வீறுகொண்டு எழுகிறது
வால் ஸ்டிரீட் போராட்டம்
- ஒபாமா அரசு அடக்குமுறை
முதலாளித்துவத்திற்கு எதிரான தங் கள் போராட்டம் மூன்றாவது மாதத்தை நெருங்கிக்கொண்டிருக்கும் வேளையில், பங்குச்சந்தை இருக்கும் வால் ஸ்டிரீட் டை இழுத்து மூடும்போராட்டத்தை எதிர் வரும் வியாழனன்று நடத் துவோம் என்று அமெரிக்க மக்கள்அறிவித்துள்ளனர். இந்நிலையில், இப்போராட்டத்தை ஒடுக்க ஆயிரக்கணக்கான போலீசாரை ஏவி,அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்டுள்ளது ஒபாமா அரசு. நியூயார்க் நகரின் சுதந்திரச் சதுக்கம்அமைந்துள்ள ஜூக்கோட்டி பூங்காவில் முகாம் அமைத்துள்ள பல்லாயிரம் இளை ஞர்களையும்பெண்களையும் ஒபாமா அரசின் போலீசார் கடுமையாகத் தாக்கி கைது செய்துள்ளனர்.
செப்டம்பர் 17 அன்று 150 பேர் துவங் கிய முதலாளித்துவ எதிர்ப்புப் போராட்டங் கள் பெரும்வீச்சுடன் அமெரிக் காவின் பல பகுதிகளில் நடந்து கொண்டிருக்கின்றன. இரண்டு மாதங்கள்நிறைவு பெறும் வேளையிலும் போராட்டங்களில் தொய்வு ஏற்படவில்லை. புதிய, புதிய பகுதி யினர்போராட்டத்தின் அங்கமாக மாறி வருகிறார் கள். நியூயார்க்கிலிருந்து வாஷி ங்டன் வரைமுதலாளித்துவ எதிர்ப்பு ஊர் வலம் நடைபெற்று வருகிறது.
வரலாறு காணாத நெருக்கடியில் சிக்கியுள்ள அமெரிக்க பொருளாதாரத்தை மீட்க பாரக்ஒபாமாவின் அரசு படாதபாடு பட்டுக்கொண்டிருக்கிறது. பெரும் முதலா ளிகளின் பன்னாட்டுபகாசுர நிறுவனங் களை பாதுகாப்பதற்காக, கோடிக்கணக் கான அமெரிக்கத் தொழிலாளர்களின்வேலையிலும் கூலியிலும் கைவைத்துள் ளது. ஏழை, எளிய, நடுத்தர வர்க்க அமெ ரிக்க மக்களின்ஓய்வூதியத்தை பறிக்கும் நடவடிக்கையில் இறங்கியிருக்கிறது. நெருக்கடி மேலும் மேலும்தீவிரமடைந்து வரும் சூழலில், வேலையில்லாத இளை ஞர்களின் பட்டாளத்தில் நாள்தோறும்ஆயிரக்கணக்கான இளைஞர்கள் சேர்ந்து கொண்டிருக்கிறார்கள். தங்களது இந்ததுயரங்களுக்கெல்லாம் காரணமாக இருப்பது, நியூயார்க் நகரில் உள்ள வர்த்தக வீதியானவால்ஸ்டிரீட்டை மையமாகக் கொண்டு, உலகெங்கிலும் வர்த்தகத்தில் கோலோச்சிவரும் பெரும்முதலாளிகளின் பன்னாட்டு நிறுவனங்களே என சரியாக உணர்ந்துகொண்ட அமெரிக்க உழைக்கும்வர்க்க இளைஞர்களும் பெண்களும், ஒன்றிணைந்து வால்ஸ்டிரீட்டை கைப் பற்றுவோம் என்றபோராட்டத்தை துவக் கினர்.
படிப்படியாக கடந்த 2மாத காலத்தில் உலகம் முழுவதிலும் மிகப்பெரும் வீச்சாக இப்போராட்டம்பற்றிப்பரவியுள்ளது. வால் ஸ்டிரீட்டில் அமெரிக்கர்கள் நடத்தும் இந்தப்போராட்டத்தால் உத்வேகம்கொண்ட ஐரோப்பிய இளைஞர்களும் லண்டன் மாநகர தெருக்களிலும் பாரீஸ் மாநகரவீதிகளிலும், இன்னும் ரோம், மாட்ரீட், பிரஸ்ஸல்ஸ், பெர்லின், வியன்னா உட்பட உலகெங்கிலும்ஆயிரம் நகரங்க ளில் லட்சக்கணக்கான இளைஞர்கள், மாணவர்கள், தொழிலாளர்கள், பெண்கள்போராட்டக்களத்தில் இறங்கியுள்ளனர். இவர்கள் அனைவரும் முதலாளித்துவத் திற்குமுடிவுகட்டுவோம் என்று முழங்கி வருகின்றனர்.
இந்நிலையில், அமெரிக்காவில் எழுச் சியுடன் நீடிக்கும் இந்தப்போராட்டம் அடுத்த கட்டத்தைநோக்கி செல்கிறது. நவம்பர் 17ம் தேதி வியாழனன்று நியூயார்க் பங்குச் சந்தை அமைந்துள்ளதும்,அமெ ரிக்காவின் நிதி மையம் என்று அழைக்கப் படுவதுமான வால் ஸ்டிரீட்டை மூடும்போராட்டத்தை நடத்த அழைப்பு விடுக்கப் பட்டுள்ளது. போராட்டத்தின் தலைமைய கம் என்றுஅழைக்கப்படும் ஜூக்கோட்டி பூங்காவிலிருந்து கிளம்பி, வால் ஸ்டிரீட் டை நோக்கிபோராட்டக்காரர்கள் ஊர்வல மாகச் செல்வார்கள் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
கடந்த மாதத்திலும் இதுபோன்ற ஊர்வ லம் புரூக்லின் பாலத்தைக் கடந்து சென் றது. அப்போது700க்கும் மேற்பட்டவர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட னர்.
தற்போது அதைவிட கடுமையான அடக்குமுறை நடவடிக்கைகளை அமெ ரிக்க அரசு ஏவியுள்ளது.
வீறுகொண்டு எழுகிறது வால் ஸ்டிரீட் போராட்டம்-ஒபாமா அரசு அடக்குமுறை

லிபியாவிலும் சிரியாவிலும் அரசுக்கு எதிராக போராடும் மக்கள் மீது அங்குள்ள அரசுகள்அடக்குமுறையை ஏவுகின்றன எனக்கூறி, அந்நாடுகள் மீது போர்தொடுத்த, போர் தொடுக்கதிட்டமிடுகிற அமெரிக்கா வின் ஒபாமா அரசு, தனது சொந்த நாட்டில் பொருளாதாரவிடுதலைக்காக போராட் டத்தை துவக்கியிருக்கும் இளைஞர்கள் மீது கடும் அடக்குமுறையை கட்டவிழ்த்துவிட்டுள்ளது.
நவம்பர் 17ம் தேதி மிகப்பெரும் போராட் டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள சூழலில்,செவ்வாயன்று ஜூக்கோட்டி பூங்காவிற்குள் ஆயிரக்கணக்கான போலீ சார் குவிக்கப்பட்டனர்.பூங்காவைச் சுற்றி லும் பல்லாயிரம் போலீசார் முற்றுகையிட் டனர். அங்கு கூடாரமடித்துதங்கியிருக் கும் போராட்டக்காரர்களை வெளியேறு மாறு மிரட்டினர். வெளியேற மறுத்தால் கைதுசெய்யப்படுவீர்கள் எனக் கூறிக் கொண்டே தாக்குதலை துவக்கினர்.
பூங்காவில் நூற்றுக்கணக்கானோர் தங்கியிருப்பதால் சுகாதார பிரச்சனை ஏற் பட்டுவிட்டது என்றும்பூங்காவை சுத்தம் செய்வதற்காகவே அனைவரையும் வெளி யேறச் சொல்வதாகவும் நியூயார்க்மாநகர மேயர் மிக்கேல் புளூம்பெர்க் கூறிக் கொண்டார்.
எனினும் பூங்காவிலிருந்து எவரும் வெளியேற மறுத்ததால், பலவந்தமாக அவர்களைத் தாக்கி கைதுசெய்தனர். பெண்களையும் காவல்துறையினர் கடு மையாகத் தாக்கினர். தாக்குதலுக்குள் ளானபோதிலும் அவர்கள் இடைவிடா மல் முழக்கமிட்டனர்.
இந்த நடவடிக்கைகளை படம்பிடிக்க வெளியிலிருந்து பத்திரிகையாளர்கள் எவரும்அனுமதிக்கப்படவில்லை. எனவே பூங்காவின் ஓரத்தில் சில இளைஞர்கள், தங்கள் வசமிருந்தகணினிகள் மூலம் நிமிடத்திற்கு நிமிடம் அங்கு நடக்கும் விபரங்களை சமூக வலைத்தளங்கள் மூலம்உலகெங்கிலும் பரப்பினர்.
‘காவல்துறையை மீறி உள்ளே நுழைந்த செய்தியாளர் கைது செய்யப்பட் டார்’, ‘பலவந்தமாகவெளியேற்றப்பட்ட போராட்டக்காரர்கள் அருகில் உள்ள போலே சதுக்கத்தில் கூடியிருக்கிறார்கள்’, ‘சுதந்திரச்சதுக்கத்தில் நுழைய பத் திரிகையாளர்களுக்கு தடை’, ‘மிளகு ஸ்ப்ரே வாகனங்கள்பூங்காவை முற்றுகை யிட்டுள்ளன’, ‘பெரும் எண்ணிக்கையில் போலீசார் குவிந்துள்ளனர்’, ‘ஹெலிகாப் டர் ரோந்து நடக்கிறது’, ‘மிளகு ஸ்ப்ரே பிர யோகிக்கப்பட்டுவிட்டது’... என ஏராள மானசெய்திகள் ஜூக்கோட்டி பூங்காவி லிருந்து வந்தவண்ணம் இருந்தன.
இந்த அடக்குமுறையால் அமெரிக்கா முழுவதிலும் கொந்தளிப்பு மேலும் தீவிரமடைந்துள்ளது.உலகம் முழுவதி லும் கண்டனக்குரல் எழுந்துள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக