ஜூலை 11, 2011



Evolution Theory --- மக்கள்


 என்ன 


சொல்கிறார்கள்?



அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்),

உங்கள் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின்
 சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமின். 

பரிணாம வளர்ச்சி கோட்பாடு சமர்ப்பிக்கப்பட்ட காலத்திலிருந்து
 இன்று வரை, அது பல கட்டங்களை தாண்டி வந்திருக்கிறது. அது
 உண்மையா, பொய்யா என்கின்ற விவாதங்களும் நாளுக்கு நாள்
 அதிகமாகிக் கொண்டே தான் போகின்றன. 

அதெல்லாம் சரி, மக்கள் இதை எப்படிப் பார்க்கின்றனர்? எத்தனை
 பேர் இந்த கோட்பாட்டை ஏற்கின்றனர் அல்லது மறுக்கின்றனர்?. 

இது சார்பாக மக்களிடம் நடத்தப்பட்ட சில ஆய்வு (Survey)
 முடிவுளைத்தான் இந்த பதிவில் பார்க்கப்போகிறோம். இன்ஷா 
அல்லாஹ்...


ஆய்வு 1:

சென்ற ஆண்டு, பத்து நாடுகளில் பரிணாம வளர்ச்சி கோட்பாடு
 குறித்து மக்களின் எண்ணங்களை திரட்டியது பிரிட்டிஷ் கவுன்சில்
 (British Council). அந்த நாடுகள் Argentina, China, Egypt, India, Mexico, Russia,
 South Africa, Spain, Great Britain and USA. 

பத்தாயிரம் பேர் கலந்து கொண்ட இந்த ஆய்வில், சுமார் 54% மக்கள் மட்டுமே 
பரிணாம வளர்ச்சி கோட்பாடுக்கு அறிவியல் ஆதாரங்கள் இருப்பதாக கருத்து
 தெரிவித்துள்ளனர். 

அதிலும், இந்த பத்து நாடுகளில் நான்கில் (USA, South Africa, Russia and
 Egypt) இந்த கோட்பாட்டை பற்றி சந்தேகத்தில் இருப்பவர்களே
 மெஜாரிட்டி. உதாரணத்துக்கு சொல்லப்போனால், ரஷ்யாவில்
 மட்டும் சுமார் 48% பேர் இந்த கோட்பாடு ஏற்றுக்கொள்ள தகுந்த
 ஒன்று இல்லை, ஆதாரங்களை பற்றிய சந்தேகம் (Skeptical) இருக்கிறது 
 என்று தெரிவித்துள்ளனர். 

ஆய்வு 2:

2006 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட மற்றொரு ஆய்வில், 34 நாடுகளைச்
 சேர்ந்த மக்களிடம் கருத்து கேட்கப்பட்டது. 

Iceland, France, Denmark மற்றும் swedan நாடுகளைச் சேர்ந்த 
சுமார் 80% மக்கள், பரிமாண வளர்ச்சி கோட்பாடு உண்மை ன்று
 ஏற்றுக்கொண்டுள்ளனர். 

அதே சமயம், Poland, Croatia, Austria, Romania, Greece,
 Bulgaria, Lithuania மற்றும் Latvia நாடுகளைச்சேர்ந்த 45-55%
 மக்கள் இந்த கோட்பாட்டை ஏற்றுக்கொள்ள முடியாது

 என்று தெரிவித்துள்ளனர். 

மிக ஆச்சர்யமாகஅமெரிக்காவில் 40% மக்கள் மட்டுமே இந்த 
கோட்பாட்டை உண்மை என்று நம்புகின்றனர். 

ஆய்வு நடத்தப்பட்ட நாடுகளிலேயே மிக அதிக மக்கள் இந்த
 கோட்பாட்டை ஆதரிக்கவில்லை என்றால் அது துருக்கி
 மக்கள்தான். சுமார் 75% பேர் இந்த கோட்பாடு உண்மையல்ல
என்று நிராகரித்துள்ளனர். இது பரிணாம வளர்ச்சி கோட்பாடை
 ஆதரிக்கும் அறிவியலாளர்களிடம் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது.
 காரணம், மெத்த படித்த மக்கள் அதிகமுள்ள இஸ்லாமிய
 நாடுகளில் துருக்கியும் ஒன்று  என்பதுதான்.        


ஆய்வு 3: 

அமெரிக்கர்களிடம், 2008 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வில், 
  • சுமார் 44% மக்கள், கடவுள் மனிதனை இப்போதுள்ள நிலையிலேயே
  •  படைத்தார் என்றும்; 
  • சுமார் 36% மக்கள், உயிரினங்கள் மாறி மாறி மனிதன் 
  • வந்திருக்கலாம், ஆனால் அதற்கு பின்னால் கடவுள்
  •  இருக்கிறார் என்றும்; 
  • சுமார் 14% மக்கள் மட்டுமே, மனிதன் கடவுள் துணையில்லாமல்
  •  பரிணாம வளர்ச்சி அடைந்தான் 
என்றும் கருத்து தெரிவித்துள்ளனர்.



ஆச்சர்யமாக, கடந்த 25 ஆண்டுகளாக இதே போன்று தான்
 அமெரிக்க மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 


ஆய்வு 4: 

ஆய்வாளர்களுக்கு, இஸ்லாமிய நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வுகள்
 தான் மிகுந்த அதிர்ச்சியை கொடுத்திருக்கின்றன. 

2008 ஆம் ஆண்டு, Egypt, Pakistan, Malaysia, Indonesia, Turkey மற்றும்
 Kazakhstan நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வில், 8% எகிப்தியர்கள்,
 11% மலேசியர்கள், 14% பாகிஸ்தானியர்கள், 16% இந்தோனேசியர்கள்
 மற்றும் 22% துருக்கியர்கள் மட்டுமே பரிணாம வளர்ச்சி கோட்பாடு 
உண்மையாக இருக்கலாம் அல்லது நிச்சயமாக உண்மை என்று கருத்து
 தெரிவித்துள்ளனர். 



கஜகஸ்தான் நாட்டில் சுமார் 28% மக்கள், பரிணாம வளர்ச்சி கோட்பாடு
 உண்மையல்ல என்று கூறியிருக்கின்றனர். அதேசமயம் அந்த
 கோட்பாடு உண்மை என்றும் பெரும்பாலானோர் கூறவில்லை.
 கருத்து தெரிவிக்க விரும்பவில்லை அல்லது தெரியாது என்ற பதிலே
 பெரும்பான்மை. 

ஆக, பரிணாம வளர்ச்சி கோட்பாடு மிகப்பெரிய அளவில்
 முஸ்லிம் நாடுகளால் நிராகரிக்கப்பட்டுள்ளதாக அந்த ஆய்வு
 தெரிவிக்கிறது. 


மொத்தத்தில், மக்களிடையே உள்ள இந்த கருத்து
 வேற்றுமை, பரிணாமவியல் அறிவியலாளர்களை திணறடித்துள்ளது.

அதுமட்டுமல்லாமல், சவுதி அரேபியா மற்றும் சூடான்
 நாடுகளின் பள்ளிக்கூடங்களில் பரிணாமவியல் பாடங்கள் கற்பிக்க
 மறுக்கப்படுவதும், மேலும் பல நாடுகளில் அதிகரித்து வரும்
 பரிணாமவியலுக்கு எதிரான கோஷங்களும் அவர்களை
 வேதனைக்குள்ளாக்கி வருகிறது.             

இந்த மாற்றங்களுக்கு அவர்கள் கூறும் காரணம்,
  • பரிணாமவியல், பள்ளிகளில் சரியாக கற்பிக்கப்படுவதில்லை. 
  • அறிவியலை மக்கள் சரியாக புரிந்துக் கொள்வதில்லை. 
  • அடிப்படைவாத மத நம்பிக்கைகள்.
  • மதம் சார்ந்த அரசியல்.


இதற்கு பரிணாமவியலை மறுப்பவர்கள் என்ன கூறுகிறார்கள்? 
  • பரிணாமவியல், Scientific Method டை பின்பற்றவில்லை. 
  • அதனை ஆதரிக்கும் தெளிவான ஆதாரங்கள் இல்லை. 
  • நிரூபிக்கப்படாத கோட்பாடு பள்ளிகளில் கற்பிக்கப்பட கூடாது. 
  • அப்படியே அது கற்பிக்கப்பட்டாலும், அதனுடன் கடவுள் 
  • உருவாக்கினார் என்பதையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
  •  மாணவர்கள் இரண்டையும் படித்து எது உண்மை என்று 
  • தெரிந்து கொள்ள வேண்டும். 


எது எப்படியோ, பரிணாமவியலை ஆதரிக்கும் அறிவியலாளர்களுக்கு,
 அவர்கள் முன்னே மாபெரும் சவால் இருக்கிறதென்பது மட்டும்
 நிதர்சனமான உண்மை.
These Results Should be troubling for Science Educators at all levels -- 
- Miller Et Al, Public Acceptance of Evolution, 2006. p.766 

இறைவன் நம் அனைவரையும் நேர்வழியில் நிலைக்கச்செய்வானாக...ஆமின். 

அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்...       


My Sincere Thanks To:
1. Austrian Academy of Sciences. 

References: 
1. Public Acceptance of Evolution - Austrian Academy of Sciences,
 wwwdotoeaw.ac.at.
2.The British Council Survey - Submitted on 30th June, 2009 at
 World Council of Science  Journalists. wwwdotbritishcouncil.org.  
3. Evolution, Creationism, Intelligent Design - Gallup Poll Daily 
tracking, surveyed on May 8-11, 2008. wwwdotgallup.com    
4. On Darwin's Birthday, Only 4 in 10 believe in Evolution - Gallup Poll
 Daily tracking, surveyed on Feb 6-7,2009.
5. Creation-Evolution Controversy - Wikipedia. 

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ