இஸ்லாத்தைக் கண்டு ஏன்
அஞ்சுகின்றன?
அமெரிக்க நாடு உருவானதிலிருந்து அது பீதிவயப்பட்டே வாழ்ந்து கொண்டிருக்கின்றது. ஏனெனில் உலகின் பல பாகங்களிலிருந்தும் அமெரிக்காவில் புகுந்த மக்கள் ஐரோப்பியர்கள் அங்குள்ள செவ்விந்தியர்களைப் படுகொலை செய்தார்கள். அந்த மக்களைக் கடுமையான வேலைகளுக்கு உட்படுத்தினார்கள். குறைந்த அளவே கூலி கொடுத்தார்கள். அந்த மக்களைச் சுரண்டி, சுட்டுக் கொன்று அச்சுறுத்தித்தான் அங்கே தங்கள் ஆதிக்கத்தை நிலை நாட்டினார்கள்.
தங்கள் ஆதிக்கத்தை அங்கே நிலைநாட்டினாலும் ஒரு பெரும் பீதியுடன் தான் வாழ்ந்து கொண்டிருந்தார்கள். காரணம் அந்த அமெரிக்காவின் பூர்வகுடி மக்கள் எப்போதும் தாக்கலாம் அன்ற அபாயம் இருந்து கொண்டே இருந்தது.
தங்கள் தேயிலைத் தோட்டங்களில் வேலை செய்ய ஆள்கள் கிடைக்காத போது, ஆப்ரிக்க நாடுகளிலிருந்து ஆட்;களைக் கடத்தி வந்து அவர்களை அடிமைகளாக வைத்து வேலை வாங்கி வயிறு வளர்த்து வந்தார்கள்.
விடுதலையை விரும்பும் கறுப்பர்களிடமிருந்து அவர்களுக்கோர் அச்சுறுத்தல் இருந்து கொண்டே தான் இருந்தது. இன்றளவும் இந்தக் கறுப்பர்களையும் கண்காணித்துக் கொண்டே தான் தங்கள் வாழ்க்கையை நடத்தி வருகின்றார்கள். மடியிpல் கனம். அதனால் வழியெல்லாம் பயம் இந்த அமெரிக்காவுக்கும், ஐரோப்பிய நாடுகளுக்கும். இவர்கள் வரலாறும் வாழ்வும் வன்முறை, பயங்கரவாதம் இவற்றால் ஆனது.
இரண்டாம் உலகப் போருக்குப் பின் தன்னை ஒரு வல்லரசாகக் காட்டிக் கொண்டது அமெரிக்கா. விரைவாக வளர்ந்த சோவியத் ரஷ்யா அதற்கோர் தலைவலியாய் ஆனது. போட்டி வல்லரசாய் சோவியத் யூனியன் வாழ்ந்தது. சோவியத் ரஷ்யாவைக் கண்டால், கேட்டால் தொடை நடுங்கிற்று அமெரிக்காவுக்கு.
இந்த இனம் புரியாத அச்சத்தை அதன் முன்னாள் தலைமைச் செயலாளர் ஜான் போஸ்டர் டியூல்ஸ் இப்படிக் குறிப்பிடுகின்றார் :
அமெரிக்காவின் வசதிகளும் வாய்ப்புகளும் பெருகிடப் பெருகிட அமெரிக்கர்களுக்கு அச்சமும் ஆபத்தும் பெருகிக் கொண்டே செல்கின்றன. நாம் உலக வளங்களையும், சொகுசுகளையும் பெருக்கிக் கொண்டதன் இன்னொரு பகுதி தான் ஆபத்துக்களும் நம்மைச் சுற்றிப் பெருகியது.
நாம் எவ்வளவு வசதி மிக்கவராக இருந்தாலும் சரியே! 50 கோடி டாலர் கொடுத்தாலும் 500 கோடி டாலர் கொடுத்தாலும் சரியே! பாதுகாப்பு என்பது வாங்கப்படுகின்ற ஒன்றல்ல. அதற்கு எத்தனை கோடியை நாம் கொட்டிக் கொடுக்கத் தயாராக இருந்தாலும் சரியே!
ரோம சாம்ராஜ்யம் வீழ்ச்சியடைந்து கொண்டிருந்த நாள்களில் அது அமைதியை வாங்கிட முயற்சி செய்தது. இந்த முயற்சி அந்த ரோம சாம்ராஜ்யத்தை முற்றாக வீழ்த்திட கங்கணம் கட்டி நின்றவர்களுக்கே வசதியாய் போயிற்று.
ரஷ்யாவில் வேகமாக வளர்ந்து வந்த தொழிலாளர் ஆதிக்க அலையைக் கண்டு அஞ்சிய அமெரிக்கா, ரஷ்யாவுடன் நேரடியாக மோதவும் அஞ்சியது. இதனால் மறைமுகப் போர்கள் வழியாகவே ரஷ்யாவோடு மோதியது. ரஷ்யாவை ஆதரிக்கும் நாடுகளை எதிர்த்தது. இரண்டு நாடுகளுக்குமிடையே கண்டை வந்தால் அமெரிக்கா ஒரு பக்கமும், ரஷ்யா எதிர்ப்பக்கமும் அணி சேர்ந்து கொள்ளும்.
தங்கள் ஆயத பலங்களை இந்த மூன்றாம் நாடுகளை முன்னே நிறுத்திக் காட்டிக்கொள்ளும். இதைத் தான் - இந்த மறைமுகப் போரைத் தான் - பனிப் போர் என்றழைத்தார்கள். இந்தப் பனிப் போர் 40 ஆண்டுகளாகத் தொடர்ந்தது.
1979 ம் ஆண்டு டிசம்பர் திங்கள் 27 ம் நாள் ரஷ்யா ஆப்கானிஸ்தான் மீதான இராணுவத் தாக்குதலை நடத்திற்று. இதுவரை யாருக்கும் அடிமையாகாத நாடு ஆப்கானிஸ்தான். அந்த மக்கள் இஸ்லாத்தை முன் வைத்துப் போராடினார்கள். உலக முஸ்லிம்கள் அந்த மக்களுக்கு எல்லா வகையான உதவிகளையும் செய்தார்கள். வென்றார்கள். ஆப்கானிஸ்தான் முஜாஹித்கள் 1989 ல் ரஷ்யா ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறியது. அத் தோடு ரஷ்யா பல துண்டுகளாகவும் சிதறியது.
அமெரிக்கா இந்த உலகின் ஒரே வல்லரசு என்றானது. ஆனால் அமெரிக்கா அஞ்சி, அஞ்சி வாழ்ந்தே பழக்கப்பட்ட நாடு. நமக்கு இனி எதிரியாக வந்திடும் அளவுக்கு வலிமை பெற்ற ஒரே கொள்கை எதுவாக இருக்கும் எனச் சிந்தனையை - கற்பனையை அவிழ்த்து விட்டது. இஸ்லாம் அதன் முன்னே நின்றது.
ஆகவே அன்று முதல் இஸ்லாமிய அபாயம் எனப் பேச ஆரம்பித்தது. இது அமெரிக்காவின் பிரமையே!
ஏனெனில் உலகில் எந்த முஸ்லிம் நாடும் அமெரிக்கா அளவுக்கு ஆயுத பலம் பெற்றிருக்கவில்லை. இருக்கும் 56 சுதந்திர முஸ்லிம் நாடுகளிலும் 18 நாடுகள் தாம் தங்களுக்கு வேண்டிய அடிப்படை பாதுகாப்பிற்கான இராணுவத் தளவாடங்களைத் தயாரித்துக் கொள்ளும் நாடுகளாகக இருந்து வருகின்றன. ஆறு நாடுகள் தாம் முறையான உற்பத்தி முறைகளைக் கொண்டவை. அவை எகிப்து, துரக்கி, பாகிஸ்தான், இந்தோனேஷியா, ஈரான், ஈராக்.
மீதி நாடுகள் காவல்துறைக்கு வேண்டிய துப்பாக்கிகளைக் கூட அமெரிக்காவிடமிருந்தும் இதர நாடுகளிலிருந்தும் வாங்கிக் கொள்கின்றன. முஸ்லிம் நாடுகளில் பொருளாதார வசதியில்லை என்பதால் அல்ல. மாறாக இந்த நாடுகளில் இராணுவ உற்பத்திகள் அமெரிக்காவின் கண்காணிப்பில் இருக்கின்றன.
தொழில்நுட்பங்களை இந்த முஸ்லிம் நாடுகளுக்கு அமெரிக்கா தருவதில்லை. வேறு நாடுகள் தர முன்வந்தாலும் அதைத் தடுத்து விடுகின்றது. முஸ்லிம் நாடுகளில் இராணுவ ஆராய்ச்சிக்கும் தடை. ஈரான் இந்த விஷயத்தில் தலையெடுக்க முன்றதால் தான் அதன் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது என்பது உண்மை.
பல முஸ்லிம் நாடுகள் குறிப்பாக எண்ணெய் வளமிக்க நாடுகள் தங்கள் நாட்டைப பாதுகாக்கும் பணியை அமெரிக்காவிடம் ஒப்பந்தத்திற்கு விட்டிருக்கின்றன. ஆயத உற்பத்தில செய்யும் நாடுகளும் அதி நுட்பம் மிகுந்த நவீன ஆயதங்களுக்கு உலக நாடுகளை, குறிப்பாக அமெரிக்காவைச் சார்ந்து நிற்கின்றன.
முஸ்லிம் நாடுகள் அமெரிக்காவிடமிருந்து 6000 கோடி டாலருக்கு ஆயதங்களை உற்பத்தி செய்கின்றன. அத்தோடு முஸ்லிம் நாடுகள் பல, எண்ணெய் விற்பனையிலிருந்து வரும் பணம், இதர வளங்களிலிருந்து வரும் வருமானம் இவற்றை மேலைநாட்டு வங்கிகளில், குறிப்பாக அமெரிக்க வங்கிகளில் தான் விட்டு வைத்திருக்கின்றன.
இந்தப் பணத்தை எங்கேயாவது இந்த வங்கிகள் முதலீடு செய்து வருமானங்கள் கிடைத்தால் அந்த வருமானத்தைக் கூட இந்த முஸ்லிம் நாடுகள் எடுத்துக் கொள்வதில்லை. அந்த வருமானத்தையும் இந்த மேலைநாட்டு வங்கிகளிடமே விட்டு வைக்கின்றன.
இப்படி தங்கள் நாட்டின் பதுகாப்பையும், மீதமாக வரும் வருவாயையும் மேலைநாடுகளிடம் விட்டு வைத்திருக்கும் முஸ்லிம் உலகம் - முஸ்லிம் நாடுகள் அமெரிக்காவுக்கே, ஐரொப்பாவிற்கே அச்சுறுத்தலாக இருக்குமா? இருக்க முடியுமா? நிச்சயமாக முடியாது.
பின்னர் ஏன் அமெரிக்காவும் அதன் பின்னே அணிவகுத்து நிற்கும் நாடுகளும் அஞ்சுகின்றன. நிச்சயமாக அவை முஸ்லிம் நாடுகளைக் கண்டு அஞ்சத் தேவையில்லை. நிச்சயமாக அமெரிக்காவும் அதன் பின்னே அணி வகுத்து நிற்கும் நாடுகளும் - ஜிஹாதைக் கண்டு அஞ்சவில்லை.
ஜிஹாத் என்பதற்கு முயற்சி செய்தல் என்று பொருள். ஜிஹாத் என்ற சொல்லுக்கு - இறைவனின் வழியில் தனது திறமைகள் அனைத்தையும் பயன்படுத்;;த வேண்டும். அதன் மூலம், இறைவன் மனிதர்கள் அனைவருக்காகவும் வகுத்தளித்த நீதி நெறிமுறைகள், நிலையான நிம்மதி ஆகியவை கிடைப்பதாகவும், அவை நிலைநாட்டப்படுவதற்காகவும் முயற்சிகளை மேற்கொள்வதற்குப் பெயர்.
இந்த முயற்சிகளை மேற்கொள்பவன் அல்லாஹ்வின் வழியில் இறைவனின் வழியில் போர் புரிகின்றான் - ஜிஹாத் செய்கின்றான் என்று பொருள். இதுவல்லாமல் தனிமனித ஆதிக்கமோ அல்லது குழுவின் ஆதிக்கமோ நிலைபெறுவதற்காக போராடுவது ஜிஹாத் அல்ல.
நிச்சயமாக அப்பாவிகளைத் தாக்குதவற்குப் பெயர் ஜிஹாத் அல்ல. கூடி வாழும் சமுதாய அமைப்பில் குழப்பங்களை விளைவிக்கும் அளவில் செய்யப்படும் செயல்கள் ஜிஹாத் ஆகாது. அப்பாவி மக்களையும், அரசுகளையும் பீதிவயப்படுத்துவது ஜிஹாத் ஆகாது.
அதே நேரத்தில் அந்நிய ஆக்கிரமிப்பாளர்களை எதிர்த்து நடத்தப்படும் போர்கள் ஜிஹாத் ஆகும். ஆங்கிலேயர்கள் நமது நாட்டை ஆக்கிரமித்த போது, இந்தியப் பெருங்குடி மக்களை அடிமைகளாக நடத்திட முற்பட்ட போது தெற்கில் திப்பு சுல்தான் ஷஹீத் அவர்கள் நடத்திய போர் ஜிஹாத் ஆகும்.
ஆயிரம் ஆண்டுகள் அடிமையாய் வாழ்வதை விட சமருக்கு நின்று சாய்வதே சிறந்தது என்று அந்த மைசூர் வேங்கையின் தெளிந்த முடிவு ஜிஹாத் ஆகும். அதுவும் இறைதிருப்தியைப் பெறுவதே இலக்காகக் கொண்டு அமைய வேண்டும்.
அதே போல் வடக்கில் ஆங்கிலேயர்களுக்கெதிராக நீண்டதொரு காலம் போர் புரிந்தார்களே செய்யது அஹ்மத் ஷஹீத், அது ஜிஹாத் ஆகும். அவர்கள் ஷஹீத ஆன பின்னர் அவர்கள் தோழர்கள் அந்தப் போரைத் தொடர்ந்தார்களே அது ஜிஹாத் ஆகும். அதே போல் ஆயிரமாயிரம் மௌலவிகள் இன்றைய உத்திரப்பிரதேச நெடுஞ்சாலைகளின் மரக்கிளைகளிலே ஆங்கிலேயர்களால் தொங்கவிடப்பட்டார்களே – அது ஜிஹாத் ஆகும்.
அவர்கள் செய்த ஒரே தவறு ஆங்கிலேயே ஏகாதிபத்திற்கு நாங்கள் அடிமையாக இருக்க மாட்டோம் என அறிவித்தது தான். இஃதன்னியில் உள்ளத்தில் எழும் உலக ஊசலாட்டங்களுக்கு எதிராக நடத்தப்படும் போரும் ஜிஹாத் ஆகும். இது எப்போதாவது நடத்தப்படுவதில்லை. இது தினம் தினம் நடத்தப்படுவதாகும். வாய்ப்புக் கிடைக்கும் போது அநியாயக்கார அரசன் முன் அவன் அநியாயங்களைப் பேசுவதும் ஜிஹாத் ஆகும். (இங்கே அந்த அரசன் முன் என்பது குறிப்பிடத்தக்கது).
ஜிஹாதில் ஆயதம் தாங்கிய போராட்டமும் அடங்கும். அது எப்போது என்றால் அமைதியான வழிகளின் மூலம் மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு ஆயதந் தாங்கிய படைகளைக் கொண்டு தடைபோடவோ, ஆயதத்தைக் கொண்டு அச்சுறுத்தவோ செய்தால் அதைத் தடுத்து அமைதி திரும்பும் வரை ஆயதம் தாங்கிய போராட்டம் மேற் கொள்ளப்படும்.
இன்றைக்கிருக்கின்ற சூழலில் எந்த முஸ்லிம் நாடும் அமெரிக்காவையோ அதற்குப் பின்னால் நிற்கும் ஐரொப்பாவையோ, தாக்குவதற்கு எந்த முகாந்தரமுமில்லை. அழகிய முறையில் இஷ்லாத்தை வெற்றி பெறச் செய்யும் சாத்தியங்கள் அதிகம். அத்தோடு எந்த நாட்டிலும் இஸ்லாத்தைப் பரப்புபவர்களைத் தடுக்கவில்லை.
ஆகவே ஆயதம் தாங்கிய போர் என்பதற்கு முஸ்லிம் நாடுகளால் முடியாது. முடிந்தாலும் எந்த முகாந்தரமும் இல்லை. இந்நிலையில் ஜிஹாத் என்பதற்கும் தீவிரவாதம் என்பதற்கும் எள்ளளவும் சம்பந்தமில்லை என்பதையும் உணர வேண்டும்.
முசொலினி தன் கூலிப்படைகளை கோடிக்கணக்கில் கொண்டு வந்து கொட்டி லிபியாவின் மக்களை அடிமைப்படுத்த வந்த போது அந்த அந்நிய ஆக்கிரமிப்பிற்கெதிராக உமர் முக்தார் ஷஹீத் அவர்கள் நடத்தியது ஜிஹாத் ஆகும்.
ரஷ்யாவின் ஸார் மன்னர்கள் கவ்கஸ் பகுதியை ஆக்கிரமித்து அங்குள்ள மக்களை அடிமைப்படுத்தி ஆட்சி செய்ய வந்த போது அதனை எதிர்த்து நின்று போராடினார்களே இமாம் ஷமீல், இமாம் காசிமுல்லாஹ் ஆகியொர். அது ஜிஹாத் ஆகும்.
பின் நாட்களில் ஆப்கானிஸ்தானை ரஷ்யா ஆக்கிரமிக்க வந்த போது அந்த முஜாஹித்கள் நடத்தியது ஜிஹாத் ஆகும்.
இந்தப் பின்னணியையும் திருக்குர்ஆனின் வழிகாட்டுதல்களையும், பெருமானார் (ஸல்) அவர்களின் வாழ்க்கையையும் வைத்துப் பார்த்திடும் போது, இன்னுஞ் சொன்னால் 1400 வருட இஸ்லாத்தின் வரலாற்றின் பின்னணியையும் பார்த்திடும் போது இப்போது நடந்து கொண்டிருக்கும் செயல்களுக்கும் இஸ்லாத்திற்கும் எந்த சம்பந்தமுமில்லை. இவை எந்த விதத்திலேயும் ஜிஹாத் ஆக மாட்டா.
ஜிஹாதின் இந்தப் பின்னணியை நன்றாக அறிந்தவர்கள் இப்போது ஆங்காங்கே நடக்கும் சம்பவங்களை இஸ்லாத்தோடும் ஜிஹாதோடும் சம்பந்தப்படுத்தும் போது ஆச்சரியத்திற்கும் அதிர்ச்சிக்கும் ஆளாகின்றார்கள்.
அவர்களின் அங்கலாய்ப்பு அந்த முஸ்லிம்கள் செய்திருப்பார்களா என்று ஐயப்படும் அளவுக்குச் செல்கின்றது. பின்னர் இன்னொரு படி மேலே போய், இஸ்லாத்தை இழிவு படுத்த வேண்டும். அதன் எழுச்சியைத் தடுத்திட வேண்டும் என எண்ணுபவர்களின் சதியாக ஏன் இருந்த நிகழ்வுகள் இருக்கக் கூடாது என ஐயுறுகின்றார்கள்.
இஸ்லாத்தைப் பற்றி ஆயிரமாயிரம் ஆராய்ச்சிகளைச் செய்யும் அமெரிக்காவுக்கோ, ஐரொப்பாவுக்கோ தெரியாததல்ல. அப்படி அமெரிக்கா அறியாமலிருந்தாலும் அதற்குப் புரியும் வகையில் இஸ்லாமிய அறிஞர்கள் எடுத்துச் சொல்லியே இருக்கின்றார்கள். ஒவ்வொரு நிகழ்விக் போதும் தெளிவுபடுத்தியே வருகின்றார்கள்.
இத்தனையும் அறிந்தும் தெரிந்தும் அமெரிக்காவும் ஐரொப்பிய நாடுகளும் இஸ்லாம் சொல்லும் ஜிஹாதையும் இஸ்லாத்தையும் தீவிரவாதத்தோடு இணைக்கின்றனவே ஏன்?
காரணமிருக்கின்றது! அமெரிக்காவுக்கு முஸ்லிம் நாடுகளைப் பற்றி அச்சம் அறவே இல்லை என்பது உண்மை தான். ஆனால் அது நிச்சயமாக இஸ்லாத்தைக் கண்டு அஞ்சுகின்றது. காரணம், அதன் மடியில் - இன்னுஞ் சொன்னால் அதன் அடிவயிற்றில் அது கட்டிக் கொண்டிருக்கும பிரச்னைகள்.
இஸ்லாமியப் பிரச்சாரம், அதன் வெற்றி இவர்கள் நுழையவே முடியாது என்று கட்டி வைத்திருக்கும் கோட்டைகளுக்குள் எல்லாம் இன்று இஸ்லாமியப் பிரச்சாரம் புகுந்திருக்கின்றது. இந்த இஸ்லாமியப் பிரச்சாரம் மிகவும் அமைதியான முறையில் அமெரிக்காவில் ஓர் இஸ்லாமிய அலையை உருவாக்கி இருக்கின்றது. எழுந்து வரும் இந்த அலையை எப்படியேனும் முடக்கிப் போட வேண்டும் என முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும்.
அமெரிக்க மக்கள் மட்டுமல்ல, உலக மக்கள் அனைவரும் இஸ்லாத்தை எதிர்க்க வேண்டும், வெறுக்க வேண்டும் என விரும்புகின்றது அமெரிக்கா. இந்த விருப்பத்தை உலக நாடுகளிலெல்லாம் திணித்திட வேண்டும் என்று திட்டம் போட்டு செயல்படுகின்றது அமெரிக்கா!
இதற்காக எந்தச் சதி வேலையையும் செய்து அமெரிக்காவுக்கு உதவி செய்யத் தயாராக இருக்கின்றது இஸ்ரேல்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக