சிரியா : சிரியா நாட்டில் ராணுவத்தினரின் உச்சக்கட்ட வெறியாட்டத்திற்கு கடந்த 11 மாதங்களில் 400 குழந்தைகள் வரை கொன்று குவிக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சிகர தகவல் வெளியாகியுள்ளது. இதனை யுனிசெப் அறிவித்துள்ளது.
சிரியா நாட்டில் அதிபர் பஷர் அல் ஆசாத் பதவி விலக கோரி 2011 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் கிளர்ச்சியாளர்கள் போராடிவருகின்றனர். அவர்களுடன் பொது மக்களும் இணைந்து போராடிவருவதால் அவர்களை ஒடுக்குவதற்காக அதிபர் ராணுவத்தை ஏவி விட்டுள்ளார்.
பொது மக்களுக்கு ஆதவாக போராட புரட்சி படையும் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இந்த படையினர் சில பகுதிகளில் வலுவாக உள்ளனர். அந்த பகுதிகளில் ராணுவம் நுழைந்து கண்மூடித்தனமாக தாக்கி வருகிறது. ஹாம்ஸ் நகரில் ராணுத்தினர் பீரங்கி மற்றும் ராக்கெட் குண்டுகள் மூலம் கடுமையான தாக்குதல் நடத்தினார்கள்.
இங்கு வீட, வீடாக சென்று பொதுமக்களை கொன்று குவித்து வருகின்றனர். இது தவிர கடந்த 11 மாதங்களில் மட்டும் 400 குழந்தைகள் வரை கொல்லப்பட்டுள்ளதாக யுனிசெப் கணக்கெடுப்பு ஒன்று தெரிவித்துள்ளது.
சிரியாவில் ராணுவத்தினர் வெறியாட்டம் அதிகரித்து வருவதால் அந்நாட்டிற்கு 3ம் எண் எச்சரிக்கையை பிலிப்பைன்ஸ் அறிவித்துள்ளது. சிரியாவில் மக்கள் போராட்டம் தொடங்கி இதுவரை 7 ஆயிரம் பேர் கொல்லப்பட்டு இருக்கின்றனர். வியாழக்கிழமை மட்டுமே ஒரேநாளில் 100 பேர் உயிரிழந்து இருப்பதாக அதிகார பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக