ஜூலை 26, 2011

Saudi


சவுதி அரேபியா - திரைகளிற்கு அப்பால்


வுதி அரேபியா என்றால் வளம் கொழிக்கும் எண்ணெய் தேசமாகவே நாம் பார்த்திருக்கிறோம். தென்னாசிய நாடுகளில் பெருமளவான முஸ்லிம்கள் வேலை செய்வதும் இங்கே தான். மக்கா மதீனா என புனித தளங்களை கொண்ட நாடு சவுதி அரேபியா. வெள்ளை அங்கியில் ஆண்களும் கறுப்பு அங்கியில் பெண்களுமாக வசந்தங்களை மொத்தமாக குத்தகைக்கு எடுத்த கனவு தேசம்.
இங்கு தான் சத்திய இஸ்லாத்தை துணிச்சலுடன் கூறிய பல உலமாக்கள் படு கொலை செய்யப்பட்டுள்ளனர். இன்னும் சித்திரவதைகளையும், பாதாள சிறைக் கூடங்களில் வாழ்வின் மிகுதி நாட்களை எண்ணும் முதவாக்களையும் காணலாம். இந்த மனித உரிமை மீறல்களும் வகை தொகையற்ற சித்திரவதைகளும் வெளி உலகிற்கு தெரிவதில்லை. தெரியப்படுத்தப்படுவதில்லை. காரணம் சவுதி அரச குடும்பல் அமெரிக்காவிற்கு செல்லப்பிள்ளை. 

மன்னராட்சியை விமர்சிக்கும் எந்த ஒரு சவுதி உலமாவும் இங்கே உயிருடன் இருக்க முடியாது. மன்னராட்சியை போற்றுபவர்களிற்கு மட்டுமே மரியாதையும் அதிகாரத்துடன் கூடிய பதவிகளும் உண்டு.
இவ்வளவு மோசமான அடக்குமுறையையும் மனித உரிமை மீறல்களையும் சவுதி அரசு அந்நாட்டு கற்றறிந்த உலமாக்கள் மீது நேரடியாகவே பாய்ச்சுகிறது. அமெரிக்க இராணுவம் சவுதியில் உள்நுழைந்த போது அப்தல்லா பின் பாஸ் அதை அங்கீகரித்தார். சவுதி மன்னர் வழங்கிய தகவல்களின் அடிப்படையிலும் விளக்கங்களின் அடிப்படையிலும் ஆதரித்தார். பின்பு தான் அவரிற்கு தான் நயவஞ்சகமாக சவுதி அரசால் ஏமாற்றப்பட்டதை உணர முடிந்தது. ஈராக் மீதான யுத்தத்திற்கான தளமாக சவுதி மண்ணை பாவிக்க மன்னர் அனுமதித்ததை உணர்ந்து கொண்டார். அன்றைய மன்னன் பஹத்திடம் நேரில் சென்று எச்சரித்தார். குப்ரிய படைகளின் வெளியேற்றம் தொடர்பான பத்வாக்கள் அடங்கிய தீர்ப்புக் கோவையையும் கையளித்தார்.


 ஆனால் அதன் பின் நடந்ததோ, அன்றைய உமையகாக்களின் உண்மையான வாரிசுகள் நாங்கள் தான் என சவுதி மன்னராட்சி உறுதிப்படுத்தும் முகமாக நடந்து கொண்டது. மிகக் குறுகிய கால இடைவெளியில் பின் பாஸ் கையளித்த அந்த பத்வாக்கள் அடங்கிய மகஜரை, கண்தெரியாத காரணத்தினால் ஷேஹ் அப்துல்லாஹ் பின் பாஸிற்கு தயாரிக்க உதவிய அவரது மாணவர்களான அத்தனை சீடர்களும் படுகொலை செய்யப்பட்டனர். வித்தியாசமான முறைகளில் மக்களிற்கு சந்தேகம் வராத வகையில் இவை நடாத்தி முடிக்கப்பட்டன. இது வரை அவர்கள் தொடர்பில் எந்தவித தகவலும் இல்லை.

இதில் கேவலம் என்னவென்றால், ஷேஹ் அப்துல்லாஹ் பின் பாஸ்ஸி்டம் கல்வி கற்ற ஜிஹாதிய கருத்துக்களை வெளியிடும் ஸலபி உலமாக்களின் பட்டியலை கையளித்ததே அமெரிக்க சீ.ஐ.ஏ. தான். இது ஜித்தாவில் வைத்து சவுதி இரகசிய பொலிஸாரிடம் வழங்கப்பட்டது. இதன் பின்பே மேற்கூறிய கொலைகள் பரவலாக இடம்பெற்றன.

நம் கண்களிற்கு தெரிவதெல்லாம் கேர்ணல் கடாபி, ஹீஸ்னி முபாரக், அஸாத்... போன்றவர்களே. ஆனால் அவர்களையும் விஞ்ஞிய கொலைகார ஆட்சியாளர்கள் ரத்தினக் கம்ளங்களில் வீற்றிருக்கிறார்கள். பசுமை தேசத்தின் மன்னர்களாக. 

       அபூ மஸ்லமா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக