அவுஸ்திரேலிய மண்ணில் அமெரிக்க இராணுவ தரையிறக்கம் இந்தோனேஷியாவை குறிவைத்தா?!
இந்தோனேசிய மக்கள் தொகை
அவுஸ்திரேலியாவின் பழைய வரலாற்றை மீண்டும் எழுதுமா?
இந்தோனேஷியா. உலகில் அதிக முஸ்லிம் சனத்தொகை கொண்ட தேசம். இப்போது அந்த தேசத்தின் சில மாநிலங்களில் இஸ்லாமிய எழுச்சியின் அலைகள் பலமாக அடிக்கின்றன. அல் ஷரீஆ சட்டத்தை தேசிய சட்டமாக மாற்ற வேண்டும் எனும் கோரிக்கைகள் அந்த நாட்டின் பாராளுமன்ற கதவின் வாயல்களை மெல்ல தட்டத்துவங்கியுள்ளன. சுகார்டோவின் ஆதிக்க அரசியலை வீசி எறிந்த மக்கள் அலை தனது அடுத்த இலக்காக மேற்குலகை நோக்கி திரும்பும் எனும் துல்லியமான சீ.ஐ.ஏ. யின் அறிக்கை பென்டகனையடைந்து சில வருடங்கள் கடந்தும் விட்டன.
இந்தோனேஷியா. உலகில் அதிக முஸ்லிம் சனத்தொகை கொண்ட தேசம். இப்போது அந்த தேசத்தின் சில மாநிலங்களில் இஸ்லாமிய எழுச்சியின் அலைகள் பலமாக அடிக்கின்றன. அல் ஷரீஆ சட்டத்தை தேசிய சட்டமாக மாற்ற வேண்டும் எனும் கோரிக்கைகள் அந்த நாட்டின் பாராளுமன்ற கதவின் வாயல்களை மெல்ல தட்டத்துவங்கியுள்ளன. சுகார்டோவின் ஆதிக்க அரசியலை வீசி எறிந்த மக்கள் அலை தனது அடுத்த இலக்காக மேற்குலகை நோக்கி திரும்பும் எனும் துல்லியமான சீ.ஐ.ஏ. யின் அறிக்கை பென்டகனையடைந்து சில வருடங்கள் கடந்தும் விட்டன.
மத்திய கிழக்கில் மூண்ட மக்கள் போராட்டம் போன்ற பொதுமக்கள் கிளற்சியானது இந்தோனேஷியாவில் நிகழ்ந்தால் அங்கே இஸ்லாமிய அடிப்படைவாத அலை வீசும் என்பதை திடமாக அறிந்து வைத்துள்ளது பென்டகன். பெரிய மக்கள் தொயையுடைய இந்தோனேஷியாவால் அண்மையில் உள்ள நாடான அவுஸ்திரேலியா மீதான பரம்பல் நாளைய கிறிஸ்தவ அவுஸ்திரேலியாவை போட்டோவில் பார்க்க வைத்து விடும் என நம்புகிறது அமெரிக்கா.
அல்கைதா உறுப்பினர்களின் சொர்க்க வாசல் இந்தோனேஷிய தீவுகள். சில தீவுகளில் அந்நாட்டு கடற்படையோ அல்லது இராணுவமோ கூட உள்நுழைவதில்லை. “இமாம் சமுத்ரா” வினது வருகையும், அமெரிக்க எதிர்பு ஆர்ப்பாட்டங்கள் என அமெரிக்க மற்றும் மேற்குலகிற்கு எதிரான ஒரு பரவலான இந்தோனேஷிய வீதிகளில் நடைபெறும் எதிர்பார்ப்பாட்டங்களும் அமெரிக்க அரசை உடனடி நடவடிக்கையில் இறங்க வைத்துள்து.
சில தினங்களிற்கு முன்பு நடந்த ஒபாமாவின் அவுஸ்திரேலிய விஜயத்தின் ஒரு நிகழ்வாக செய்தியாளர்களின் சந்திப்பு இடம் பெற்றது. இதில் ஒபாமாவும், கில்லர்ட்டும் அமெரிக்க இராணுவத்தின் அவுஸ்திரேலிய மண்ணிலான பிரசன்னம் தொடர்பாக விளக்கமளித்தனர். அமெரிக்க இராணுவமானது அதன் இராணுவ செயற்பாடுகளை அவுஸ்திரேலியாவின் வடக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் அதிகப்படுத்தும் எனும் ஒரு செய்தியும் வெளியிடப்பட்டது.
2012 முதல் 200-300 வரையிலான அமெரிக்க இராணுவத்தினர் அவுஸ்திரேலியாவில் நிலைகொள்வர் எனவும் 2016ல் ஒரு பிரிகேட் படையினர் வரை இராணுவத்தினர் அதிகரிக்கப்படுவர் எனவும் தெரிவித்துள்ளனர். இதற்கு காரணமாக இவர்கள் முன் வைப்பது, சீனாவின் கடல் ஆதிக்கத்தை கட்டுப்படுத்துவதே எனவும் கூறியுள்ளனர்.
வெறுமனே பரஸ்பர இராணுவ ஒத்திகைக்கான ஒரு நிகழ்ச்சி நிரலாகவோ அல்லது அவுஸ்திரேலிய இராணுத்தினரை பயிற்றுவிப்பது தொடர்பானதாகவோ அல்லது சீனாவின் கடலாதிக்கத்திற்கான கிழக்கு பகுதிக்கான பாதுகாப்பு தொடர்பானதாகவோ இவர்கள் ஊடகங்கள் மூலம் காட்ட முற்பட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது.
அவுஸ்திரேலிய மண்ணிற்கான அமெரிக்க இராணுவ பிரசன்னம் என்பது நன்கு திட்டமிடப்பட்ட ஒரு இராணுவ நலன் சார்ந்த ஒரு விடயமாகும். பென்டகன் இதை மிக அழகாக வடிவமைத்துள்ளது. ஆயுத களஞ்சிய சாலை, விநியோக மையம், ஏவுகணைத்தளம், கடற்படைத்தளம், விமானத்தளம் போன்ற கட்டமைப்புக்களையுடைய ஒரு மிலிட்டரி கொம்பிளக்ஸ் பற்றியே உண்மையில் ஒபாமாவின் வாயின் ஊடாக பேசியுள்ளது பென்டகன்.
“டின்டல்” விமானதளத்தை ஏலவே அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு அவுஸ்திரேலிய அரசால் தாரை வார்க்கப்பட்டுள்ளது. இது உண்மையில் இவ்விரு அரசினாலும் மேற்கொள்ளபட்ட அன்சஸ் உடன்படிக்கையின் அடிப்படையின் ஒரு அங்கம் என்பதே உண்மையாகும். இந்து சமுத்திரத்தை ஊடறுத்து இந்திய போர்க்கலங்களை கட்டுப்படுத்தும் உள்நோக்கமும் பென்டகனிடம் உள்ளது. இதற்கு பின்புலமாக அவுஸ்திரேலிய மேற்குக் கடற்கரைகளில் சில கடற்தளங்களை அமைக்க முனைந்துள்ளது. அனுஆயுதங்களை சுமந்து செல்லும் நீர்மூழ்கி கப்பல்களை பராமரிக்கும் தளமாக ஒவல் தளத்தினை அமெரிக்க இனங்கண்டுள்ளது.
இந்த அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் முன்னகர்வு முயற்சியானது சீனா, இந்தியா, வடகொரியா போன்ற நாடுகளின் தங்குதடையற்ற கடற்கலங்களின் போக்குவரத்தை முடக்கும் ஒரு பாரிய திட்டமிடலாகும். இதை வெறுமனே “ஏகாதிபத்தியம் என்றோ அல்லது காலனித்துவம்” என்றோ ஒதுக்க முடியாது. மாறாக “பிறீமேஸனின் சாத்தானிய சாம்ராஜ்ய கனவின்” ஒரு மைல்கல்லாகவே பார்க்க முடியும்.
சீனாவும், வடகொரியாவும் அமெரிக்க இராணுவ பிரசன்னத்தை மிக வன்மையாக கண்டித்துள்ளன. சீனாவின் சீன மக்கள் வானொலி இதை வன்மையாக தனது செய்தி தொகுப்புக்கள் ஊடாக கண்டனம் செய்துள்ளது. “இது அவுஸ்திரேலிய தேசத்திற்கான அழிவின் முகவரி” என விளித்துள்ளது. வடகொரிய வெளியுறவுச்செயளர் பேசுகையில் “எமது ஏவுகணைகள் பிராந்தியத்தின் எந்த கண்டத்தினது எந்த தளங்களையும் தாக்கும் திறனுடையன” என மறைமுக எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
தரையாதிக்கத்தின் இன்னொரு பரிணாமமாக அமெரிக்கா தனது கடலாதிக்த்தில் முனைப்புக் காட்டுகிறது இப்போது. அமெரிக்க ஊடாக தாக்குதல் அணிகள் இப்போது களமிற்கப்பட்டுள்ளன. அவை “சீன பூச்சாண்டி” பற்றி பொய்யான கதைகளையளக்கின்றன. உண்மையில் அமெரிக்காவின் இலக்கு இந்தோனேஷியாவாகும். அதாவது மாறி வரும் உலகில் எழுந்து வரும் இஸ்லாமிய அலையில் காணாமல் போகும் அவுஸ்திரேலிய தேசத்தின் இரட்சகராக பராக் ஒபாமா எழுந்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக