ஹிட்லரையும் வீழ்த்தினார்கள், பின்னர் ஹிட்லருடன் மறைமுக ஒப்பந்தம் போட்டு போலந்தைக் கைப்பற்றிய ரஷ்யாவையும் வீழ்;த்தினார்கள் இந்த ஏகாதிபத்திய சக்திகள். நாடு என்ற அளவில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழக் கூடிய நாடுகளில் தங்களது சொல்லுக்குக் கட்டுப்பட்டு நடக்கும் பொம்மைகளை ஆட்சி பீடத்தில் அமர்த்தி வைத்திருந்தாலும், மக்களின் கொள்கைத் தாகம் அவ்வப் பொழுது அங்கும் இங்கும் வெடித்து வருவதனை இவர்களால் சகித்துக் கொண்டிருக்க முடியவில்லை. எனவே, உலகத்தின் பார்வையில் இந்த முஸ்லிம்களை தீவிரவாதிகளாகச் சித்தரித்து, அவர்களை உலக சமூக வாழ்விலிருந்து தனிமைப்படுத்தி அவர்களை மக்கள் தொடர்பிலிருந்து முதலில் விடுவித்து, பின்னர் அவர்களை கொள்கையற்றவர்களாக, தங்களது வாழ்க்கைப் போராட்டத்திற்காக கொள்கையை விற்று விடக் கூடியவர்களாக முஸ்லிம்களை ஆக்கி விட வேண்டும் என்று ஏகாதிபத்திய சக்திகள் ஒன்றிணைந்து பாடுபட்டு வருகின்றன. அதற்காக தங்களது அனைத்து வளங்களையும் பயன்படுத்துகின்றன.

ஜனநாயகம் என்ற பெயரில் போலி நாடகம் ஆடுகின்றன. அவர்களது வாயில் ஜனநாயகம் என்று வந்தால், அவர்களது சுய லாபம் எங்கோ பாதிக்கப்பட்டிருக்கின்றது என்று அர்த்தம். அவர்களது வாயில் தீவிரவாதம் என்று வந்தால் எங்கோ அவர்களது சுய லாபம் ஆட்டம் காண்கின்றது என்று அர்த்தம்.

அவர்களது சுயலாபத்திற்காக பாகிஸ்தானின் ராணுவ ஆட்சியாளர் பர்வேஸ் முஷர்ரப்பிற்கு சிவப்புக் கம்பளம் விரிப்பார்கள். அவர்களது சுயலாபத்திற்காக நேபாள மன்னருக்கு வெஞ்சாமரம் வீசுவார்கள். அவர்களது சுயலாபத்திற்காக பர்மாவின் இராணுவ ஆட்சியாளருக்கு காவல் பூனையாக இருப்பார்கள். ஆனால் அவர்கள் சுயலாபம் பாதிக்கப்பட்டால் பிடரல் காஸ்ட்ரோ ஒரு முள்ளாகக் கருதப்படுவார். தாலிபான்கள் கரையான் புற்றுக்களாகச் சித்தரிக்கப்படுவார்கள்.

ரஷ்யாவை எதிர்க்க ஆயுதமாகப் பயன்பட்ட பின்லாடன் அப்போது விடுதலை வீரர். இப்போது அமெரிக்காவாலேயே கொல்லப்பட்டுவிட்டார்

யூதர்களைப் படுகொலை செய்தார் என்பதனால் ஹிட்லரை அழித்ததில் நியாயம் இருக்கின்றது. சைபீரிய மரணப் படுகொலை முகாம்களில் மனித நர வேட்டை நடத்தியது ரஷ்யா என்பதனால் அதனை அழித்ததிலும் நியாயம் இருக்கின்றது. முஸ்லிம்கள் யாரை எதனை அழித்தார்கள் என்பதற்காக இந்த வெறியாட்டம் நடக்கின்றது?

அமெரிக்காவுக்குச் சொந்தமான பியர்ள் ஹார்பர் துறைமுகத்தை ஜப்பானியர்கள் ஆக்கிரமித்தார்கள் என்பதற்காக ஹிரோஷிமா நாகஸாகியில் அணு குண்டுகளைப் போட்டோம் என்றாலும்.., வாதத்திற்காக தலையை ஆட்டி வைக்கலாம். ஆனால், முஸ்லிம்கள் அமெரிக்காவின் எந்த ஹார்பரையும் அழிக்கவில்லை, செப்டம்பர் 11 தாக்குதல் கூட, அதன் விசாரணை அறிக்கையின் உண்மை என்னவென்பதே யாருக்கும் தெரியவில்லை. சம்பவம் நடந்த பொழுது சௌதி அரேபியாவின் பெயர் அதிகம் அடிபட்டது. சமீபத்தில் சௌதியின் தலையீடு இதில் இல்லை என்றும் அமெரிக்காவே கூறி விட்டது. பின்னர்.., முஸ்லிம்களின் மீது ஏனிந்தப் போர்..!

அவர்கள் முதலில் முஸ்லிம்கள், இஸ்லாத்தைக் கொள்கையாகப் பின்பற்றுபவர்கள்.., சுய ஆதிக்கம், சுய லாபம் என்ற மனித விரோதசக்திகளுக்கு எதிராக அவர்கள் போர் தொடுத்திருக்கின்றார்கள். அதற்கு அவர்களது கொள்கை ஊட்டமளிக்கின்றது.

சுய ஆதிக்கமும், சுய லாபமும் மனித சமூகத்திற்கு எதிரானது..! அதனை எதிர்ப்பவர்கள் தீவிரவாதிகள் என்றால், மனித விரோதிகள் என்பவர்கள் யார்..!?

மனித குலத்திற்கு எதிரி யார் என்பதை இப்பொழுது புரிந்திருப்பீர்கள். தீவிரவாதம் என்றால் என்ன என்பதையும் இப்பொழுது புரிந்திருப்பீர்கள்..!


IN THE NAME OF FREEDOM








குறிப்பு : இதன் ஆசிரியர், அப்பர் செல்சியா வில் 1948 ம் ஆண்டு கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்து, 1974 ல் இஸ்தான்புல்லில் இஸ்லாத்தைத் தழுவினார். வார்ஸாவின் கம்யூனிஸ அரசு இவரை முறையே 1968 லும், பின்னர் 1981 ல் சிறை வைத்தது. 1975 செல்சியா பல்கலைக்கழகத்தில் வரலாற்றில் முதுகலைப்பட்டம் பெற்றார் (1975), மனிதநேயம் என்ற தலைப்பின் கீழ் டாக்டர் பட்டம் பெற்றார் (1980), 1983 ல் அமெரிக்காவிற்குக் குடிபெயர்ந்தார். இவர் பல்வேறு தலைப்புகளில் நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார். குறிப்பாக அமெரிக்கா, சிரியா, இந்தியா, போலந்து, பாகிஸ்தான், போஸ்னியா மற்றும் தென்ஆப்பிரிக்கா என்று பல்வேறு பல்கலைக்கழகங்களில் உரை நிகழ்த்தியுள்ளார். செல்சியன் பல்கலைக்கழகம், பின்னர் இஸ்லாமாபாத் ல் யூரேசியா பற்றி ஆய்வு மையத்திலும் பணியாற்றி உள்ளார். தற்பொழுது மலேசியா கோலாலம்பூரில் உள்ள சர்வதேச இஸ்லாமிய பல்கலைக்கழகத்தில் இஸ்லாமிய வராற்றுத் துறையில் பேராசிரியராகப் பணியாற்றி வருகின்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக